TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஒஸாமா பின் லேடனைப் பிடிக்க உதவிய சாடலைட்டுகள்!

Go down

ஒஸாமா பின் லேடனைப் பிடிக்க உதவிய சாடலைட்டுகள்! Empty ஒஸாமா பின் லேடனைப் பிடிக்க உதவிய சாடலைட்டுகள்!

Post by அருள் Wed Dec 21, 2011 8:12 am

ஒன்பதரை ஆண்டு காலத் தேடுதல்

ஒன்பதரை
ஆண்டு காலத் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு உலகையே கலக்கி வந்த
தீவிரவாதி ஒஸாமா பின் லேடன் அமெரிக்கப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட
செய்தி உலக மக்களுக்கு ஆறுதலை அளித்தது.

அமெரிக்காவுக்குப் பெருத்த
கவலையையும் அவமானத்தையும் தந்து வந்த தீவிரவாதி பின் லேடன். தனது ராணுவ
மற்றும் அகில உலகப் புலனாய்வுத் துறைகள் மூலமாக மிகுந்த வலியைத் தந்த இந்த
தீவிரவாதியை அமெரிக்கா இடைவிடாமல் தேடி வந்தது. இதற்கு உலகெங்கும் ஏராளமான
எதிர்ப்பும் இருக்கத்தான் செய்தது. இதில் அரசியல் ரீதியாக வேறு
அமெரிக்காவில் உள்நாட்டுக் கருத்து வேறுபாடுகளும் இருந்தன. இதையெல்லாம்
மீறி பின் லேடனை வீழ்த்தியதில் நவீன சாதனங்களுக்கு ஒரு பெரும் பங்கு
இருக்கிறது.

சாடலைட்டுகளின் பங்கு

உளவுத்
துறைக்கான சாடலைட்டுகள் பலவற்றை அமெரிக்கா விண்வெளியில் சுற்றி வரச்
செய்துள்ளதை அனைவரும் அறிவர். நேஷனல் ரெகனையாஸன்ஸ் ஆபீஸ் எனப்படும் என்ஆர்ஓ
இந்த தேடுதல் வேட்டையில் தீவிரமாக முனைந்தது. இந்த அலுவலகத்தின்
கட்டுப்பாட்டில் உள்ள சாடலைட்டுகள் பின் லேடனின் மாளிகையைச் சுட்டிக்
காட்டுவதில் பெரும் பங்கு வகித்தன!

இந்த விண்வெளி துப்பறியும்
பிரிவு மட்டும் இல்லாவிட்டால், அமெரிக்காவின் தேடுதல் வேட்டை மேலும் பல
ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும். என்ஆர்ஓ அலுவலகத்திலிருந்த பழைய ஆவணங்களில்
இருந்த அனைத்து விஷயங்களும் நேஷனல் ஜியோஸ்பேஷியல் இன் டெலிஜென்ஸ் ஏஜன்ஸி
எனப்படும் புலனாய்வுத் துறைக்குத் தரப்பட்டன. அங்கு பின் லேடன் தங்கி
இருந்த மாளிகை இருந்த இடம் முன்னால் எப்படி இருந்தது, அது எப்போது
கட்டப்பட்டது, அங்கு என்னென்ன வசதிகள் உள்ளன என்பவை முதலில்
கண்டுபிடிக்கப்பட்டன. அந்த மாளிகையில் உள்ள விசேஷ வசதிகள் என்னென்ன,
விசித்திரமான விஷயங்கள் என்ன என்பவையும் அலசி ஆராயப்பட்டன. சி ஐ ஏ தனது
வேலையைச் செய்து கொண்டிருந்த போது சாடலைட்டுகள் மேலிருந்து இடைவிடாமல் அந்த
மாளிகையைக் கண்காணித்து வந்தன. சிஐஏ உளவாளிகளால் வரும் தகவல்களை இந்த
சாடலைட்டுகள் சரி பார்த்தன. சிலவற்றை அவை சரி என்று உறுதிபடுத்தின.
சிலவற்றை சரியில்லை என்று ஒதுக்கின! உதாரணமாக ஒரு ரன்வேயில் ஒரு
குறிப்பிட்ட விமானம் இருக்கிறது என்று உளவாளி ஒருவர் சொன்னால் அதை உடனே
சாடலைட் சரி பார்த்து அது உண்மை அல்லது தவறு என்பதை எடுத்துச் சொல்ல
முடியும். இதன் மூலம் உளவாளியின் நம்பகத்தன்மையும் தெரிய வரும்.

ஒட்டுக் கேட்கும் சாடலைட்டுகள்!

அது
மட்டுமின்றி என்ஆர்ஓ வின் சாடலைட்டுகள் எந்த இடத்தில் எதைப் பேசினாலும்
ஒட்டுக் கேட்பதில் சர்வ வல்லமை வாய்ந்தவை. அதில் பிரம்மாண்டமான
ஆன்டெனாக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த சாடலைட்டுகளின் வல்லமை யாருக்கும்
தெரியாத பரம ரகசியமாக இது வரை பாதுகாத்து வரப்பட்டுள்ளது! பின் லேடனைப்
பிடிப்பதில் இந்த சாடலைட்டுகள் என்ன செய்தன என்பது இன்னும் பல ஆண்டுகளுக்கு
யாராலும் அறிய முடியாது. சி ஐ ஏ மற்றும் அமெரிக்க கடற்படைக்கு ஹெலிகாப்டர்
ஆபரேஷனில் சாடலைட்டுகள் உதவின என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிபிஎஸ்
எனப்படும் குளோபல் பொஸிஷனிங் சிஸ்டம் அமைப்பு மூலம் சுமார் 30 சாடலைட்டுகள்
ஹெலிகாப்டர்களுக்கு சரியாக எங்கு செல்ல வேண்டும் என்று சொல்லித் தந்தன!
அது மட்டுமின்றி இவற்றின் வழிகாட்டுதலினால்தான் பாகிஸ்தான் ராடார்களுக்குத்
தெரியாமல் ஹெலிகாப்டர்கள் அங்கு துணிச்சலாக நுழைந்தன. பாகிஸ்தான்
ராடார்களின் சக்தி, அவை இருந்த இடம், அது அனுப்பும் தகவல் சமிக்ஞைகள்
ஆகியவை அமெரிக்க மின்னணு துறை நிபுணர்களால் அலசி ஆராயப்பட்டன. இறுதியில்
பாகிஸ்தானை ஏமாற்றி ஹெலிகாப்டர்களை நுழைய வைத்தன.

ஹெல்மெட்டில் காமராக்கள்

இன்னொரு
ரகசியமும் உண்டு! வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் அவரது
உதவியாளர்களும் தங்கள் அறையிலிருந்து இந்த ஆபரேஷனைப் பார்த்துக்
கொண்டிருப்பது போன்ற படங்கள் வெளி உலகிற்குத் தரப்பட்டன. ராணுவத் தகவல்
அனுப்பும் சாடலைட்டுகள் அனுப்பும் படங்களை அவர்கள் பார்த்துக்
கொண்டிருப்பது போல போட்டோக்கள் காண்பித்தாலும் அவர்கள் ஹெலிகாப்டர்களில்
சென்ற வீரர்களின் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த நுண்ணிய காமராக்கள்
தரும் காட்சியையே உண்மையில் பார்த்தனர் என்பது இப்போது தெரிய வருகிறது!

2001ம்
ஆண்டில் ஒரு சிறிய வீடியோ காட்சியை ஆப்கானிஸ்தானிலிருந்து வாஷிங்டனுக்கு
அனுப்ப ஒரு பெரும் சாடலைட்டின் முழுத் திறனும் தேவையாக இருந்தது. ஆனால்
இன்றோ ஒரு சிறிய டிரான்ஸ்மிட்டர் இருந்தால் போதும்; எத்தகைய பெரிய வீடியோ
காட்சியாக இருந்தாலும் சரி ஒரு வினாடியில் உலகின் எந்தப் பகுதியிலிருந்தும்
வாஷிங்டனுக்கு அனுப்பிவிட முடியும். அந்த அளவிற்கு விண்வெளி விஞ்ஞான
சாதனங்கள் முன்னேறி விட்டன! இது போன்ற ஒரு ராணுவ ஆபரேஷனுக்காகவே காத்துக்
கொண்டிருந்தது போல அமெரிக்க விண்வெளித் துறையினருக்கு விசேஷப் பயிற்சிகள்
அளிக்கப்பட்டு வந்தன,

பின் லேடனைப் பிடிப்பதில் மட்டும் சுமார் ஏழு
சாடலைட்டுகள் ஈடுபடுத்தப்பட்டிருக்கக் கூடும் என்று நிபுணர்கள் கருத்துத்
தெரிவிக்கின்றனர். அயல் நாடு ஒன்றில் அதன் ராணுவ முகாமிற்கு அருகிலேயே
அவற்றின் ராடர்களின் கண்களில் மண்ணைத் தூவி தனது ஹெலிகாப்டர்களை அமெரிக்கா
அனுப்பி பின்லேடன் மாளிகையைத் தாக்கி அவனைச் சுட்டுக் கொன்ற சம்பவம்
விண்வெளி விஞ்ஞானத்தின் மகத்துவத்தையும் நவீன சாதனங்களின் துல்லியத்தையும்
காட்டுகிறது; நல்ல விஷயத்திற்குத் துணை செய்த நவீன கருவிகளின் வெற்றியைப்
பாராட்டத்தான் வேண்டும்!

(தீவிரவாதிகளைப் பிடிப்பதில் நவீன
சாதனங்கள் என்ற கட்டுரை மாயாலோகம் தொடரில் பாக்யா 4-2-2011 இதழில் வெளி
வந்தது. 2011 மே இரண்டாம் தேதி ஒஸாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்டான்!
கட்டுரை வெளியான சில வாரங்களுக்குள்ளேயே விஞ்ஞான நவீன சாதனங்களின் வலிமை
நிரூபிக்கப்பட்டு விட்டது! குறிப்பாக ஹெலிகாப்டரில் இருந்த வீரர்களின்
ஹெல்மெட்டில் பொருத்தப்பட்ட காமராக்களின் உதவியால் அமெரிக்க ஜனாதிபதி பின்
லேடன் ஆபரேஷனைப் பார்த்தது குறிப்பிடத்தகுந்தது!)

அறிவியல் அறிஞர் வாழ்வில்....

நோபல்
பரிசு பெற்ற விஞ்ஞானி. மேடம் க்யூரி (1867-1934) அம்மையாரின் கணவர் பியரி
திடீரென இறந்து போனதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த இயற்பியல் துறையின்
தலைமையை ஏற்குமாறு க்யூரி அம்மையாரை சார்போன் பல்கலைக் கழகத்தினர் கேட்டுக்
கொண்டனர். க்யூரியும் ஒத்துக்கொண்டார்.

முதல் நாள் தனது உரையை ஆற்ற
அவர் வருகை தந்த போது அரசியல்வாதிகள், பத்திரிகை நிருபர்கள், பிரபலங்கள்
என ஹால் நிரம்பி வழிந்தது. க்யூரி அம்மையார் தொடக்க உரையில் முதலில் என்ன
சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க அவர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
சம்பிரதாயமான பதவியேற்பு வைபவத்தின் முடிவில் பெருத்த கரவொலி எழுந்தது.
க்யூரி அம்மையார் பேச்சைத் தொடங்க எழுந்தார். அனைவரும் ஆவலுடன் அவரைப்
பார்க்கையில் அவர் தன் கணவர் சில மாதங்களுக்கு எந்த இடத்தில் விட்டாரோ அந்த
இடத்திலிருந்து தன் உரையை ஆரம்பித்தார்!
பொறி தெறிக்கும் அறிவுடையவர்
என விஞ்ஞானி ஐன்ஸ்டீனாலேயே பாராட்டப்பட்டவர் உரையைத் தொடங்கினால் எப்படி
இருக்குமோ அப்படி அந்த உரை இருந்தது!

***************

நன்றி : பாக்யா
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum