Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அன்புடன் அந்தரங்கம்!
Page 1 of 1
அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு,
என் வயது, 35; என் கணவர் வயது, 45. எங்களுக்கு பள்ளி செல்லும் இரு குழந்தைகள் உள்ளனர். நான், தனியார் பள்ளி ஆசிரியை. என் கணவர் ஒரு அலுவலகத்தில் பணியாற்றுகிறார். அம்மா, என் பிரச்னையே, சில ஆண்டுகளாக, என் கணவரிடமிருந்து தாம்பத்திய சுகம் கிடைக்காததுதான். என் கணவர், அதில் சிறிதும் நாட்டமில்லாமல் இருக்கிறார். அவர் விரும்பும் போது மட்டும், ஏனோ தானோவென்று என்னை அழைக்கிறார். அதில், எனக்கு எந்த திருப்தியும் கிடைப்பதில்லை. பல முறை நல்ல விதத்தில், என் ஆசையை எடுத்து கூறியும், பலன் இல்லை. இதனால், எப்போதும் மன வேதனையுடன் இருப்பேன்.
என் பள்ளி நண்பர், நான்கு ஆண்டிற்கு முன், வேலை மாறுதலாகி, எங்கள் ஊருக்கு வந்தார். அவர் மிகவும் நல்லவர்; கவுரவமான குடும்பம். அவர் அப்பா - அம்மா, மனைவி மற்றும் பிள்ளைகளை அதிகம் நேசிப்பவர். அப்படிப்பட்டவர் நட்புக்காக, ஒரு பெரிய தவறை செய்து விட்டார்.
அவர் எங்கள் ஊருக்கு வந்த புதிதில், நான் அவரை சந்திக்கவும், பேசவும் நேர்ந்தது. அப்போது, அவர், 'ஏன் உற்சாகம் இல்லாமல், ஒருவித சோர்வுடன் இருக்கிறாய்... திருமண வாழ்க்கை சந்தோஷமாக இல்லையா?' எனக் கேட்டார். அப்போதுதான், நான், என்னுடைய சுக துக்கங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அதற்கு அவர், 'உன் கணவரை நல்ல மருத்துவரிடம் அழைத்து செல்; அடிக்கடி பாசமுடன் நெருங்கு; உன் தேவைகளை நல்ல முறையில் எடுத்துக்கூறு...' என, பல யோசனைகளை கூறினார்.
நானும், அப்படியே நடந்தேன். ஆனால், அதில் எந்த பயனும் இல்லை. இதையும் அவரிடம் கூறினேன். அதற்கு அவர், மிகுந்த தயக்கத்துடன், 'நீ விருப்பப்பட்டால் நான் உன்னை திருப்திபடுத்துகிறேன்; நீ விரும்பும் சமயத்தில் உனக்காக மட்டும்தான்...' என்றார். நானும் நிறைய யோசித்து, பின் சம்மதித்து விட்டேன்.
எங்களை தவறாக நினைக்க வேண்டாம். நானும், ஒரு பெண்தான்; எனக்கும் ஆசை உண்டு. இருந்தாலும், நான், என் கணவருக்கும், அவர் மனைவிக்கும் செய்வது துரோகம் என்று தெரிந்தே, அவர் தங்கி இருக்கும் அறைக்கு, வாரம் இருமுறை என, கடந்த நான்கு ஆண்டுகளாக சென்று வந்தேன். அம்மா எனக்கோ, அவருக்கோ வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அவர், அந்த விஷயத்தில் என்னை மிகவும் சந்தோஷப்படுத்தினார்.
ஆனால் அம்மா, அவர் இப்போது மாற்றலாகி, அவரின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். என்னிடம் போனில் மட்டும் பேசுவார். 'தொடர்ந்து உனக்கு சந்தோஷம் தர முடியவில்லை; என்னை மன்னித்துக் கொள். ஆனால், அதற்காக வருந்தாதே... இதுதான் உன் விதி! இனி, நீ, உன் குழந்தைகளை கவனி; அவர்களை நன்றாக படிக்க வைத்து, பெரிய அளவில் அவர்களை முன்னேற்று. நாம் இவ்வளவு நாள் செய்த தவறுக்கு ஆண்டவனிடம் பாவமன்னிப்பு கேள். உன் கணவர் மனது நோகாமல் பார்த்து கொள்; ஏழை முதியோருக்கு உதவு...' என்று அறிவுரை கூறினார்.
ஆனால், என்னால் தான் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எப்போதும், ஒரே டென்ஷன்... மாலையில் தலைவலி, கழுத்து வலி போன்ற பிரச்னைகள் வருகிறது; பிள்ளைகளை சரியாக கவனிக்க முடியவில்லை.
அம்மா... இதற்கு தீர்வுதான் என்ன?
பின் குறிப்பு: என் அப்பா குடும்பமும், ஊரில் மிகவும் கவுரவமான குடும்பம். இந்த மாதிரி தவறு செய்யும் நிறைய பேருக்கு உங்கள் திட்டும், அறிவுரையையும் படித்திருந்தும், என் மனம் அமைதி அடையவில்லை.
அன்பு மகளுக்கு,
கட்டிய கணவருடன் கிடைக்காத தாம்பத்ய சுகத்தை, பள்ளி தோழனிடம் திருட்டுத்தனமாக பெற்றிருக்கிறாய். பள்ளித்தோழன் இடமாற்றலாகி போனவுடன், உனக்கு கிடைத்த திருமண பந்தம் மீறிய சுகம் கிடைக்காமல் போனது. அதனால், உனக்குள் மன அழுத்தம் ஏற்பட்டு, அந்த மன அழுத்தம், மூன்று விதமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.
முதல் விளைவு, உணர்ச்சி கடலில் மூழ்கிப் போதல். இரண்டாவது விளைவு, அதீதமாய் உணர்ச்சிவசப்படல். மூன்றாவது விளைவு, உடல் மற்றும் மனதின் சோர்வு.
மகளே... திருமணமான சில ஆண்டுகளில், கணவன் மூலம் தாம்பத்யம் கிடைக்காமல், மன அழுத்தத்திற்கு உள்ளான பெண்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்கள் அனைவருமே திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபட முயற்சிப்பதில்லை. இது, நம் தலைவிதி என நொந்தபடி, வாழ்க்கையை தொடரும் பெண்கள், 30 சதவீதத்தினரும், இழந்த தாம்பத்ய சுகத்தை கணவனிடமிருந்து மீண்டும் அடைய, சாம, தான, பேத, தண்ட முறையில் ஈடுபடும் பெண்கள், 30 சதவீதத்தினர் உள்ளனர்.
கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று, மறுமணம் மூலம் முறையாய் தாம்பத்ய சுகம் அடைய முயற்சிக்கும் பெண்கள், 15 சதவீதத்தினர் உள்ளனர். பத்து சதவீத பெண்களே திருமண பந்தம் மீறிய உறவு மூலம், தாம்பத்ய சுகம் கண்டு திருப்தி அடைகின்றனர்.
உன் கணவனின் இயலாமைக்கு, மித மிஞ்சிய குடிப்பழக்கம், ஒரு காரணமாக இருக்கலாம். உன் கணவனுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழவு நோய் இருந்து, அதனால், ஆண்மை குறைவு ஏற்பட்டிருக்கலாம். அலுவலக பிரச்னைகளால், 'மேல் மெனோபாஸ் பீரியடு' வந்திருக்கலாம்.
இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா...
நான்கு ஆண்டுகள் திருட்டு தாம்பத்ய சுகம் அனுபவித்திருக்கிறாய். அதனால், ஏற்படும் குற்ற உணர்ச்சியை கை கழுவு. நீ செய்த தவறில், உன் பள்ளித்தோழனுக்கும் சம பங்கு உள்ளது. குற்ற உணர்ச்சி அவனுக்கு இல்லாத போது உனக்கெதற்கு? ஏதோ சேவை செய்தது போல் நடித்திருக்கிறான் அந்த திருடன். கண்களை விழித்துக் கொண்டே கெட்ட கனவு கண்டதாய் நினைத்து நடந்ததை புறம் தள்ளு.
இனி, இதே காரணத்தை வைத்து, திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபடாதே. கணவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்று, நீரிழிவு நோயோ, உயர் ரத்த அழுத்தமோ இருந்தால், அதை கட்டுப்படுத்த தகுந்த மருத்துவம் பார். உன் கணவருக்கு குடிப்பழக்கம் இருந்தால், அதை படிப்படியாக குறைக்க உன் கணவனோடு சேர்ந்து முயற்சி.
அனைத்தும் முயற்சித்தும், உன் கணவர் மூலம், உனக்கு தாம்பத்ய சுகம் கிடைக்கவில்லையென்றால், உன் நான்கு ஆண்டு கள்ள உறவுக்கு கிடைத்த தண்டனை என அமைதிபடு.
உன் இரு குழந்தைகளின் எதிர்காலத்தின் மீது கவனம் செலுத்து.
மனம் நிதானமடைந்தால் கழுத்து வலி, தலைவலி காணாமல் போகும்.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Similar topics
» அன்புடன் அந்தரங்கம்!
» அன்புடன் அந்தரங்கம் 05-05-13
» அன்புடன் அந்தரங்கம்!
» அன்புடன் அந்தரங்கம்!
» அன்புடன் அந்தரங்கம்!
» அன்புடன் அந்தரங்கம் 05-05-13
» அன்புடன் அந்தரங்கம்!
» அன்புடன் அந்தரங்கம்!
» அன்புடன் அந்தரங்கம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum