Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்படுத்திய இழப்புகள்: தணிக்கை துறை பட்டியல்
Page 1 of 1
பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்படுத்திய இழப்புகள்: தணிக்கை துறை பட்டியல்
தமிழக அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், வெவ்வேறு வகையில்,
அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி இருப்பது, இந்திய தணிக்கைத்
துறை அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 2010-11ம் நிதியாண்டுக்கான, தமிழக அரசின் பொதுத்துறை
நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து, இந்திய தணிக்கைத் துறை அளித்துள்ள
அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:
பயனற்று போனது
தமிழ்நாடு மின்னணு நிறுவனம்: சோழிங்கநல்லூரில், நிலத்தை குத்தகை
அடிப்படையில், 2007 அக்டோபரில், இரு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தபோது,
2007 ஆகஸ்ட் மாத திருத்திய வழிகாட்டுதல் விலையை கருத்தில் கொள்ளாததால்,
37.80 கோடி ரூபாய்க்கு, தேவையற்ற சலுகை அளிக்கப் பட்டுள்ளது. இந்நிறுவனம்,
சேலத்தில், தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க, சுரங்க
நிலத்தின் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்தது. இச்சுரங்க பகுதி, கரடுமுரடான
நிலப்பாங்கும், குழிகளும், கழிவு பொருட்களும் கொட்டி வைக்கப்பட்டிருந்த
நிலம். இந்த நிலத்தை தேர்வு செய்ததால், 6.97 கோடி ரூபாய் முதலீடு, பயனற்று
போனது மட்டுமன்றி, 84 லட்ச ரூபாய் வட்டி நஷ்டமும் ஏற்பட்டது. தமிழ்நாடு
ஒப்பந்தப் புள்ளிகள், வெளிப்படையான நிலை சட்டத்தை மீறி, 13
ஒப்பந்ததாரர்களுக்கு, வட்டியில்லாத செயலாக்க முன் பணத்தொகையாக, 19.07 கோடி
ரூபாய் கொடுத்ததால், ஒரு கோடி ரூபாய் வட்டி இழப்பு ஏற்பட்டது.
பெருங்குடியில் உள்ள மின்னணுவியல் தொழிற்பேட்டையில், கடந்த 2005
செப்டம்பரில், அரசிடம் ஒப்படைத்த நிலத்துக்கான இழப்பீட்டை பெறுவதில்,
நிறுவனம் காட்டிய மெத்தனப் போக்கால், 1.72 கோடி ரூபாய் முடக்கப் பட்டதுடன்,
55 லட்ச ரூபாய் வட்டி இழப்பு ஏற்பட்டது.
ஆராயாமல் முடிவு: தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம்: ஒரு கூட்டு
முயற்சி நிறுவனமும், அதை சார்ந்த, மற்றொரு சிறப்பு தேவையை கருதி
உருவாக்கப்பட்ட நிறுவனமும், கடனை அடைக்கும் திறனற்றவையாக இருந்தும், அதை
ஆராயாமல் அளிக்கப்பட்ட, 45 கோடி ரூபாய் கடனும், அதன் மீதான வட்டித்தொகை,
14.02 கோடி ரூபாயும், இரண்டு ஆண்டுகளாக வசூலாகாமல் உள்ளது. ஒப்புக்கொண்ட
அளவிற்கான மின்சக்தியை வழங்கத் தவறிய, மின் உற்பத்தி நிறுவனத்திடம்
இருந்து, 3.75 கோடி ரூபாய் நஷ்டஈட்டை, இந்நிறுவனம் வசூலிக்கவில்லை.
தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம்: உயிர் காக்கும் மருந்துகளை,
காலாவதியாவதற்கு முன் வழங்காததால், இந்நிறுவனம் 1.83 கோடி ரூபாய் நஷ்டம்
அடைந்தது. தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனம்: முன்பணமாக செலுத்த வேண்டிய
வருமான வரித் தொகையை தீர்மானிக்கும் வழிமுறைகள், இந்நிறுவனத்தில்
இல்லாததால், வருமான வரிக்கான முன்பணத் தொகை குறைவாக செலுத்தப்பட்டு,
அதனால், 1.56 கோடி ரூபாய் தேவையற்ற வட்டி செலுத்த வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டது.
மீட்க முடியாத நிலை:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் வளர்ச்சிக் கழகம் (தாட்கோ):
இந்நிறுவனம் உருவாக்கிய தொகுப்பு, நிறுவனத்தின் லாபகரமான செயல்பாட்டை
உறுதி செய்யாமலும், தனது இயக்குனர் குழுமத்தின் அனுமதி இல்லாமலும், அந்த
தொகுப்பு நிறுவனம் விண்ணப்பித்த வங்கிக் கடனுக்கு, தனது நிரந்தர
வைப்புத்தொகை ஒரு கோடி ரூபாயை, பிணையமாக அளித்தது. பின்னாளில், அந்த
தொகுப்பு நிறுவனத்தின் மோசமான வணிக செயல்பாட்டால், பிணையமாக்கிய
வைப்புத்தொகையை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.
தமிழ்நாடு மின்சார வாரியம்: தனது சொந்த எல்லைக்கோட்டை, மின்
வழங்கும் மையமாக வரையறுக்கும் சீரான வணிக வழக்கத்தை பின்பற்றாமல், தென்
மண்டல எல்லைக்கோட்டை, மின் வழங்கும் மையமாக ஒப்புக் கொண்டதால், மின்
வாரியத்துக்கு, 8.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
தேவையற்ற ஆதாயம்
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்: இந்நிறுவனம், மின்
உற்பத்தி நிலையத்தை, 330.50 மெகாவாட் திறன் அளவுக்கு மட்டுமே இயக்க
அனுமதித்த போதிலும், 347.712 மெகாவாட் திறனுக்கு ஈடான நிலையாக திறனுக்கான
கட்டணத்தை, திரும்ப அளிக்க ஒப்புக் கொண்டது. இதனால், 95.99 கோடி ரூபாய்
கூடுதலாக செலுத்தப் பட்டது. தானாகவே முன்வந்து, மின் கட்டமைப்பில்
செலுத்திய மின்சாரத்தை, நிலையற்ற மின்சாரமாக அறிவிக்க வேண்டும் என,
முன்னதாக செய்த தீர்மானத்தை கடைபிடிக்கத் தவறியதாலான செலவு, 6.14 கோடி
ரூபாய். நள்ளிரவில் கிடைக்கும் உபரி மின்சார விற்பனையை முறையாக
திட்டமிடாததால், இழந்த வருமானம் 1.47 கோடி ரூபாய். சிமென்ட் நிறுவனங்களுடன்
ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தில், அவர்களது எரி சாம்பல் சேகரிக்கும்
இயந்திரத்தை இயக்க பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணத்தை
வசூலிக்கும் வசதி இல்லாததால், 2.15 கோடி ரூபாய் குறைவாக வசூலிக்கப் பட்டது.
மண்டலங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், கட்டுக் கம்பிகள்
கொள்முதலில், 90.70 லட்ச ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது.
மின் தொடரமைப்பு கழகம்: இறக்குமதி செய்யப்பட்ட கம்பிகள், அதன்
இணை பொருட்கள் கொள்முதல் தொடர்பான உத்தரவில், தனது வணிக வலனை காத்துக்
கொள்ள, தேவையான விதிகளை சேர்க்கத் தவறியதால், பொருள் வழங்குபவருக்கு, 7.25
கோடி ரூபாய், தேவையற்ற ஆதாயம் வழங்கப் பட்டது.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» 90 சதவீத ஆணுறை இயந்திரங்களை காணவில்லை! தணிக்கை துறை குற்றச்சாட்டு
» தி.மு.க., ஆட்சியில் மின் வாரியத்துக்கு ரூ.10,294 கோடி இழப்பு: தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் பகீர்
» தணிக்கை துறை அதிகாரியிடம் எம்.பி.,க்கள் கேள்வி : ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு எப்படி என விசாரணை
» அடேங்கப்பா! அடுத்த மெகா ஊழலை அம்பலப்படுத்தியது தணிக்கை துறை : மத்திய அரசுக்கு இழப்பு 2 லட்சம் கோடி ரூபா
» பெட்ரோலியத் துறை அமைச்சர் தகவல்! அமைச்சர்களை எண்ணெய் நிறுவனங்கள் மிரட்டுகின்றன!
» தி.மு.க., ஆட்சியில் மின் வாரியத்துக்கு ரூ.10,294 கோடி இழப்பு: தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் பகீர்
» தணிக்கை துறை அதிகாரியிடம் எம்.பி.,க்கள் கேள்வி : ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு எப்படி என விசாரணை
» அடேங்கப்பா! அடுத்த மெகா ஊழலை அம்பலப்படுத்தியது தணிக்கை துறை : மத்திய அரசுக்கு இழப்பு 2 லட்சம் கோடி ரூபா
» பெட்ரோலியத் துறை அமைச்சர் தகவல்! அமைச்சர்களை எண்ணெய் நிறுவனங்கள் மிரட்டுகின்றன!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum