TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஜெ. சொன்ன குட்டிக்கதை

Go down

ஜெ. சொன்ன குட்டிக்கதை Empty ஜெ. சொன்ன குட்டிக்கதை

Post by அருள் Tue Jan 11, 2011 8:02 am

ஜெ. சொன்ன குட்டிக்கதை Jaayaa


குமரி
மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தரிசனம்
செய்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று குமரி மாவட்டம்
வந்தார்.



சென்னையில்
இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அவர், பின்னர்
அங்கிருந்து ஹெலிகாப்டரில் பிற்பகல் 2.15 மணிக்கு கன்னியாகுமரிக்கு
வந்தார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் ஹெலிகாப்டரில்
இருந்து இறங்கிய அவரை அ.தி.மு.க. நிர்வாகிகள் பூங்கொத்து மற்றும்
சால்வைகள் கொடுத்து வரவேற்றனர்.



இதைத்தொடர்ந்து
ஜெயலலிதா காரில் ஏறி சாமிதோப்புக்கு புறப்பட்டார். வழியில் அவரை காண,
சாலையின் இருமருங்கிலும் ஏராளமான பொதுமக்கள் கூடிநின்றனர். அவர்களை
பார்த்து ஜெயலலிதா கையசைத்தார். வழியில் கொட்டாரம், ஈத்தங்காடு சந்திப்பு,
வடக்குதாமரைகுளம் போன்ற பகுதிகளில் அவருக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு
அளித்தனர்.



ஜெயலலிதாவின்
கார், பிற்பகல் 3 மணிக்கு சாமிதோப்புக்கு வந்தது. சாமிதோப்பில் அய்யா
வைகுண்டசாமி தலைமைப்பதியின் வடக்குவாசல் முன் காரில் இருந்து இறங்கிய
ஜெயலலிதாவுக்கு பால.பிரஜாபதி அடிகளார் உள்ளிட்ட பதி நிர்வாகிகள்
பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.



பின்னர் ஜெயலலிதா பள்ளியறைக்கு சென்று சாமிதரிசனம் செய்தார்.



ஒரு பசுவையும், கன்றுவையும் தானமாக அளித்து தலைமைப்பதியின் கோசாலை திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.



பிற்பகல் 3.10 மணிக்கு விழா நிகழ்ச்சி தொடங்கியது.



விழாவுக்கு பால.பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கி பேசினார்.




விழாவில்
இலவச தையல் எந்திரங்கள், மருத்துவ நிதி உதவி தலா ரூ.10 ஆயிரம் ஆகிய நல
உதவிகளை தலா 5 பயனாளிகளுக்கு வழங்கி ஜெயலலிதா பேசினார்.



அவர்,
‘’ஒடுக்கப்பட்ட மக்கள், உரிமைகளை இழந்த மக்கள், அன்றாடம் காய்ச்சிகளாய்
அல்லல்பட்ட மக்கள், ஆண்டவனின் பெயராலும், ஆட்சி செய்பவரின் கொடுங்கோல்
சட்டங்களாலும் துன்புறுத்தப்பட்ட மக்கள் விடுதலை பெறவேண்டி தன்னையே
அர்ப்பணித்த அய்யா வைகுண்டசாமிபதியில் உங்களோடு சேர்ந்து வழிபடுவதில் நான்
மிகுந்த பெருமைகொள்கிறேன்.



தம்மை
நாடி வந்த அன்பர்களுக்கு ஆன்மிக ஞானத்தை புகட்டி இறை வழிபாட்டில்
புதியதோர் மார்க்கத்தை ஏற்படுத்தியவர் அய்யா வைகுண்டர். அய்யா வைகுண்டரின்
போதனைகள் மக்கள் மனதில் எழுச்சியை ஏற்படுத்தின.



அய்யா
வைகுண்டரின் பொன்மொழிகளை கேட்ட மக்கள் மூட நம்பிக்கையை முற்றிலும்
வெறுத்தனர். தீண்டாமை எனும் தீய பழக்கத்தினை வேறோடு ஒழிக்க முற்பட்டனர்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உண்மையை உணர்ந்தனர்.



தீண்டாமையை
ஒழிக்கும் வகையில் அந்த காலத்திலேயே சமபந்தி போஜனத்துக்கு ஏற்பாடு
செய்தவர் அய்யா வைகுண்டர். சுயமரியாதைக்கு வித்திட்டவர். சமூக நீதியை
நிலைநாட்ட பாடுபட்டவர். சுரண்டலுக்கு எதிராக போராட்டத்தை நடத்தியவர்.
கல்விக்கும், சிறுதொழிலுக்கும் முக்கியத்துவம் அளித்தவர்.



சாதியற்ற
சமுதாயம் அமைக்கப்பட வேண்டும் என்பதே அய்யா வைகுண்டரின் நோக்கமாக
இருந்தது. லட்சோப லட்சம் மக்களின் கண்ணீரைத்துடைத்த அய்யா வைகுண்டர் தமிழ்
சமூகத்தில் குறிப்பாக இந்த பகுதிகளை சேர்ந்த பல ஒடுக்கப்பட்ட மக்களின்
வாழ்க்கையில் ஏற்படுத்திய அற்புதமான மாற்றங்கள் நாம் எண்ணி எண்ணி
மகிழத்தக்கவை.



அய்யா வழிவந்த பாலபிரஜாபதி அடிகளார், அய்யா வைகுண்டரின் அறிவுரைகளை பின்பற்றி வாழ்ந்து வருகிறார்.



சாதி,
சமயத்துக்கு அப்பாற்பட்டு, மத நல்லிணக்கத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக
பாலபிரஜாதிபதி அடிகளார் விளங்குகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
அடிகளாரின் பணிகளை பாராட்டும் விதமாக எனது ஆட்சிக்காலத்தில் "கோட்டை அமீர்
மதநல்லிணக்க விருது'' என்னால் அவருக்கு வழங்கப்பட்டதை இந்த இனிமையான
நேரத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.



தர்மம்
என்றால் சரியான செயல்களை செய்வது. சரியான பாதையில் நடப்பதாகும். தர்மம்
என்றால் அறம் என்று பொருள். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சிறிய கதையை
சொல்ல விரும்புகிறேன்.


ஒரு ராஜாவின்
அரண்மனையில் சிலம்பு ஒன்று காணாமல் போய்விட்டது. அரசனுக்கு கடுமையான
கோபம். சிலம்பை ஒரு மாதத்துக்குள் கண்டுபிடித்து தருபவர்களுக்கு
பரிசளிக்கப்படும் என்று அறிவித்தார். ஒரு மாதத்துக்கு பிறகு
கண்டுபிடிக்கப்பட்டால் மரண தண்டனை என்றும் அறிவித்தார்.



அந்த
ஊருக்கு புதிதாக வந்த துறவியின் கையில் சிலம்பு கிடைத்தது. அந்த சிலம்பு
குறித்து அந்த ஊர் மக்களிடம் கேட்டறிந்தார் துறவி. மக்கள் அரசனின் உத்தரவை
அவரிடம் தெரிவித்தனர்.

அரசனின்
உத்தரவை அறிந்த துறவி ஒரு மாதம் கழித்து அந்த சிலம்பை அரசனிடம்
கொடுத்தார். உடனே அரசன் அந்த துறவியைப்பார்த்து, உனக்கு இப்போது மரண
தண்டனை கொடுக்க வேண்டியிருக்கும் என்றார்.



அதற்கு
அந்த துறவி, சிலம்பு கிடைத்ததும் ஓடோடி வந்து தந்திருந்தால் பரிசுக்கு
ஆசைப்பட்டதாக ஆகிவிடும். மரணதண்டனை கிடைக்கும் என்று அஞ்சி, சிலம்பை
கொடுக்காமலேயே இருந்தால் மரண தண்டனைக்கு அஞ்சியவன் ஆகிவிடுவேன்.



சிலம்பை
அப்படியே வைத்துக்கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டவனாக ஆகிவிடுவேன்
என்று தெரிவித்து, அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும்
அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.



இதைக்கேட்ட அரசர் தலைவணங்கி துறவியை அனுப்பி வைத்தார். இப்படிப்பட்ட தர்மத்தை கடைப்பிடித்தவர் அய்யா வைகுண்டர்.



எனக்கு
முன்னால் பேசிய அய்யா வழிவந்த பாலபிரஜாபதி அடிகளார் வாய்நிறைய
வாழ்த்தினார். மீண்டும் கழக ஆட்சி அமைய வேண்டும் என்று வாழ்த்தினார்.




இங்கே
இந்த மக்களுக்கு சில பிரச்சினைகள் இருப்பதாக அவர் கூறினார்.
ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள பதிக்கு வெளியே ஒரு வேலி போட்டிருப்பதாக
தெரிவித்தார். நீங்கள் துணை நில்லுங்கள், இந்த தேர்தலுக்குப்பிறகு
நம்முடைய ஆட்சி அமையட்டும். அதன்பிறகு அய்யா வைகுண்டர் அருளால் எல்லா
வேலிகளும் தகர்த்தெறியப்படும்.



மக்களுக்கு
இருக்கிற அத்தனை பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்பதை இந்த நேரத்தில்
தெரிவித்து, பாலபிரஜாபதி அடிகளார் தன்மனதில் என்னென்ன கோரிக்கைகள் வைக்க
வேண்டும் என்று எண்ணி, எந்தெந்த கோரிக்கைகளை இங்கே வைக்காமல்
விட்டுவிட்டாரோ அத்தனை கோரிக்கைகளையும் அய்யா வைகுண்டர் அருளால்
நிறைவேற்றித்தரப்படும் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.



நடைபெறப்போகிற தேர்தல் தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடைபெறுகின்ற ஒரு தேர்தலாகும்.



ஆகவே
அய்யா வைகுண்டர் அருளால் நல்லாட்சி அமைந்தால், கழக ஆட்சி அமைந்தால் மக்கள்
பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று தெரிவித்து மீண்டும் ஒருமுறை
இந்த இனிய விழாவுக்கு என்னை அழைத்த அடிகளாருக்கு எனது மனமார்ந்த நன்றியை
தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன்’’ என்று பேசினார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum