Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நாடாளுமன்றத்துக்குள் குண்டு வீசியது நானாக இருக்க வேண்டும்” -ஆசைப்பட்ட ராஜகுரு!!
Page 1 of 1

ஏப்ரல்
8, 1928 நாடாளுமன்றம் களைகட்டத் தொடங்கியது. சபாநாயகர் விட்டல் பாய்
பட்டேல் வந்துவிட்டார். மோதிலால் நேருவும் உடன் இருந்தார். அரசுத் தரப்புத்
தலைவர் சர். ஜேம்ஸ் கிரீயர் புன்னகையோடு தலையசைத்துவிட்டு உள்ளே போனார்.
முக்கியமான
இரு மசோதாக்கள் நிறைவேற்றப்படும் நாள் என்பதால் நிருபர் பட்டாளமே அங்கு
தான் குவிந்திருந்தது. என்ன நடந்தாலும் அவர்களுக்குச் செய்தி.
தொழிலாளர்களுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்படும் என்றே
எதிர்பார்த்திருந்தனர். இந்திய வைஸ்ராய் இர்வின் பிரபுவின் முடிவெடுக்கும்
திறனை அவர்கள் ஏற்கெனவே அறிந்திருந்தனர்.
பார்வையாளர் பகுதியில் கூட்ட
நெரிசலுக்கு மத்தியில் பகத்சிங், பட்டுகேஷ்வர தத் ஆகியோர்
உட்கார்ந்திருந்தனர். இவர்கள் அந்தப் பகுதியில் உட்காரவைக்க ஜெயதேவ் கபூர்,
பதினைந்து நாள் தொடர்ந்து அந்த இடத்தைக் கவனித்து வந்து இருந்தார்.
புரட்சியாளர்கள் இருவரும் எங்கே உட்காரப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே
அவர்களுக்கு சொல்லியிருநதார். காங்கிரஸ் எம்.பி. ஒருவர் மூலமாக இரண்டு
நுழைவுச் சீட்டுகள் கிடைத்திருந்தன.
சபை தொடங்கும்போது, பகத் சிங்கும்
தத்தும் சுற்றியிருந்த பகுதிகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர்.
மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு வாக்கெடுப்பு நடந்தது. அவைத் தலைவர் சட்ட
விதியைப் பற்றிப் பேச வேண்டிய நேரம் வந்தது.
யாரும் எதிர்பார்க்காத
சமயத்தில் பகத்சிங் எழுந்தார். ஆள் இல்லாத இடமாகப் பார்த்துத் தன்
கையிலிருந்த வெடிகுண்டை வீசினார். வெடிச்சத்தத்தில் சபை அதிர்ந்தது.
சபையிலிருந்தோர் அலறிக்கொண்டு ஓடினார்கள். மோதிலால் நேருவும் விட்டல் பாய்
பட்டேலும் அதிர்ச்சியில் மலைத்துப்போய் உட்கார்ந்திருந்தனர். பகத் சிங்
அடுத்த குண்டையும் வீசினார். அந்த இடமே புகைமண்டலமானது.
ஒரு சில விநாடிகளுக்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.
புகை
அடங்கியது. பரபரப்பும் அடங்கியது. பகத்சிங்கும் தத்தும், ‘தொழிலாளர்
வர்க்கம் வாழ்க!’ பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக, புரட்சி ஓங்குக! என்று
கோஷமிட்டுக் கொண்டே வந்தார்கள். கையில் கொண்டு வந்திருந்த துண்டுப்
பிரசுரங்கள் அவையில் இருந்தவர்களுக்காக வீசியெறியப்பட்டன.
போலீஸ்காரர்கள்
அப்போதுதான் உள்ளே நுழைந்தார்கள். பகத் சிங்கையும் தத்தையும் கைது
செய்தார்கள். இருவரும் விடாமல் கோஷங்களை முழுங்கிக் கொண்டிருந்தனர்.
இருவரையும் சாந்தினி செளக்கில் இருந்த கொத்தவாலி காவல் நிலையத்துக்குக்
கொண்டு செல்லப்பட்டனர்.
பகத்சிங்கை எப்போதும் போட்டியாளராகவே நினைத்தவர்
ராஜகுரு. புரட்சிப் பாதையில் தாம் எப்போதும் முதலில் நிற்கவேண்டும் என்று
விரும்பினார் ராஜகுரு. அதிரடிச் செயல்களில் தான் பங்கேற்க வேண்டும் என
நினைப்பவர். தனக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று வற்புறுத்துவார்.
மத்திய
அசெம்ப்ளியில் குண்டு வீசப்பட்ட விஷயத்தை ராஜகுரு பத்திரிகையில்
பார்த்துத் தெரிந்து கொண்டார். அவருடைய நண்பரான சாவர்காவ்கருடன் காசியில்
இருந்தார்.
தோழர்கள் கைது செய்யப்பட்டதையும் நீதிமன்ற விவகாரக்களையும்
கவனித்துக் கொண்டிருந்தார். சாவர்காவ்கரிடம், ‘நாந்தான் அந்த குண்டை
வீசியிருக்க வேண்டும்’ என்று அடிக்கடி புலம்பிக் கொண்டிருந்தார். ’அதை
மட்டும் நானே செய்திருந்தால் இந்திய விடுதலைக்கான என் பணியைச் சிறப்பாகச்
செய்ததாகச் சந்தோஷப்படுவேன்.
சாண்டர்ஸைக் கொலை செய்த விவரத்தை ஏற்கெனவே
சாவர்காவ்காரிடம் சொல்லியிருந்தார். பகத் சிங்கும் தானும் நடத்திய அந்த
வீரச் செயலை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார்.
சாவர்காவ்கர் ராஜகுருவை எச்சரித்து வைத்தார்.
’இதுபோல் எல்லா இடங்களிலும் சொல்லிக்கொண்டே இருக்காதே.’
ஜூலை மாத இறுதியில் சாவர்காவ்கர் பூனாவுக்குத் திரும்பினார். ராஜகுருவும் சாவர்காவ்கருடன் பூனாவுக்கு வந்தார்.
குண்டு
வெடிப்புக்குப் பிறகு போலீஸ்காரர்களின் அடக்குமுறை அதிகமானது. கண்ணில்
கண்ட புரட்சியாளர்களைப் பிடித்துக் கொண்டு போனார்கள். பகத் சிங்கையும்
தத்தையும் ஒரு வாரம் கழித்து சிவில்லைன்ஸ் காவல் நிலையத்துக்கு
மாற்றினார்கள்.
ஹிந்துஸ்தான் சோஷிலிஸ்ட் ரிபப்ளிகள் அசோஸியேஷன் உறுப்பினர்கள் ஒவ்வொருவராகப் பிடிப்பட்டனர்.
லாகூர்
வெடிகுண்டு தொழிற்சாலையில் சுகதேவ், கிஷோரிலால், ஜெயகோபால் ஆகியோர் கைது
செய்யபட்டார்கள். சகரான்பூர் வெடிகுண்டு தொழிற்சாலையில் மூன்று தோழர்கள்
கைது செய்யப்பட்டனர். பிடிபடாமல் தப்பித்தவர்கள், வைசம்பாயன், யஷ்பால்.
வழக்கம்போல ஆஸாத், பகவதி சரண் ஆகியோரும் தப்பித்திருந்தனர்.
லாகூர்
வெடிகுண்டு தொழிற்சாலை, பகவதி சரண் பெயரில் எடுக்கப்படிருந்தது. பகவதி
சரணைப் பிடிக்க வாரண்ட் கொடுத்திருந்தார்கள். அவருடைய வீடு பலமுறை சோதனை
செய்யப்பட்டது. சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. வீடு பூட்டி சீல்
வைக்கப்பட்டது. அவருடைய குடும்பத்தார் அக்கம்பக்கத்து வீடுகளில் தஞ்சம்
புகுந்தார்கள்.
சிவவர்மா, ஆசாத், தாஸ்மாஹெளர், சாதாசிவ ராவ், குந்தன்
லால், ராஜகுரு, வைசம்பாயன் ஆகியோர் ஜான்சியில் கூடினார்கள். இரண்டு
வேலைகளைப் பற்றிப் பேசி முடிவெடுக்கவே அந்தக் கூட்டம்.
முதல் வேலை
வைஸ்ராய் டேராடூனுக்கு வேட்டைக்குச் செல்வது வழக்கம். அடுத்த முறை அவர்
டேராடூனுக்குப் போகும்போது அவரை வேட்டையாட வேண்டும். இன்னொரு வேலை, பகத்
சிங்கையும் பட்டுகேஷ்வர தத்தையும் சிறையிலிருந்து வெளியே கொண்டு வர
வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள். அவர்களில்
பெரும்பாலானோர் கருத்து புரட்சித் தோழர்கள் இருவரையும் வெளியே கொண்டு வர
வேண்டும்.
ஆகவே, அதுதான் நமது அடுத்த வேலை என்று முடிவு செய்தனர்.
அவர்களைத்
தப்பிக்க வைத்து வெளியே வருவதற்கு சந்திரசேகர ஆசாத் ஒரு திட்டம்
தீட்டினார். பகவதி சரணும் அந்த ஆபரேஷனில் சேர்ந்து கொண்டார். பகத்
சிங்கையும் தத்தையும் ஞாயிற்றுக் கிழமைதான் போய்ப் பார்க்க முடியும்.
ஞாயிற்றுக்கிழமை தோழர்களைச் சந்தித்துவிட்டுத் திரும்பும் போது அதிரடியாகச்
செயல்பட்டு இருவரையும் மீட்பது என்று முடிவானது.
சிவவர்மாவும் ஜெயதேவும் வைஸ்ராய் மீது வெடிகுண்டு வீசவே ஆசைப்பட்டார்கள். ஆனால், ஆசாத் அவர்களைத் தடுத்துவிட்டார்.
ஆசாத்,
சிவவர்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டார். ’இனி மேல் நான்
ஆக்ஷன்களுக்குத் தோழர்களைத் தனித்த தனியாக அனுப்பி, பலிகொடுக்க
விரும்பவில்லை. கட்சியின் தளபதி என்ற முறையில் புதிய புதிய தோழர்களைச்
சேர்ப்பது, அவர்களுடன் நட்புறவு வளர்த்துக் கொள்வது, கடைசியில் அவர்களைச்
சாவுக்குக் காவு கொடுப்பது – இதுதான் என் வேலையா? நான் நிம்மதியாக இங்கு
உட்கார்ந்து கொண்டு தீயிலே வீசியெறிய புதிய புதிய விறகுகளைச் சேகரித்துக்
கொள்ள வேண்டுமா?’ – இதைச் சொல்லிவிட்டு ஆசாத் சற்று நேரம் அமைதியாக
இருந்தார்.
’பகத் சிங், தத் – இருவரையும் வெளியே கொண்டு வருவதே முக்கியம். வேறு எதிலும் நாம் இப்போதைக்குக் கவனம் செலுத்த வேண்டாம்’ என்றார்.
பொழுது விடிந்து கொண்டிருந்தது. தோழர்கள் ஒவ்வொருவராகக் கலைந்து சென்றனர்.
அதே நேரத்தில் ஆசாத்தைத் தேடிக் கொண்டிருந்த சி.ஜ.டி. இன்ஸ்பெக்டர் சம்புநாத் ஜான்சி ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார்.
தோழர்கள்
தங்கியிருந்த அந்த வீட்டுக்கு எந்த நேரமும் போலீஸ் வந்துவிடும். ஆனால்,
வெகு நேரம் அந்த வீட்டிலேயே இருக்கவும் முடியாது. ஒவ்வொருவராக வெளியேற
வேண்டும். மொத்தமாக எல்லோரும் வெளியே வந்தால் போலீஸூக்கு வரவேற்பு
கொடுத்தது போலிருக்கும்.
ஆசாத்தை முதலில் அங்கிருந்து அனுப்பிவிட முடிவு
செய்தனர். ஆனால், தோழர்களை விட்டுவிட்டு அவர் மட்டும் தப்பிக்க
விரும்பவில்லை. அவர்தான் தளபதி. அவர் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்க
வேண்டும்.
நீங்கள் ஒவ்வோருவராக இங்கிருந்து வெளியேறுங்கள். கட்சியின்
தளபதியாக இதனைச் சொல்கிறேன்’ என்று கர்ஜனை செய்தார். அவர் குரலில்
அதிர்ச்சியும் கவலையும் இருந்தது. எல்லோருக்கும் தாமே பொறுப்பு என்பதை
மட்டும் அந்த நேரத்தில் நினைத்துக் கொண்டார். சிறையில் இருக்கும் பகத்
சிங்கையும் தத்தையும் தப்பிக்க வைக்க வேண்டியது அதைவிட முக்கியம்.
அந்த
வீடு சற்று நேரத்தில் அமைதியடைந்தது. ஆசாத், பகவான் தாஸ், சதாசிவ ராவ் ஆகிய
மூவர் மட்டும் இருந்தனர். சிவவர்மா, ராஜகுரு, பாண்டே, குந்தன் லால் என்று
ஒவ்வொருவராக வெளியேறியிருந்தனர்.
நால்வரும் ஜான்சி ரயில் நிலையத்தில்
சந்தித்துக் கொண்டனர். இன்குலாப் ஜிந்தாபாத் என்று ரகசியமாகச் சொல்லிக்
கொண்டனர். கூட்டத்தில் சேர்ந்து கலைந்து போயினர். நால்வரும் வெவேறு
பாதைகளில் பிரிந்தாலும் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த ஒரு விஷயம், ஆசாத்
எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்பதுதான்.
தோழர்கள் பிரிந்து போன
அடுத்த நள், 1929 மே 2 விடியற்காலை. போலீஸ் எல்லா இடங்களிலும் தேடுதல்
வேட்டை நடத்திக் கொண்டிருந்தது. ரயில்வே ஸ்டேஷன், பஸ் நிலையம், ஊரின்
ஒதுக்குப்புறம் என்று எல்லா இடங்களையும் சல்லடையாக்கினார்கள்.
பெரும்
முயற்சிக்குப் பிறகு தோழர்கள் தக்கியிருந்த அந்த வீடு
கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டைச் சுற்றிவளைத்து போலீஸார் உள்ளே புகுந்தனர்.
வீடு வெறிச்சோடிக் கிடந்தது. சில செய்தித்தாள்கள் மட்டும் அங்கே கிடந்தன.
வழக்கம்போல் ஆசாத்தும் இரு தோழர்களும் இரவோடு இரவாக இருளில் கரைந்து
போயிருந்தனர்.
நன்றி: முத்துராமன் (பகத்சிங்)
நன்றி :http://www.tamilleader.in/news/2333-2012-08-30-06-20-46.html

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» கவிதை எப்படி இருக்க வேண்டும்? கவிதை எப்படிப் படிக்க வேண்டும்?
» நட்புரிமை எப்படி இருக்க வேண்டும்?
» குழந்தைகளுக்கு நோய் தடுப்பு மருந்துகள் அளிப்பது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
» ஏகாதசி விரதம் யார் இருக்க வேண்டும்?
» சீரான உணவில் என்னென்ன இருக்க வேண்டும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum