Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சிதம்பரம் அமைச்சராக நீடிப்பது இந்திய ஜனநாயகத்துக்கே களங்கம்: ஜெயலலிதா
Page 1 of 1
சிதம்பரம் அமைச்சராக நீடிப்பது இந்திய ஜனநாயகத்துக்கே களங்கம்: ஜெயலலிதா
சென்னை,
ஜூன்.7: கிரிமினல் குற்றச்சாட்டினை நீதிமன்றத்தில் சிதம்பரம் எதிர்கொள்ள
வேண்டும் என்ற நிலையில் உள்துறை அமைச்சராக அவர் இனியும் பொறுப்பு வகிப்பது
இந்திய ஜனநாயகத்துக்கே களங்கமாக அமைந்துவிடும் என்பதால் பிரதமர் அவரை
அமைச்சர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று முதல்வர்
ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 2009
ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் சிவகங்கை தொகுதியிலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, தற்போது மத்திய அரசில் உள் துறை
அமைச்சராக உள்ள ப. சிதம்பரம் ஜனநாயக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றும்,
உண்மையிலேயே அவர் தோல்வி அடைந்த வேட்பாளர் தான் என்றும் அப்பொழுதே நான்
தெரிவித்து இருந்தேன். மேலும், இதே குற்றச்சாட்டை சென்ற ஆண்டும்
தெரிவித்து, சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி
இருந்தேன்.இந்திய ஜனநாயகத்தையே குழி தோண்டி புதைக்கும் வகையில்
அமைந்துள்ள ப. சிதம்பரத்தின் தேர்தலை எதிர்த்து, அதிமுக வேட்பாளராக
சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் மறுக்க முடியாத
ஆவணங்களின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனு ஒன்றினை
தாக்கல் செய்தார். இந்தத் தேர்தல் வழக்கினை எதிர்கொள்ள அஞ்சி, அதனை
காலம் தாழ்த்தும் வகையில் ப. சிதம்பரம், இந்தத் தேர்தல் வழக்கினை தள்ளுபடி
செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
செய்திருந்தார். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம், சிதம்பரத்தின் இடைக்கால
மனுவினை தள்ளுபடி செய்து, இந்தத் தேர்தல் வழக்கினை ப. சிதம்பரம்
எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.ப. சிதம்பரம் மோசடியாக
வெற்றி பெற்றுவிட்டார் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு. இந்தக்
கிரிமினல் குற்றச்சாட்டினை சிதம்பரம் நீதிமன்றத்தில் எதிர்கொள்ள வேண்டும்
என்ற இன்றைய நிலையில், இவர் மத்திய உள் துறை அமைச்சராக இனியும் பொறுப்பு
வகிப்பது இந்திய ஜனநாயகத்திற்கே ஒரு களங்கமாக அமைந்துவிடும். எனவே,
தேர்தல் முறைகேடு என்ற ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள மத்திய உள் துறை
அமைச்சர் ப. சிதம்பரம் இனியும் காலம் தாழ்த்தாது தனது பதவியை உடனடியாக
ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சிதம்பரம் அவ்வாறு
தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லையென்றால், உலகின் மிகப் பெரும்
ஜனநாயக நாடான இந்தியாவின் பெருமையை நிலைநிறுத்தும் வகையில், சிதம்பரத்தை
பிரதமர் அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று கேட்டுக்
கொள்கிறேன்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» பதவி விலகினார் எஸ்.எம்.கிருஷ்ணா: அமைச்சராக ராகுல் காந்தி நியமிக்கப்படலாம்?
» இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
» அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்: பிரதமராக அண்ணன் சமல், பாதுகாப்பு அமைச்சராக தம்பி கோதபாய
» திருப்பூரில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் மீது களங்கம்
» மடிக்கணினி, லாப்டொப் ன் உள்ளே என்ன இருக்கிறது?பாற்றரி ஆயுட்காலத்தை நீடிப்பது எப்படி?
» இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
» அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்: பிரதமராக அண்ணன் சமல், பாதுகாப்பு அமைச்சராக தம்பி கோதபாய
» திருப்பூரில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் மீது களங்கம்
» மடிக்கணினி, லாப்டொப் ன் உள்ளே என்ன இருக்கிறது?பாற்றரி ஆயுட்காலத்தை நீடிப்பது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum