Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஆபத்தில் உதவிய பேஸ்புக்
Page 1 of 1
ஆபத்தில் உதவிய பேஸ்புக்
ஆபத்தான நேரத்தில் நெருக்கடிக்கு மத்தியில் இண்டர்நெட் பேருதவியாக அமைந்து உயிர்காத்த சம்பவங்கள் அநேகம் இருக்கின்றன.
இந்த வகையில் அமெரிக்காவில் மாற்றுத் திறனாளி ஒருவர் தனது வீட்டில் தீ
சூழ்ந்த நிலையில் உயிர் தப்பித்த பேஸ்புக் விளையாட்டு கைகொடுத்து
இருக்கிறது. சமூக வலைப் பின்னல் தளங்களின் ராஜாவாக கருதப்படும் பேஸ்புக்
சேவையை பெரும்பாலும் இளைஞர் களே பயன்படுத்தி வந்தாலும் பெரியவர்களும்
இதில் இணைந்து வருகின்றனர்.
நட்பு வட்டாரத்தை பெருக்கிக்கொள்ள, கருத்து பரிமாற்றம் செய்ய என பேஸ்புக்கை பலவிதமாக பயன் படுத்திக்கொள்ளலாம்.
பேஸ்புக்கிலேயே விளையாடக் கூடிய விளை யாட்டுக்களும் பல இருக்கின்றன.
மிகவும் பிரபலமாக இருக்கும் பாம் வில்லே தவிர வேறு பல விளை யாட்டுக்களும்
இருக்கின்றன. இந்த விளையாட்டுக்களில் ஒன்று தான் அமெரிக்காவைச் சேர்ந்த
மாற்றுத் திறனாளியான பாப் சேம்பர்சின் உயிரை காப்பாற்றி இருக்கிறது.
சேம்பர்சுக்கு 51 வயதாகிறது. அவர் ஸ்போக்கனே எனும் சிறிய நகரில்
வசித்து வருகிறார். தசை தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டதால் சேம்பர்சால்
மற்றவர்களைப் போல தனது கை, கால்களை எல்லாம் எளிதாக அசைக்க முடியாது. தானாக
நகர்ந்து செல்வது கூட அவருக்கு மிகவும் கடினமானது.
இத்தகைய பாதிப்பு இருந்தாலும் சேம்பர்ஸ் உற்சாகம் குறைந்து விடாமல்
இருந்து வருகிறார். கம்ப்யூட்டர் பயன்பாட்டிலும் அவருக்கு ஆர்வம் அதிகம்.
அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட பிரத்யேக மவுஸ்
சாதனத்தைக் கொண்டு அவர் கம்ப்யூட்டரை இயக்கி வருகிறார்.
பேஸ்புக்கிலும் உறுப்பினராக இருக்கும் அவர் பேஸ்புக் விளை யாட்டிலும்
ஈடுபாடு கொண்டவராக இருக்கிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேஸ்புக்
விளையாட்டில் லயத்திருப்பது அவரது வழக்கம். சமீபத்தில் இப்படித்தான் அவர்
பேஸ்புக் விளையாட்டில் மூழ்கி இருந்தபோது திடீரென அவரது அறையில்
தீப்பிடிக்க தொடங்கியது. அவரது மனைவி டோஸ்ட் சாதனத்தை அணைக்காமல் சென்று
விட்டதின் காரணமாக தீ பிடித்துக் கொண்டது. தீ மெதுவாக பரவத் தொடங்கியது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டாலும் சேம்பர்சால் விலகிச்செல்லவும்
முடியவில்லை.தொலைபேசிமூலமும் தொடர்புகொள்ள முடியவில்லை. தொலைபேசி அந்த
அறையில் சற்று தொலைவில்இருந்ததால் அவரால் தொலைபேசியை பயன்படுத்த முடியாத
இக்கட்டான நிலை ஏற்பட்டது.
தீ பரவிக்கொண்டிருந்த நிலையில் சேம்பர்ஸ் அதன் நடுவே சிக்கிக் கொண்டது சோதனையிலும் சோதனை என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த நெருக்கடியிலும் அவர் நிலை குலையாமல் தொழில்நுட்பத்தின் மீது
மிகுந்த நம்பிக்கை வைத்து பேஸ்புக் மூலம் தனது நிலையை தெரிவித்தார். அவர்
ஈடுபட்டிருந்த பேஸ்புக் விளையாட்டில் சக உறுப்பினர்களோடு அரட்டை அடிக்கும்
வசதி உண்டு.
சேம்பர்ஸ் அந்த வசதியை பயன்படுத்தி தனது அறையில் தீ பிடித்துக்
கொண்டிருப்பதாகவும் தன்னால் நகர முடியாததால் யாராவது இது பற்றி
தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறி தனது முகவரியையும்
குறிப்பிட்டிருந்தார்.
சகல உறுப்பினர்கள் யாராவது இந்த செய்தியை படித்துப் பார்த்து விட்டு உதவிக்கு வருவார்கள் என்பது அவருடைய நம்பிக்கை.
அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. இண்டியானா நகரில் இருந்த ஒரு பெண்மணி
மற்றும் டெக்சாஸ் நகரில் இருந்த ஒருவர் இந்த செய்தியை பார்த்து விட்டு
உடனடியாக அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து ஸ்போக்னே நகர நிர்வாகம், சேம்பர்ஸ் வீட்டிற்கு தீயணைப்பு வீரர்களை அனுப்பி வைத்தது.
சேம்பர்ஸ் தான் ஆபத்தில் இருப்பதாக காலை 8.35 மணி அளவில் தகவல்
தெரிவித்திருந்தார். அடுத்த 10வது நிமிடத்தில் தீயணைப்பு வீரர்கள் அவரது
வீட்டிற்கு வந்து தீயை கட்டுப்படுத்தி அவரை காப்பாற்றினர்.
பேஸ்புக் உறுப்பினர்கள் மட்டும் சரியான நேரத்தில் உதவிக்கு
வந்திருக்காவிட்டால் தன்னுடைய நிலை மிகவும் மோசமாகி இருக்கும் என்று
நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார்.
அவரது மனைவியும் கூட பேஸ்புக்கை மனதார பாராட்டி உள்ளார். பேஸ்புக்
விளையாட்டின் மீது அவருக்கு மிகுந்த வெறுப்பு உண்டாம். காரணம் அந்த
விளையாட்டில் மூழ்கிவிட்டால் சேம்பர்ஸ் எதைக் கேடடாலும் காதில்
வாங்கிக்கொள்ள மாட்டாராம்.
இருப்பினும் அந்த விளையாட்டுத் தான் தனது கணவரின் உயிரை காப்பாற்றி
இருப்பதால் இப்போது அந்த வெறுப்பு மறைந்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.
நவீன தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையில் நீக்கமற நிறைந்திருப்பதோடு ஆபத்து
நேரத்தில் கை கொடுக்கிறது என்பதற்கான மற்றொரு உதாரணமாக இந்த சம்பவம்
அமைந்துள்ளது.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» எப்.பி.ஐ-க்கு உதவிய பேஸ்புக் - சைபர் கிரைம்ஸ் 10 பேர் சிக்கினர்!
» மருத்துவம் ஆபத்தில் உதவி செய்யுங்கள்...........Stroke.
» “கைதான மாணவர்கள் ஆபத்தில்” – யாழ். ஆசிரியர்கள் கடிதம்
» ஆபத்தில் முடிந்த அழகுக்கான சிகிச்சை: ஓர் உஷார் ரிப்போர்ட்!
» பாகிஸ்தான் பந்துவீச்சாளருக்கு உதவிய சென்னை!
» மருத்துவம் ஆபத்தில் உதவி செய்யுங்கள்...........Stroke.
» “கைதான மாணவர்கள் ஆபத்தில்” – யாழ். ஆசிரியர்கள் கடிதம்
» ஆபத்தில் முடிந்த அழகுக்கான சிகிச்சை: ஓர் உஷார் ரிப்போர்ட்!
» பாகிஸ்தான் பந்துவீச்சாளருக்கு உதவிய சென்னை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum