TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அடேங்கப்பா! அடுத்த மெகா ஊழலை அம்பலப்படுத்தியது தணிக்கை துறை : மத்திய அரசுக்கு இழப்பு 2 லட்சம் கோடி ரூபா

Go down

அடேங்கப்பா!  அடுத்த மெகா ஊழலை அம்பலப்படுத்தியது தணிக்கை துறை : மத்திய அரசுக்கு இழப்பு 2 லட்சம் கோடி ரூபா Empty அடேங்கப்பா! அடுத்த மெகா ஊழலை அம்பலப்படுத்தியது தணிக்கை துறை : மத்திய அரசுக்கு இழப்பு 2 லட்சம் கோடி ரூபா

Post by அருள் Tue Feb 08, 2011 8:59 am

ய்புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சர்ச்சை நீடிக்கையில், தொலைத்தொடர்பு துறையில், அடுத்த மெகா ஊழல் அம்பலமாகியிருக்கிது. 2005ல், இஸ்ரோ செயற்கைக்கோள்களில், "எஸ்-பாண்ட்' அலைவரிசையை ஒதுக்கீடு செய்ததில், அரசுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொலைத்தொடர்புத் துறையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த, 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழலை, மத்திய தணிக்கை துறை வெளிப்படுத்தியது. இது ஏற்படுத்திய அதிர்வலைகளுடன், விசாரணை, கைது என, பன்முகப் பரிமாண ஊழலாகப் பேசப்படுகிறது. தொலைத்தொடர்புத் துறையில் நடந்த மற்றொரு மெகா ஊழலை, தணிக்கை துறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, அனைவரையும், "அடேங்கப்பா' என்று வாய் பிளக்க செய்துள்ளது.

அடுத்த ஊழல்: இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம்(இஸ்ரோ), செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்புகிறது. இந்த செயற்கைக் கோள்களில் உள்ள டிரான்ஸ்பாண்டர்கள், "டிவி' ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்தப்படும். இவற்றை, வர்த்தக ரீதியாக விற்பதற்கு, இஸ்ரோ, ஆன்ட்ரிக்ஸ் நிறுவனத்தை துவக்கியது. இதன் தலைமையகம் பெங்களூரில் உள்ளது.இஸ்ரோ அனுப்பும் செயற்கைக்கோள்களில் உள்ள, "எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர்களை விற்கும் பொறுப்பை, ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் கவனித்தது. இஸ்ரோ, விரைவில் ஏவ இருக்கும், ஜி-சாட்-6 மற்றும் ஜி-சாட்-6ஏ செயற்கைக்கோள்களில் உள்ள, "எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்கீடு செய்ய, திவாஸ் மல்டி மீடியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்த ஒப்பந்தம், 2005ல் போடப்பட்டது. இதன்படி, இரு செயற்கைக்கோள்களில், 70 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை கொண்ட, தலா, 10 "எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்கீடு செய்தது. இதை, 20 ஆண்டுகளுக்கு பயன்படுத்தி கொள்ள, திவாஸ் மல்டி மீடியா நிறுவனம், ஆயிரம் கோடியை கட்டணமாக செலுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்மூலம், ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய் மட்டுமே திவாஸ் நிறுவனம் மூலம், ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்திற்கு கிடைக்கும்."3ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூலம் அரசுக்கு, 67 ஆயிரத்து 717 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. அப்படியிருக்கையில், 20 டிரான்ஸ்பாண்டர்கள் மூலம், அரசுக்கு, 1,000 கோடி வருமானம் கிடைக்கிறது. இதனால், அரசுக்கு, 2 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய தணிக்கை துறை தன் முதல் ஆய்வில் கண்டறிந்தது.

இதுதான் சூப்பர்: இந்த டிரான்ஸ்பாண்டர்களை உள்ளடக்கிய இரண்டு செயற்கைக் கோள்களை இப்போது தான், "இஸ்ரோ' தயாரித்து வருகிறது. இதை, தயாரித்து அனுப்புவதற்கு ஆகும் செலவு மட்டும், 2,000 கோடி ரூபாய். முறையாக ஏலம் விடாமல், திவாஸ் நிறுவனத்திற்கு டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்கியது ஏன் என, தணிக்கை துறை கேள்வி எழுப்பியுள்ளது.ஜி-சாட்-6 செயற்கைக்கோளை ஐரோப்பாவின் ஏரியல் பேஸ் ராக்கெட் மூலம் செலுத்துவதற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது.இதுவரை இந்த அலைவரிசை அரசிடமே இருந்து வந்தது. இதை ஏலம் விடாமல், தனியாருக்கு ஒதுக்கீடு செய்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

பிரதமர் பொறுப்பு: பிரதமரின் நேரடி பொறுப்பில் உள்ள விண்வெளி கமிஷனின் கட்டுப்பாட்டில் வருகிறது இஸ்ரோ. இந்த ஒதுக்கீடு விவகாரம், கமிஷனுக்கோ, பிரதமரின் அலுவலகத்திற்கோ, மத்திய அமைச்சரவையின் கவனத்திற்கோ கொண்டுவரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது, எந்த முறையில் தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்ற கேள்வியை தணிக்கை துறை கிளப்பியுள்ளது.பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்களுக்கு, 20 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையை ஒதுக்கீடு செய்த போது, இதற்காக இஸ்ரோவுக்கு செலுத்தப்பட்ட தொகை, 12 ஆயிரத்து 847 கோடி ரூபாய். ஆனால், திவாஸ் நிறுவனம் பெற்றிருப்பது, 70 மெகா ஹெர்ட்ஸ், தொகையோ, வெறும் 1,000 கோடி. இப்படியாக, பலவித ஒப்பீடுகளை தணிக்கை துறை கண்டுபிடித்து, மெகா முறைகேட்டை கொண்டு வந்துள்ளது.

இடதுசாரிகள் கோரிக்கை: "இந்த புதிய விவகாரம் பற்றி தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். இஸ்ரோ, பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் வருவதால், புது ஊழல் தான். எனவே, மிகவும் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்' என, மா.கம்யூ., மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.தணிக்கை துறை விளக்கம்: இதற்கிடையில், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "விண்வெளி துறையின் சில நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்து தணிக்கை துறை வழக்கமாக நடந்திவரும் ஆய்வுதான் இது. இஸ்ரோவுக்கும் தனியார் நிறுவனத்திற்கும் இடையே நடந்த ஒப்பந்தம் பற்றி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். முழு முடிவு செய்து அறிக்கை தயாரிக்கவில்லை' என குறிப்பிட்டிருக்கிறது. இந்த விவகாரம் தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு அறிவிப்பு: "எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக வந்த செய்திகளின்அடிப்படையில், இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் ' என மத்திய அரசு நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் விளக்கம் தர வேண்டும்: பா.ஜ., : "எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு ஏற்பட்டுள்ள, 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பை மீட்க, பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என, பாரதிய ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.

பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியாவது:இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் உள்ள, செயற்கைக்கோள், "எஸ்-பாண்ட்' டிரான்ஸ்பாண்டர்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததன் மூலம், அரசுக்கு, 2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக, தணிக்கை துறையில் ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்த முழு விவகாரமும் முறைகேடு திட்டவட்டமாக தெரிகிறது. நாட்டிற்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதோடு, தேசியத்தின் மதிப்புமிக்க கிடைத்தற்கரிய சொத்து வீணடிக்கப்பட்டுள்ளது. தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தை, உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த முழு விவகாரம் பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.மேலும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பை மீட்க வேண்டும். விண்வெளித்துறை பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே, இந்த விவகாரம் பற்றி பிரதமர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நிர்மலா சீத்தாராமன் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக, "பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை அமைக்கப்பட வேண்டும்' என, ஆர்.எஸ்.பி., கட்சித் தலைவர் அபானி ராய் கூறினார்.

"இது மிகவும் கவலைப்பட வேண்டிய, கவனித்தக்க ஊழல்' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் டி.ராஜா கூறினார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தணிக்கை துறை அதிகாரியிடம் எம்.பி.,க்கள் கேள்வி : ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு எப்படி என விசாரணை
» தி.மு.க., ஆட்சியில் மின் வாரியத்துக்கு ரூ.10,294 கோடி இழப்பு: தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் பகீர்
» 2 லட்சம் கோடி மெகா ஊழலும் - - மலையாளிகளை காப்பாற்றும் மத்திய அரசு!
» ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது எப்படி?
» 2ஜி-யில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு சரியே: சிஏஜி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum