TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஜெனிவாவில் நடந்த இரகசிய பேரம்: அமெரிக்காவுடன் இறுதிவரை இழுபறி யுத்தம் நடத்திய இந்தியா.

Go down

ஜெனிவாவில் நடந்த இரகசிய பேரம்: அமெரிக்காவுடன் இறுதிவரை இழுபறி யுத்தம் நடத்திய இந்தியா. Empty ஜெனிவாவில் நடந்த இரகசிய பேரம்: அமெரிக்காவுடன் இறுதிவரை இழுபறி யுத்தம் நடத்திய இந்தியா.

Post by மாலதி Tue Apr 03, 2012 7:40 am




ஜெனிவாவில் நடந்த இரகசிய பேரம்: அமெரிக்காவுடன் இறுதிவரை இழுபறி யுத்தம் நடத்திய இந்தியா. India-sri-lanka-300x200அமெரிக்கா
தலைமையிலான நாடுகளால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு
எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருந்த போதும், அதனைப் பலவீனப்படுத்துவதில் இந்தியா பெரும் பங்களிப்புச் செய்தது.

இதுதொடர்பாக ஜெனிவாவில் நடந்த
இரகசியபேரங்கள், சந்திப்புகள், ஆலோசனைகள் தொடர்பாக ஆங்கில ஊடகங்களில்
வெளியான – தமிழில் வெளிவராத – தகவல்களின் தொகுப்பு இது.

தீர்மான இறுதி வரைபு வெளியாவதற்கு பல
நாட்கள் முன்னதாகவே, ஜெனிவாவில் இந்திய – அமெரிக்க இராஜதந்திரிகள்
இரகசியமான ஆலோசனைகளில் மூழ்கியிருந்தனர்.

இதன்போது “ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையத்தின்
ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்க
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்ற தீர்மான வரைபு
வாசகம் திருத்தப்பட வேண்டும் என்று இந்திய இராஜதந்திரிகள் ஒற்றைக்காலில்
நின்றனர்.

இந்த பேரத்தில் மிகவும் முக்கியமான பங்கு
வகித்தவர், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கான இந்தியாவின் புதிய தூதுவராக
பொறுப்பேற்றிருந்த திலிப் சிங்கா ஆவார்.

அவர் ஜெனிவா தீர்மானம் வாக்கெடுப்புக்கு
விடப்படுவதற்கு 5 நாட்கள் முன்னதாகவே [ஞாயிற்றுக்கிழமை] புதுடெல்லியில்
இருந்து ஜெனிவாவுக்கு வந்திருந்தார்.

உடனடியாகவே அவர் ஆழமான ஆலோசனைகளில் இறங்கினார்.

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்
வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக –
செவ்வாய்க்கிழமை இரவு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்
அவருக்கு இராப்போசன விருந்தளித்தார்.

ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் இந்த
இராப்போசன விருந்தை ஒழுங்கு செய்ததற்குக் காரணம், இந்தியாவை வாக்கெடுப்பில்
கலந்து கொள்ளாமல் குறைந்தபட்சம் நடுநிலை வகித்து ஒதுங்கி நிற்குமாறு
வலியுறுத்துவதேயாகும்.

ஜெனிவாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட முன்னர், இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலராக இருந்தவர் திலிப் சின்ஹா.

அவர் அந்த இராப்போசன விருந்தின் போது,
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கோரியபடி இந்தியா நடந்து கொள்வதற்கான
வாய்ப்பை உடனடியாகவே நிராகரித்து விட்டார்.

உள்நாட்டு விவகாரங்களினால் இந்தமுறை .சிறிலங்காவைக் காப்பாற்ற இந்தியாவினால் வரமுடியாது என்று அவர் கூறிவிட்டார்.

இதற்குப் பின்னர் வெளியே வந்த சிறிலங்கா
அமைச்சர் ஒருவர், தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கப் போகிறது
என்று பகிரங்கமாகக் கூறினார்.

அதேவேளை, வாக்கெடுப்புக்கு முதல் நாளான புதன்கிழமை இரவு மிகக் கடுமையான இராஜதந்திர பேரம் பேசல் இடம்பெற்றது.

தீர்மான வரைபில் திருத்தம் செய்வதற்கு
அமெரிக்கப் பிரதிநிதி எலின் டோனஹேயுடன் பேரம் பேசுமாறு திலிப் சின்ஹாவுக்கு
புதுடெல்லியில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் சிறிலங்காவை வழிகாட்டும் வகையிலான வரைபில் திருத்தங்களை செய்வதற்கு அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் விரும்பவில்லை.

ஆனால், திலிப் சின்ஹா மிகக் கடுமையாக விடாப்பிடிப் போக்குடன் இருந்தார்.

ஒரு கட்டத்தில் அவர், அமெரிக்காவின்
இந்தப் பிடிவாதம், இந்தியாவை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க
நிர்ப்பந்திக்கும் என்று எலீன் டோனயிடம் எச்சரித்தார்.

2009ம் ஆண்டு சிறிலங்காவுக்கு எதிராக
மேற்குலக நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா முன்னின்று
தோற்கடித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடைசியாக அமெரிக்கத் தூதுவர் எலீன் டோனஹே, இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முன்வந்தார்.

இதையடுத்தே, தீர்மான வாசகத்தில்,
“சிறிலங்கா அரசின் ஒப்புதலுடன், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையம் ஆலோசனை மற்றும்
தொழில்நுட்ப உதவிகளை வழங்கலாம்“ என்று திருத்தம் செய்ய இணக்கப்பாடு
எட்டப்பட்டது.

அமெரிக்கா கொண்டு வந்த இந்தத் தீர்மானத்தை
ஹங்கேரி, ருமேனியா, நெதர்லாந்து, அவுஸ்ரேலியா, மொனாக்கோ, ஸ்பெயின்,
லித்வேனியா, பின்லாந்து, சைப்ரஸ், குரோசியா, பல்கேரியா, ஸ்லோவேனியா,
எஸ்தோனியா, செக் குடியரசு, லக்சம்பேர்க், கிறீஸ், இஸ்ரேல், ஸ்லோவாக்கியா,
மோல்டா, ஜோர்ஜியா, சுவிற்சர்லாந்து, சோமாலியா, கனடா, கமரூன், லிச்சன்ஸ்டைன்
, நோர்வே, டென்மார்க், சுவீடன், அயர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம்,
போர்த்துக்கல், ஒஸ்ரியா, போலந்து, பிரித்தானியா, ஜெர்மனி, இத்தாலி,
ஐஸ்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய 40 நாடுகள் துணை அனுசரணை
வழங்கியிருந்தன.

இவற்றில் 13 நாடுகள் மட்டுமே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிப்பவையாகும்.

40 நாடுகளின் ஆதரவுடன் சிறிலங்காவுக்கு
எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்திருந்தாலும், இந்தியாவின்
அழுத்தங்களுக்கு அமெரிக்கா பணிந்து போக வேண்டியிருந்ததால், முன்னைய வரைபின்
படி – சிறிலங்காவுக்கு அதிக நெருக்குதல்களைக் கொடுக்கும் வகையிலான
தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது போனது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சத்தமின்றி யுத்தம்! இந்தியா மீது சத்தமின்றி யுத்தம் நடத்தும் சீனா: மீனவர்களை தூண்டி கடல் வளத்தை அழிக்கும் தந்திரம
» லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் பேரம் நடத்திய ஆர்.ஐ., தப்பியோட்டம்
» மறக்க முடியுமா இந்தியா இலங்கை நடத்திய தமிழின படுகொலையை? மே 18 –தமிழின இனப்படுகொலை நாள்.
» பிரிட்டனின் மிகப்பெரிய யுத்தமாக நேதாஜீயோடு நடந்த யுத்தம் அறிவிப்பு
» அ.தி.மு.க., கூட்டணி இழுபறி: பின்னணி என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum