TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


உயிருக்கு போராடும் மகனுடன் தவிக்கும் தாய்: காற்றில் பறந்தது கலெக்டர் பரிந்துரை

Go down

உயிருக்கு போராடும் மகனுடன் தவிக்கும் தாய்: காற்றில் பறந்தது கலெக்டர் பரிந்துரை Empty உயிருக்கு போராடும் மகனுடன் தவிக்கும் தாய்: காற்றில் பறந்தது கலெக்டர் பரிந்துரை

Post by மாலதி Fri Mar 09, 2012 7:12 am

உயிருக்கு போராடும் மகனுடன் தவிக்கும் தாய்: காற்றில் பறந்தது கலெக்டர் பரிந்துரை Tamil_News_large_422546
கள்ளக்குறிச்சி: வயிற்றில் துளையிட்டு பொருத்தப்பட்ட குழாய் வழியே
மூன்று ஆண்டுகளாக பால் செலுத்தி தனது மகனை உயிர் பிழைக்க வைக்க ஒரு தாய்
தவியாய் தவித்து வருகிறார். குழந்தையின் மருத்துவ மேல் சிகிச்சைக்காக
கலெக்டர் கொடுத்த பரிந்துரை கடிதமும் பயனற்று போனதால் அந்த தாய்
செய்வதறியாது பரிதவித்து நிற்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் மோகன்,45;
தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி பத்மா, 38. இவர்களுக்கு சிவமணி, 10 என்ற மகன்
உள்ளார். கடந்த 2006ம் ஆண்டு பாட்டிலில் இருந்த ஆசிட்டை குளிர்பானம் என்று
தவறுதலாக சிவமணி குடித்துள்ளார். இதனால் இரைப்பை முழுவதும் புண்ணாகி
வலியால் துடித்தான். சென்னையில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில்
சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் சிவமணியின் உயிரை
காப்பாற்றினர். இருப்பினும் சாப்பிட முடியாமல் சிவமணி மிகவும்
சிரமப்பட்டான். தொண்டையின் உணவுக் குழல் முழுவதும் ஆசிட்டால் காயம்
ஏற்பட்டதால் அது சரியாகும் வரை உணவை வாய்வழியே கொடுக் கக் கூடாது என்று
டாக்டர்கள் கூறியுள்ளனர். அதற்கு தற்காலிக ஏற்பாடாக கடந்த 2009ம் ஆண்டு
சிவமணியின் வயிற்றில் ஒரு துளையிட்டு, அதன்வழியே குழாயை இரைப்பையில்
செலுத்தி அதில் திரவ உணவை கொடுக்கும் படியும், சிலவாரங்களுக்கு பின்
மீண்டும் வருமாறு அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர். மேற்கொண்டு சிகிச்சை அளிக்க
போதிய பண வசதி இல்லாததால் குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு
செல்ல முடியாமல் பத்மா தவித்து வந்தார். சிவமணியின் தந்தை மோகனுக்கு குடி
பழக்கம் உள்ளதால், வீட்டு செலவுக்கு கூட பணம் தருவதில்லை. வயிற்று
பிழைப்புக்கே வழியின்றி தவித்த பத்மா சில வீடுகளில் பாத்திரம் தேய்த்து
அதன்மூலம் மாதம் தோறும் 750 ரூபாய் சம்பாதித்து வருகிறார்.

வயிற்றில் உள்ள துளை வழியே சிவமணிக்கு தினமும் பால் செலுத்தி அதன்
மூலம் அவனது உயிரை காப்பாற்றி வருகிறார். பல ஆண்டுகளாக வாய்வழியே உண்பது
நிறுத்தப்பட்டதால் தொண்டை குழலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற குழந்தைகளை
போல் தின்பண்டங்களை சாப்பிட ஆசைப்பட்டாலும், அதற்கு வழியின்றி சிவமணி
தவித்து வந்தான். ஆசைப்படும் திண்பண்டத்தை வாயில் வைத்து சுவைத்துவிட்டு
முழுங்க முடியாமல் கீழே துப்பிவிடும், அவலம் நீடித்து வந்தது. வயிற்றில்
பொருத்தப்பட்ட குழாய் பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளதால் அதில் தொற்று
உருவாகி, அதை சுற்றி புண் ஏற்பட்டுள்ளது. குழாய் வழியே பால் செலுத்தும்
போது வலிதாங்காமல் சிவமணி துடிப்பது பார்ப்பவர்களை பதற செய்கிறது. பாலை
தவிர வேறு உணவுகளை கொடுக்க முடியாததால் சிவமணியின் உடல்நிலை பலகீனமடைந்து
நிற்க கூட முடியாமல் கால்கள் நடுங்க சிறுவன் சிரமப்படுவது வேதனையாக உள்ளது.
மற்ற குழந்தைகளை பார்க்கும் போது அவர்களுடன் சேர்ந்து ஓடி விளையாட
வேண்டும் என்ற ஏக்கம் சிவமணியின் முகத்தில் அப்பட்டமாய் தெரிகிறது. ஆனால்
வயிற்றில் உள்ள குழாயை பார்த்தபடி வேடிக்கை பார்க்க மட்டுமே அவனால்
முடிகிறது.

அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் கூறியதையடுத்து, கடந்த
15 நாட்களுக்கு முன் தனது மகன் சிவமணியை அழைத்துக்கொண்டு விழுப்புரம்
கலெக்டர் சம்பத்தை நேரில் சந்தித்து தனது மகனுக்கு மருத்துவ உதவி செய்யும்
படியும், சுயதொழில் செய்ய வங்கி கடன் வழங்கவும் பத்மா கோரிக்கை விடுத்தார்.
அதை பரிசீலித்த கலெக்டர் கள்ளக்குறிச்சியில் உள்ள தேசிய வங்கி ஒன்றில்
சிறுதொழில் செய்ய கடன் பெற்றுக்கொள்ள பரிந்துரை செய்து கடிதம்
வழங்கினார்.கடன் பெறும் எதிர்பார்ப்போடு கள்ளக்குறிச்சியில் உள்ள தேசிய
வங்கிக்கு சென்று கலெக்டர் கொடுத்த கடிதத்தை கொடுத்த அவருக்கு அதிர்ச்சி
காத்திருந்தது. அவரை கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக வங்கி அதிகாரிகள்
வெளியே அனுப்பியுள்ளனர். இதனால் செய்வதறியாது பத்மா தவித்து வருகிறார்.
வயிற்றில் குழாய் பொருத்தப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி வரும் தனது மகனை
தூக்கிக்கொண்டு யாராவது உதவமாட்டார்களா என்று ஏக்கத்துடன்
காத்திருக்கிறார். மகனுக்கு மேல்சிகிச்சை தந்து மீட்டெடுக்க போராடி வரும்
இந்த ஏழை தாய் பத்மாவுக்கு உதவ முன்வருபவர்கள் 93604 73263 என்ற மொபைல்
போனுக்கு தொடர்பு கொள்ளலாம்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கள்ளகாதலனுடன் சேர்ந்து தாய் செய்த கொடூரம்: உயிருக்கு போராடும் 8வயது சிறுவன்
» சிறுநீரகங்கள் பழுதாகி உயிருக்கு போராடும் ஏழை மாணவி: பெற்றோர்கள் கண்ணீர்
» உயிருக்கு போராடும் குழந்தைக்கு அரசின் காப்பீடு திட்டம் மறுப்பு
» மும்பையில் திடீர் விபத்து! உயிருக்கு போராடும் மக்கள்(வீடியோ இணைப்பு)
» திருவாடானை அரசு மருத்துவமனை வாசலில் உயிருக்கு போராடும் முதியவர்:மரத்துப்போனதா மனிதநேயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum