Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கடும் எதிர்ப்பை கண்டு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் முடிவை கைவிட்டது.
Page 1 of 1

சென்னை: இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்
மண்ணில் பயிற்சி அளிக்கும் முடிவுக்கு ஆளும் அ.தி.மு.க,. தி.மு.க.,
தே.மு.தி.க., ம.தி.மு.க., மற்றும் தமிழர் ஆதரவு கட்சிகள் காட்டிய
எதிர்ப்புக்கு பலன் கிடைத்தது. கடும் எதிர்ப்பை கண்டு மத்திய பாதுகாப்பு
அமைச்சகம் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் முடிவை கைவிட்டது. வந்த
வீரர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க மத்திய அரசு தாம்பரம் விமான
துறைக்கு இன்று தகவல் அனுப்பியது. இந்த தகவலை விமான துறை அதிகாரிகள்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இதனையடுத்து
இந்தியாவின் முடிவை கண்ட இலங்கை அரசு அதிர்ந்து போயிருக்கிறது.
இலங்கை
விமானப்படை வீரர்கள் ஒன்பது பேர், தாம்பரம் விமானப்படை நிலையத்தில்
தொழில்நுட்பப் பயிற்சி பெற வந்துள்ளதாக வெளியான தகவல், தமிழகத்தில் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியது. "இது தமிழ் இனத்துக்கு எதிரான மத்திய அரசின்
நடவடிக்கை' என கண்டித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, "வீரர்களை உடனே திருப்பி
அனுப்ப வேண்டுமென' வலியுறுத்தினார். தி.முக., - தே.மு.தி.க., - ம.தி.மு.க.,
உள்ளிட்ட கட்சிகளோடு, தமிழக காங்கிரஸ் கட்சியும், சிங்கள வீரர்களை உடனே
திருப்பி அனுப்ப வேண்டுமென குரல் எழுப்பின.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் இந்திய விமானப்படை பயிற்சி நிலையம் உள்ளது.
இங்கு, விமானங்களை பராமரித்தல் மற்றும் பழுது பார்ப்பதற்கான பொறியியல்
பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. விமானப்படை வீரர்கள் பல்வேறு பிரிவுகளாக,
இங்கு வந்து பயிற்சி பெற்று திரும்புகின்றனர். நமது வீரர்களோடு, மத்திய
அரசின் ஒப்புதலோடு வெளிநாடுகளைச் சேர்ந்த விமானப்படை வீரர்களும், பயிற்சி
பெறுகின்றனர்.
ஒன்பது பேருக்கு பயிற்சி: இந்நிலையில், இலங்கை விமானப்படையைச்
சேர்ந்த ஒன்பது வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக தாம்பரம் வந்துள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்னை; தமிழக மீனவர்கள் மீதான
தாக்குதல் காரணமாக, இலங்கை அரசுக்கு எதிராக, தமிழக அரசியல் கட்சிகள்
அனைத்தும் போர்க்குரல் எழுப்பி வரும் நிலையில், இலங்கை வீரர்களுக்கு
தமிழகத்தில் பயிற்சி அளிக்க
அனுமதித்துள்ளது அதிர்ச்சியளித்துள்ளது. இலங்கை விமானப் படையினருக்கு,
தமிழகத்தில் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பது, தமிழர்களுக்கு எதிரான செயல்;
வீரர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என,
மத்திய அரசை, முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். முதல்வர் கண்டனம்:
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ""இலங்கை வீரர்களுக்கு
பயிற்சி என்ற செய்தி, தமிழர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
தமிழர்களுக்கு, தமிழ் இனத்திற்கு எதிரான மத்திய அரசின் இந்த நடவடிக்கை
கண்டனத்துக்குரியது,'' எனத் தெரிவித்துள்ளார். மேலும், ""இலங்கை
முகாம்களில் உள்ள தமிழர்கள், தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி,
சிங்களவர்களுக்கு சமமான உரிமைகளைப் பெறும் வரை, பிற நாடுகளுடன் இணைந்து,
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என, தமிழக சட்டசபையில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, வாய்மூடி மவுனியாக இருந்த மத்திய
அரசு, தற்போது, இலங்கை விமானப்படை வீரர்களுக்கு, தமிழகத்தில் பயிற்சி
அளிக்க அனுமதி அளித்துள்ளது, தமிழர்களை அவமானப்படுத்தும் செயல். இலங்கை
போரில், பன்னாட்டு போர் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்கள் மீது, நடவடிக்கை
எடுக்க வேண்டும் என, சர்வதேச அளவில் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும்
நேரத்தில், இலங்கை வீரர்களுக்கு, தமிழகத்தில் பயிற்சி அளிப்பது
பொருத்தமற்றது,'' என முதல்வர் ஜெயலலிதா
தெரிவித்துள்ளார். கட்சிகள் கண்டனம்:
தி.மு.க., சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ""இலங்கையின் விமானப்
படையைச் சேர்ந்த ஒரு சிலருக்கு தாம்பரத்தில் பயிற்சி அளிப்பதாகச்
சொல்லப்படும் செய்தி உண்மையாக இருக்குமானால், அப்படி பயிற்சி அளிப்பது
கண்டிக்கத்தக்கது. பயிற்சிக்கு வந்தவர்களை உடனடியாக மத்திய அரசு
திருப்பியனுப்புவதே சரியாக இருக்கும்,'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பதை கண்டித்துதாம்பரத்தில் நேற்று
சாலை மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டனர். அக்கட்சியின் பொதுச் செயலர்
வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ""இது மன்னிக்க முடியாத துரோகம்.
தாம்பரத்தில் உள்ள சிங்கள விமானப் படையினரை, உடனடியாக அங்கிருந்து
வெளியேற்ற வேண்டும்,'' எனத் தெரிவித்துள்ளார்.
""மத்திய அரசு கடைபிடிக்கும் இலங்கை தொடர்பான அயல்நாட்டு கொள்கை
சிங்களர்களின் பக்கமே உள்ளது என்பதை பயிற்சி வெளிப்படுத்துவதாக,''
தே.மு.தி.க.,வும், ""இது போன்ற ஒரு நிகழ்வு சில ஆண்டுகளுக்கு முன்
வந்தபோது, தமிழகத்தில் இருக்கிற ராணுவ நிலையங்களில் இவர்களுக்கு பயிற்சி
இருக்கக் கூடாது என்று ஒரு உத்தரவு இருக்கிறது. இப்போது பயிற்சி நடப்பது
உண்மை என்றால், அவர்களை தமிழகத்திலிருந்து திரும்பப் பெற வேண்டும்,'' என்று
தமிழக காங்கிரஸ் கட்சியும் தெரிவித்தது.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» சென்னை, ஆக. 28: இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி தொடரும் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி
» சிங்கள வீரர்களுக்கு ராணுவப் பயிற்சி விவகாரம்: கருணாநிதிக்கு ஜெயலலிதா கடும் கண்டனம்
» இலங்கை வீரர்களுக்கு பயிற்சி : ஜெயலலிதா எதிர்ப்பு
» இலங்கை ராணுவத்தின் 450 வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி
» இலங்கை விமான படை வீரர்களுக்கு கோல்கட்டாவில் பயிற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum