TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:42 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:09 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Dec 02, 2024 5:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 30, 2024 3:08 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


வலுவான லோக்பால் இல்லையேல் ஆட்சியிலிருந்து விலகுங்கள்: ஹசாரே எச்சரிக்கை

Go down

வலுவான லோக்பால் இல்லையேல் ஆட்சியிலிருந்து விலகுங்கள்: ஹசாரே எச்சரிக்கை Empty வலுவான லோக்பால் இல்லையேல் ஆட்சியிலிருந்து விலகுங்கள்: ஹசாரே எச்சரிக்கை

Post by மாலதி Tue Jul 31, 2012 8:26 am


வலுவான லோக்பால் இல்லையேல் ஆட்சியிலிருந்து விலகுங்கள்: ஹசாரே எச்சரிக்கை C3





புது தில்லி, ஜூலை 30: ""வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வர முடியாவிட்டால்
ஆட்சியிலிருந்து இந்த அரசு விலக வேண்டும்'' என்று மத்திய அரசுக்கு சமூக ஆர்வலர்
அண்ணா ஹசாரே திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.
தில்லி ஜந்தர் மந்தரில் ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜரிவால், மணீஷ்
சிசோடியா, கோபால் ராய் ஆகியோர் இம்மாதம் 25-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை
மேற்கொண்டுள்ளனர்.
ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்; ஹசாரே குழு
புகார் கூறியுள்ள 15 மத்திய அமைச்சர்கள் மீதான புகார் குறித்து விசாரணைக்கு
உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தி
வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு பதில் அளிக்கத் தவறியதால், கடந்த
ஞாயிற்றுக்கிழமை முதல் அண்ணா ஹசாரேவும் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளார்.
அவருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், 2வது நாள் உண்ணாவிரத்தின்போது தில்லியில் பரவலாக மழை பெய்தது.
அதைப் பொருட்படுத்தாமல் 400-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கொட்டும் மழையில் ஜந்தர்
மந்தர் பகுதியில் நின்றிருந்தனர்.
ஆட்சியிலிருந்து விலகுங்கள்: காலை 11 மணியளவில் அண்ணா ஹசாரேவும் அவரது
குழுவினரும் உண்ணாவிரத மேடைக்கு வந்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் பரிசோதனை
செய்தனர். அப்போது, அண்ணாவின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு இயல்பு நிலையில்
இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஆதரவாளர்களிடையே பேசிய அண்ணா ஹசாரே, ""இந்தியா முழுவதும்
ஊழலுக்கு எதிரான அலை வீசத் தொடங்கியுள்ளது. இதைப் பார்க்கும்போது, வலுவான லோக்பால்
சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். இல்லையேல், ஆட்சியில் இருந்து விலக
வேண்டும்'' என்றார்.
டிவிட்டரில் கேஜரிவால்: ஜந்தர் மந்தரில் 6வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும்
அரவிந்த் கேஜரிவாலின் உடல்நிலை பலவீனமாக இருந்ததால் "டிவிட்டர்' சமூக இணையதளம்
வாயிலாக அவர் தனது கருத்தைப் பதிவு செய்து வருகிறார்.
அவரது டிவிட்டரில், ""இந்த வாரம் நாட்டின் வரலாற்றில் முக்கியமானதாகும். இது
வாழ்வா? சாவா? போராட்டம் ஆகும். எதிர்காலம் இந்தியாவுக்கு மட்டுமே சொந்தம்.
அதனால், திரளாக வந்து போராட்டத்துக்கு ஆதரவு தாருங்கள். நாங்கள் அண்ணாவுடன்
இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ஆனால், வாழும் நாள்களில் நமது தாயகத்தை சில கும்பல்
கொள்ளையடிக்க அனுமதிக்கக் கூடாது'' என்று கூறியுள்ளார்.
கிரண் பேடி: ""அண்ணா குழுவினருக்கும் பாபா ராம்தேவுக்கும் ஏதோ மோதல் ஏற்பட்டு
விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. பாபா ராம்தேவ் "கருப்புப் பணத்தை
மீட்க வேண்டும்' என்று குரல் கொடுக்கிறார். நாங்கள் "ஊழலை ஒழிக்க வேண்டும்' என்று
குரல் கொடுக்கிறோம். அந்த வகையில் அண்ணாவும் சரி ராம்தேவும் சரி ஒரே நோக்கத்துக்காக
இரு வழிகளில் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த விஷயத்தில் அரசுக்கு ஒரே வாய்ப்புதான் இருக்கிறது. "செய்' அல்லது "செத்து
மடி'. வலுவான லோக்பால் சட்டம்தான் எங்கள் கோரிக்கை. அதைக் கொடுக்க முடியாதபோது
ஆட்சியில் ஏன் நீடிக்கிறீர்கள்? என்பது தான் அண்ணாவின் கேள்வி'' என கிரண் பேடி
கூறினார்.
சரத் பவார் வீடு முற்றுகை
"ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்ட
50-க்கும் மேற்பட்டோர் தில்லி ஜன்பத் சாலையில் உள்ள மத்திய விவசாயத் துறை அமைச்சர்
சரத் பவாரின் அரசு பங்களாவை பிற்பகல் 2.30 மணியளவில் முற்றுகையிட்டனர்.
"ஊழல் அமைச்சர் ஒழிக; பதவியை ராஜிநாமா செய்க' என அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இது குறித்து தகவலறிந்த போலீஸôர் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களைக் கைது செய்தனர்.
துக்ளக் சாலை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவர்கள் மாலையில்
விடுவிக்கப்பட்டனர். இதேபோல், பிரதமர் மன்மோகன் சிங் இல்லம் முன்பு சனிக்கிழமையும்
மத்திய அமைச்சர் சிதம்பரம் இல்லம் முன்பாக ஞாயிற்றுக்கிழமையும் முற்றுகைப் போராட்டம்
நடத்தியவர்கள் அதே நாளிலேயே விடுவிக்கப்பட்டனர்.
அண்ணா குழு மறுப்பு: சரத் பவாரின் வீடு முன்பு போராட்டம் நடத்தியவர்கள் அண்ணா
ஹசாரே குழுவைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்று ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் ஊடக
ஒருங்கிணைப்பாளர் அஸ்வதி முரளிதரன் கூறினார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum