Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 9:54 am
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 8:13 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 3:23 am
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 2:19 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 7:22 am
» சினிமா
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 12:03 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 6:45 am
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 5:22 am
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 5:19 am
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 5:14 am
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 5:08 am
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 5:56 am
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 2:45 am
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:01 am
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 8:49 am
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:28 am
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 2:56 am
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 12:45 am
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Thu Aug 11, 2022 11:58 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:18 am
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Thu Jul 21, 2022 10:44 pm
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Thu Jul 14, 2022 11:29 pm
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 2:46 am
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 2:37 am
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 4:17 am
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 2:34 am
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Sun Dec 12, 2021 5:14 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 9:44 am
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 2:39 am
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 3:15 am
» மனசு அமைதி பெற .......
by veelratna Sun Nov 07, 2021 10:43 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:41 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Sun Nov 07, 2021 10:36 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Sun Nov 07, 2021 10:34 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Sun Nov 07, 2021 10:28 pm
» புது வரவு விளையாட்டு
by veelratna Sun Nov 07, 2021 10:26 pm
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Mon Oct 25, 2021 11:21 pm
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Mon Oct 25, 2021 11:18 pm
» மெல்லிசை பாடல்
by veelratna Sun Oct 24, 2021 11:05 pm
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Sun Oct 24, 2021 11:01 pm
எரிமலைக் குமுறல்!
Page 1 of 1
எரிமலைக் குமுறல்!
சர்வதேச
சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்து கொண்டிருக்கும்போது,
விசித்திரமாகப் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 7.54 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் இந்த அளவுக்கு விலை உயர்த்தப்பட்டதே இல்லை என்பது ஒருபுறம்
இருக்க, இப்படி ஒரு சுமையை மக்கள்மீது ஏற்றி வைப்பதற்குத் தவறான
கொள்கைகளும், நிர்வாகத் திறமையின்மையும்தான் காரணம் என்பதை
சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.வழக்கம்போல, பெட்ரோலிய
நிறுவனங்களின் நஷ்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது என்றும், அரசால்
இனியும் அந்த இழப்புகளை ஈடுகட்ட முடியாது என்றும் மத்திய அரசு பழைய
பல்லவியைப் பாடுகிறது. மாநிலத் தேர்தல்களை மனதில் வைத்துக்கொண்டு, மக்களின்
அதிருப்தியைச் சந்தித்துவிடக்கூடாது என்கிற பயத்தில் கடந்த ஆறு, ஏழு
மாதமாகப் பெட்ரோல் விலையை அதிகரிக்காமல் இருந்துவிட்டு, இப்போது சுமையை
மொத்தமாக மக்கள்மீது சுமத்தியுள்ளனர். தவிர்க்க முடியாத நிர்பந்தம்
ஏற்பட்டிருப்பதாக அரசு காரணம் கூறுகிறது. அரசியல் ஆதாயத்துக்காக விலையை
உயர்த்தாமல் இருந்தது யார் தவறு என்று நாம் கேட்டால் பதில் கிடைக்கப்
போவதில்லை. சென்ற ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி பெட்ரோல் விலை ரூ.68.64
ஆக உயர்ந்தது. அப்போது டீசல் விலை ரூ.41.29 ஆனது. அதன் பிறகு மீண்டும்
பெட்ரோல் விலை உயர்ந்த போதிலும், டீசல் விலை உயரவில்லை. தற்போது டீசல்,
சமையல் எரிவாயு விலையையும் உயர்த்துவது குறித்து விவாதிக்கும்படி
அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவைக் கேட்டுக்கொண்டுள்ளதாக மத்திய
பெட்ரோலிய அமைச்சர் எஸ். ஜெய்பால் ரெட்டி கூறியிருக்கிறார். ஆக, இன்னொரு
அதிர்ச்சி காத்திருக்கிறது.பெட்ரோல் விலை உயர்வால் ஏற்படக்கூடிய
பாதிப்பைக் காட்டிலும் பல மடங்கு பாதிப்பை டீசல், சமையல் எரிவாயு,
மண்ணெண்ணெய் விலை உயர்வு மிக அதிகமாக ஏற்படுத்தும். இந்த மூன்றின்
விலையை உயர்த்த வேண்டியதன் அவசியம் குறித்து சொல்லப்படும் காரணம் -
பெட்ரோலுக்கு அரசு மானியம் தருவதில்லை; ஆனால் டீசல், சமையல் எரிவாயு,
மண்ணெண்ணெய்க்கு மானியத் தொகையை தொடர்புடைய எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு
வழங்குகிறது என்பதுதான். 2012-13க்கு தற்போதைய பட்ஜெட்டில்
ஒதுக்கப்பட்டுள்ள மானியத் தொகை சுமார் ரூ.43,580 கோடி. ரூபாய் மதிப்பு
குறைந்திருப்பதாலும், டீசல் விலை மேலும் உயர்ந்து வருவதாலும் இந்த மூன்று
இனங்களுக்காக எண்ணெய் நிறுவனங்கள் இதுவரையிலும் ரூ.1,48,000 கோடி இழப்பு
அடைந்துள்ளன. இந்த ஆண்டு இறுதியில் இதன் அளவு ரூ.1,90,000 கோடியாக உயரலாம்
என்று எண்ணெய் நிறுவனங்கள் மதிப்பிடுகின்றன. சென்ற நிதியாண்டில்
இந்த மூன்று இனங்களிலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1,38,540 கோடி இழப்பு
ஏற்பட்டது. இதில் ரூ.83,000 கோடியை அரசு மானியமாக அளித்தது. இந்த ஆண்டும்
இழப்பில் பாதியை மானியமாக ஏற்பதாக இருந்தாலும் பட்ஜெட்டில்
ஒதுக்கப்பட்டதைவிட சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
இவ்வளவு பெரும் தொகை கடனாகக் கிடைக்குமா? வளர்ச்சி விகிதம் 6% ஆகக்
குறைந்துவிட்டது என்றும், இந்தியப் பொருளாதார வளர்ச்சி மந்தம் என்றும்
உலகம் முழுதும் பறைசாற்றிய பின்னர், யார் கடன் தருவார்? ஆகவே, டீசல்,
மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்தினால்தான் அரசு
குறைந்த அளவு கடன் வாங்கி, மானியத்தொகை அதிகமாவதைச் சமாளிக்க முடியும்
என்பதுதான் அரசுத் தரப்பு வாதம்.டீசல் விலையை உயர்த்தினால், லாரி
வாடகை அதிகரிக்கும். அதன் விளைவு? காய்கறி மற்றும் அத்தியாவசியப்
பொருள்களின் விலை பல மடங்கு உயரும். ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது சுமார்
ரூ.500 கூடுதலாகச் செலவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இத்தோடு, சமையல்
எரிவாயு விலையைக் கூட்டினால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சராசரியாக ரூ.750
வரை செலவாகும். அரசு ஊழியர்களும், கணினி மென்பொருள் துறையில்
இருப்பவர்களும், மேல்தட்டு வர்க்கத்தினரும் வேண்டுமானால் இந்த
நிதிச்சுமையைச் சமாளிப்பார்கள். சராசரி இந்தியனின் கதிதான் என்ன?பெட்ரோல்
விலை உயர்ந்தால், நடுத்தர வருவாய் குடிமகன் வாகனத்தை ஓரம் கட்டிவிட்டு,
பிதுங்கி வழியும் பேருந்தில் தன்னைப் பொருத்திக்கொண்டு விடலாம் அல்லது கால்
தேய நடந்தாவது போகலாம். ஆனால் டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தினால்
அவனால் எந்த வகையிலும் சமாளிக்க முடியாது.நாம் பெட்ரோல், டீசலை
இறக்குமதி செய்வதில்லை. கச்சா எண்ணெயைத்தான் இறக்குமதி செய்கிறோம். ஆனால்,
விலையை நிர்ணயம் செய்யும்போது மட்டும் சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரத்தின்
அடிப்படையில் நிர்ணயம் செய்யாமல், சர்வதேச பெட்ரோல், டீசல் விலைகளின்
அடிப்படையில் செய்கிறோமே, இது என்ன நியாயம்? அதேபோல, அசாமிலும்,
மும்பை ஹையிலும் எடுக்கப்படும் கச்சா எண்ணெயைத் தனியார் எண்ணெய்
சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு போக்குவரத்துச் செலவு இல்லாமல் கொண்டுபோய்க்
கொடுக்கிறோமே, ஏன்? வெளிநாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால்
ஆகும் தொகையை, தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்களிடம் வசூலிக்காமல் இருப்பது
ஏன்?வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை
நேரடியாகவும், அந்த வாயுவை வணிக சிலிண்டரில் நிரப்பியும், எண்ணெய் நிறுவன
அதிகாரிகளின் உறுதுணையோடு நடைபெறும் ஊழலை, முறைகேட்டை, அக்கிரமத்தைத்
தடுத்தாலே பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஈடுசெய்யலாமே, ஏன் செய்வதில்லை?மத்திய அரசின் பொருளாதாரக் காரணங்கள் எத்தனை நியாயமானதாக இருந்தாலும், அவை இந்தத் தருணத்தில் ஏற்க முடியாத நியாயங்கள் மட்டுமே!
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 02/01/2010
Similar topics
» கே இனிவனின் குமுறல்
» இப்படி பண்றீங்களேம்மா... ஒரு 'ஐடியா' வாடிக்கையாளரின் குமுறல்!
» எங்களுக்கும் நேரம் வரும் ! : வருமான வரித்துறை குமுறல்!
» எங்களைக் கொன்று குவித்தது இந்தியாவின் ஆயுதங்கள்-நிரூபமாவிடம் தமிழர்கள் குமுறல்
» விருது வாங்க போனேன் வேதனைதான் மிஞ்சியது... -பிரபல டான்ஸ் மாஸ்டர் குமுறல்!
» இப்படி பண்றீங்களேம்மா... ஒரு 'ஐடியா' வாடிக்கையாளரின் குமுறல்!
» எங்களுக்கும் நேரம் வரும் ! : வருமான வரித்துறை குமுறல்!
» எங்களைக் கொன்று குவித்தது இந்தியாவின் ஆயுதங்கள்-நிரூபமாவிடம் தமிழர்கள் குமுறல்
» விருது வாங்க போனேன் வேதனைதான் மிஞ்சியது... -பிரபல டான்ஸ் மாஸ்டர் குமுறல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum