TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இனியும் தாமதிக்கக் கூடாது

Go down

இனியும் தாமதிக்கக் கூடாது Empty இனியும் தாமதிக்கக் கூடாது

Post by ஜனனி Mon Sep 03, 2012 9:18 am


இனியும் தாமதிக்கக் கூடாது Edits





லஷ்கர்-இ-தொய்பா
மற்றும் ஹர்கத்-உல்-ஜிகாதல் இஸ்லமி என்கிற இரண்டு தீவிரவாத அமைப்புகளுடன்
தொடர்பு கொண்டிருந்ததாக கர்நாடக மாநிலத்தில் ஹூப்ளி மற்றும் பெங்களூரில் 13
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 தீவிரவாதிகளும் அடங்குவர்.கர்நாடகத்தில் நடைபெற்றுள்ள இந்தக் கைதுகள் இரண்டு அதிர்ச்சி தரும் விஷயங்களை வெளிப்படுத்துகின்றன.முதலாவது
அதிர்ச்சி, தீவிரவாதிகளின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றமும் அதில்
காணப்படும் நுட்பமும். இதுவரையில் பொதுஇடங்களில் குண்டுகளை வெடிக்கச்
செய்து அச்ச அதிர்வுகளை நாடு முழுதும் ஏற்படுத்துவதை வழக்கமாகக்
கொண்டிருந்தன இந்த அமைப்புகள். மும்பை சம்பவத்தில் நேரடியாக சில
தீவிரவாதிகளை எந்திரன்-களைப்போல இறக்கிவிட்டு கண்மூடித்தனமாகச் சுடச்செய்து
மக்களைக் கொன்றனர். இப்போது அந்த அமைப்புகள், ஆட்களைத் தெரிவுசெய்து, அரசு
நிறுவனங்களைத் தேர்வு செய்து அவர்களை மட்டும் தீர்த்துக்கட்டும்,
இலக்குகளைத் தாக்கும் புதிய வழிமுறையைக் கையாளத் தலைப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் தீவிரவாதத்துக்கு எதிரான மக்கள் பிரதிநிதிகள்,
கட்டுரையாளர்கள், நிருபர்கள் போன்றவர்களைப் பட்டியலிட்டு அவர்களைக் கொலை
செய்யத் திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.இது மிகப்பெரும்
ஆபத்து. எல்லா உயிர்களும் விலை மதிக்க முடியாதவையாக இருப்பினும், ஏதோ ஒரு
கடைத்தெருவில் சுயஅடையாளங்கள் இல்லாத பல உயிர்கள் இறந்து போவதற்கும், ஒரு
சமூகத்தில் மாற்றுச்சிந்தனை உருவாக்கும் நபர்கள், உண்மையை அச்சமின்றிப்
பேசித் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய அரசியல் தலைவர்கள், கட்டுரையாளர்கள்,
பத்திரிகையாளர்களை அடையாளம்கண்டு தீர்த்துக் கட்டுவதற்கும் மிகப்பெரிய
வேறுபாடு இருக்கிறது. முதலாவது வெறும் இலைகளைக் கழிப்பதற்குச் சமம்.
இரண்டாவது அணுகுமுறை வேருக்கு வென்னீர் பாய்ச்சுவதைப் போன்றது. இரண்டாவதாக,
அந்தத் தீவிரவாத அமைப்புகள் தேர்வு செய்துள்ள இளைஞர்கள் நன்கு
படித்தவர்கள். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் ராணுவ ஆராய்ச்சி
மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) ஆராய்ச்சியாளர் பொறுப்பில்
இருப்பவர். மற்றொருவர் ஆங்கில நாளிதழின் பத்திரிகையாளர். காவல் கைதிகளாக
விசாரிக்கப்படும் இவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போலீஸôர், இவர்கள்
மிகவும் அறிவுள்ள, மதப்பற்று உள்ள இளைஞர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களது மதப்பற்றைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் அவர்களைத் தங்களது வலையில்
வீழ்த்தியிருக்கக்கூடும்.கர்நாடகத்தின் தீவிரவாதத் தொடர்புகள்
தற்போது மகாராஷ்டிர மாநிலத்துக்கு விரிவதைப்போல, நாளைய தொடர் விசாரணையில்
இன்னும் பல்வேறு மாநிலங்களிலும் பலர் கைது செய்யப்படக்கூடும்.
கர்நாடகத்தில் நடைபெற்றிருக்கும் இந்தக் கைதுகளும்கூட, ஆந்திர மாநிலப்
புலனாய்வுத்துறை தந்த துப்பின் அடிப்படையில்தான் சாத்தியமாகியுள்ளது. மும்பைத்
தாக்குதல் நடைபெற்றபோது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் கொண்டு
வரப்பட்டது. அந்தச் சட்டத்தின் ஓர் அம்சம்தான் தேசிய தீவிரவாத எதிர்ப்புப்
படை (என்.சி.டி.சி.). உருவாக்கப்பட வேண்டும் என்கிற கருத்து. தீவிரவாதம்
தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் பெறவும், நடவடிக்கை
எடுக்கவுமான அமைப்பாக அதை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. ஆனால்,
இந்த முயற்சிக்குக் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகள்
எதிர்ப்பு தெரிவித்தன. மாநில அதிகாரத்தில் குறுக்கிடுவதாக
மாநிலங்கள் தெரிவித்தன. ஏற்கெனவே தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.)
இருக்கும்போது என்.சி.டி.சி. போன்ற அமைப்பு தேவையா என்று சிலர் கேள்விகள்
எழுப்பினர். இன்டலிஜன்ஸ் பீரோவுக்கு (ஐ.பி. எனப்படும் உளவுத்துறை)
அப்பாற்பட்டதாக இன்னொரு அமைப்பு இருக்கக்கூடாது என்றும் சிலர் கருத்து
தெரிவித்தனர். விவாதம் தொடர்ந்ததே தவிர, இந்தியா முழுமைக்குமான
தீவிரவாதத்தைக் கண்காணிக்கும், ஒடுக்கும் ஓர் அமைப்பைக் குறித்து
கருத்தொற்றுமை ஏற்படவில்லை.அன்றைய தினம், மும்பைத் தாக்குதல்
காரணமாக இந்திய அரசின் மீது மக்களுக்கு பரவலான அதிருப்தி இருந்தது. இந்திய
அரசு தனது தீவிரவாதக் கண்காணிப்பு நடவடிக்கையில் தோற்றுப்போனதாக எல்லோரும்
குற்றம்சாட்டினார்கள். அதனால், அப்போது பிறப்பித்த சட்டவிரோத நடவடிக்கைகள்
தடுப்புச் சட்டத்துக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
தெரிவித்திருந்தால் அவர்கள் மக்களின் கோபத்துக்கு ஆளாகியிருப்பார்கள்.
அப்போது என்.சி.டி.சி. முன்மொழியப்பட்டிருந்தால் எதிர்ப்பு ஏற்பட்டிருக்க
வழியில்லை.என்.சி.டி.சி. எனப்படும் தேசிய தீவிரவாத எதிர்ப்புப் படை
அமைப்பது என்று முடிவெடுப்பதற்கு முன்னால் மத்திய உள்துறை அமைச்சரோ,
பிரதமரோ எல்லா முதல்வர்களையும் அழைத்துப் பேசி அல்லது அவர்களை உள்துறை
அமைச்சரே நேரில் சந்தித்துப் பேசி அப்படியொரு அமைப்பின் அவசியத்தை
உணர்த்தியிருந்தால் அதற்கு எதிர்ப்பு எழுந்திருக்காது. தன்னிச்சையாக ஓர்
அறிக்கையை வெளியிட்டுவிட்டு, மாநில முதல்வர்களின் ஆதரவைக் கோரியதால்தான்
அவர்கள் எதிர்க்கத் துணிந்தனர் என்று கருத இடமிருக்கிறது.தீவிரவாதத்தை
நாடு முழுவதும் எதிர்கொள்ளவும், கண்காணிக்கவும், ஒடுக்கவும் நாடு
முழுமைக்குமான தனியொரு அமைப்பு தேவை என்பதைத்தான் தற்போது கர்நாடக சம்பவம்
தெளிவுபடுத்துகிறது.தீவிரவாதம் மாநிலத்தின் தனிப்பட்ட பிரச்னை அல்ல.
அது தேசத்தின் பிரச்னை. அதை ஒடுக்க தேசிய அளவிலான, வலுவான அமைப்பு
இருந்தால்தான் முடியும். அத்தகைய அமைப்பை உடனடியாக உருவாக்க, மாநில
அரசுகளைக் கூட்டி உடனே முடிவெடுக்க வேண்டும். நாம் முடிவு எடுக்கும்வரை
தீவிரவாதிகள் காத்திருக்க மாட்டார்கள் என்பது நினைவிருக்கட்டும்!
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum