Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கருணை மனதோடு, செந்தூரனையும் அனுப்பி வையுங்கள் – வைகோ
Page 1 of 1

ஈழத்து இளைஞன் செந்தூரன், பூவிருந்தவல்லி சிறப்பு முகாமில் ஆகஸ்ட் 6 ஆம்
தேதி முதல், உணவை மறுத்து, பட்டினிப் போராட்டம் நடத்துகிறார். ஆகஸ்ட் 20
ஆம் தேதி முதல்,சொட்டுத் தண்ணீரும் பருகாமல், தனது நியாயமான கோரிக்கைகள்
நிறைவேற்றப்படாவிடில் உயிரைத் துறப்பதே மேல் என்று அறப்போரை நடத்துகிறார்.
துளிநீரும் பருகாவிடின், ஐந்து நாள்களுக்குப் பின்னர் சிறுநீரகங்கள் பழுது
அடைந்து, உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம். உண்ணாவிரதம்
தொடங்கி, இன்றோடு இருபது நாள்கள் ஆகி விட்டன. தண்ணீரை மறுத்து, ஆறு நாள்கள்
ஆகி விட்டன. செந்தூரனின் போராட்டம், முற்றிலும் நியாயமானது ஆகும்.
இலங்கைத் தீவில், சிங்கள இனவாத அரசு நடத்திய தமிழ் இனப்படுகொலையால்,
உறவுகளைப் பலிகொடுத்து, வீடு, வாசல் இழந்து ஆறுதலும் நிழலும் தேடி,
தங்களின் தொப்புள் கொடி உறவுகளான தமிழ் மக்கள் வாழும் தமிழ்நாட்டை, தாயின்
மடியென நாடி வந்தனர். அவர்களுள் பலர் மீது, தமிழகக் காவல்துறையின் கியூ
பிரிவு போலீசார், பொய்வழக்குப் புனைவது, கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கை ஆகி
விட்டது.
2011 ஜூலை 18 இல், தேவகோட்டையில் செந்தூரனைக் கைது
செய்து, ஆவணங்கள் இன்றி வந்ததாக வழக்குப் போட்டு, செங்கல்பட்டு சிறப்பு
முகாமில் அடைத்தனர். ஆறு மாதங்கள் கழித்து, 2012 ஜனவரி 16 அன்று, தமிழக
போலீசார் செந்தூரனை, கேரளாவுக்குக் கொண்டு சென்று, ஆஸ்திரேலியாவுக்குத்
தப்பிச் செல்ல முயன்றதாக, கேரளப் போலீசாரின் உதவியோடு வழக்குப் பதிவு
செய்து, கேரளச் சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தில் செந்தூரன் வழக்குத்
தொடுத்ததால், கேரள நீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை செய்தது. ஆனால்,
மீண்டும் தமிழக போலீசார் கைது செய்து, செங்கல்பட்டு சிறப்பு முகாமில்
அடைத்தனர்.
ஜூன் 16 ஆம் தேதி முதல், செந்தூரனும், சிறப்பு
முகாமில் இருந்த ஈழத்தமிழர்களும், தங்களை விடுவித்து திறந்தவெளி
முகாம்களுக்கு அனுப்பக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். எட்டுப்
பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டனர். மூன்று பேரின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டன.
உண்ணாவிரதப் போராட்டம் இருபது நாள்கள் நடைபெற்று, இருபத்து ஒன்றாம் நாள்
ஜூலை 5 ஆம் தேதி, நானும், புகழேந்தி தங்கராஜ், மல்லை சத்யா
உள்ளிட்டவர்களும் மிகவும் வற்புறுத்தியதன் விளைவாக, தமிழக அரசின்
வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும், ஈழத்தமிழர்கள்
திறந்தவெளி முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று தந்த வாக்குறுதியின்
பேரில், உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது.
ஆனால், அந்த வாக்குறுதிக்கு
மாறாக, செந்தூரனை, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் கொண்டு போய் அடைத்தனர்.
நீதிமன்றத்தில் பிணை விடுதலை பெற்றவர்களையும், சிறப்பு முகாமில் அடைத்து
இருப்பது, மனித உரிமைகளுக்கு எதிரான அடக்குமுறை ஆகும். இந்நிலையில்,
துக்ககரமான ஒரு சம்பவம் நடந்து விட்டது. செந்தூரனின் தந்தையின் சகோதரி
கமலாதேவி அவர்களும், அவரது கணவர் தங்கவேலு,மகள் கீர்த்திகா, மகன் பிரேம்
காந்த்,செந்தூரனின் சித்தப்பா அருள்ராஜன் ஆகியோர், இலங்கையில் இருந்து
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி விமானத்தில் தமிழ்நாட்டுக்கு வந்தனர். ஆகஸ்ட் 10 ஆம்
தேதிக்கு, செந்தூரனின் அத்தை கமலாதேவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்,
சென்னை அரசுபொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். ஆகஸ்ட்
20 ஆம் தேதி, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆகஸ்ட் 21 ஆம் தேதி,
பூவிருந்தவல்லி முகாமில், செந்தூரனை, அவரது சித்தப்பா அருள்ராஜ்
சந்தித்தார். உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லிக் கேட்டும் செந்தூரன்
ஏற்கவில்லை. இதனால், கவலைக்கு உள்ளான கமலதேவி, மாலையில் செந்தூரனிடம்
உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லிக் கேட்டு இருக்கின்றார். அப்போதும், தான்
மடிந்தால், அதற்குப் பிறகாவது மற்ற ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்
என்று செந்தூரன் கூறி விட்டார்.
இதனால், உள்ளம் உடைந்துபோன
கமலாதேவியின் உடல்நிலை மிகவும் மோசமாகி, மீண்டும் சென்னை
அரசுபொதுமருத்துவமனையில் 21 ஆம் தேதி இரவு சிகிச்சைக்காகச்
சேர்க்கப்பட்டார். 23 ஆம் தேதி காலையில், �கமலாதேவி இந்திய நாட்டுக்
குடிமகள் அல்ல; அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்; எனவே, தனியார்
மருத்துவமனையில் போய் சிகிச்சை செய்து கொள்ளுங்கள்� என்று அரசு பொது
மருத்துவமனை நிர்வாகம் கூறியதால், அங்கிருந்து குளோபல் மருத்துவமனைக்குக்
கொண்டு சென்றனர். பிற்பகல் 1 மணி 39 ஆவது நிமிடம், கமலாதேவி இறந்து போனார்.
ஆனால், இந்தச் செய்தி, வெளியில் பரவி விடாமல், கியூ பிரிவு போலீசார் மூடி
மறைத்தனர். 24 ஆம் தேதி காலையில், நான் இந்தச் செய்தியை அறிந்தேன்.
இராமச்சந்திரா மருத்துவமனைக்கு, பகல் 12 மணி அளவில், கமலாதேவியின் உடல்
கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு நான் கண்ணீர் அஞ்சலி செலுத்தினேன்.
பின்னர், உடல் பதனம் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டுக்கு வந்த
இடத்தில், இப்படித் தாயைப் பறிகொடுத்துத் தவிக்கின்றோமே? என்று,
கமலாதேவியின் மகள் கீர்த்திகா, கதறி அழுதது, கல் நெஞ்சத்தையும் உருகச்
செய்யும். அந்தக் குடும்பத்தினர் விருப்பப்படியே, தங்கள் சொந்த மண்ணான
கண்டிக்குக் கொண்டு செல்வதற்காக, கமலாதேவியின் உடல் இன்று இலங்கைக்கு
விமானத்தில் செல்கிறது. இந்தத் துயரத்துக்கு, செந்தூரனை முகாமில் அடைத்து
வைத்து இருப்பதே காரணம் ஆகும். செந்தூரனையும், சிறப்பு முகாம்களில்
அடைக்கப்பட்ட உள்ள ஈழத்தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்து, திறந்தவெளி
முகாம்களுக்கு அனுப்ப வேண்டும். எந்த நேரத்திலும் செந்தூரன் உயிருக்கு
ஆபத்து ஏற்படக்கூடும். அவர் உயிருக்கு ஊறு நேர்ந்தால், அதற்குத் தமிழகக்
காவல்துறையும், தமிழக அரசுமே பொறுப்பாளி ஆவார்கள்.
எனவே, கருணை
மனதோடு, செந்தூரனையும், ஈழத்தமிழர்களையும், திறந்த வெளி முகாம்களுக்கு
உடனடியாக அனுப்பி வைக்குமாறு, தமிழக முதல் அமைச்சர் அவர்களை வேண்டிக்
கேட்டுக் கொள்கின்றேன்.
�தாயகம்� வைகோ
சென்னை – 8 பொதுச் செயலாளர்,
25.08.2012 மறுமலர்ச்சி தி.மு.க

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» மனதோடு போராடாதீர்கள்!
» முடிந்தால் 'ரெட் கார்னர் நோட்டீஸ்' வெளியிட வையுங்கள்: சி.பி.ஐ.க்கு லலித் மோடி சவால்!
» போலி மதுபானங்களை டாஸ்மாக்குக்கு அனுப்பி வைத்த அ.தி.மு.க கவுன்சிலர்!
» மற்றொருவர் விடைத்தாள் நகல் அனுப்பி தேர்வுத்துறை அலட்சியம்
» புக் மார்க்-க்குகளை பேக் அப் எடுத்து வையுங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum