Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கும்மிடிப்பூண்டியில் ரூ. 330 கோடியில் நீர்த்தேக்கம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
Page 1 of 1
கும்மிடிப்பூண்டியில் ரூ. 330 கோடியில் நீர்த்தேக்கம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
சென்னை,
ஜன. 24: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் ரூ. 330 கோடி செலவில்
நீர்த்தேக்கம் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:சென்னை
மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நாளுக்கு நாள் பெருகி வரும்
மக்கள்தொகைக்கு ஏற்ப குடிநீரின் தேவை அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில்
கொண்டு பல்வேறு குடிநீர் வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்த முதல்வர்
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.அதன் அடிப்படையில், திருவள்ளூர்
மாவட்டம், கும்மிடிபூண்டி வட்டம் கண்ணன்கோட்டை மற்றும் தேர்வைகண்டிகையை
இணைத்து ரூ. 330 கோடி செலவில் நீர்த்தேக்கம் அமைக்க நிர்வாக ஒப்புதல்
அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இந்த
நீர்த்தேக்கத்தில் தண்ணீரை இருமுறை நிரப்புவதன் மூலம் ஓராயிரம் மில்லியன்
கனஅடி தண்ணீரைத் தேக்கி வைக்க இயலும். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி
வட்டம் பாலவாக்கத்தில் இருந்து 5 கி.மீ. தூரத்திலும்,
ஊத்துக்கோட்டையிலிருந்து 14 கி.மீ. தூரத்திலும் உள்ள இடத்தில் இந்த
நீர்த்தேக்கத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.1,252 ஏக்கர் நிலம்:
கண்டலேறு பூண்டி கால்வாய் நெடுகை பூஜ்யம் மீட்டரில் இருந்து 6,800 மீட்டர்
வரை ஒரு மண் அணை அமைக்கப்படும். மேலும், கண்டலேறு பூண்டி கால்வாய் நெடுகை
900 மீட்டரிலிருந்து 7,500 மீட்டர் நீளத்தில் கால்வாய் அமைக்கப்படும்.
இந்தக் கால்வாய் தாமரைக்குப்பம், செஞ்சி, அகரம், பள்ளிக்குப்பம் கிராமங்கள்
மற்றும் பள்ளிக்குப்பம் காப்பு வனத்தின் வழியாகச் செல்லும்.இந்தக்
கால்வாய் ஆந்திர மாநில நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து கிடைக்கப்பெறும்
நீரை எடுத்துச் செல்கின்ற வகையில் அமைக்கப்படும். மேலும், நெடுகை 4,125
மீட்டரில் உபரிநீர் வழிந்தோடியும், நீரின் போக்கை சீராக்க சமநிலைப்
பொறிகளும் அமைக்கப்படும். இந்தத் திட்டத்துக்காக 560.05 ஏக்கர் அரசு நிலம்
உள்ளிட்ட 1,252.47 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். இந்தத் திட்டம்
இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும்.நிலத்தடி நீர் செறிவூட்டல்:
நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்க செயற்கை முறையில் நிலத்தடி நீர்
செறிவூட்டும் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத்
திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மற்றும் பாபநாசம்
வட்டங்களில் செயற்கை முறையில் செறிவு நீர் துளைகள் அமைக்க ரூ.63.13
லட்சமும், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மற்றும் மன்னார்குடி வட்டங்களில்
துளைகள் அமைக்க ரூ.1.55 கோடியும், கிருஷ்ணகிரி வட்டத்தில் ரூ.3.15
லட்சமும், தருமபுரி மாவட்டம் அரூரில் செறிவு நீர் துளைகளுக்காக ரூ.4.20
லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும், திருவண்ணாமலை மாவட்டம்
திருவண்ணாமலை, போளூர், செங்கம் ஆகிய பகுதிகளில் செய்யாற்றின் குறுக்கே
கீழ்மட்ட தடுப்புச் சுவர் அமைக்க ரூ.3.7 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர்
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம்
கொல்லப்பள்ளி கிராமத்தில் பொன்னையாற்றின் குறுக்கே கீழ்மட்ட நிலத்தடி
தடுப்புச் சுவர் அமைக்க ரூ.1.90 கோடியும், திருவண்ணாமலை மாவட்டம்
கொருக்காத்தூர் கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே கீழ்மட்ட நிலத்தடி
தடுப்புச் சுவர் அமைக்க ரூ.2.20 கோடியும், தஞ்சாவூர் மாவட்டம்
பட்டுக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த 41 கிராமங்களில் உள்ள முறைசார்ந்த
ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் செயற்கை முறையில் 100 செறிவுநீர்
துளைகள் அமைக்கும் திட்டத்துக்கு ரூ.2.5 கோடியை முதல்வர் ஜெயலலிதா
ஒதுக்கியுள்ளார்.நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டப் பணிகளுக்காக
மொத்தம் ரூ.11.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் அறிவிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» ரூ.22 கோடியில் ஏரி, கால்வாய் புனரமைப்பு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
» 8,462 ஆசிரியர்கள் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
» பஸ் தொழிலாளர்களுக்கு பொங்கல் ஊக்கத் தொகை: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
» அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
» ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 2 கோடி ரூபாய்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
» 8,462 ஆசிரியர்கள் நியமனம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
» பஸ் தொழிலாளர்களுக்கு பொங்கல் ஊக்கத் தொகை: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
» அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
» ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றால் 2 கோடி ரூபாய்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum