Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 5:11 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Oct 29, 2024 4:56 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக எம்.பி.,க்கள் சொதப்பல்
Page 1 of 1

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக அரசியல் கட்சிகள்
டில்லியில் சொதப்போ சொதப்பென, சொதப்பி வருகின்றன. "டேம் 999' சினிமா
மற்றும் பத்திரிகைகள் மூலம் இப்பிரச்னையை பெரிய அளவில் தூண்டிவிட்டு
குளிர்காய, கேரளா முயன்று, அதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ள நிலையில், அரசியல்
ரீதியாக தீவிரப்படுத்த அம்மாநில எம்.பி.,க்களும், மத்திய அமைச்சர்களும்
ஒருங்கிணைந்துள்ளனர்.ஆனால், பாழாய் போன "ஈகோ' காரணமாக இவ்விஷயத்தில், தமிழக
எம்.பி.,க்கள் ஆளுக்கொரு திசையில் டில்லியில் நிற்கின்றனர்.
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பிரச்னையை பார்லிமென்டின் இரு
சபைகளிலும், அனைத்து கட்சிகளும் கிளப்பி வருகின்றன. ஆனால், கேரளாவைச்
சேர்ந்த காங்கிரஸ், கேரள காங்கிரஸ், இடதுசாரி எம்.பி.,க்கள் எல்லாம்,
சொல்லி வைத்தாற்போல முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக பேனர்
பிடித்தபடிநிற்கின்றனர்.சபை ஒத்திவைக்கப்பட்டால், காந்தி சிலை முன்பாக
பேனர் பிடித்தபடி கோஷம் போடுகின்றனர். மற்றவர்களுக்கு எப்படியோ, கேரள
எம்.பி.,க்களுக்கு தினந்தோறும் பிரச்னை என்றால், அது முல்லைப் பெரியாறு அணை
விவகாரம் தான். அம்மாநில எம்.பி.,க்கள் கடந்த வாரம் தான் பிரதமரை
சந்தித்தனர்.அதற்குள், நேற்றும் பிரதமரை சந்தித்து இவ்விவகாரத்தில்
தலையிடுங்கள் என வலியுறுத்தினர். கட்சி வித்தியாசம் பார்க்காமல், அனைவருமே
ஓரணியாக பிரதமரை சந்தித்தனர். தவிர, கேரள அமைச்சரவை சார்பாக, அமைச்சர்கள்
ஜோசப் மற்றும் ராதாகிருஷ்ணனும் பிரதமரை சந்தித்துப் பேசினர்.
தமிழக நிலை தலைகீழ் :
தமிழகத்தின் நிலையோ, பார்லிமென்டில் நேற்று தலைகீழாக இருந்தது. கேரள
எம்.பி.,க்களின் வேகத்தை பார்த்துவிட்டு, தமிழக எம்.பி.,க்களும் காந்தி
சிலை அருகே தர்ணா செய்யப் போகின்றனர் என்ற செய்திபரவியது.அங்கு சென்று
பார்த்தால், திருமாவளவன் தலைமையில் கோவை நடராஜன், தென்காசி லிங்கம், ஈரோடு
கணேசமூர்த்தி என, நான்குபேர் தர்ணாவில் அமர்ந்திருந்தனர். "புரளியை
கிளப்பாதே, பொய் செய்தியை பரப்பாதே' என, அந்த நான்கு பேர் மட்டுமே
கோஷமிட்டபடி இருந்தனர். அந்த நேரத்தில், காங்கிரஸ் எம்.பி.,யான கே.எஸ்.
அழகிரி அங்கு வந்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
போட்டி தர்ணா:
இவர்களுக்கு போட்டியாக, சில அடி தூரத்தில் கேரளா எம்.பி.,க்கள் 20க்கு
மேற்பட்டோர் ஒட்டு மொத்தமாக அமர்ந்து, கோஷங்கள் எழுப்பினர். சில
நிமிடங்களில் கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வயலார் ரவி, இ.அகமது,
முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் வந்து கேரளா எம்.பி.,க்களுக்கு தார்மீக
ஆதரவு அளித்துவிட்டு, பின்னர், தமிழக எம்.பி.,க்களிடம் வந்து, "தண்ணீர்
தருகிறோம், எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்' என, சிரித்தபடியே
திருமாவளவனிடம் கூறிச் சென்றனர்.அடுத்த அரைமணி நேரத்தில், பிரதமர் மன்மோகன்
சிங்கை தி.மு.க., எம்.பி.,க்கள் சந்தித்து மனு அளித்தனர். தமிழக மீனவர்
பிரச்னை மற்றும் முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காக, தனித்தனி மனுக்களை
டி.ஆர்.பாலு தலைமையில் அளித்துவிட்டு வந்தனர்.அங்கும் திருமாவளவன்
வந்திருந்தார். அவர்கள் சென்ற சில நிமிடங்களில், தமிழக காங்கிரஸ்
எம்.பி.,க்கள் அழகிரி, சித்தன், விஸ்வநாதன், ராமசுப்பு, மாணிக் தாக்கூர்,
ஆருண் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களும்தங்கள் பங்கிற்கு மனு அளித்துவிட்டு
சென்றனர்.முல்லைப் பெரியாறு அணை
பிரச்னையில், இப்படி தமிழக
எம்.பி.,க்கள் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு இல்லாமல் ஆளுக்கொரு திசையில்
நின்றபடி, தனி ஆவர்த்தனம் வாசித்தபடி உள்ளனர். அதேநேரத்தில், இந்த
விவகாரத்தில், அரசியல் ஒற்றுமை காட்டி, தற்போதைக்கு கேரளா முன்னோக்கி
சென்று கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
அழைப்பை நிராகரித்த எம்.பி.,க்கள் :கேரள எம்.பி.,க்களுக்கு
பதிலடி தர, காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் செய்யும் முடிவை எடுத்து, அது
பற்றி தி.மு.க., எம்.பி.,க்களுக்கும், திருமாவளவன் அழைப்பு
விடுத்தார்.அவர்களோ, "நாங்கள் பிரதமரை சந்தித்து மனு தரப்போகிறோம்' எனக்
கூறிவிட்டு, தர்ணாவில் பங்கேற்காமல் நாசூக்காக கழன்றனர். அ.தி.மு.க.,
எம்.பி.,க்களை அழைத்த போது, "அம்மாவிடம் இருந்து அனுமதி கிடைக்காமல்
வரமுடியாது' என்று சொல்லி விட்டனர்.இடதுசாரி எம்.பி.,க்களில் கூட
லிங்கமும், நடராஜனும் மட்டுமே பங்கேற்றனர். இடதுசாரி மூத்த எம்.பி.,க்களான
டி.ராஜா மற்றும் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் வரவில்லை.கேரளாவைச் சேர்ந்த
மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே சென்று, பிரதமரை சந்தித்து
இப்பிரச்னை குறித்து பேசினர். ஏ.கே.அந்தோணி கூட இவ்விஷயமாக பிரதமரிடம்
பேசியுள்ளார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» டிசம்பரில் அணைக்கே சென்று நேரடி ஆய்வு : முல்லைப் பெரியாறு பிரச்னையில் குழு முடிவு
» முல்லை பெரியாறு பிரச்னையில் தமிழக அரசுக்கு ஆதரவு: வைகோ
» முல்லைப் பெரியாறு:கேரளாவுக்கு தமிழக அரசு கண்டனம்
» முல்லைப் பெரியாறு அணை: தமிழக அரசு பராமரிக்க அனுமதி
» அடாவடியாக முல்லைப் பெரியாறு அணைகட்ட தமிழக தொழிலாளிகளிடம் பணம் வசூலிப்பு!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|