Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வங்கிக் கொள்ளையர்களை போலீசார் சுட்டது ஏன்? முதல்வர் விளக்கம்
Page 1 of 1

சென்னை, ஏப்.24:
சென்னை பெருங்குடியில் வங்கிக் கொள்ளையர்களை போலீசார் சுட்டது ஏன் என்று
முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று விளக்கம் அளித்தார்.காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு ஜெயலலிதா இன்று பதிலளித்தார்.அப்போது
வங்கிக் கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விளக்கம் அளித்த
ஜெயலலிதா, கொள்ளையர்கள் சுட்டதால்தான் போலீசார் வேறுவழியின்றி திருப்பிச்
சுட்டனர் என்றார்.இதுகுறித்து அவர் அளிக்க விளக்கம்: சென்னை,
பெருங்குடியிலுள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில், 23.1.2012 அன்று மதியம்
சுமார் 1.45 மணியளவில் ரூ.19 லட்சத்தையும், 20.2.2012 அன்று, 2 மணியளவில்
கீழ்க் கட்டளையிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.14 லட்சத்தையும்
கொள்ளையடித்துச் சென்றனர். இவ்விரு சம்பவங்களிலும் அடையாளம் தெரியாத
கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் வங்கிக்குள் நுழைந்து, துப்பாக்கி முனையில்
வங்கி ஊழியர்கள் மற்றும் பொது மக்களை மிரட்டி பணத்தை கொள்ளையடித்துச்
சென்றனர். இதுதொடர்பான விசாரணையின்போது, இச்சம்பவத்தில் ஈடுபட்ட
எதிரி ஒருவனின் வீடியோ படத்தையும் காவல்துறையினர் கண்டுபிடித்து, அந்நபர்
குறித்து மேலும் விவரங்கள் அறிய அப்புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிட்டனர்.
இதனையடுத்து வீடியோவில் பதிவான சந்தேகத்துக் குரிய நபர் மற்றும் நான்கு
பேருடன் வேளச்சேரியிலுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில்
வசித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், 22.02.2012 அன்று, அடையாறு மாவட்ட
காவல் துணை ஆணையாளர் ஆர். சுதாகர் மற்றும் இரண்டு காவல் உதவி ஆணையர்கள்,
நான்கு காவல் ஆய்வாளர்கள், இரண்டு உதவி ஆய்வாளர்கள், இரண்டு சிறப்பு உதவி
ஆய் வாளர்கள் மற்றும் ஒரு காவலர் அடங்கிய காவல் குழுவினர், எதிரிகள்
பதுங்கிய வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு, ஏ-பிளாக்,
பிளாட் எண்.335 என்ற முகவரிக்குச் சென்று அவ்வீட்டைக் கண்காணித்தனர். அவ்வீட்டில்,
சந்தேகப்படும்படி சிலர் தங்கியிருந்ததையடுத்து, காவல் துணை ஆணையாளர், அந்த
வீட்டில் இருந்தவர்களிடம் தங்களை காவல் துறையினர் என்ற தமிழிலும் இந்தி
மொழியிலும் அறிமுகம் செய்து, கதவைத் திறக்குமாறு கூறி கதவைத் திட்டினார்.
ஆனால், உள்ளிருந்தவர்கள் கதவைத் திறப்பதற்குப் பதிலாக, உரத்த குரலில் இந்தி
மொழியில், காவல் குழுவினர் அந்த இடத்தை விட்டு செல்ல வேண்டுமென எச்சரிக்கை
விடுத்தனர். அதே நேரத்தில், அந்த வீட்டினுள் இருந்தவர்கள்
காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். காவல் துணை ஆணையாளர்,
துப்பாக்கியால் சுடுவதை நிறுத்தி, சரண் அடைய வேண்டுமென தமிழ், இந்தி
மொழிகளில் மீண்டும் எச்சரிக்கை விடுத்தார். அவர்கள் எச்சரிக்கைக்கு செவி
சாய்க்காமல், தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். இத்தாக்குதல்
சம்பவத்தில் இரண்டு காவல் ஆய்வாளர்களுக்கு குண்டு காயங்கள் ஏற்பட்டன.
மக்கள் நெருக்கம் மிகுந்த அப்பகுதியில் மேற்படி வீட்டில் இருந்தவர்கள்
தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டது, பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர்
உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக இருந்ததால், எதிரிகள் துப்பாக்கியால்
சுடுவதை நிறுத்தாததால், காவல்துறையினர் வேறு வழியின்றி எதிரிகளை நோக்கி
திருப்பிச் சுட்டனர். இத்தாக்குதலில் வீட்டினுள் இருந்த 5
நபர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டது. காயமுற்ற காவல் ஆய்வாளர்கள் மற்றும் 5
நபர்களும் உடனடியாக சென்னை, அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டு, மருத்துவமனையில் காயமுற்ற ஐந்து எதிரிகளையும் பரிசோதித்த
மருத்துவர், அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தார். எதிரிகள்
மறைந்திருந்த வீட்டைச் சோதனையிட்டபோது, அவ் வீட்டிலிருந்து ஐந்து
கைத்துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர், ஒரு ஷாட்கன், வெடிமருந்து, ஒரு
பையிலிருந்து ரொக்கம் ரூ.14,01,020. வாக்காளர் அடையாள அட்டைகள், ஓட்டுநர்
உரிமங்கள், ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது
சம்பந்தமாக, வேளச்சேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு,
வழக்கு விசாரணைக்காக தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவருக்கு
அனுப்பபப்பட்டு, அவரது அறிவுரையின்படி சென்னை 14-வது பெருநகர குற்றவியல்
நீதிமன்ற நடுவர், சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதோடு, இறந்து
போனவர்களின் உடல் மீதான பிரேத விசாரணையையும் நடத்தினார். பின்னர்
27.02.2012 அன்று, இவ்வழக்கு குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறைக்கு
மேல் விசாரணைக்காக மாற்றம் செய்யப்பட்டது. இப்பிரிவினர் விசாரணை மேற்கொண்டு
இறந்துபோன ஐந்து எதிரிகளின் அடையாளங்களை சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்களின்
உதவியுடன் கண்டறிந்து அவர்கள், சுஜய்குமார் ராய், ஹரிஷ் குமார், வினோத்
பிரசாத், ஜே.பி. யாதவ் மற்றும் நவ்னீத்குமார் என உறுதி செய்தனர். பின்னர்,
எதிரிகளின் உடல்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறையினர் தொடர்ந்து புலன் விசாரணை
நடத்தி வருகிறார்கள். விசாரணையில், இறந்து போன எதிரிகள் அனைவரும் பீகார்,
மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வெடி பொருட்களை பயன்படுத்தி பல்வேறு கொலை
மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதற்கிடையில்,
சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் புகழேந்தி, காவல் அலுவலர்களுக்கு
எதிராக கொலை வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணையை மத்திய
குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து
ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த ரிட் மனுவானது சென்னை
உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இம்மனுவின் விசாரணை
05.06.2012 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே வழக்கு நிலுவையில்
உள்ளதால், இதற்கு மேல் இதுபற்றி பேசுவது உகந்ததாக இருக்காது என்பதைத்
தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

Similar topics
» போலீசார் சுட்டது ஏன்?கமிஷனர் பேட்டி
» சுட்டது ஏன்? கமிஷனர் விளக்கம்
» மின் பிரச்னைக்கு மூலகாரணம் யார்? முதல்வர் விளக்கம்
» சித்திரை முதல் நாளை புத்தாண்டாக மாற்றியது ஏன்? முதல்வர் ஜெ., விளக்கம்
» மக்களின் முதல்வர் ஜெயலலிதா: அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum