Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேர் மீதும் பொய் வழக்கு: சசிகலா பதில்
Page 1 of 1

"தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேர் மீதும்,
விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவும், தமிழக போலீசாரும் பொய் வழக்கு
தொடர்ந்துள்ளனர்,'' என்று பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் சசிகலா
தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு, பெங்களூரு
சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், இரண்டாவது
குற்றவாளியான சசிகலாவிடம் நேற்று இரண்டாவது நாளாக கேள்விகள் கேட்கப்பட்டன.
கேள்விகள் கேட்பது துவங்கியது, "ஜெயா பப்ளிகேஷனுக்கு, ஜப்பானிலிருந்து பல
லட்சம் ரூபாய் மதிப்புள்ள மிஷின் வாங்கியது உண்மையா. அதற்கு பணம்
எங்கிருந்து வந்தது' என்று நீதிபதி மல்லிகார்ஜுனையா கேள்வி கேட்டார்.
அதற்கு சசிகலா, "மிஷின் வாங்கியது உண்மை தான். அது புது மிஷின் அல்ல; பழைய
மிஷின். ஜெயா பப்ளிகேஷன் வருமானத்தில் தான் வாங்கப்பட்டது' என, நீண்ட
விளக்கம் அளித்தார். (சசிகலாவின் "வாய்ஸ்' மிகவும் குறைவாக இருந்தது.
ஏற்கனவே எழுதிக் கொண்டு வந்திருந்ததை பார்த்து, பார்த்து பதிலளித்தார்.)
அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, "நான் சென்னையில் படித்தவன். தமிழில் பேசினால்,
என்னால் புரிந்து கொள்ள முடியும். சசிகலா கூறும் பதில் எனக்கு
கேட்கவில்லை. அவரது பேச்சு சத்தம் குறைவாக உள்ளது. முன்வரிசையில்
இருப்பவர்களுக்கு மட்டுமாவது அவரது பதில் கேட்க வேண்டும். அவரிடம் கேட்கும்
கேள்விகளுக்கு தேவையற்ற நீண்ட விளக்கம் அளிக்கிறார். நீண்ட விளக்கங்களை
எழுத்து மூலம் கொடுக்கலாம். ஜெயலலிதா அப்படித்தான் செய்தார். சசிகலா எழுதி
வைத்து பதிலளிக்கிறார். குற்றவாளிகள் அவ்வாறு செய்யக்கூடாது' என்றார்.
சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர் கூறுகையில், ""உடல் நலக்குறைவால்
சசிகலாவால், அதிக சத்தமாக பேச முடிவதில்லை. சில கேள்விகளுக்கு நீண்ட
விளக்கம் தேவைப்படுகிறது. சில நம்பர்களை குறித்து வைத்து பார்த்து
கூறுகிறார்,'' என்றார். இதைத் தொடர்ந்து, ""சென்னை ஈக்காடுதாங்களில்
நீங்கள் வாங்கிய இடம், கட்டடத்துக்கு நீங்கள் பணம் கொடுத்தீர்களா, பணம்
எங்கிருந்து வந்தது,'' என, நீதிபதி கேள்வி கேட்டார். இதற்கு சசிகலா
கூறுகையில், ""ஆஞ்சனேயா எண்டர்பிரைசஸ் கம்பெனி மூலம் அந்த இடம்
வாங்கப்பட்டது. அதற்கு கணக்கு உள்ளது,'' என்றார். சசிகலா மெதுவாக
பேசியதால், அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா எழுந்து வெளியே சென்று விட்டார்.
""சென்னையில், கிரீன் பார்ம் ஹவுசுக்கு, 600 சதுர அடியிலான, 20, 30 லட்சம்
ரூபாய் மதிப்புள்ள இடத்தை, 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கினீர்களா,'' என,
நீதிபதி கேட்டார். சசிகலா பதிலளிக்கையில், "அந்த இடத்தின் உரிமையாளர்களின்
ஒருவரான ஜெகதீஷ்ராஜு குறுக்கு விசாரணையின் போது, விசாரணை அதிகாரி நல்லம்ம
நாயுடு மிரட்டி எங்களுக்கு எதிராக கூறச் சொன்னார் என, வாக்குமூலம்
அளித்துள்ளார். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போல், இந்த
வழக்கில் அனைத்து சாட்சிகளையும், விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடு மற்றும்
விசாரணை போலீசார் மிரட்டி எங்களுக்கு எதிராக கூற வைத்துள்ளனர். இந்த வழக்கு
ஒரு பொய் வழக்கு. போலீசாரால் ஜோடனை செய்யப்பட்டுள்ளது' என்றார்.
மொழிபெயர்ப்பாளருக்கு சசிகலா கூறிய பழமொழியின் அர்த்தம் தெரியாமல்
முழித்துக் கொண்டிருந்தார். வழக்கறிஞர் மணிசங்கர் எழுந்து அர்த்தம்
கூறினார். பின்னர் நீதிபதி, அந்த பழமொழி எல்லாம் தேவையற்றது, என்றார்.
மதியம், 3 மணியிலிருந்து மாலை 5.15 மணி வரை, சசிகலாவிடம் மொத்தம், எட்டு
கேள்விகள் கேட்கப்பட்டன. நேற்று காலையில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளின்
தொடர்ச்சியாகவே, மீண்டும் கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும்
அவர் பதிலளிக்க, அதிக நேரம் எடுத்துக் கொண்டார்; நீண்ட விளக்கம் அளித்தார்.
இதனால், அரசு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா, ""கேள்விகளுக்கு, "ஆம், இல்லை'
என்று பதிலளித்தால் போதுமானது. நீண்ட விளக்கம் தேவையில்லை. அவ்வாறு
விளக்கம் அளிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டால், அறிக்கையாக தாக்கல்
செய்யலாம். இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்
உத்தரவிட்டுள்ளது,'' என்றார். இதையடுத்து, இந்த வழக்கை இன்றைக்கு ஒத்தி
வைத்து நீதிபதி உத்தரவிட்டார். சசிகலாவிடம் இதுவரை மொத்தம், 63 கேள்விகள்
கேட்கப்பட்டுள்ளன. வழக்கு விசாரணை இன்று தொடருவதால், சசிகலாவும்,
இளவரசியும் பெங்களூரிலேயே தங்கியுள்ளனர்.

Similar topics
» ஜெ., சொத்து குவிப்பு வழக்கு அரசு வக்கீல் ஆச்சார்யா உட்பட ஐந்து பேர் மீது புகார்
» மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் ஜெயலலிதா வழக்கு
» அ.தி.மு.க., அணியில் முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா: முதல்வருக்கு விஜயகாந்த் பதில்
» தில்லி வருகை, திமுகவுக்கு அச்சமா?: முதல்வர் ஜெயலலிதா பதில்
» அனைத்துப் பத்திரிக்கைகள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum