TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


I love you சொன்ன நாய்.

2 posters

Go down

I love you  சொன்ன நாய். Empty I love you சொன்ன நாய்.

Post by sakthy Fri Nov 04, 2011 6:54 pm

சமூகத்தின் கறைகள் துகிலுரிப்பு .I love you சொன்ன நாய்.

உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

சமூகத்தின் பல கறைகள் கிராமத்திலும்,படிக்காதவர்களிடமும்,பாமரர்களிடமும் மட்டும் தான் உள்ளதாக கூறி விட்டு, நம்மை மட்டும் சிந்தனையாளர்களாக,படித்தவர்களாக காட்டிக் கொள்கிறோம். கிராமத்தவர்கள் அறிவு குறைவாகவும்,அவர்களை தவறான வழிகளில் கொண்டு செல்லவும்,வழி நடத்தவும் பல சமூக விரோதிகளும்,சாமியார்களும் நிறையவே உள்ளனர். இவர்களுடன் சினிமாவும் சேர்ந்து கொள்கிறது.கதாநாயகன் தனியாக நின்று பறந்து பறந்து அடித்து வீழ்த்துவான்.பொது இடங்களில் படப் பிடிப்பு நடக்கும் போது, மக்கள் அதைப் பார்ப்பதன் மூலம், எது உண்மை எது பொய்யானவை என்று தெரிந்து கொள்வார்கள்.ஆனால் பல சினிமாக்களில் வரும் காட்சிகள்,பக்திப் படங்களில் வரும் காட்சிகள் சாதாரண மக்களுக்கு,ஏன் நமக்கும் கூட தெரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையை சொல்லுங்கள் நீங்கள் கூட இன்னமும் பலவற்றை நம்பிக் கொண்டு தான் இருக்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது.இப்படிப்பட்ட காட்சிகள் மூலம், சினிமா மூட நம்பிக்கைகளை எப்படி வளர்க்கிறது என்பதை சில எடுத்துக்காட்டுக்கள் மூலம் இன்று பார்ப்போம்.
நீதி மன்றத்தில் நீதி தேவதை கண்களைக் கட்டியபடி,ஒரு தராசுடன் நிற்பதை பார்க்கிறோம்.அந்த தராசு ஒரு சினிமாவில் வடிவேலு திருடி விற்ற தராசு என எண்ணத் தோன்றுகிறது. ஒரு பெண் வழக்கறிஞர் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி தந்த போது,இப்போதும் படித்தவர்கள் கூட சினிமாவைப் போல் தான் நிஜ நீதிமன்றமும் இருக்கும்,என்று நம்புகிறார்கள் என்றார். நான் கண்டதில்லை,நீங்கள் கண்டதுண்டா? கண்டால் எனக்கும் சொல்லுங்கள்.சில சமயங்களில் தராசு ஒரு பக்கம் சாய்கிறதே எப்படி என்று நான் அந்த நீதி தேவதையை கேட்க வேண்டும்.

ஸ்பெயின் நாட்டில் காளை அடக்கும் போட்டி நடக்கும்.அது போல் ஜல்லிக்கட்டு நம் நாட்டில் நடக்கிறது. இவை போன்ற காட்சிகள் சில சினிமாவிலும் காட்டப்படும். ஒரு சிவப்பு துணியை வைத்து காளையை ஏமாற்றுவார்கள். சில சினிமாக்களில் சிவப்பு நிற சேலையை கட்டி வர, மாடு அதைக் கண்டு துரத்தும். இருக்கவே இருக்கிறார் நம் கதாநாயகன்,ஓடி வந்து,அந்த நேரம் பார்த்து எங்கிருந்து வருகிறாரோ தெரியவில்லை, காளையை அடக்குவார். இதை எல்லாம் கிராமத்து மக்கள் நம்புகிறார்கள்.ஆனால் நாமும் நம்புகிறோமே.இல்லையா,ஆமா? ஒமா என்று நிறுத்திக் கொள்ளாதீர்கள். உண்மையை சொல்லுங்கள். சிவப்பு நிற சேலையைக் கண்டால் மாடு முட்ட வரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோமா இல்லையா?

மிருகங்கள் நீலம்,பச்சை இரண்டு நிறங்களை மட்டுமே கிரகிக்கும் சக்தி கொண்டவை. மனிதன் மூன்று அடிப்படை நிறங்கலான நீலம்,பச்சை,சிவப்பை கிரகிக்கும் தன்மை கொண்டவன்.அதனால் தான் மனிதனால் அனைத்து நிறங்களையும் பார்க்க முடிகிறது.ஆனால் மிருகங்கள் நீலம்,பச்சை நிறங்களை மட்டும் கிரகிக்கும் தன்மை கொண்டவை என்பதால் அந்த நிறங்களின் கூட்டான கறுப்பு, பளுப்பு நிறங்களை மட்டுமே பார்க்க முடிகிறது. சிவப்பு நிற துணியை,சேலையை அதற்கு முன் காட்டினால் காளைக்கு அது கருமையாகவே தெரியும்.அது கூட கடுமையான நிறமாக தெரியாது.மிருகங்கள் துணியின் அசைவை வைத்து துரத்துகின்றனவே தவிர நிறத்தைப் பார்த்தல்ல இது மிருகங்களுக்குள்ள பொதுவான நிறப் பார்வையாகும். ஆனாலும் சில பறவைகளுக்கு மட்டும் வேறு சில நிறங்களை பார்க்கும் சக்தி உண்டு.

பெண் குழந்தைகளை கண்டால் பிடிக்காதது போல், பெண் நாய்க் குட்டிகளைக் கண்டாலும் பலருக்குப் பிடிக்காது.கள்ளிப்பால் கதை போல்,சமீபத்தில் இராமேஸ்வரத்தில் தொடர்ந்து பெண் குழந்தைகள் கொல்லப்பட்டு வருவது போல்,பெண் நாய்க் குட்டிகளை கொல்லாமல் துரத்தி விடுவார்கள். பெண் குழந்தைகளைக் கொன்று விட்டு, மிருகங்களுக்கு மட்டும் கருணை காட்டும் அகிம்சாவாதிகளான நமக்கு எத்தனை பருசுகள் கொடுக்கலாம்!
நாய் பூனைக்கு இருக்கும் முகரும் சக்தி பற்றிய எங்கள் வீட்டில் நடந்த சம்பவம்,ஏன் உங்கள் வீட்டில் கூட நடந்திருக்கக் கூடிய நிகழ்ச்சி இது.

என் சிறு வயதில் நடந்த சம்பவம் ஒன்று.என் அம்மாவிற்கு வீட்டில் நாய் வளர்ப்பது சுத்தமாக பிடிக்காது.ஒரு முறை ஒரு பெண் நாய்க்குட்டி வீட்டு வாசலில் நின்று
பசியால் தவித்தது. பாவம் என்று என் அம்மா உணவு போட்டார்கள். அந்த நன்றி உள்ள நாய் வீட்டை விட்டு போகாமல் அடம் பிடித்தது. அம்மாவின் கோபம்,அப்பாவை சிந்திக்க வைத்தது. மறுநாள் கோணிப்பைக்குள் அந்த நாய் அடைக்கலமானது.அந்த கோணிப்பை வேறொரு அட்டைப்பெட்டிக்குள் அடைக்கலம் பெற, ஐந்து கிலோமீற்றர் தூரத்திற்கப்பால் உள்ள காட்டுப்பகுதியில் நாய்க்கு அடைக்கலம் கொடுத்த அப்பா, அலுவலகம் சென்று விட்டார்.அப்பா அலுவலகம் சென்ற ஐந்தே நிமிடத்தில் அம்மாவின் தொலைபேசி அழைப்பு அப்பாவிற்கு. அட்டைப்பெட்டியையும்,கோணியையும் போட்ட இடத்தில் காட்டுவதாக அப்பாவியாய் அப்பா உண்மை பேசினார். மாலை அப்பா வீட்டிற்கு வந்த போது அந்த நாய் அப்பாவை சுற்றி வந்து வாலை ஆட்டி நன்றியுடன் பாட்டு பாடிற்று. இனி என்ன செய்வது? அப்பாவின் அடுத்த திட்டம் தயார். மறுபடியும் கோணிப்பை, அட்டைபெட்டி.இந்த முறை அப்பா அந்தப் பெட்டியுடன் ரயில் நிலையம் சென்றார். ரயில் வண்டியில் ஏறினார். பெட்டியை அப்படியே விட்டு விட்டு அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி வீட்டிற்கு வந்து, மார் தட்டி வீராப்புடன் தன் தில்லாலங்கடி வேலையை சொன்னார். இனிப் பயமே இல்லை. இராமேஸ்வரம் போய் விட்டது என்று சொல்லி விட்டு அலுவலகம் சென்று வேலை முடிந்து நிம்மதியுடன் வீடு வந்து சேர்ந்தார். ஐயோ பாவம், எங்கள் அப்பா. அலுவலகத்தில் இருந்து களைத்து வந்த அப்பாவை வரவேற்றது அந்த நாய் தான்.

நாய் பூனைக்கு முகர்ந்து அறியும் சக்தி பலமாகவே உண்டு. உணவு,தன் வீட்டுக்காரன் இப்படி சிலவற்றை மூளையில் பதிவு செய்து கொள்ளும். ஆனால் பதிவு செய்தவற்றை வைத்து சிந்திக்க அதனால் முடியாது. போலீஸ் நாய் முகர்ந்து பார்த்து தேடிப் பிடிக்கிறது. அத்தோடு சரி.போதைமருந்தா கடத்துகிறாய் என்று போலீஸ் நிலையத்திற்கு இழுத்து செல்லும் அறிவு அதனிடம் கிடையாது. மற்ற மிருகங்களிடமும் நாம் சொல்லும் ஐந்து அறிவை விட, சிந்திக்கும் ஆறாவது அறிவு கிடையாது. தன் எதிரிகளை இனம் கண்டு பழி வாங்கும் குணம் நாயிடமோ,ஆடு மாடு,புலி,சிங்கம்,பாம்பு,யானை எவற்றிடமும் கிடையாது. மூளையில் பதிவு செய்ய முடியுமே தவிர, சினிமாக்களில் அல்லது சாமியார்கள் சொல்வது போல், பதிவு செய்ததை வைத்து சிந்தித்து பழிவாங்க மிருகங்களிடம் ஆறாவது அறிவு கிடையாது. மாடும்,நாயும்,யானையும் சினிமாவில் வடிவேலுவை வேண்டுமானால் பழிவாங்கி,கோழிக்கூட்டுடனும் வேப்பிலையுடனும் ஊர் சுற்ற வைக்கலாமே தவிர நிஜத்தில் இவை சாத்தியமில்லை.இதை நகைச்சுவைக்காக பக்திப்படங்களில் காட்டத்தான் முடியும்.
மிருகங்களுக்கு இப்படி சிந்திக்கும் சக்தி கிடைத்தால் ,மனிதனைப் போல் பாலியல் தொல்லைகளை கொடுக்க ஆரம்பித்தால் என்னவாகும்? நாய்க்கும், கழுதைக்கும் கல்யாணம் செய்து வைக்கிறார்களே இந்த மனிதர்கள் என்று பழிவாங்கும் படலத்தில் சென்று, நம் வீட்டு நாய் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு I love you சொல்லி தப்பாக நடக்க முயற்சித்தால்.....?கடல்கன்னி போல் நாய்க்கன்னி பிறந்து விட்டால்......?

இதைப் போலவே பாம்புக்கு பால் வார்க்கும் வேலையை சினிமாவும் நிறுத்தவில்லை,சாமியார்களும் நிறுத்தவில்லை ஏன்? பாம்பு cold blooded வகையை சேர்ந்தது. உடல் உஷ்னத்தை நம்மைப் போல் கட்டுப்படுத்தும் சக்தி கிடையாது.அப்பாடா களைத்துப் போனேன் என்று வியர்வை துடைக்க பாம்பினால் முடியாது.
பாம்பு உணவை அப்படியே எடுத்துக் கொண்டு,சிறிது சிறிதாக பின்னே தள்ளுகிறது.முற்றாக செமிபாடு ஆக இரண்டு நாளில் இருந்து இரண்டு வாரங்கள் ஆகிறது.அதனால் உணவை எடுத்துக் கொண்டதும்,எங்காவது புற்றிலோ,பாறைகளுக்கு அடியிலோ சரணாகதி அடைந்து விடுகிறது.நம்மைப் போல் கல்யாண சமையல் சாதம் கண்டதும்,மூக்கு முட்ட ஒரு பிடி பிடிக்கத் தெரியாது.உணவில் இருந்து பெற்றுக் கொள்ளும் நீர் அதற்கு போதுமானதாயினும்,சில பாம்புகள் ,சில துளி தண்ணீரை எப்போதாவது எடுத்துக் கொள்ளும்.ஆனாலும் அதன் நாக்கு பிளவு பட்டிருப்பதால், நாக்கினால் குடிக்க முடியாத பாம்பு,நாம் இளநீர்,குளிர்பானங்களை உறிஞ்சி குடிப்பது போல் உறிஞ்சிக் கொள்கிறது.தோலை கழற்றும் சமயங்களில் சிறிது அதிக தண்ணீர்தன்மை தேவைப்படுகிறது அவ்வளவு தான்.சில அம்மாக்கள் குழந்தைகளுக்கு கரண்டியினால் உணவை திணிப்பது போல், பாம்பிற்கு பாலை வாயில் பாலாத்காரமாக செலுத்தினால் தவிர பாம்பினால் பாலைக் குடிக்கவும் முடியாது, அதை செமிபாடு செய்யவும் முடியாது,மீறி நாம் பாலை பாம்பின் வாயிற்குள் பலாத்காரமாக செலுத்தினால்,அதை செமிபாடு செய்ய முடியாமல் அதுவே பாம்பிற்கு நஞ்சாகி செத்து விடும்.இன்னொரு செய்தி,மற்ற உயிரினங்கள் போலல்லாது தன் வாழ்நாள் முழுவதும் உடல் வளர்ச்சியை உடையது பாம்பு.

பாம்பாட்டியின் நாதத்தைக் கூட பாம்பினால் கேட்க முடியாதென்பதும்,பாம்பாட்டியின் அசைவை வைத்தே அது அசைகிறது என்பதையும் இன்னமும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனாலும் மிக மென்மையான சத்தத்தை 200 முதல் 300 Hz வரை,நிலத்தில் அசையும் போது ஏற்படும் அதிர்வுகளை,காற்றினால் ஏற்படும் அதிர்வுகளையும் பாம்பினால் ஏற்றுக் கொள்ள முடியும்.அதற்கு வெளிக் காதுகள் இல்லாத நிலையில் வெளி தோல் மற்றும் எலும்புகள் மூலம் கிரகிக்கப்பட்டு உட்காதுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனாலும் பாம்பாட்டியின் மகுடியின் சத்தத்தையோ அல்லது எகிப்து போன்ற சில நாடுகளில் உள்ள பாம்பாட்டிகளின் புல்லாங்குழல் இசையையோ கேட்க அதனால் முடியாது.
சில சினிமாக்களில் தலை வெட்டப்படும்,உடலில் இருந்து துண்டிக்கப்படும்,சில சமயம் தலையுடன் பேசவும் செய்வார்கள். வெட்டப்பட்ட தலை எவ்வளவு நேரம் உணர்ச்சியுடன் இருக்கும் தெரியுமா?யார் உன் தலையை வெட்டினார்கள் என்று கேட்கும் நேரத்திற்குள் அதாவது 15 முதல் 20 செக்கண்டுக்குள் உணர்விழந்து விடும்.அத்ற்கு மேல் தாங்காது.
பேயைப் பிடித்து போத்தலில் பூட்டி விட்டார் ஒரு இலங்கை மந்திரவாதி. சில வருடங்களுக்கு முன்னரும் இதே போல் தென் இலங்கையில் ஒரு மந்திரவாதி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி,பின்னர் மக்களால் அடித்து விரப்பட்ட செய்தி நீங்களும் படித்திருக்கலாம்.ஒருநாள் அதிலிருந்து பேய் வெளியே வந்து உங்களையும், என்னையும்,என்னைப் பற்றி கட்டுரையா எழுதுகிறாய் என்று சொல்லி பிடித்து ஆட்டி வைக்கப் போகிறது. ஒரு சினிமாவிலும் நடிக்க சந்தர்ப்பம் இல்லாமல் ,பல சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் வடிவேலு,ஒரு பாட்டிக்கு பேயோட்டிய வேப்பிலையுடன் நிச்சயம் காப்பாற்ற வந்து விடுவார்.கவலை வேண்டாம்.
மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று ராஜபக்சே மந்திரவாதிகளுக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறாராமே!
மீண்டும் அடுத்த வாரம்....................... Dr. சக்தி.




avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

I love you  சொன்ன நாய். Empty Re: I love you சொன்ன நாய்.

Post by அருள் Fri Nov 04, 2011 7:00 pm

அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum