Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ரூ.1.20 லட்சம் கோடி பட்ஜெட்
Page 1 of 1
ரூ.1.20 லட்சம் கோடி பட்ஜெட்
முதல்வர் ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்ற பிறகு,
2012-2013-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பேரவையில் திங்கள்கிழமை
தாக்கல் செய்ய வரும் நிதியமைச்சர் ஓ
சென்னை,
மார்ச் 26: தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட
பட்ஜெட்டின் மதிப்பு ரூ.1.20 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. வரும்
நிதியாண்டில் வருவாய் உபரி ரூ.2 ஆயிரத்து 376 கோடியாக இருக்குமென
மதிப்பிட்டுள்ளது.நிலங்கள், மனைகள் பதிவுக்கான திருத்தப்பட்ட
வழிகாட்டி மதிப்பு அமல், பார்கள்-ஓட்டல்கள் வாங்கி விற்கும் மதுபானங்கள்
மீது 14.5 சதவீதம் மதிப்பு கூட்டு வரி நடைமுறைப்படுத்துதல் போன்றவற்றின்
மூலம் வரும் நிதியாண்டில் ரூ.1,500 கோடிக்கு வருவாய் கிடைக்கும் என
மதிப்பிடப்பிட்டுள்ளது.சட்டப் பேரவையில் நிதியமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2012-2013-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை
அறிக்கையில் வரி நீக்கம் மற்றும் குறைப்பு குறித்த அறிவிப்புகள்
வெளியிடப்பட்டுள்ளன.காலை 10 மணிக்கு தனது உரையைத் தொடங்கிய நிதியமைச்சர் நண்பகல் 12.56 மணிக்கு நிறைவு செய்தார்.ரத்தத்தில்
சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க அதிகம் பயன்படுத்தப்படும் கோதுமையின்
மீதான மதிப்பு கூட்டு வரி 2 சதவீதமாகவும், ஓட்ஸ் மீது 5 சதவீதமாகவும்,
இன்சூலின் மீது 5 சதவீதமாகவும், பாலூட்டும் புட்டிகள் மீது 5 சதவீதமாகவும்,
ஹெல்மெட் மீது 5 சதவீதமாகவும் உள்ள மதிப்பு கூட்டு வரி அறவே
நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.மின்சார
பைக்குகள், சி.எப்.எல். பல்புகள், தீப்பெட்டி தயாரிப்புக்கான மரக்
குச்சிகள், மரப்பட்டைகள், சானிடரி நாப்கின்கள், டயஃபர்கள் ஆகியற்றின் மீதான
14.5 சதவீத மதிப்புக் கூட்டு வரியை 5 சதவீதமாகக் குறைத்துள்ளார். இதனால்
இவற்றின் விலை குறையும்.ஏப்ரல் 1 முதல் அமல்: சொத்துகளைப் பதிவு
செய்ய பதிவுத்துறை நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கிறது. அதைத்
திருத்துவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டது. திருத்தப்பட்ட வழிகாட்டி
மதிப்பு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக நிதியமைச்சர்
கூறியுள்ளார். இதன்மூலம், அரசுக்கு ரூ.600 கோடி அளவுக்கு கூடுதலாக வருவாய்
கிடைக்கும் எனத் தெரிகிறது.திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பு
அமல்படுத்தப்பட்டதால் மக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்க இப்போது
விதிக்கப்படும் 6 சதவீத முத்திரைத் தீர்வை, வரும் ஏப்ரல் 1 முதல் 5
சதவீதமாகக் குறைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.தாவர
எண்ணெய் விற்பனை அளவு ரூ.5 கோடிக்கும் குறைவாக இருந்தால் அதற்கு 5 சதவீதம்
மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படும், சுற்றுலா வாகனங்களுக்கான வரி சீரமைப்பு
செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். பார்கள் மற்றும் ஓட்டல்களில் வாங்கி விற்கப்படும் மதுபானங்கள் மீது 14.5 சதவீதம் மதிப்பு கூட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு
திட்டங்களுக்கு 30 ஆயிரம் கோடி: நடப்பு நிதியாண்டைப் போன்றே வரும்
நிதியாண்டிலும் உணவுத் துறையில் செயல்படுத்தப்படும் சிறப்புத்
திட்டங்களுக்காக அதிகபட்சமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.4,500 ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெட்டில் ரூ.4,900 கோடி ஒதுக்கப்படுவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.ஓய்வூதியத்
திட்டங்கள் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.3,820 கோடியும்,
மின்சார வாரியத்துக்கு ரூ.3 ஆயிரத்து 69 கோடியும் ஒதுக்கப்படுகிறது. இலவச
பேன், மிக்ஸி, கிரைண்டர் மற்றும் ஆடு-மாடுகள் வழங்கும் திட்டங்கள் உள்பட
சிறப்புத் திட்டங்களுக்காக மட்டும் வரும் நிதியாண்டில் ரூ.30 ஆயிரம் கோடி
ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். பிற திட்டங்கள்:
முதல்வர் அண்மையில் வெளியிட்ட தொலைநோக்கு திட்டத்துக்கு முக்கியத்துவம்
கொடுத்து பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நகர்ப்புற வறுமையை
ஒழிக்க, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்துக்காக ரூ.200 கோடி
ஒதுக்கப்படுகிறது.ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் வரும் நிதியாண்டில் ஒரு லட்சம் பட்டாக்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.உணவு தானிய உற்பத்தி இலக்கை 120 லட்சம் மெட்ரிக் டன் என தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.படித்த
இளைஞர்களைத் தொழில் முனைவோராக்க தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் என்ற
புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்தைச்
சேமிக்க வரும் நிதியாண்டில் ரூ.180 கோடியில் 60 ஆயிரம் வீடுகளுக்கு சூரிய
மின் விளக்குகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.ஒன்றாம்
வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.150
கோடியில் இலவச நோட்டுப் புத்தகங்கள் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.கடன்
சுமை: தமிழகத்தின் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரூ.1.20 கோடி
லட்சம் மதிப்பில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும், கடன்
சுமையின் அளவு ரூ.1.35 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வருவாய்
வரவுகள் ரூ.1 லட்சத்து 590 கோடியாகவும், அதில் செலவு ரூ.98 ஆயிரத்து 214
கோடியாகவும் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் சம்பளம்
மற்றும் ஓய்வூதியங்களுக்கு மட்டும் 43 சதவீதம் செலவிடப்படுகிறது.இந்த
பட்ஜெட் வருவாய் உபரி பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது. அரசின்
திட்டங்களுக்குச் செலவழிப்பதை, அரசின் உத்தேச வருமானங்களிலிருந்து
கழித்தால் வருவாய் உபரி ரூ.2 ஆயிரத்து 376 கோடியாக இருக்கும் என
மதிப்பிடப்படுகிறது.விலை குறையும் பொருள்கள்கோதுமை - இப்போது விதிக்கப்படும் 2 சதவீத மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும்.ஓட்ஸ் - இப்போது விதிக்கப்படும் 5 சதவீத மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும்.இன்சுலின் - "இன்சுலின்' மீது விதிக்கப்படும்5 சதவீத மதிப்புக் கூட்டு வரி நீக்கப்படும்.பூட்டு - கையினால் தயாரிக்கப்படும் பூட்டுகளுக்கு விதிக்கப்படும் 5 சதவீத மதிப்புக் கூட்டு வரி நீக்கப்படும்.ஹெல்மெட்
- போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைப் பாதுகாப்பினை மேம்படுத்தும்
பொருட்டு, ஹெல்மெட்டிற்கு விதிக்கப்படும் 5% மதிப்புக் கூட்டு வரி
விலக்கிக் கொள்ளப்படும்.பாலூட்டும் புட்டிகள் - பாலூட்டும்
புட்டிகள், பாலூட்டும் காம்புகளுக்கு விதிக்கப்படும் 5 சதவீத மதிப்புக்
கூட்டு வரி முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும்.மதிப்புக் கூட்டு வரி குறைக்கப்படும் பொருள்கள்இ-பைக்குகள்
- மின் சக்தியால் இயங்கக் கூடிய இரு சக்கர வாகனங்களுக்கு விதிக்கப்படும்
14.5 சதவீத மதிப்புக் கூட்டு வரி 5 சதவீதமாகக் குறைக்கப்படும்.சி.எப்.எல்.
பல்புகள் - காம்பேக்ட் ஃப்ளோரசென்ட் விளக்குகள் மற்றும் காம்பேக்
ஃப்ளோரசென்ட் குழல் விளக்குகளுக்கு இப்போது விதிக்கப்படும் 14.5 சதவீத
மதிப்புக் கூட்டு வரி 5 சதவீதமாகக் குறைக்கப்படும்.மரக் குச்சிகள்
மற்றும் மரப் பட்டைகள் - உள்ளூர் தீக்குச்சித் தொழிற்சாலைகள் வெளிச்சந்தைப்
போட்டியைச் சமாளிக்கும் வகையில், மரக் குச்சிகள் மற்றும் மரப்பட்டைகளுக்கு
இப்போது விதிக்கப்படும் 14.5 சதவீத மதிப்புக் கூட்டு வரி 5 சதவீதமாகக்
குறைக்கப்படும்.சானிடரி நாப்கின்கள், டயஃபர்கள் - பெண்கள் மற்றும்
குழந்தைகளின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக சானிடரி நாப்கின்கள்,
டயஃபர்களுக்கு இப்போது விதிக்கப்படும் 14.5 சதவீத மதிப்புக் கூட்டு வரி 5
சதவீதமாகக் குறைக்கப்படும்.வரி உயர்த்தப்படும் இனங்கள்சொத்துகளுக்கு
வழிகாட்டி மதிப்பு - சொத்துக்களின் சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு வழிகாட்டி
மதிப்பு உயர்த்தப்படாததால் அரசு வருவாயில் இழப்பு ஏற்படுகிறது. இதையடுத்து,
திருத்தப்பட்ட வருவாய் மதிப்பு ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.உள்ளூர்
திட்ட அமைப்புகள் மூலம் வசூலிக்கப்பட்டு வரும் கட்டமைப்பு மற்றும்
அடிப்படைக் கட்டணம் இப்போதுள்ள கட்டண அளவில் 50 சதவீதம் உயர்த்தப்படும்.சமையல்
எண்ணெய்க்கு வரி விலக்கு ரத்து - ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு குறைவான சமையல்
எண்ணெய் விற்பனைக்கு அளிக்கப்பட்டு வந்த மதிப்புக் கூட்டு வரி விலக்கு, வரி
ஏய்ப்பைத் தடுக்கும் வகையில் நீக்கப்படுகிறது. அந்த விற்பனைக்கு 5 சதவீதம்
மதிப்புக் கூட்டு வரி விதிக்கப்படும்.மதுபானங்களுக்கு விற்பனை வரி -
மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்துக்கு உள்படாமல் வெளி மாநிலங்களிலிருந்து
வாங்கியோ, கொள்முதல் செய்தோ விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான
மதுபானங்களுக்கும் இரண்டாவது கட்ட விற்பனை நிலையிலும், மூன்றாவது கட்ட
விற்பனை நிலையிலும் 14.5 சதவீதம் விற்பனை வரி விதிக்கப்படும். இதையடுத்து,
பார்கள், ரெஸ்டாரெண்டுகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலை
உயரும்.வாகன வரிச் சீரமைப்பு - சுற்றுலாப் பயண வாகனங்கள், மேக்சி
கேப் வாகனங்கள், தனியார் சேவை வாகனங்கள், மாற்று பஸ்கள், கட்டுமானப்
பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள், பிற மாநில ஒப்பந்த வாகனங்கள்
ஆகியவற்றின் மீதான வரிகள் சீரமைக்கப்படும். முன்னுரிமையில் விருப்ப
எண்களைப் பதிவு செய்வதற்கான கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்படும்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» வருவாய் ரூ.63,092 கோடி; செலவு ரூ. 66,488 கோடி: புது வரி இல்லா பட்ஜெட்
» வெளிநாடுகளில் ரூ. 4 லட்சம் கோடி கறுப்புபணம் ஒரு லட்சம் கி.மீட்டர் தூரம் ராம்தேவ் யாத்ரா
» திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் ரூ.2010 கோடி
» மாவோயிஸ்ட்களின் பட்ஜெட் அம்பலம்: 3 மாநிலங்களுக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு
» பங்குச்சந்தை: ஒரே நாளில் 3 லட்சம் கோடி 'அவுட்'
» வெளிநாடுகளில் ரூ. 4 லட்சம் கோடி கறுப்புபணம் ஒரு லட்சம் கி.மீட்டர் தூரம் ராம்தேவ் யாத்ரா
» திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் ரூ.2010 கோடி
» மாவோயிஸ்ட்களின் பட்ஜெட் அம்பலம்: 3 மாநிலங்களுக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு
» பங்குச்சந்தை: ஒரே நாளில் 3 லட்சம் கோடி 'அவுட்'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum