Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இரண்டு ஆண்டுகளாக "ஈ'க்களுடன் போராடும் அவலம்
Page 1 of 1

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே நாட்டுக்கல்பாளையத்தில் இரண்டு
ஆண்டுகளுக்கு மேலாக "ஈ' தொல்லையால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
"ஈ'க்களின் ஆக்கிரமிப்பால் நிம்மதியாக சுவாசிக்கக்கூட முடியாத மக்கள்
விரக்தியின் உச்சகட்டத்தில் உள்ளனர்.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நாட்டுக்கல்பாளையம்
கிராமத்தில் மொத்தமுள்ள 600 வீடுகளில் 2,500 பேர் வசிக்கின்றனர். இந்த
கிராம மக்களின் ஒட்டுமொத்த நிம்மதியையும், சுகாதாரத்தையும்
கெடுத்துக்கொண்டுள்ளன "ஈ'க்கள். ஒரு விநாடி ஏமாந்தால் கூட காது, மூக்கு,
வாய்க்குள் ஈக்கள் புகுந்து அட்டகாசம் செய்து விடுகின்றன. வீடுகளில் உள்ள
தண்ணீர் தொட்டி, சமையல் அறை, பெட்ரூம், பாத்ரூம் என்று ஒரு பகுதியையும்
விட்டு வைக்காமல் ஆக்கிரமித்துள்ளன ஈக்கள். இதனால், தண்ணீர், டீ குடிக்க
முடியாமலும், சாப்பாடு சாப்பிட முடியாமலும், நிம்மதியாக தூங்க முடியாமலும்
அல்லாடுகின்றனர் நாட்டுக்கல்பாளையம் கிராமம் மக்கள். இரண்டு ஆண்டுகளாக
இருக்கும் "ஈ' பிரச்னை கடந்த சில மாதங்களாக கிராமத்தில் இல்லாமல்
இருந்தது. இதனால் நிம்மதியாக வாழ்ந்த மக்களை மீண்டும் "ஈ' தொல்லை மிரட்ட
துவங்கியுள்ளது.
என்ன காரணம்: நாட்டுக்கல்பாளையத்தில் இருந்து கஞ்சம்பட்டி
செல்லும் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் முட்டை கோழிப்பண்ணை
அமைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு கோழிப்பண்ணை அமைக்கப்பட்ட
போது, கிராமத்தில் உள்ளவர்களுக்கு அங்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. ஆனால்,
சில மாதங்களில் கோழிப்பண்ணை கழிவுகளின் துர்நாற்றத்திற்கு "ஈ'க்கள்
வரத்துவங்கியது. கோழிப்பண்ணையில் உற்பத்தியாகும் ஈக்கள் அருகிலுள்ள
நாட்டுக்கல்பாளையம் கிராமம் முழுவதும் ஆட்கொண்டு விட்டது.
நாட்டுக்கல்பாளையம் ஊராட்சி தலைவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை என்பதால்
மக்களால் வாய்திறந்து எதையும் வெளிப்படையாக பேச முடியவில்லையாம்.
"ஈ'க்களால் பொறுமையிழந்த மக்கள், ஆரம்ப கட்டத்திலேயே தலைவரிடம் புகார்
செய்துள்ளனர். அவ்வப்போது கோழிப்பண்ணையிலும், கோழிப்பண்ணை
சுற்றுப்பகுதிகளிலும் நோய் தடுப்பு மருந்துகளையும், ஈக்களை
கட்டுப்படுத்தும் மருந்துகளையும் தெளித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஊராட்சி
நிர்வாகம். ஆனால், "ஈ' பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவில்லை. கடந்த ஆறு
மாத இடைவெளிக்கு பின் கோழிப்பண்ணையில் முட்டைக்கோழி வளர்ப்பு மீண்டும்
துவங்கியதும், "ஈ'க்களின் பெருக்கமும் அதிகரித்து விட்டது.
அதிகாரிகள் முகாம்: "ஈ' தொல்லை பற்றி பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி
ஒன்றிய அலுவலகத்திற்கும், மாவட்ட கலெக்டருக்கும் புகார் சென்றது. உதவி
இயக்குனர் (ஊராட்சிகள்) ஜெயராமன், தெற்கு ஒன்றிய அதிகாரிகள்
நாட்டுக்கல்பாளையத்திற்கு "விசிட்' செய்தனர். கோலார்பட்டி ஆரம்ப சுகாதார
நிலைய சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: நாட்டுக்கல்பாளையம் ஊராட்சி
சுற்றுப்பகுதியில் எந்த இடத்திலும் சுகாதார கேடு இல்லை. அதனால், அங்குள்ள
கோழிப்பண்ணையில் இருந்து தான் "ஈ' பரவியிருக்க வேண்டும். கிராமத்தில் உள்ள
ஈக்களை முழுமையாக கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மூலம் மருந்து
தெளிக்கப்பட்டுள்ளது. மூன்று நாள் இடைவெளியில் இரண்டு முறை மனு தெளிக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவரும் மக்களுடன் பேச்சு நடத்தி
கோழிப்பண்ணையில் இருந்து ஈக்கள் வராமல் தடுப்பு நடவடிக்கை எடுப்பதாக
உறுதியளித்துள்ளார். இந்த பிரச்னையில் மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை
எடுக்காவிட்டால், கோழிப்பண்ணையை மூடுவதற்கு கலெக்டருக்கு பரிந்துரை
செய்யப்படும் என்று உதவி இயக்குனர் எச்சரித்துள்ளார். இவ்வாறு, ஒன்றிய
அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுகாதார நடவடிக்கை: நாட்டுக்கல்பாளையத்தில் கடந்த மூன்று
நாட்களாக "ஈ' தொல்லை அதிகரித்திருப்பது பற்றி கோலார்பட்டி ஆரம்பசுகாதார

சுகாதார ஆய்வாளர் கூறுகையில், "கோடை காலத்தில் மா, பலா போன்ற பழங்களின்
சீசன் என்பதால் "ஈ' அதிகமாக இருக்கும். ஆனால், நாட்டுக்கல்பாளையத்தில்
அபரிமிதமாக "ஈ' உற்பத்தியானதற்கு அங்குள்ள கோழிப்பண்ணை காரணமாக உள்ளது.
கோழிக்கு கொடுக்கும் தீவனத்தில் ரசாயன விகிதம் மாறுபட்டுள்ளதால், கோழி
எச்சத்தில் நுர்நாற்றம் ஏற்பட்டு "ஈ'க்களை வரவழைத்துள்ளது. கோழிப்பண்ணை
உரிமையாளர் உதவியுடன் கிராமம் முழுவதும் சுகாதார நடவடிக்கையாக மருந்து
தெளிக்கப்பட்டுள்ளது. "டாடாமேன்கின்' என்ற மருந்தை சர்க்கரை மற்றும்
பைனாபிள் எசன்ஸ் உடன் கலந்து கிராமம் முழுவதும் தெளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் மருந்து தெளிக்கப்பட்ட கோணிப்பை
போடப்பட்டுள்ளது. கோழிப்பண்ணையிலும் தடுப்பு நடவடிக்கை கையாளப்பட்டது.
இதனால், இரண்டு நாட்களில் "ஈ'க்களின் தாக்கம் கட்டுப்பட்டுள்ளது' என்றார்.
வேகம் காட்டிய ஊராட்சி நிர்வாகம்: கோழிப்பண்ணையில் இருந்து "ஈ'
பரவுவதாக புகார் கிளம்பியுள்ளதால், இந்த பிரச்னையில் ஊராட்சி நிர்வாகம்
துரிதமாக செயல்பட்டுள்ளது. ஊராட்சி குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்தி
குடிநீர் வினியோகம் செய்கிறது. பொதுஇடம், தெருவோரங்களில் மருந்து தெளித்து
ஈக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். ஊராட்சி தலைவர்
முத்துலட்சுமி கூறுகையில், ""கோடை வெயில் காலத்தில் ஈ தொல்லை அதிகமாக
இருக்கும். இங்கு கோழிப்பண்ணை காரணமாக ஈ தொல்லை இருப்பதாக கூறுகின்றனர்.
எட்டு மாதமாக எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்த நிலையில், இப்போது எப்படி
ஈ அதிகரித்துள்ளது என்பது தெரியவில்லை. ஈக்களை கட்டுப்படுத்த
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் 60 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள்
வந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் ஈ தொல்லை முழுமையாக போக்கப்படும்.
குடிநீரை காய்ச்சி குடிக்க எச்சரிக்கை செய்துள்ளோம். கோழிப்பண்ணையில்
முழுமையான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார்.
கிராமமே காலியாகி விடும்
ராமசாமி, முதியவர்: நான்கு தலைமுறையாக கிராமத்தில் வசிக்கிறோம்.
இதுவரை இந்த மாதிரி பிரச்னை வந்ததில்லை. நகரத்தை விட கிராமத்தில்
சுகாதாரமாக வாழ முடியும் என்கிறார்கள். கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையால்
ஒட்டுமொத்த சுகாதாரமும் போய்விட்டது. நிம்மதியாக டீ கூட குடிக்க
முடியவில்லை. ஈக்களின் தொல்லையால் கிராமத்தின் நிம்மதியே தொலைந்து விட்டது.
சின்னத்துரை, டீக்கடைக்காரர்: ரோடு, வீடு எங்கு பார்த்தாலும்
ஈக்கள் தான் இருக்கிறது. ஒரு நிமிடம் நகராமல் நின்றால் கால் முழுவதும் ஈ
உட்கார்ந்து அரிக்க துவங்கிவிடுகிறது. டீக்கடை வியாபாரமும் பாதித்து
விட்டது. ஊராட்சி நிர்வாகமும் மருந்து தெளித்து ஈயை கட்டுப்படுத்த
முயற்சிக்கிறது. ஆனால், மருந்தில் வீரியம் இல்லாததால் ஈக்கள் அழியாமல்
உள்ளது.
சுசீலா, மளிகை கடைக்காரர்: ஈ தொந்தரவால் கடையில் இனிப்பு வகைகள்
விற்பதை தவிர்த்து விட்டோம். பெரியவர்கள் கூட ஈ தொல்லையை சமாளித்து
விடுகின்றனர். குழந்தைகள் தான் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு ஈயை விரட்ட
தெரியாததால் அவர்களின் மூக்கு, காதுக்குள் ஈ புகுந்து விடுவதால்
சிரமப்படுகின்றனர். இதனால் குழந்தைகளை தனியாக விடவோ, தூங்க வைக்கவோ
முடியவில்லை. இப்படியே இருந்தால் கிராமத்தில் யாரும் வாழ முடியாது.
ஆறுச்சாமி, விவசாயி: கால்நடைகளுக்கு தண்ணீர் ஊற்றி வைத்தால்,
மேற்பரப்பு முழுவதையும் ஈ மொய்த்து விடுகிறது. ஈ செத்து மிதக்கும் தண்ணீரை
குடித்தால் கால்நடைகளுக்கு வயிற்று கோளாறு ஏற்படுகிறது. நாங்களும்
தண்ணீர், டீ, சாப்பாடு சாப்பிட முடியாமல் அவதிப்படுகிறோம். தட்டில்
சாப்பாடு போட்டு உட்கார்ந்தால், அதை சாப்பிடுவதற்குள் ஈக்கள் மொய்த்து
விடுகிறது. இரவு, பகலாக ஈ தொல்லை இருப்பதால் மக்களின் ஒட்டுமொத்த
நிம்மதியும் பறிபோய்விட்டது. இதை முழுமையாக கட்டுப்படுத்தாவிட்டால்
கிராமமே காலியாகி விடும்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» பென்ஷனுக்கு "போராடும்' தியாகிகள் : கலெக்டர் அலுவலகத்துக்கு கால் கடுக்க நடக்கும் அவலம்
» பாஸ்போர்ட் கிடைக்காததால் "பறப்பது' கனவாகிறது:இரு ஆண்டுகளாக போராடும் நரிக்குறவர் இளைஞர்கள்
» நாஞ்சில் நாட்டு அவலம்!!! தோளுக்கு சீலை போராட்டம் - நீங்கள் கேள்விபடாத ஒரு சமூக அவலம்!!!
» "கோப்பாப்புலவில் உயிருக்காகப் போராடும் சாதனாவிற்கு உதவும் தருனமிது"
» பொற்காசுகளுக்கு போராடும் போராளி மீது கண் வைத்திருக்கிறது உளவுத்துறை ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum