Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 3:35 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 4:59 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 12, 2024 2:10 am
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அந்தரங்கம் புனிதமானது!
Page 1 of 1
அந்தரங்கம் புனிதமானது!
2006
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்குத் தங்கம் வென்ற வீராங்கனை பிங்கி
பிரமாணிக் ஒரு பெண் அல்ல என்பதும் அவர் ஒரு திருநங்கை என்பதும் தற்போது
மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.பிங்கி மீது ஒரு பெண் கூறிய
வல்லுறவுக் குற்றச்சாட்டின் காரணமாக இத்தகைய மருத்துவப் பரிசோதனையும்,
காவல்சிறையும் அவருக்கு நேரிட்டது. ஆனால், இந்த வழக்கில் பிங்கி பிரமாணிக்
வெறும் காட்சிப்பொருளாக மாற்றப்பட்டார். அவரது தனிமனித உரிமைகளைப்
பாதுகாக்கக் காவல்துறை தவறிவிட்டது. அவரது அந்தரங்கம் புனிதமானதாகக்
கருதப்படவில்லை.பிங்கி கைது செய்யப்பட்டு 25 நாள்கள் காவல்துறையின்
கட்டுப்பாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே தன்னை அவர்கள் ஒரு மனித
ஜீவனாகவே மதிக்கவில்லை, மிகவும் அவமானப்படுத்தினர் என்று தனது ஆதங்கத்தைக்
கொட்டித் தீர்த்திருக்கிறார் பிங்கி.அவருக்கு நடத்தப்பட்ட அந்தரங்க
மருத்துவப் பரிசோதனை சில இணைய தளங்களில் அப்படியே வெளியானது. இத்தகைய
அத்துமீறல் காவல்துறை அல்லது மருத்துவத் துறை உதவி இல்லாமல் நடைபெற்றிருக்க
வாய்ப்பே இல்லை. ஆனால், இதுகுறித்து மேற்கு வங்க அரசோ, காவல்துறையோ எந்தக்
கவலையும் கொள்ளவில்லை. வருத்தம் தெரிவிக்கவில்லை. நடவடிக்கையும்
எடுக்கவில்லை.பிங்கி மீது கூறப்படும் வல்லுறவுக் குற்றச்சாட்டு
உண்மையாக இருந்தால் அவர் தண்டிக்கப்பட வேண்டியவர் என்பதில் மாற்றுக்கருத்து
இல்லை. ஆனால், அவரது உடற்கூறு சோதனையை எவ்வாறு இணையதளத்தில் வெளியிடலாம்?
அதற்குக் காரணமானவர்கள் யார்? இந்தச் சம்பவத்துக்காக சில விளையாட்டு
வீரர்களும் அமைப்புகளும் மட்டுமே கண்டனம் தெரிவித்தபோது, ஏன் மற்றவர்கள்
எந்தச் சலனமும் இல்லாமல் இருந்தனர் என்பது புரியவில்லை.இந்த
வழக்கில் பிங்கி அடைந்த அவமானங்களுக்குப் பல அமைப்புகள் கண்டனம்
தெரிவிக்கத் தயங்கியதற்குக் காரணம், இவர் பெண்போல நடித்தவர் என்பதும், இவர்
மீதான வல்லுறவு வழக்கும்தான். ஆகவே அனைவரும் ஒதுங்கிக்கொண்டனர். இப்போது
பிங்கி, பெண் அல்ல திருநங்கை என்று தெரியவந்துள்ள நிலையிலாவது இந்த
நடவடிக்கையைக் கண்டிக்க முன்வர வேண்டும். திருநங்கையாக இருப்பவர் பெண்ணாக
நடித்தார் என்று எப்படிக் கூற முடியும்? திருநங்கையரின் இயல்பே அதுதானே...கொல்கத்தாவின்
எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் 11 மருத்துவர்கள் அடங்கிய குழுவின்
அறிக்கைப்படி, பிங்கியின் மரபணுச் சோதனையில் அவருக்கு மரபணுவில் ஆண்தன்மை
இருந்தாலும், ஆண்மகனுக்கு இருக்க வேண்டிய உடற்கூறுகள் அவரிடம் இல்லை என்று
தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையின்படி பார்த்தால், வல்லுறவுக்கு
வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக
நடந்துகொண்டார் என்ற குற்றத்துக்கு வேண்டுமானால் பிங்கி மீது வழக்குத்
தொடரலாம்.இருப்பினும்கூட இந்த வழக்கு பிங்கியின் பாலினத்தை உலகறியச்செய்து அவரை அவமானப்படுத்தும் நோக்கில் தொடுக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. பிங்கி
ஒரு திருநங்கை என்று அறிவதற்கு மருத்துவத் துறைக்கு 25 நாள்கள் ஆயிற்று
என்பதும், அவரை 25 நாள்கள் காவல்துறையினர் சிறையில் வைத்து
அவமானப்படுத்தியதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. மரபணு சோதனைக்கு
வேண்டுமானால் சில நாள்கள் தேவைப்பட்டிருக்கலாம். ஆனால், உடற்கூறு சோதனையை,
முதல்கட்ட அறிக்கையாக அளித்து, பிங்கியை ஜாமினில் வெளியே செல்ல
அனுமதித்திருக்க வேண்டும். எத்தனையோ வல்லுறவு வழக்குகளில் சோதனைகள்
நடத்தப்படும்போது இல்லாத ஆர்வம், பிங்கியின் உடற்கூறு சோதனையில் மட்டும்
ஏன் நேர்ந்தது? அவர் திருநங்கை என்பதை வெளிப்படுத்திவிட வேண்டும் என்ற
ஆர்வக்கோளாறைத் தவிர, வேறு என்னவாக இருக்க முடியும்? இப்போது, அவர் ஒரு
திருநங்கை என்பது உறுதியாகி இருப்பதால், அவரைப் பெண்ணாகவே கருத வேண்டும்.பிங்கி
பெண் அல்ல, அவர் ஒரு ஆண் என்ற குற்றச்சாட்டு எழுந்தவுடனே விளையாட்டுத்
துறையைச் சேர்ந்தவர்கள் அவரிடமிருந்து விளையாட்டுப் பதக்கங்களைப் பறிக்க
வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டனர். இத்தகைய அர்த்தமற்ற முயற்சிகளை
விளையாட்டுத் துறையும் அதைச் சார்ந்தவர்களும் கைவிட வேண்டும்.திருநங்கைகள்
உலக அழகிப் போட்டிகளிலேயே பங்கேற்கலாம் என்ற நிலை உருவாகியுள்ள இந்த
வேளையில், விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் பிரிவில் திருநங்கைகள்
பங்குகொண்டால் என்ன? என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து சர்வதேச
விளையாட்டு அமைப்புகள்தான் ஒரு முடிவு காண வேண்டும்.தமிழ்நாட்டிலும்கூட
ஒரு இளம் விளையாட்டு வீராங்கனை, பதக்கம் பெற்று வந்த பிறகும், அவரது
பதக்கம் பறிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. அவர் திருநங்கை என்பதை அறிவித்து
அவரைப் பெண்ணாகவே கருதி, அந்த விருதை அவருக்கு அளித்திருக்கலாம்,
அளித்திருக்க வேண்டும். ஆனால், அந்த நேரத்தில் இதுபற்றி யாரும் பேசாமல்
அமைதியாகிவிட்டனர்.பிங்கியின் மருத்துவ அறிக்கைப்படி, அவர் மீதான
வல்லுறவுக் குற்றச்சாட்டு, பலாத்காரக் குற்றச்சாட்டாக மாற்றப்பட்டு
விசாரிக்கப்படலாம், தண்டிக்கவும்படலாம். ஆனால், உடற்கூறு சோதனைகளில்
தனிமனித அந்தரங்கத்தைக் காக்கத் தவறிய காவல்துறை மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டேயாக வேண்டும். ஒலிம்பிக் போட்டி, ஆசியப் போட்டிகளுக்கு
வீரர்களை அனுப்பும் முன்பாக, ஊக்கமருந்து சாப்பிட்டார்களா என்பதையும்,
மரபணு சோதனை மூலம் அவர் ஆணா, பெண்ணா என்பதையும் தெளிவாக அறிந்துகொண்டு
பிறகு அவர்களைப் போட்டிக்கு அனுப்பி வைக்கும் நடைமுறைக்கு விளையாட்டுத்
துறை தன்னை இனிமேலாவது தயார்படுத்திக்கொள்வது அவசியம்.ஆணோ, பெண்ணோ,
திருநங்கையோ யாராக இருந்தாலும் சரி, அவர்களது அந்தரங்கம் புனிதமானது. அதைக்
கொச்சைப்படுத்தக் காவல்துறைக்கு அதிகாரம் இல்லை!
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» அன்புடன் அந்தரங்கம்!
» அன்புடன் அந்தரங்கம் 05-05-13
» அன்புடன் அந்தரங்கம்!
» அன்புடன் அந்தரங்கம்!
» அன்புடன் அந்தரங்கம்!
» அன்புடன் அந்தரங்கம் 05-05-13
» அன்புடன் அந்தரங்கம்!
» அன்புடன் அந்தரங்கம்!
» அன்புடன் அந்தரங்கம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum