Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 5:11 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
இந்தியாவின் புதிய வேவு செயற்கைக்கோள்
Page 1 of 1
இந்தியாவின் புதிய வேவு செயற்கைக்கோள்
இந்தியாவின் புதிய வேவு செயற்கைக்கோள் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி
வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் பெயர்
ரிசாட்- 1 என்பதாகும். இது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் உயரே
வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.
முதலில் ஒன்றைத் தெளிவு படுத்த வேண்டும். உலகில் எந்த நாடும் தங்களிடம்
வேவு செயற்கைக்கோள் இருப்பதாக அல்லது வேவு செயற்கைக்கோளை செலுத்தியுள்ளதாக
அதிகாரபூர்வமாக அறிவித்துக் கொள்வதில்லை.
இந்தியாவின் தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் அனைத்தும் பூமியை வடக்கிலிருந்து தெற்காகச் சுற்றுகின்றன. |
செயற்கைக்கோள் என்றே வர்ணிக்கிற்து. குறிப்பாக பயிர் விளைச்சலை, அதுவும்
நெல் விளைச்சலை, மதிப்பிட இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் என்று
தெரிவித்துள்ளது. ஆனால் மீடியா இந்த செயற்கைக்கோளை வேவு செயற்கைக்கோள்
என்றே வர்ணிக்கின்றன.
இந்தியா கடந்த பல ஆண்டுகளில் பல தொலையுணர்வு செயற்கைக்கோள்களை உயரே
செலுத்தியுள்ளது. இவை அனைத்தும் பூமியை வடக்கு தெற்காகச் சுற்றுபவை. உயரே
இப்போது இந்தியாவின் 11 தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் செயல்பாட்டில் உள்ளன.
இவை அனைத்தும் வெவ்வேறான திறன் கொண்ட காமிராக்களைப் பயன்ப்டுத்தி உயரே
இருந்து படங்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இவ்விதப் படங்களை வெவ்வேறு
பணிகளுக்கு இந்தியா பயன்படுத்தி வருகிறது.
கார்ட்டோசாட் 2 இந்தியாவின் தொலையுணர்வு செயற்கைக்கோள்களில் ஒன்றாகும். இது அந்த செயற்கைக்கோள் எடுத்த படம் |
ஒரு தடவை சுற்றி முடிக்க சுமார் 90 நிமிஷம் ஆகும். இப்படி சுற்றுகையில்
அந்த செயற்கைக்கோள் இந்தியாவைப் படம் எடுப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த
செயற்கைக்கோள் ஒரு தடவை சுற்றி முடித்து விட்டு அடுத்த ரவுண்ட் வருவதற்குள்
அந்த செயற்கைக்கோளுக்கு கீழே அமைந்த நிலப் பிராந்தியம் இந்தியாவாக இருக்க
வேண்டுமென்பதில்லை.
இந்தியாவின் ரிசோர்சாட் 1 செயற்கைக்கோள் . இதுவும் ஒரு தொலையுணர்வு செயற்கைக்கோளாகும். |
விடக்கூடாது. ஆகவே அந்த செயறகைக்கோள் மூன்றாவது அல்லது நான்காவது ரவுண்ட்
சுற்றும் போது செயற்கைக்கோளின் கீழே இருப்பது ஆப்பிரிக்க கண்டமாகவும்
இருக்கலாம். அட்லாண்டிக் கடலாகவும் இருக்கலாம். அமெரிக்காவாகவும்
இருக்கலாம்.
வேறு விதமாகச் சொல்வதானால் இந்திய தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் உலகில்
எல்லா நாடுகள் மீதும் பறந்து படங்களை எடுக்கின்றன. பிற நாடுகள் கேட்டால்
அவற்றின் மீதாகப் பறக்கும் போது எடுக்கப்பட்ட படங்களை இந்தியா உரிய கட்டண
அடிப்படையில் அவற்றுக்கு விற்கிறது.
இப்படியாக இந்தியா இப்படங்களை விற்பனை செய்து வருவதன் மூலம் நல்ல பணம்
சம்பாதிக்கிறது. தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் விஷயத்தில் இந்தியா
முன்னணியில் உள்ள நாடு என்றும் கூறலாம். இவ்விதம் உயரே இருந்து எடுக்கும்
படங்களை நாட்டின் பாதுகாப்புப் பணிகளுக்கும் பயன்படுத்த இயலும். எனினும்
இந்த தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் அனைத்தையும் வேவு செயற்கைக்கோள்கள்
என்று வருணிக்க முடியாது.
இந்த தொலையுணர்வு செயற்கைக்கோள்கள் விஷயத்தில் சில குறைபாடுகள்
உண்டு.பூமியில் பகலாக இருக்கும் பகுதிகளை மட்டுமே இவற்றினால் படம் எடுக்க
இயலும். இரவில் படங்களை எடுக்க இயலாது. தவிர, மேக மூட்டமாக இருந்தால் மழை
பெய்தால் தெளிவான படங்கள் கிடைக்காது.
இது ரிசாட் 2 செயறகைக்கோள். |
கருவியைப் பொருத்தினால் அது மைக்ரோ வேவ் எனப்படும் அலைகளைக் கீழே அனுப்பி
எதிரொலித்து வரும் அலைகளைக் கொண்டு படம் எடுக்கும். இந்த் முறையின் மூலம்
இரவிலும் பூமியின் பல்வேறு பகுதிகளை படம் எடுக்க முடியும். மேக மூட்டம்
அல்லது பனி மூட்டம் இருந்தாலும் படம் எடுக்கலாம்
கீழே ராணுவ டாங்கிகள் அல்லது விமானங்கள் மீது இலை தழைகளைப் போட்டு
மறைத்திருந்தாலும் அவற்றை ஊடுருவிப் படம் எடுக்க முடியும். சுருங்க்ச்
சொன்னால் இந்தியாவின் எல்லைப் பகுதிகளை அவசியமானால் பிற பகுதிகளை
வானிலிருந்து கண்காணிக்கும் திறன் இந்த வகை செயற்கைக்கோளுக்கு உண்டு.
ரிசாட் 1 உய்ரே செலுத்தப்படுகிறது படம் நன்றி ISRO |
ஆண்டுகளாகவே ஈடுபட்டுள்ளது. ராடார் மூலம் படம் எடுப்பதால் இவ்வகை
செயற்கைக்கோளுக்கு Radar Imaging Satellite என்று பெயர். இதன் சுருக்கமே
Risat. இந்தியா உருவாக்கி வந்த இவ்வித ராடார் செயற்கைக்கோளுக்கு ரிசாட் 1
என்றும் பெயர் வைக்கப்பட்டது.
கடந்த 2008 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் படகுகள் மூலம் மும்பையில்
வந்திற்ங்கி கடற்க்ரை ஓரமாக அமைந்த தாஜ் ஓட்டலில் நுழைந்து பலரைக் கொன்றது
நினைவிருக்கலாம். வானிலிருந்து இந்தியாவின் கரைகளைக் கண்காணிக்க ரிசாட் 1
செயற்கைக்கோளைத் தயாரித்து முடிக்க மேலும் சில காலம் ஆகும் என்பதால்
இஸ்ரேலிடமிருந்து அவசர அடிப்படையில் ரிசாட் வகை செயற்கைக்கோள் ஒன்று
வாங்கப்பட்டு அது 2009 ஆம் ஆண்டு ஏப்ரலில் இந்திய பி.எஸ்.எல்.வி. ராக்கெட்
மூலம் உயரே செலுத்தப்பட்டது.
இந்தியா சொந்தமாக உருவாக்கிய ரிசாட் 1 செயற்கைகோள் |
என்று பெயர் வைக்கப்பட்ட காரணத்தால் இஸ்ரேலிடமிருந்து பெறப்பட்ட
கண்காணிப்பு செயறகைக்கோளுக்கு ரிசாட் -2 என்று பெயரிடப்பட்டது. இவ்வாறாக
ரிசாட் -2 முந்திக்கொள்ள ரிசாட்-1 இப்போது தான் உயரே
செலுத்தப்படது..ஏற்கெனவே குறிப்பிட்டபடி இது முற்றிலும் இந்தியாவில்
தயாரிக்கப்பட்டதாகும்.
ரிசாட் 1 செயற்கைக்கோள் மூலம் பல்வ்கையான அளவுகளில் படம் எடுக்க முடியும்.
ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் படம் எடுக்க முடியும். இந்தியாவின்
வடமேற்கு எல்லைகளில் உள்ள பள்ளததாக்குகளில் ஆக்கிரமிப்பாளர் நடமாட்டம்
இருந்தால் ரிசாட் 1 படங்கள் அதைக் காட்டிக் கொடுத்து விடும்.இந்தியாவைச்
சுற்றியுள்ள் கடலகளில் சந்தேகப்படும் வகையில் கப்பல்கள், படகுகள்
நடமாடினால் கண்டுபிடித்து விடலாம். ஓரளவில் சப்மரீன்களின் நடமாட்டத்தையும்
கண்டுபிடித்து விட முடியும்.
ரிசாட் வகை செயற்கைக்கோள்கள் ஒன்று அல்லது இரண்டு மட்டும் இருந்தால்
போதாது.ஆகவே வருகிற நாட்களில் மேலும் பல ரிசாட் வகை செயற்கைக்கோள்கள்
செலுத்தப்படுவது நிச்சயம்.
வேவு பார்ப்பதற்கு அமெரிக்காவும் ரஷியாவும் நீண்ட காலமாக பல்வேறு வகையான
செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகின்றன. இந்த இரு நாடுகளிலும் ராணுவத்
துறையினர் பயன்படுத்திக் கொள்வதற்கென்றே தனி செயற்கைக்கோள்கள் உள்ளன.
அமெரிக்காவில் இப்போது வேவு செயற்கைக்கோள்களை செலுத்தி அவற்றை
இயக்குவதற்குத் தனியார் துறை நிறுவனங்களும் அனுமதிக்கப்படுகின்றன. அந்த
செயற்கைக்கோள்கள் எடுக்கும் படங்களை விற்பதில் கட்டுப்பாடுகள் உள்ளன.
குறிப்பிட்ட சில நாடுகளுக்கு அப்படங்களை விற்கலாகாது என அமெரிக்க அரசு
தடுக்க முடியும்.
இந்தியாவில் ராணுவத் துறையினர் தங்கள் பயன்பாட்டுக்கென தனி செயற்கைக்கோள்கள் வேண்டும் என கடந்த சில காலமாகக் கோரி வருகின்றனர்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இலங்கை நாடு அல்ல இனி இந்தியாவின் புதிய மாநிலம் :
» இரகசியமாக மரணதண்டனை வழங்கும் இந்தியாவின் புதிய ட்ரெண்ட் அதிர்ச்சி அடைய செய்கிறது : மன்னிப்பு சபை
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
» இந்தியாவை வேவு பார்த்த சீன உளவுக் கப்பலுக்கு அடைக்கலம் கொடுத்த இலங்கை!
» USAஉளவு நிறுவனமான NSA வால் அதிகளவு இந்தியக் கணணி நெட்வேர்க்குகள் வேவு
» இரகசியமாக மரணதண்டனை வழங்கும் இந்தியாவின் புதிய ட்ரெண்ட் அதிர்ச்சி அடைய செய்கிறது : மன்னிப்பு சபை
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
» இந்தியாவை வேவு பார்த்த சீன உளவுக் கப்பலுக்கு அடைக்கலம் கொடுத்த இலங்கை!
» USAஉளவு நிறுவனமான NSA வால் அதிகளவு இந்தியக் கணணி நெட்வேர்க்குகள் வேவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|