Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பொற்காசுகளுக்கு போராடும் போராளி மீது கண் வைத்திருக்கிறது உளவுத்துறை ?
Page 1 of 1

ஆண்டு தோறும் வரும் ஆகஸ்டு 17-ம் தேதியை இன எழுச்சி நாளாக
கொண்டாடுவார்கள் விடுதலைச் சிறுத்தைகள். காரணம், அது அக்கட்சியின் தலைவர்
திருமாவளவனின் பிறந்தநாள். இந்நிலையில் இந்த வருடம் ஆகஸ்டு 17-ம்
தேதியன்று திருமாவளவனுக்கு ஐம்பது ஆண்டுகள் நிறைவுபெறுவதை ஒட்டி.... அவரது
பொன்விழாவாகாவும் கொண்டாடுகிறார்கள் சிறுத்தைகள்.
பொன்விழா என்றால் பெயரில் மட்டும் அல்ல... திருமாவளவனுக்கு நிஜத்திலெயே
தங்கமான விழா நடத்திவருகிறார்கள் சிறுத்தைகள். ‘‘எனது 50 வது பிறந்தநாளை
எனது திருமண நாளாக எண்ணி என் மீது அன்புகொண்ட தொண்டர்கள் கட்சி நிதிக்காக
தங்கக் காசுகளாக தரவேண்டும்’’ என்று திருமாவளவன் சமீபத்தில் வேண்டுகோள்
வைத்தார்.
இதையடுத்து மாவட்டம் தோறும் கோலாகலமாக விழாக்கள் நடத்தப்பட்டு அதில்
திருமாவளவனுக்கு கிலோ கணக்கில் தங்கம் கொடுக்கப்பட்டு வருகிறது. பொன்விழாவை
அடையாளம் காட்டும் வகையில் முதலில் திருமாளவனுக்கு ஐம்பது கிராம் தங்கம்
வழங்கும் என விழா அறிவிக்கப்பட்டது. ஆனால், அதில் 87 கிராம் தங்கம்
கொடுக்கப்பட்டது. இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய
நிர்வாகியான மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன் தலைமையில் திருமாவளவனுக்கு 500
கிராம் பொற்காசுகள் வழங்கும் விழா கடந்த ஜூலை 18-ம் தேதி நடந்தது.
இந்த
நிகழ்ச்சியில் மடிப்பாக்கம் பகுதித் தொண்டர்கள் மட்டும் வெற்றிச்செல்வன்
தலைமையில் 500 கிராம் அதாவது அரை கிலோ தங்கத்தை திருமாவளவனுக்குக்
கொடுத்திருக்கிறார்கள். இதில் வெற்றிச்செல்வன் மட்டும் 80 கிராம் அதாவது
பத்து பவுன் தங்கம் கொடுத்திருக்கிறார். இந்த விழா விடுதலைச் சிறுத்தைகளின்
மற்ற நிர்வாகிகளை மட்டுமல்ல... மாற்றுக் கட்சியினரைக் கூட திரும்பிப்
பார்க்க வைத்திருக்கிறது.
தி.மு.க.வின் தலைவரான கருணாநிதி கூட இந்த
அளவுக்குத் தொண்டர்களிடம் வசூல் வேட்டை நடத்தியதில்லையே என்று அரசியல்
வட்டாரத்தையே கிடுகிடுக்க வைத்திருக்கிறது சிறுத்தைகளின் பொன்விழா.
ஆனால்... ஒவ்வொரு மாவட்டமாக நடந்துகொண்டே இருக்கிறது சிறுத்தைகளின்
பொன்விழா. வரும் ஜூலை 25-ம் தேதி வேலூர் மாவட்ட சிறுத்தைகள் சார்பாக
ஆயிரத்து ஐநூறு கிராம் அதாவது ஒன்றரை கிலோ தங்கம் வழங்கும் விழா நடக்கிறது.
முன்னதாக சென்னை மடிப்பாக்கத்தில் நடந்த 500 கிராம் தங்கம் வழங்கும்
விழாவில் பேசிய திருமாவளவன், ‘‘விடுதலைச் சிறுத்தைகளின் செய்திகளை கட்சிகள்
இருட்டடிப்பு செய்கின்றன. எனவே நம் செய்திகளை மற்ற கட்சிகள் போல வலுவாக
மக்களிடையே கொண்டு சேர்க்க நமக்கொரு ஊடகம் தேவைப்படுகிறது. நமக்கு ஒரு
தொலைக்காட்சி தேவைப்படுகிறது. ஆனால், அதற்கு பெரும் நிதியாதாரம் தேவை
என்பதால்தான் இதுபோன்று பொற்காசுகள் பெறும் நிகழ்ச்சி மாவட்டம் தோறும்
நடைபெற்றுவருகிறது. வெற்றிச்செல்வன் கொடுத்துள்ள இந்தத் தொகையோடு சேர்த்து
மொத்தம் மூவாயிரத்து ஐநூறு கிராம் பொற்காசுகள் சேர்ந்துள்ளன.
மாவட்டத்துக்கு ஐம்பது பவுன் இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த வருட
இறுதிக்குள் பொற்காசுகள் பெறப்பட்டு தொலைக்காட்சி தொடங்கப்படும். நான் இந்த
பொற்காசுகளை தொழிலதிபர்களிடம் இருந்தோ, பெரும் வியாபாரிகளிடம் இருந்தோ
பெறவில்லை. மாறாக சிறுத்தைகளின் தொண்டர்களிடமிருந்துதான் பெறுகிறேன்’’
என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் சிறுத்தைகளின் இந்த பொன்விழா மீது தமிழக உளவுத்துறை
ஒரு கண் வைத்துள்ளதாக நமக்குக் கிடைத்திருக்கும் எக்ஸ்குளுசிவ் தகவல்கள்
கிடைத்துள்ளன. இதுபற்றி உளவுத்துறை வட்டாரங்களில் தீவிரமாகத் துருவியபோது
அவர்கள் பார்க்கும் கோணம் நம்மை அதிர வைத்தது.
‘‘தி.மு.க.
கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
திருமாவளவன்... சமீபகாலமாக தி.மு.க.வுக்கும், காங்கிரஸூக்கும் முறையே
தி.மு.க.வினர், காங்கிரஸாரை விட மிகவும் விசுவாசமாக இருந்துவருகிறார்.
ஆவேசமாக ஈழ ஆதரவு நிலை எடுத்து பேசக்கூடியவர், கருணாநிதி டெசோ மாநாட்டில்
தமிழ் ஈழம் அமைய தீர்மானம் நிறைவேற்றப் போவதில்லை என்றதும்... திருமா
எதிர்க்கருத்தோ அல்லது மாற்றுக் கருத்தோ வெளியிடுவார் என்று சிறுத்தைகளில்
உள்ள நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஆனால்... திருமாவளவனோ கருணாநியின்
கருத்துக்கு அப்படியே ஒத்திசைவாகப் பேசினார்.
முன்னதாக பிரணாப் முகர்ஜிதான் ஈழப் போரை சூத்திரதாரியாக நின்று
நடத்தியவர், அவருக்கு உங்கள் ஆதரவா என்று விமர்சனங்கள் வந்தபோது, ‘ஈழப்
பிரச்னை ஒன்றை மட்டுமே அளவுகோலாக வைத்து இந்த விவகாரத்தை அணுக முடியாது’
என்று சாதுர்யமாக பதிலளித்தார். திருமாவளவனின் இந்தப் பக்குவம்
அரசியல்வட்டாரத்தில் கவனிக்கப்பட ஆரம்பித்தபோதுதான், வரிசையாக அவரது
பொன்விழாக்களும் நடந்துவருகின்றன.
விடுதலைச் சிறுத்தைகளின் பெரும்பாலான நிர்வாகிகள் தலித்துகள்தான்.
பொதுவாகவே சிறுத்தைகள் இதுவரை சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ, உள்ளாட்சி
மன்றங்களிலோ பெரும் ஏன் கணிசமான எண்ணிக்கையில் கூட பிரதிநிதிகளைப்
பெறவில்லை. எனவே அவர்கள் ‘சம்பாதிக்க’வும் வாய்ப்பே இல்லை. மேலும் தலித்
சமூகத்தில் பெரும் தொழிலதிபர்களும் இல்லை.
இந்த நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரை வறுமைக் கோட்டின் விளிம்பில்
இருக்கிறவர்கள்தான் பெரும்பலான தலித் மக்கள். அன்றாட செலவுக்குக் கூட
வழியில்லாமல் அரசின் இலவச அரிசியை நம்புகிறவர்களாகவே தலித்துகள்
இருக்கிறார்கள். இந்த நிலையில் திருமாவளவனுக்கு பொற்காசுகள் குவிவது எப்படி
என்ற கேள்வி எங்களுக்கு வாய்மொழிப் புகாராக வந்தது.
இந்தக் கேள்வியில் உள்ளீடு இருப்பதாகவே நாங்கள் கருதினோம்.
இதற்கிடையில் இன்னொரு தகவலும் எங்கள் காதுக்கு வந்து விழுந்துள்ளது.
அதாவது ஆ.ராசா, திருமாவளவன் இருவரும் தலித் என்ற அளவில் ஸ்பெக்ட்ரம்
பணத்தின் ஒருபங்கு சிறுத்தைகளுக்கும் சென்றடைந்திருக்குமோ என்ற சந்தேகத்
தகவல்தான் அது. அதுதான் இப்போது தங்கமாக மாற்றம் பெற்றுக் கொண்டிருக்கிறதா
என்று சிறுத்தைகளில் முன்பு இருந்து இப்போது தீவிர அரசியல் இருந்தே
விலகிவிட்டவர்கள் சிலர் எங்கள் காதில் போட்டிருக்கிறார்கள். அவர்களது
சந்தேகத்தையும் தள்ளிவைக்க முடியவில்லை. எனவே... திருமாவளவனின் பொன் விழா
மீது ஒரு கண் இருப்பது உண்மைதான்’‘ என்கிறார்கள்.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு, சென்னை பிரஸ் கிளப்பில் பிரஸ் மீட்
வைக்கப் போகிறார் என்றால் ஒரு மோட்டார் சைக்கிளில் வரும் திருமா...
அங்கிருந்த அன்னபூரணா ஸ்வீட்ஸ் கடையில் லட்டும் மிக்சரும் வாங்கி தானே
எடுத்துக் கொண்டு கிளப்புக்கு வருவார். பத்திரிகையாளர்களுடன் கலகலப்பாக
பேசிக் கொண்டிருப்பார். அந்த எளிமையும், நெருக்கமும் இன்று திருமாவிடம்
இல்லை என்பதே மிகப் பலரின் கருத்து!
ஒரு போராளியாக வாழ வேண்டியவர்... ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக
வளர்ந்திருக்க வேண்டியவர்... அச்சமூக மக்களின் என்றும் நிரந்தர தலைவராக
இருக்க வேண்டியவர், இன்று பல தளங்களில் பிரயாணம் செய்து, தடுமாறிக்
கொண்டிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது. விடுதலைச் சிறுத்தை
கட்சியின் அரசியலுக்கு பல தேவைகள் இருக்கலாம். மறுக்கவில்லை. இதுவரை எந்தக்
கட்சியுமே பின்பற்றாத பொன் பரிசளிப்பு என்பது தேவையா என்று பல தரப்பையும்
வியக்க அல்ல... திருமாவை மொய்க்க வைத்திருக்கிறது.
மாநிலக் கல்லூரி மாணவராக இருந்த காலத்திலும், அரசுப் பணியில் இருந்த
காலத்திலும், அரசியல் பாதையில் அவர் பயணித்த காலத்திலும் இருந்த
திருமாவளவன் என்ற போராளியை பார்த்தவர்கள், பழகியவர்கள் இன்று அந்த திருமா
எங்கே என்று ஏங்கிக் கிடக்கிறார்கள்.
கட்சிக்கு நிதி சேர்ப்பது தவறல்ல.... பொற்காசுகளால் இயக்கத்தில் சரிவை
ஏற்படுத்திவிடுவாரோ என்ற அச்சத்தில் சில சிறுத்தைகள் மனம் வெதும்பி
வருகின்றனர்.அதே நேரத்தில், உளவுத்துறையின் கண்காணிப்பு பற்றி
சேரவேண்டியவர்களுக்கு சென்று சேர்ந்தால் சரிதான்!

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» "கலவரத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது': அசாம் அரசு மீது உளவுத்துறை புகார்
» இந்திய உளவுத்துறை மீது ராஜபக்சே பகிரங்க குற்றச்சாட்டு: சதி செய்து சரத் பொன்சேகாவை எதிரி ஆக்கி விட்டதாக புகார்
» டில்லியை அதிர வைத்திருக்கிறது. சேனல்-4

» இரண்டு ஆண்டுகளாக "ஈ'க்களுடன் போராடும் அவலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum