Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 6:46 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:54 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : 60க்கும் மேற்பட்டோர் பலி? : 32 உடல்கள் மீட்பு; அமைச்சர்கள் விரைவு
Page 1 of 1

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில்,
ஏற்பட்ட வெடி விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக
அங்கிருந்து வரும் தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர்
மாவட்டம் சிவகாசியை அடுத்த முதலிப்பட்டியில், ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் என்ற
பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. 400க்கும் மேற்பட்டோர் ஊழியர்கள்
இங்கு பணியாற்றி வந்தனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு
தயாரிக்கும் பணிகள் வெகுவேகமாக நடைபெற்று வந்தன. 40க்கும் மேற்பட்ட
அறைகளில், ஊழியர்கள் வேலை செய்து வந்தனர்.
விபத்து நடந்தது எப்படி?
தீபாவளிப் பண்டிகைக்காக, பட்டாசுகள் தயாரிக்கும் பணி துரிதமாக நடைபெற்று
வந்தது. பட்டாசுகளில் மருந்து உட்செலுத்தும் பணி 40க்கும் மேற்பட்ட
அறைகளில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, வெடிபொருட்கள்
செலுத்தும் போது ஒன்றுடன் ஒன்று உராய்ந்த நிலையில், பயங்கர தீவிபத்து
ஏற்பட்டது. இந்த தீ அடுத்தடுத்து அனைத்து அறைகளுக்கும் பரவியது.
அதுமட்டுமல்லாது, வெடிபொருட்கள் இருந்த அறைக்கும் தீ பரவியது. தீ விபத்து
கடுமையாக இருப்பதால், சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு அதன் பாதிப்பு
இருப்பதால் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
60 பேர் பலி?
பட்டாசு
ஆலையில் உள்ள 40க்கும் மேற்பட்ட அறைகளில் தீ பரவியுள்ளது. ஒவ்வொரு
அறையிலும் 2க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதன்காரணமாக, வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 60 பேரை தாண்டும்
என்று கூறப்படுகிறது.
வேடிக்கை பார்த்தவர்கள் பலியான பரிதாபம்
வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட தீவிபத்தைப் பார்த்த
பலர் தூக்கி வீசப்பட்டனர். இவர்களில் 25 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக
அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்தின் பாதிப்பு
நெடுந்தூரம் இருப்பதால், சம்பவம் நடந்த பட்டாசு ஆலை பகுதிக்கே,
மீட்புக்குழுவினரால் பல மணி நேரம் செல்ல இயலவில்லை .
சம்பவ இடத்திற்கு விரைவு
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ
விபத்தையடுத்து, விருதுநகர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள
தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்டு பணிகளில்
ஈடுபட்டன.. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகி்ன்றன.
சம்பவ இடத்தில் மருத்துவக்குழுக்கள்
விபத்து நிகழ்ந்த சம்பவ இடத்தில் மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
தொடர்நிகழ்வு
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு ஆலை
விபத்துகளும் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. 2011ம் ஆண்டு ஆகஸ்டு மாதம்
நடைபெற்ற விபத்தில் 11 பேரும், 2010ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற
விபத்தில் 4 பேர், 2009ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நிகழ்ந்த விபத்தில் 7 பேர்,
2006ம் ஆண்டில் நடைபெற்ற விபத்தில் 7 மற்றும் 2005ம் ஆண்டில் நிகழ்ந்த
விபத்தில் 13 பேர் என ஆண்டுதோறும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதுபோல,
சிவகாசி பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள் ஏற்பட்டவண்ணம் தான் உள்ளன.
அவசர உதவி தொலைபேசி எண்
வெடிவிபத்தில்
காயமடைந்தவர்களுக்கு மதுரையில் மேல்சிகிச்சைக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள்
அமைக்கப்பட்டுள்ளன. அவசர உதவிக்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை
அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைக்கான எண் : 0452-2532535, விருதுநகர்
மருத்துவமனை அவசர உதவி எண் : 04562 -242017, சிவகாசி மருத்துவமனை அவசர உதவி
எண் : 04562 - 220301; சாத்தூர் மருத்துவமனை அவசர உதவி எண் : 04562
-260215; அருப்புக்கோட்டை மருத்துவமனை அவசர உதவி எண் : 04562 - 220624
32 உடல்கள் மீட்பு
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இதுவரை 32 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களுக்கு 80
சதவீத அளவிற்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும்
அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது
அமைச்சர்கள் விரைவு
சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், ராஜேந்திர பாலாஜி,
வைத்திலிங்கம், முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 5
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் விரைகின்றனர். முதல்வரின் உத்தரவின்பேரில்,
அவர்கள் சிவகாசி வருவதாக அரசு சார்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
தீயணைப்புத்துறை தடை
வெடிவிபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து 3 கி.மீ சுற்றளவிற்கு
பொதுமக்கள் செல்ல தீயணைப்புத்துறையினர் தடை விதித்துள்ளனர். தீ முழுவதும்
கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரி
தெரிவித்துள்ளார்.
ஆலை ஃபோர்மேன் கைது
வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக,
அந்த ஆலையில் போர்மேனாக பணியாற்றி வரும் திருத்தங்கலை சேர்ந்த உதயகுமாரை
போலீசார் கைது செய்துள்ளனர்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» சிவகாசி பட்டாசு ஆலையில் தீ விபத்து: 4 பெண்கள் படுகாயம்!
» விருதுநகர் பட்டாசு ஆலையில் மீண்டும் தீ விபத்து: 3 பேர் காயம்
» காஞ்சிபுரம் அருகே கோரம் பட்டாசு ஆலையில் பயங்கர தீ 9 தொழிலாளர் உடல் கருகியது
» நீலம் புயலின் கொடூரம்: மெரினா கடற்கரையில் 3 மாலுமிகளின் உடல்கள் மீட்பு
» 68 நாள் போராட்டத்துக்குப் பிறகு சிலி சுரங்க மீட்பு பணி வெற்றி : முதல் நபர் பத்திரமாக மீட்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum