Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பச்சைப் பட்டுடன் வைகை ஆற்றில் இறங்கினார் ஸ்ரீ கள்ளழகர்
Page 1 of 1
பச்சைப் பட்டுடன் வைகை ஆற்றில் இறங்கினார் ஸ்ரீ கள்ளழகர்
மதுரை சித்திரைத் திருவிழாவில் ராமராயர் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை எழுந்தருளிய அருள்மிகு கள்ளழகர்.
மதுரை,
மே 6: மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக
பச்சைப் பட்டுடன் வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் அருள்மிகு
கள்ளழகர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எழுந்தருளினார். இதை அங்கு கூடியிருந்த
லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அழகர்கோவில் சித்திரைத்
திருவிழா, மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில்
முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் ஏப்ரல் 20-ம் தேதி தொடங்கியது.இதையடுத்து,
அழகர்கோவில் கல்யாண மண்டபத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (மே 4-ம் தேதி)
மாலையில் புறப்பாடாகி, கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் கள்ளழகர்
எழுந்தருளினார். பின்னர், அங்கிருந்து தங்கப் பல்லக்கில் மதுரை
புறப்பட்டார்.பல்வேறு இடங்களில் எழுந்தருளிய கள்ளழகருக்கு மூன்றுமாவடியில் பக்தர்கள் வரவேற்பளித்த எதிர்சேவை சனிக்கிழமை காலையில் நடைபெற்றது.பின்னர்,
அங்கிருந்து புதூர் அருள்மிகு மாரியம்மன் கோவில் என ஒவ்வொரு மண்டகப்படியாக
வந்த கள்ளழகர், மாலையில் அம்பலகாரர் மண்டபத்தில் எழுந்தருளினார். மாலையில்
கொட்டும் மழையிலும் பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர்.அன்றிரவு
தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் கள்ளழகர்
எழுந்தருளினார். நள்ளிரவு 12 மணி வரை அருள்மிகு பெருமாள் திருமஞ்சனமாகி
குதிரை வாகனத்தில் எழுந்தருளியதும், ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக் கொடுத்த
நாச்சியார் அருள்மிகு ஆண்டாளுடைய திருமாலையைச் சாற்றி பக்தர்களுக்கு சேவை
சாதித்து, தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பாடானார். கள்ளழகருக்கு பச்சைப்
பட்டு சார்த்தப்பட்டது. வெள்ளை நிற உடையுடன் அழகர் குதிரை வாகனத்தில்
அமர்ந்திருந்தார்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில்
தல்லாகுளம் அருள்மிகு கருப்பணசுவாமி திருக்கோவிலில் இருந்து ஆற்றில்
இறங்குவதற்காக அழகர் புறப்பட்டார். காலை 5.15 மணி அளவில் ஆழ்வார்புரம்
பகுதியில் வைகை ஆற்றோரம் இருந்த திருக்கண் மண்டகப்படிகளில் அவர்
எழுந்தருளினார்.ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த திருக்கண்
மண்டகப்படியில் அழகரை வரவேற்கும் வகையில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் மதுரை
தெற்குவாசல் அருள்மிகு வீரராகவப் பெருமாள் எழுந்தருளியிருந்தார். அழகர்
ஆற்றில் இறங்குவதை முன்னிட்டு, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து
விடப்பட்டிருந்தது. அழகரைத் தரிசிக்க கிராமப்புறங்களில் இருந்து
லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து ஆற்றோரம் தங்கியிருந்தனர்.
ஆற்றோரம்
கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என விண்ணதிர கோஷம்
எழுப்பிய நிலையில், காலை 5.40 மணிக்கு அழகர் தங்கக் குதிரை வாகனத்தின்
முன்பு இருந்த பூச்சரக் குடை, பச்சை நிற விசிறி ஆகியவை ஆற்றுக்குள் இறங்கத்
தொடங்கின. இதையடுத்து, கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் சரியாக காலை
5.45 மணிக்கு இறங்கினார். அப்போது அவரது வாகனத்தை 3 முறை குலுக்கி,
மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கள்ளழகர் மீது மலர்கள் தூவப்பட்டன. அழகர்
ஆற்றில் இறங்கியதும் கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா என
பரவசத்துடன் கோஷமிட்டு வணங்கினர். மேலும், பலர் சர்க்கரை நிரம்பிய சொம்பில்
சூடம் ஏற்றி வழிபட்டனர். நேர்த்திக்கடனாக பலர் குழந்தைகளுடன்
மொட்டையடித்தனர். ஆற்றுக்குள் இறங்கிய அழகரை வரவேற்கும் வகையில் ஏற்கெனவே
அங்கு காத்திருந்த அருள்மிகு வீரராகவப் பெருமாள் திருக்கண் மண்டகப்படியில்
இருந்து வெளியே வந்து 3 முறை குலுங்கி வரவேற்றார். பின்னர், அழகர்
திருக்கண் மண்டகப்படிகளைச் சுற்றி வந்தார். அதன் பின்னர், காலை 6.05
மணிக்கு திருக்கண் மண்டபத்தில் எழுந்தருளினார். அழகரை அருள்மிகு வீரராகவப்
பெருமாள் 3 முறை சுற்றிவந்தார். பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆற்றில் இறங்கிய அழகர் காலை 6,30 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி,
ஆழ்வார்புரம் பகுதி வழியாக பகலில் ராமராயர் மண்டபத்துக்கு வந்தார். அங்கு
கூடியிருந்த நீர்ப் பீய்ச்சும் அழகர் வேடமணிந்த பக்தர்கள் அழகர் மீது
தண்ணீரைப் பீய்ச்சியடித்து நேர்த்திக் கடனைச் செலுத்தினர். மாலையில்
அங்கிருந்து புறப்பாடாகிய கள்ளழகர் அண்ணாநகர் வழியாக இரவு வண்டியூர்
வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் தங்கினார். அங்கு விடிய விடிய
பக்தர்கள் தங்கியிருந்து அழகரைத் தரிசனம் செய்தனர்.
Similar topics
» பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கானோர் தரிசனம்
» கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்... சிறப்பு ஆல்பம்
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை கொல்ல முயற்சி; காயமின்றி தப்பினார்
» அபராதம் எல்லாம் செலுத்த முடியாது சிறை செல்லவும் தயார்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பரபரப்பு பேட்டி!
» உள்ளாட்சி தேர்தல் பிரசாசரத்தில் வைகை புயல்.... பரபரப்பு தகவல்...
» கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்... சிறப்பு ஆல்பம்
» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை கொல்ல முயற்சி; காயமின்றி தப்பினார்
» அபராதம் எல்லாம் செலுத்த முடியாது சிறை செல்லவும் தயார்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பரபரப்பு பேட்டி!
» உள்ளாட்சி தேர்தல் பிரசாசரத்தில் வைகை புயல்.... பரபரப்பு தகவல்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum