Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதால், புதிய அணை கட்ட அவசியம் இல்லை'
Page 1 of 1

புதுடில்லி: "முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளதால், புதிய அணை கட்ட
அவசியம் இல்லை' என, நேற்று நடந்த ஐவர் குழு கூட்டத்தில், தமிழக அரசு
சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். புதிய அணை தேவை
என்ற கருத்து, கேரள அரசு சார்பில் பிடிவாதமாகத் தெரிவிக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு விவகாரம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐவர் குழு
கூட்டம், இன்றும் நடக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்னை
குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில், ஐந்து பேர் கொண்ட
குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. அணையின் பலம் குறித்து இந்த குழு
நேரடியாகவும், பல்வேறு தரப்பிலான ஆய்வறிக்கைகளையும் ஆராய்ந்து வருகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டால், அணைக்கு பாதிப்பு ஏற்படுமென கேரளா கூறுகிறது. இந்த
அச்சம் உண்மையானது தானா என்பதை அறிய, இரண்டு பேர் கொண்ட தொழில்நுட்பக்
குழுவை, ஐவர் குழு அமைத்தது; ஆராய்ந்து அறிக்கை தரும்படி கேட்டுக் கொண்டது.
சி.டி.தத்தே
மற்றும் டி.கே.மேத்தா ஆகிய இரண்டு பேர் கொண்ட குழு, முல்லைப் பெரியாறு
அணையில், ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் போதே, கேரளா தரப்பில் பல
இடையூறுகள் செய்யப்பட்டன. சுதந்திரமாக ஆய்வு செய்ய, நிபுணர்களுக்கு அனுமதி
மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அவர்கள் தங்கள் ஆய்வறிக்கையை நேற்று, ஐவர்
குழுவிடம் சமர்ப்பித்தனர். நேற்று, டில்லியில் நீர்வளக் கமிஷன்
அலுவலகத்தில் ஐவர் குழு கூடியது. இந்த கூட்டத்தில், நீதிபதிகள்
ஆனந்த்,லட்சுமணன், தாமஸ் பங்கேற்றனர். கேரளா தரப்பில், அம்மாநில கூடுதல்
தலைமைச் செயலர் ஜெயகுமார், முல்லைப் பெரியாறு ஆணையத் தலைவர் பரமேஸ்வரன்
நாயர், தலைமைப் பொறியாளர் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
தமிழகம்
சார்பில், பொதுப்பணித் துறை செயலர் சசிகுமார், நீர்வள ஆணைய அதிகாரி
சுப்ரமணியம், தமிழக அரசு கண்காணிப்பு பொறியாளர் மற்றும் வழக்கறிஞர்கள்
உமாபதி, குருகிருஷ்ணகுமார்
பங்கேற்றனர்..கூட்டம் காலை, 11 மணிக்கு துவங்கியதும், இருவர் குழுவின்
ஆய்வறிக்கை மீதான விவாதம் நடந்தது. ஆய்வறிக்கையில், அணை பலமாக உள்ளதென்று
கூறப்பட்டிருக்கிறது; "இதை ஏற்க முடியாது' என, கேரளா தரப்பினர்
வாக்குவாதத்தில் இறங்கினர்.
இதுகுறித்து, தகவலறிந்த வட்டாரங்கள்
கூறியதாவது: நிபுணர்கள் மேத்தாவும், தத்தேயும் கடந்த மாதம், 22 மற்றும்
23ம் தேதிகளில் அணையில் ஆய்வுகள் மேற்கொண்டபோதே, கேரளாவுக்கு ஆதரவாக
அறிக்கை பெற, கேரள அரசு அதிகாரிகள் முனைந்தனர்; அப்போதே பிரச்னை வெடித்தது.
இதையடுத்து, கேரள அமைச்சரவை கூட்டத்திற்கு, முல்லைப் பெரியாறு ஆணைய கேரள
தலைவர், பரமேஸ்வரன் நாயர் சம்மன் செய்யப்பட்டார்.
நிபுணர் குழு
அறிக்கை, கேரளாவுக்கு பாதகமாக இருந்தால், இரு நபர் குழுவை ஏற்க மறுப்பது என
அப்போதே முடிவெடுக்கப்பட்டது. நேற்றைய கூட்டத்திலும் அதுதான் அம்பலமானது.
சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில், அணை பலமாக உள்ளதென்றும்,
நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருப்பது
குறித்த சர்ச்சை ஆரம்பமானது. 120 அடியாக அணையின் நீர் மட்டத்தைக் குறைக்க
வேண்டிய அவசியம் இல்லை என்றும், தற்போதைய நிலையே நீடிக்கலாம், அபாயம் ஏதும்
இல்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. தமிழகத்தின் வாதத்தை முற்றிலுமாக
நியாயப்படுத்தும் விதமாக, அறிக்கை இருந்ததால், "அதை ஏற்க முடியாது' என,
கேரளா தரப்பினர் தெரிவிக்க ஆரம்பித்தனர். "இந்த இருவர் குழுவே
ஒருதலைப்பட்சமானது. இந்த குழுவின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
அவர்களின் ஆய்வு நடவடிக்கைகளும் திருப்தியளிக்கவில்லை. இவர்கள் இருவரையும்
உடனடியாக மாற்ற வேண்டும். இருவரும் ஆய்வுகளை மேற்கொண்டபோது, கேரள அரசின்
தலைமைப் பொறியாளர் சார்பில் சில கருத்துக்கள் வைக்கப்பட்டன. அதை இருவருமே
கண்டுகொள்ளவில்லை. இந்த அணையின் பலம் குறித்து ரூர்க்கி ஆய்வு மையம்
ஏற்கனவே அளித்த அறிக்கையின்
பரிந்துரைகளையும் கூட இருவரும்
கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, இந்த குழு
அளித்த அறிக்கையை ஏற்க முடியாது' என, கேரளா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐவர் குழுவின் ஆலோசனை கூட்டம் இன்றும் நடைபெறவுள்ளது.
காரசார
வாதம் : நேற்றைய கூட்டத்தில், காலையில் கேரள தரப்பும், மதியம் தமிழகம்
தரப்பும், வாதங்களை வைத்தன. புதிய அணை கட்ட வேண்டுமென்று கேரள
வழக்கறிஞர்களும், அணை பலமாக உள்ளதால், புதிய அணைக்கு அவசியம் இல்லை என,
தமிழக வழக்கறிஞர்களும் வாதங்களை வைத்தனர். இந்நிலையில், "புதிய அணை கட்டி
அதை இரு மாநில அரசுகளுமே பராமரிப்பதற்கான ஒரு வாய்ப்பை அளித்தால் அதை
ஏற்பீர்களா?' என்று நீதிபதி ஆனந்த் கேட்டுள்ளார். அதை தமிழக வழக்கறிஞர்கள்
கடுமையாக ஆட்சேபித்ததாகவும் தெரிகிறது. புதிய அணை நீர்மட்டம் குறித்த கேரள
தரப்பு வாதத்திற்கும், தமிழக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். "ஒரு
அணையின் ஆயுள் என்பது நூறாண்டுகள் மட்டுமே என்பதும், அதற்காக புதிய அணை
கட்ட வேண்டுமென்பதும் முற்றிலும் சரியானது அல்ல. புதிய அணை என்ற பேச்சுக்கே
இடமில்லை' என்றும் தெரிவித்து விட்டனர். அணையின் நீர்மட்டத்தை, 120
அடியாகக் குறைக்க வேண்டுமென்ற, கேரளா அளித்திருந்த கோரிக்கை மனு மீது, எந்த
தீர்ப்பையும் நீதிபதிகள் நேற்று அளிக்கவில்லை. மேலும் இம்மாத இறுதிக்குள்
சுப்ரீம் கோர்ட்டில், தங்கள் அறிக்கையை தாக்கல் செய்ய, ஐவர் குழு
தீர்மானித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது
» முல்லைப் பெரியாறு அணையில், எந்தவித பாதிப்பும் இல்லை
» முல்லைப் பெரியாறு பிரச்னை: புதிய குழு அறிவிப்புக்கு முதல்வர் கண்டனம்
» முல்லைப் பெரியாறு: கடந்து வந்த சட்டப்போராட்டங்கள்..!
» முல்லைப் பெரியாறு பலவீனமானதா.--..கலைஞர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum