Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பிரதமர் வேட்பாளராக ஜெயலலிதாவை நிறுத்த நவீன் பட்நாயக் ஆலோசனை
Page 1 of 1
பிரதமர் வேட்பாளராக ஜெயலலிதாவை நிறுத்த நவீன் பட்நாயக் ஆலோசனை
ஜனாதிபதி தேர்தலில், ஐ.மு., கூட்டணி மற்றும் தே.ஜ., கூட்டணி வேட்பாளர்
தேர்வில் நிலவும் குழப்பம், ஒரு முடிவுக்கு வந்ததும், இறுதியாக அறிவிக்கும்
வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு வரும் அணிகளுக்கு, தங்கள் கட்சிகளின்
நிலைப்பாட்டை, ஒரு மித்த கருத்தாக அறிவிக்க, முதல்வர் ஜெயலலிதா, ஒடிசா
முதல்வர் நவீன் பட்நாயக் திட்டமிட்டுள்ளனர்.
வரும் லோக்சபா தேர்தலில்,
காங்கிரஸ், பா.ஜ., அல்லாத மாநில கட்சிகளின் ஆதரவுடன், மத்தியில் ஆட்சி
அமைப்பது குறித்து, போயஸ் கார்டன் இல்லத்தில், இரு முதல்வர்களும்
ஆலோசித்துள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பார்லிமென்ட்
கூட்டத் தொடர், வரும் 22ம் தேதி முடிவடைந்ததும், ஜனாதிபதி தேர்தல்
விவகாரம், அரசியல் வானில் சூடு பிடிக்கவுள்ளது. ஜனாதிபதி தேர்தல்
மட்டுமல்லாமல், வரும் லோக்சபா தேர்தலிலும், 100 சதவீத வெற்றியை பெறுவதற்கு,
அ.தி.மு.க., வியூகம் அமைத்துள்ளது.
அ.தி.மு.க., கணக்கு:தற்போதைய
பார்லிமென்டில், மொத்தமுள்ள, 542 இடங்களில், காங்கிரசுக்கு 220
எம்.பி.,க்களும், பா.ஜ., வுக்கு 130 எம்.பி.,க்களும் உள்ளனர்.ராஜிவ்
மரணத்திற்கு பின் நடந்த தேர்தலைத் தவிர, மற்ற தேர்தல்களில், காங்கிரஸ்
கட்சி தனி பெரும்பான்மை பெற முடியவில்லை. மற்ற மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன்
தான், காங்கிரஸ் கட்சி தலைமையில், மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது.
அதேபோல, பா.ஜ.,வும் மாநில கட்சிகளின் தயவில் தான், மத்தியில் ஆட்சியை
நடத்தியது.
ஐ.மு., கூட்டணி அரசில், ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த்
ஊழல், ஆதர்ஸ் அடுக்குமாடி ஊழல் போன்றவை, ஆளுங்கட்சிக்கு பாதகமாக
அமைந்துள்ளன. கர்நாடக மாநில எடியூரப்பா விவகாரம், பங்காரு லட்சுமணனின் லஞ்ச
ஊழல் தண்டனை விவகாரம், தலைவர்களிடம் நிலவும் கோஷ்டிப்பூசல் போன்றவை,
பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையவில்லை என, மாநிலக் கட்சிகள் கருதுகின்றன.இந்த
இரு தேசியக் கட்சிகளால், லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி
அமைக்க முடியாது என்றும், அதனால், மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை
பெறும் மாநிலக் கட்சி தான், மத்தியில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெறும்
எனவும், அ.தி.மு.க., கணக்கு போடுகிறது.
தேர்தலுக்கு பின் புதிய அணி:
தற்போதைய நிலவரப்படி, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, உ.பி., பீகார், ஒடிசா,
மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தான், அதிக
எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். லோக்சபா தேர்தலுக்கு பின்,
பெரும்பான்மையான எம்.பி.,க்களை கைப்பற்றும் மாநிலக் கட்சிகள் தான், "புதிய
அணி' அமைத்து, மத்திய அமைச்சரவை உருவாக்கும் நிலை ஏற்படும்.குறைந்தபட்சம்,
30 முதல் 40 எம்.பி.,க்களை கையில் வைத்திருக்கும் கட்சி தான், பிரதமரை
தேர்வு செய்யும் நிலை உருவாகும். காங்கிரஸ் அல்லது பா.ஜ., ஆட்சி அமைக்க
முடியாத பட்சத்தில், மாநிலக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரை பிரதமராக்க,
காங்கிரஸ் அல்லது பா.ஜ., முன் வரும்.
அப்போது, பிரதமர் பதவிக்கு,
ஜெயலலிதா, முலாயம் சிங், சரத்பவார், மம்தா, பிரகாஷ்சிங் பாதல், தேவகவுடா,
ஓம்பிரகாஷ் சவுதாலா போன்ற தலைவர்களின் பெயர்கள் அடிபடும்.
ஆனால்,
பிரதமர் வேட்பாளராக ஜெயலலிதாவை நிறுத்த, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்
மற்றும் பா.ஜ., தலைவர்களில் சிலர், முன்மொழிய தயாராகவுள்ளனர். இந்த
முடிவுக்கு, மாநில கட்சிகளின் தலைவர்களின் ஆதரவு கிடைக்கும் என,
அ.தி.மு.க., கருதுகிறது.
ஆலோசனை:சமீபத்தில்,
சென்னைக்கு விஜயம் செய்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு, முதல்வர்
ஜெயலலிதா தலைமையில், சிறப்பான விருந்து அளிக்கப்பட்டது.அந்த விருந்து
சந்திப்பின் போது, ஜனாதிபதி தேர்தலில் இரு முதல்வர்களும் ஒருமித்த முடிவை
எடுப்பது, லோக்சபா தேர்தலில் மாநில கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியை
நிர்ணயிப்பது குறித்து, இருவரும் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசித்ததாக,
ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து, அ.தி.மு.க., பிரமுகர் கூறியதாவது:தேசிய
ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிதிஷ்குமார், நரேந்திரமோடி, பால்
தாக்கரே போன்ற தலைவர்களுக்கு முக்கியத்துவம் தருவதை போல, தனக்கு
முக்கியத்துவம் தரவில்லை என்ற
அதிருப்தி நவீன் பட்நாயக்கிற்கு
ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏற்படுத்தியுள்ள அரசியல் நட்பின்
காரணமாக, தேசிய அளவில் செல்வாக்கு உருவாக்கிக் கொள்ள, அவர்
விரும்புகிறார்.அதனால் தான், தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை ஆய்வு
செய்யும் முதல்வர்கள் தலைமையிலான குழுவுக்கு, ஜெயலலிதாவை தலைவராக நியமிக்க
வேண்டும் என, நவீன் பட்நாயக் குரல் கொடுத்தார். ஜனாதிபதி தேர்தலில்,
அ.தி.மு.க., எடுக்கும் நிலைப்பாட்டைத் தான், நவீன் பட்நாயக்கும்
எடுக்கவுள்ளார்.அடுத்த பிரதமராக, ஜெயலலிதாவை தேர்வு செய்ய வேண்டும் என
முன்மொழியவும், நவீன் பட்நாயக் தயாராகவுள்ளார். அதனால் தான், அவரை
கவுரவப்படுத்தும் வகையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை நவீன்
பட்நாயக்கிற்கு அறிமுகப்படுத்தி, சிறப்பான விருந்து
அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Similar topics
» பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை நிறுத்த பீகார் பா.ஜனதா ஆதரவு
» மத்திய அரசுக்கு ஆதரவு இல்லை: நவீன் பட்நாயக்
» டெல்லி மேல்சபைக்கு வேட்பாளராக ரபிபெர்நாட்சை நிறுத்த முடிவு!
» காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கிறார் மொரீஷஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம்.
» சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ உடல் அடக்கம் செய்யப்பட்டது: பிரதமர் மோடி பங்கேற்றார்
» மத்திய அரசுக்கு ஆதரவு இல்லை: நவீன் பட்நாயக்
» டெல்லி மேல்சபைக்கு வேட்பாளராக ரபிபெர்நாட்சை நிறுத்த முடிவு!
» காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கிறார் மொரீஷஸ் பிரதமர் நவீன் சந்திர ராம்கூலம்.
» சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ உடல் அடக்கம் செய்யப்பட்டது: பிரதமர் மோடி பங்கேற்றார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum