Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஊழல்வாதிகளைத் தூக்கில் போடவேண்டும் – அன்னா ஹசாரே
Page 1 of 1
ஊழல்வாதிகளைத் தூக்கில் போடவேண்டும் – அன்னா ஹசாரே
அன்னா ஹசாரே
மும்பை,
ஆக 10: ஊழல்வாதிகளைத் தூக்கில் போடவேண்டும் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே
கூறியுள்ளார். எந்த வகையிலும் அப்பழுக்கற்ற தம்மை, மத்திய அரசு தேவையானால்
சோதித்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு
எதிராக குரல் கொடுத்து வருகிறார். ஊழல் வாதிகளை தண்டிக்க வலிமையான லோக்பால்
மசோதா கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 16-ந்தேதி டெல்லியில்
தொடர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.
அவரது
உண்ணாவிரதத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசு பல வழிகளில் முயற்சி
மேற்கொண்டு வருகிறது. உண்ணாவிரதத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில்
மும்பையில் அவரது ஆதரவாளர்கள் பேரணி நடத்தினார்கள். இதில் அன்னா ஹசாரே
கலந்து கொண்டார்.
பின்னர் மும்பை பத்திரிகையாளர் சங்கம் ஏற்பாடு
செய்து இருந்த கூட்டத்தில் அன்னா ஹசாரே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:
நான் ஊழலை எதிர்த்து போராட்டம் நடத்துவதால் மத்திய
அரசு எனக்கு குறி வைத்துள்ளது. இதற்காக கவலைப்படவில்லை. ராணுவத்தில் வீரனாக
15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். ராணுவத்தில் பணிபுரிந்த போது என்மீது எந்த
குற்றச் சாட்டும் இல்லை. தேவைப்பட்டால் மத்திய அரசு ஆட்களை அனுப்பி எனது
சர்வீஸ் ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
மராட்டிய மாநிலத்தில்
உள்ள எனது சொந்த கிராமத்துக்கு யாரை வேண்டுமானாலும் அனுப்பி சோதனை
செய்யலாம். என் வாழ்நாளில் நான் எந்த தவறும் செய்யவில்லை. அப்பழுக்கற்றவன்.
எனது வங்கி கணக்கில் எந்த பணமும் இல்லை. சொந்த கிராமத்தில் கோவிலில் உள்ள
8-க்கு 10 அடி கொண்ட அறையில் வசிக்கிறேன். சாப்பிட ஒரு தட்டும்,
தூங்குவதற்கு ஒரு படுக்கையும்தான் இருக்கிறது. அங்கு சோதனையிடுவதற்கு
எதுவும் இல்லை.
அங்கு நான் நடத்திவரும் இயக்கத்தை மக்கள் சென்று
பார்வையிடலாம். வலிமையான லோக்பால் சட்டம் கொண்டு வரக்கோரி டெல்லியில்
திட்டமிட்டபடி வருகிற 16-ந்தேதி உண்ணா விரதம் தொடங்குவேன். இதில் எந்த
மாற்றமும் இல்லை. நான் யாருக்கும் எதிரி அல்ல. எனது போராட்டம் எந்த
தனிப்பட்ட நபருக்கோ, கட்சிக்கோ எதிரானது அல்ல. ஊழலை ஒழிக்கவே போராடுகிறேன்.
ஊழலால்
தனி மனிதன் பாதிக்கப்படுகிறான். விலைவாசி ஏற்றத்துக்கும், பணவீக்கம்
அதிகரிப்பதற்கும் ஊழல்தான் காரணம். பணவீக்கத்தின் ஆணிவேர் ஊழல்தான். ஊழலை
அடியோடு ஒழிக்க முடியாது. ஆனால் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் அளவுக்கு அதை
கட்டுப் படுத்த முடியும்.
ஊழலை ஒழிப்பது நமது 2-வது சுதந்திர
போராட்டமாக இருக்கும். நமது நாட்டை ஆங்கிலேயரின் பிடியில் இருந்து மீட்க
நடந்த சுதந்திர போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் உயிர்த் தியாகம்
செய்தனர். ஆனால் இந்த 65 ஆண்டு கால சுதந்திர நாட்டில் எந்த மாற்றமும்
ஏற்படவில்லை.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல் என
அடுக்கடுக்கான ஊழல்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. ஊழல்வாதிகளை
தண்டிக்க தற்போதுள்ள சட்டம் கடுமையானதாக இல்லை. ஊழல் பேர்வழிகளை சிறையில்
அடைக்கும் அதிகாரம் சட்டத்துக்கு இல்லை. அதற்கான அதிகாரம் நான்
தயாரித்துள்ள “மக்கள் லோக்பால்” சட்டத்தில் உள்ளது. அதை மக்கள் மன்றத்தில்
(பாராளுமன்றம், சட்டமன்றம்) நிறைவேற்ற வேண்டும் என்று நாம் மத்திய அரசை
வற்புறுத்த வேண்டும்.
ஊழல் பேர்வழிகளை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்?
இன்னும் சொல்லப்போனால் அவர்களை தூக்கில் போட வேண்டும். ஊழல் பணத்தை
பறிமுதல் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஊழல்வாதிகளை சிறையில் தள்ளி
அவர்களிடம் இருந்து பணத்தை கைப்பற்ற வேண்டும்.
இவ்வாறு அன்னாஹசாரே கூறினார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பொய் பேசுகிறார் ப.சிதம்பரம் – அன்னா ஹசாரே குற்றச்சாட்டு
» கொள்கை பிரகடனம்: வெளியிட்டது அன்னா ஹசாரே குழு
» லோக்பால் மசோதா தோற்கடிக்கப்பட்டால் மீண்டும் போராட்டம்: அன்னா ஹசாரே
» ஒரு கோடி ரூபாய் வேண்டாம்: மறுத்தார் அன்னா ஹசாரே
» எந்த தியாகத்திற்கும் தயார் ; அன்னா ஹசாரே ஆவேசம் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum