Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சிறை நிரப்புங்கள்: பொதுமக்களுக்கு அன்னா ஹசாரே அழைப்பு
Page 1 of 1

ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் அடுத்த கட்டமாக, சிறைச் சாலைகளை
நிரப்புமாறு, சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே,
பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
"லோக்பால் சட்டத்தை, பார்லிமென்ட் நிலைக் குழு பலவீனப்படுத்தியுள்ளது.
ராகுல் தான், ஊழலுக்கு எதிரான சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில்
இறங்கியுள்ளார்' என்றும், குற்றம் சாட்டினார். "ஊழலுக்கு எதிராக, பலமான
விதிகளுடன் கூடிய லோக்பால் மசோதாவை, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்
தொடரில் நிறைவேற்ற வேண்டும்' என வலியுறுத்தி, அன்னா ஹசாரே ஏற்கனவே
போராட்டம் நடத்தினார். இந்நிலையில், பார்லிமென்ட் நிலைக் குழு தயாரித்துள்ள
லோக்பால் வரைவு மசோதாவில், பிரதமர் பதவி வகிப்போர், அரசுத் துறையின் "சி'
மற்றும் "டி' பிரிவு ஊழியர்கள், நீதித்துறையினர் ஆகியோருக்கு, லோக்பால்
வரம்பிலிருந்து விலக்கு அளித்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப்
போராட்டம் மேற்கொள்ள ஹசாரே திட்டமிட்டார். இதற்காக, டில்லியில்
பார்லிமென்ட் வளாகம் அருகேயுள்ள ஜந்தர்மந்தரில், மேடை அமைக்கப்பட்டு
இருந்தது. நேற்று காலை, காந்தி நினைவிடத்துக்கு சென்று வணங்கிய அன்னா
ஹசாரே, காலை 10 மணிக்கு, உண்ணாவிரத மேடைக்கு வந்தார். அப்போது, அங்கு
கூடியிருந்தவர்கள், "வந்தே மாதரம், ஹசாரேக்கு ஜே'என்ற கோஷங்களை எழுப்பினர்.
ஊழலுக்கு எதிரான அன்னாவின் இயக்கத்தில், முதல் முறையாக, அரசியல் கட்சித்
தலைவர்கள் பேச அழைக்கப்பட்டனர். இதையொட்டி, அருண் ஜெட்லி (பா.ஜ.,),
ஏ.பி.பரதன், டி.ராஜா (இ.கம்யூ.,), பிருந்தா கராத் (மார்க்சிஸ்ட்), சரத்
யாதவ் (ஐக்கிய ஜனதா தளம்), எர்ரான் நாயுடு (தெலுங்கு தேசம்), பினாக்கி
மிஸ்ரா (பி.ஜே.டி.,), திங்க்ரா (அகாலி தளம்) உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.
லோக்பால் மசோதா குறித்து பேசுவதற்கு, முதலில் அவர்களுக்கு வாய்ப்பு
அளிக்கப்பட்டது.
சிறை நிரப்புங்கள்: இதன் பின் அன்னா ஹசாரே பேசியதாவது: பல்வேறு
அரசியல் கட்சிகள், என் இயக்கத்திற்கு ஆதரவு தந்தது, எனக்குள் புதிய வேகத்தை
ஏற்படுத்தியுள்ளது. இயக்கத்தின் அடுத்த கட்டமாக, ஊழலுக்கு ஆதரவு தரும்
அரசுகளுக்கு எதிராக, போராட்டங்களை நடத்தி, சிறைச் சாலைகளை நிரப்ப வேண்டும்.
இந்த போராட்டத்தை, விரைவில் அறிவிப்பேன். சிறைச் சாலைக்குச் சென்றால்,
வசிக்க இடம், மூன்று வேளை சாப்பாடு, அனைத்தும் அரசு தர வேண்டும். அப்படி,
சிறைச் சாலைகளை நிரப்பிவிட்டால், அரசு வேறு வழியின்றி, ஒரு பலமான லோக்பாலை
செயல்படுத்த வாய்ப்பிருக்கிறது. நாட்டில், 100 மாதிரி கிராமங்களில்,
வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன். ஒவ்வொரு
கிராமத்திலும், ஒரு கோடி ரூபாய் முதல் 1.5 கோடி ரூபாய் வரையில், வளர்ச்சித்
திட்டங்கள் செயல்படுத்தப்படும். மன்மோகன் அரசுக்கு, ஊழலைக் கட்டுக்குள்
கொண்டு வர, உரிய நடவடிக்கை எடுக்க மனமில்லை. லோக்பால் குறித்த நிலைக்
குழுவின் அறிக்கை மூலமாக, லோக்பால் சட்டம் கணிசமாக
பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. ராகுலைத் தவிர, வேறு எந்த காங்கிரஸ் தலைவரும்,
நிலைக் குழு அறிக்கையை பலவீனப்படுத்தியிருக்க முடியாது.
சதி செய்த அரசு: சில மாதங்களுக்கு முன், மத்திய உள்துறை அமைச்சர்
சிதம்பரம், என்னைக் கைது செய்ய உத்தரவிட்டார். என்னை, திகார் சிறைக்கு
கொண்டு சென்ற சில நிமிடங்களில், என்னை விடுதலை செய்வதாக, சிறை அதிகாரிகள்
தெரிவித்தனர். ராணுவ விமானம் மூலம், என்னை புனே கொண்டு சென்று, இந்த
இயக்கத்தை நசுக்க, மத்திய அரசு திட்டமிட்டது. ஏதோ ஒரு சதித் திட்டத்தை அரசு
செய்கிறது என்பதை உணர்ந்த நான், சிறைச் சாலையை விட்டு வெளியே வர முடியாது
என அறிவித்தேன். அதைத் தொடர்ந்து, மூன்று நாட்கள் சிறை அதிகாரியின்
அறையிலேயே, என்னை தங்க வைத்தனர். பிறகு, ராம்லீலா மைதானத்தில், என்
போராட்டத்துக்கு அனுமதி கொடுத்த பின் தான், சிறையை விட்டு வெளியே வந்தேன்.
சிதம்பரம் போன்றவர்கள் உள்துறை அமைச்சரானால்
நாட்டின் கதி என்னவாகும்? தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,-
எம்.பி., க்கள், மக்களுக்கு சேவை செய்ய தவறினால், அவர்களின் பதவியைப்
பறிக்க, சட்டம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அன்னா ஹசாரே பேசினார்.
இதன்பின், மாலை 5 மணிக்கு, அன்னா ஹசாரே தன் உண்ணாவிரதப் போராட்டத்தை
முடித்துக் கொண்டார்.
ஹசாரே குழுவினர் பேசியது என்ன?
அரவிந்த் கெஜ்ரிவால்: காங்கிரஸ், பா.ஜ., ஆகிய கட்சிகள்,
மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது, தங்களுக்கு வேண்டிய காரியங்களை
சாதித்துக் கொள்வதற்காக, சி.பி.ஐ., அமைப்பை தவறாகப் பயன்படுத்துகின்றன.
பிரசாந்த் பூஷன்: பார்லிமென்ட் நிலைக் குழு தலைவர் அபிஷேக்
சிங்வி, பிரபலமான வழக்கறிஞர் என்பது தெரியும். ஆனால், அவர் ஒரு மந்திரவாதி
என்பது, இப்போது தான் தெரிய வந்துள்ளது.
கிரண் பேடி: சி.பி.ஐ., அமைப்பை, சுதந்திரமாக செயல்பட
அனுமதித்தால், ரகசியமாக வைக்கப்பட்டுள்ள பல ஆவணங்கள், வெளிச்சத்துக்கு
வந்து விடும் என, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பயப்படுகிறது.
கெஜ்ரிவால் சொதப்பல்: நேற்று, உண்ணாவிரத மேடையில் பேசிய அரவிந்த்
கெஜ்ரிவால், பல தவறான தகவல்களை வெளியிட்டார். அவர் பேசுகையில், "கடந்த
1996ல், வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு, அ.தி.மு.க., பொதுச் செயலர்
ஜெயலலிதாவை குறி வைப்பதற்காக, சி.பி.ஐ., அமைப்பை தவறாகப் பயன்படுத்தியது'
என்றார். ஆனால், அப்போது, வாஜ்பாய் தலைமையிலான அரசு, 13 நாட்கள் மட்டுமே
பதவியில் இருந்தது. மேலும், "எங்களின் ஊழல் எதிர்ப்பு பிரசாரத்தை
முறியடிப்பதற்காகவே, எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கு, மத்திய தொலைத் தொடர்புத்
துறை அமைச்சர் கபில் சிபல், கட்டுப்பாடுகளை விதித்தார்' என்றார். ஆனால்,
தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தான், எஸ்.எம்.எஸ்.,க்கு கட்டுப்பாடு
விதித்ததே தவிர, கபில் சிபலுக்கு இதில் தொடர்பு இல்லை. அரவிந்த்
கெஜ்ரிவாலின் இந்த தடுமாற்றம், ஜந்தர் மந்தரில் நேற்று பரபரப்பை
ஏற்படுத்தியது.
"பார்லிமென்டை அவமதிக்கிறார்': காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்
ரஷித் ஆல்வி கூறியதாவது: லோக்பால் மசோதா தொடர்பான வரைவு அறிக்கை, நிலைக்
குழுவால் ஆய்வு செய்யப்பட்டு, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குழுவில், அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்
பெற்றுள்ளனர். இந்த வரைவு அறிக்கையை விமர்சிப்பதன் மூலம், ஹசாரே,
பார்லிமென்டை அவமதிக்கிறார். உண்ணாவிரதம் இருப்பதற்கு, ஹசாரேவுக்கு உரிமை
உள்ளது. அதே நேரத்தில், சோனியாவையும், ராகுலையும் தாக்கிப் பேசுவதன் மூலம்,
அரசியல் நடவடிக்கைகளில், அவர் மூக்கை நுழைக்கிறார். சட்டம்,
பார்லிமென்டில் தான் இயற்றப்பட வேண்டும். ஜந்தர் மந்தரில் அல்ல. இவ்வாறு,
ரஷித் ஆல்வி கூறினார்.
* உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, டில்லி
ஜந்தர் மந்தர் பகுதிக்கு, அதிகாலையில் இருந்தே, பொதுமக்கள் குவியத்
துவங்கினர்.
* இளைஞர்கள், வயதானோர் என, வயது வித்தியாசம் இல்லாமல், அனைத்து தரப்பினரும், கைகளில் தேசியக் கொடிகளுடன் வந்திருந்தனர்.
* இளைஞர்கள் "வந்தே மாதரம்' என கோஷம் எழுப்பியபடி, உண்ணாவிரதம் நடக்கும் இடத்தில் திரண்டிருந்தனர்.
* ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, முதல் முறையாக, அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
* "லோக்பால் குறித்து, விரைவில் பார்லிமென்டில் விவாதம் நடக்க
இருப்பதால், இந்த கூட்டத்திற்கு வர இயலாது' என, காங்கிரஸ் கட்சி, கடிதம்
மூலம், ஹசாரேவுக்கு தெரிவித்து விட்டது. அந்த கட்சியின் சார்பில், யாரும்
பங்கேற்கவில்லை.
* தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகளும், இந்த கூட்டத்தில் கலந்து
கொள்ளவில்லை. ஐ.மு., கூட்டணியில் உள்ள எந்த கட்சியும், இந்த கூட்டத்தில்
பங்கேற்கவில்லை.
* யாகூ இந்தியா இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இந்தாண்டில், அதிக செய்திகள் உருவாவதற்கு காரணமாக இருந்தவர் அன்னா ஹசாரே'
என தெரிவித்துள்ளது.
* ஊழலுக்கு எதிராக, 1980ல், வி.பி.சிங் நடத்திய இயக்கத்திற்கு
பின், முதல் முறையாக, இடதுசாரி கட்சியும், பா.ஜ., தலைவர்களும் அன்னா
தலைமையில், ஒரே மேடையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» நான் இல்லை என்றாலும் விடாதீங்க : இளைஞர்களுக்கு அன்னா ஹசாரே அழைப்பு
» ஊழல்வாதிகளைத் தூக்கில் போடவேண்டும் – அன்னா ஹசாரே
» லோக்பால் மசோதா தோற்கடிக்கப்பட்டால் மீண்டும் போராட்டம்: அன்னா ஹசாரே
» கொள்கை பிரகடனம்: வெளியிட்டது அன்னா ஹசாரே குழு
» ஒரு கோடி ரூபாய் வேண்டாம்: மறுத்தார் அன்னா ஹசாரே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum