TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பெரியாறு நீர் மட்டத்தை 120 அடியாக குறைப்பது சாத்தியமில்லை

Go down

பெரியாறு நீர் மட்டத்தை 120 அடியாக குறைப்பது சாத்தியமில்லை Empty பெரியாறு நீர் மட்டத்தை 120 அடியாக குறைப்பது சாத்தியமில்லை

Post by ஜனனி Tue Dec 06, 2011 8:38 am

மதுரை:முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 120 அடியாக
குறைக்க வேண்டும் என கேரள முதல்வர் உம்மன்சாண்டி, புதிதாக ஒரு
"பூகம்பத்'தை கிளப்பியுள்ளார். இதனால் அணையில் 2628 மில்லியன் கன அடி
நீரைத்தான் தேக்க முடியும். மதுரை, தேனி மாவட்டங்களின் குடிநீர் தேவையைக்
கூட பூர்த்தி செய்ய முடியாது. 2 லட்சம் ஏக்கரில் ஒரு ஏக்கரில் கூட பாசன
வசதி பெற முடியாது.

முல்லைப்பெரியாறு அணை பிரதான அணை, பேபி அணை, மதகுகள் என மூன்று பாகங்கள்
கொண்டது. பெரியாறு பிரதான அணை 1200 அடி நீளம், பேபி அணை 240 அடி நீளம்
கொண்டது. பிரதான அணை என்பது வெறும் சுவர்தான். நீர் வெளியேற ஆற்று மதகுகள்
அமைக்கப்படவில்லை. ஏனெனில், 1886 அக்.,29 ஒப்பந்தப்படி அணை கட்டப்பட்டுள்ள
இடத்தில் கிடைக்கும் அனைத்து நீரும் தமிழகத்திற்கே சொந்தம். மிகுதியான நீரை
மட்டும்தான் கீழே (கேரளாவிற்கு) விட வேண்டும். 136 அடி நீர் மட்டத்திலுள்ள
13 மதகுகள் வழியாகத்தான் மிகுதியான நீரை கேரளாவிற்கு விடவேண்டும். 104 அடி
மட்டத்திற்கு கீழ் ஆற்றுமதகுகள் கிடையாது. 104 அடிக்கு கீழ் உள்ள நீர்,
அணை கட்டிய காலத்திலிருந்து தற்போதுவரை, கீழே கிடப்பு நீராகத்தான் உள்ளது.
பென்னிகுயிக் காலத்தில் 10 மதகுகள் கட்டப்பட்டது. தற்போதைய தொழில்நுட்பத்தை
பயன்படுத்தி 1979 ல் மேலும் 3 மதகுகள் அமைக்கப்பட்டன.

நீர் வெளியேற்ற தேக்கடியில் 5345 அடி நீளத்தில் சுரங்கம்
அமைக்கப்பட்டுள்ளது. இதன் தள மட்டம் 104 அடி. பாசனத்திற்காக சுரங்கப்பாதை
வழியாக கிழக்கு நோக்கி நீரை திருப்புகிறோம். மற்ற அணைகள் போல் அல்லாமல்
நீர் தேங்குமிடம், உபரி நீர் வெளியேறுமிடம், தமிழகத்திற்கு நீர் வருமிடம்
அனைத்தும் வெவ்வேறு இடங்களில் அமைந்திருக்கிறது. அணையில் 108 அடி நீர்
இருந்தால், விநாடிக்கு 75 கன அடி நீர், 115 அடி எனில் விநாடிக்கு 630 கன
அடி, 120 அடி எனில் விநாடிக்கு 1020 கன அடி நீர், நீர் மட்டம் மேலும்
உயர்ந்தால் அதிகபட்சம் விநாடிக்கு 1800 கன அடி நீர்தான் எடுக்க முடியும்.
152 அடிக்கு மேல் உயர்ந்தால் விநாடிக்கு 2000 கன அடி நீர் எடுக்கலாம்.
உம்மன்சாண்டி கூறியதுபோல் 120 அடி மட்டமாக நிலைநிறுத்துவது சாத்தியமா
என்பதுதான் கேள்வி?

136 அடிக்கு கீழ் குறைத்தால் 13 மதகுகளும் பயனற்றுப் போகும். நீர்
வெளியேற முடியாது. ஒரே வாய்ப்பு சுரங்கப்பாதைதான். நீர் வரத்தை யாராலும்
கணிக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. பென்னிகுயிக் காலத்தில் விநாடிக்கு 1
லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் வரத்து இருக்கலாம் என
எதிர்பார்க்கப்பட்டது. தற்போதைய தொழில்நுட்பப்படி, விநாடிக்கு 2 லட்சத்து
10 ஆயிரம் கன அடி நீர் வரும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதனால்தான், கூடுதலாக 3 மதகுகள் அமைக்கப்பட்டன. 1943 ல் விநாடிக்கு 1
லட்சம் கன அடிக்கு மேல் நீர் வந்துள்ளது. தற்போதைய கணிப்புப்படி திடீரென
நீர் அதிக நீர் வந்தால் என்ன செய்ய முடியும்?

பெரியாறு அணை முன்னாள் செயற்பொறியாளர் சுதந்திர அமல்ராஜ் கூறியதாவது:
அணை நீர் மட்டத்தை தொழில்நுட்ப ரீதியாக 136 அடிக்கு கீழ் குறைக்கவே
முடியாது. 104 அடியில் 5092 மில்லியன் கன அடி நீர் தேக்கப்படுகிறது. இதை
யாரும் எடுக்க முடியாது. 136 அடியில் 11210 மில்லியன் கன அடி நீர்
தேக்கப்படுகிறது. இதில் 5092 போக நமக்கு 6118 மில்லியன் கன அடி நீர்தான்
கிடைக்கிறது. இதைத்தான் நாம் குடிநீர், பாசனத்திற்கு பயன்படுத்துகிறோம்.
தமிழகத்தில் பெரியாறு அணை பாசன பரப்பு 2 லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர். 1979 ல்
136 அடியாக குறைக்கப்பட்டபோது, 60 ஆயிரம் ஏக்கர் பாசன வசதியை இழந்தன. 120
அடியாக குறைத்தால் 2628 மில்லியன் கன அடி நீரைத்தான் தேக்க முடியும்.
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட குடிநீருக்கே அது போதாது. 2 லட்சத்து 8
ஆயிரம் ஏக்கரில் 1 ஏக்கரில் கூட நாம் விவசாயம் செய்ய முடியாது என்றார்.

கங்கை நதி நீர் பிரச்னை பற்றி இந்தியா, வங்கதேசம் பேசி முடித்துள்ளன.
ஆப்பிரிக்காவில் நைல்நதி சிக்கலை பல நாடுகள் பேசித் தீர்த்துள்ளன.
ஐரோப்பாவில் ருமேனியா, பல்கேரியா, பெல்ஜியம் இடையில் பாயும் எஞ்சிய நதி
நீரை தாராளமாக பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில், மாநிலங்களுக்கு இடையே
எந்த நதிநீர் பிரச்னையும் இல்லை. அந்த நிலை தமிழகம்- கேரளாவிற்கு இடையே
உருவாக வேண்டும்.

கேரள அரசிற்கு கேரள இலக்கியவாதி கண்டனம்: முல்லைப்பெரியாறு அணை
பிரச்னை பற்றி சாகித்ய அகாடமி விருது பெற்ற மலையாள இலக்கியவாதி பால்
சக்காரியா 2003 ஜன.,19 ல் அளித்த பேட்டி: தமிழக கிராமங்களில் ஈரமுள்ள
மனிதர்கள் வாழ்கின்றனர். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப் பொருட்கள்
கேரளாவிற்கு வருகின்றன. பணப்பயிர்களான தென்னை, ரப்பரை பயிர் செய்யக்கூடிய
கேரளாவுக்கு அரிசி முதல் அத்தனை பொருட்களும் தமிழகத்திலிருந்துதான்
வருகிறது. ஆனால், அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியாறு அணையிலிருந்து
தண்ணீர் தர மறுக்கிறது கேரளம். அதிகமான நீர் கடலில் வீணாக கலக்கிறது.
அப்படி வீணாகும் தண்ணீரைக்கூட, தமிழக விவசாயிகளுக்கு கொடுக்க மறுக்கும்
கேரள அரசை கண்டிக்கிறேன்.

தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறோம் என ஆங்காங்கே, அணைகள்
கட்டினர். தண்ணீரிலிருந்து மின்சாரம் வரவில்லை. கட்டப்பட்ட அணைகளில்
எல்லாம் ஊழல்தான் நடந்ததாக பேசுகின்றனர். காவிரி, பெரியாறு அணை, பவானி என
சுற்றிச் சுற்றி தண்ணீர் தராமல் தமிழர்களை மூச்சுத் திணறச் செய்யும்
இவ்வளவு சதிச் செயல்கள் நடக்கும் போது, நெய்வேலியில் மின்சாரம் உற்பத்தி
செய்து வேறொரு மாநிலத்திற்கு கொடுப்பதுதான் தமிழனின் குணம். இவ்வாறு அவர்
கூறியுள்ளார்.கேரளாவின் நிலைப்பாட்டை, அம்மாநிலத்தை சேர்ந்த இலக்கியவாதியே
ஒப்புக்கொள்ளவில்லை.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 120 அடியாக குறைக்க கோரும் கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
» குப்பைகளால் நாசமாகும் தமிழக நீர் நிலைகள் : நிலத்தடி நீர் வளம் குறையும் ஆபத்து
» கபினியில் நீர் வரத்து குறைந்ததால் கே.ஆர்.எஸ்.,சில் 9,000 கன அடி நீர் திறப்பு
» நீர்மட்டம் 25 அடியாக சரிவு: மேட்டூர் அணை தூர்வாரப்படுமா?
» செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்வது சாத்தியமில்லை: கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum