TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உலகை உலுக்கிய பிரபல வழக்குகள். தொடர் - 1

2 posters

Go down

உலகை உலுக்கிய பிரபல வழக்குகள். தொடர் - 1 Empty உலகை உலுக்கிய பிரபல வழக்குகள். தொடர் - 1

Post by sakthy Sun Oct 30, 2011 2:21 pm

உலகை உலுக்கிய பிரபல வழக்குகள். தொடர் - 1

உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

நான் எழுதிக் கிழிப்பதை எல்லாம், முதலில் ஜேர்மனியில் உள்ள என் கோவை நண்பன் தான் முதலில் படித்து விட்டு இணையத்திற்கு அனுப்புவான். சில நாட்களுக்கு முன்னர் நான் எழுதிக் கிழித்த,கசப்பான உண்மை கல்லால் அடிக்காதீர்கள், என்று ஆங்கில உச்சரிப்பு பற்றி எழுதியதற்கு வந்த முதல் கல், என் நண்பனிடம் இருந்து தான்.என்னை தவறாக புரிந்து கொண்டு எறிந்த கல் அது. நானும் எல்லோரையும் போல் ஆசிரியர்கள் சொல்லித் தந்த தவறான ஆங்கில உச்ச்ரிப்பில் வளர்ந்தவன் தான். அது தவறானது என்று கண்டு திருத்திக் கொண்டு ஆங்கிலேயர்களுக்கு நிகராக பேசக் கற்றுக் கொண்டேன். தவறை திருத்திக் கொள்பவன் தான் மனிதன். எமது ஆங்கில தரம்,இலக்கணம் திருப்தியாக இருந்தும் உச்சரிப்பில் தவறு இருக்கிறது என்றும் அதை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் நிலைப்பாடே தவிர குறை கூறுவதோ,கேலி செய்வதோ அல்ல என்பதை எடுத்து சொல்லிய பின் அந்தக் கல்லை என் நண்பன் பூவாக மாற்றிக் கொண்டான்.

நம் தமிழில் கூட எத்தனை தவறுகளை நாம் செய்கிறோம். மக்கள் தொலைக்காட்சியில் வரும் கொஞ்சம் சேட்டை,கொஞ்சம் அரட்டையில் வரும் நேர்காணல் நகைச்சுவையாக இருப்பினும் கூட,நம்மவர் பலருக்கு தமிழும் தெரியவில்லை பொது அறிவும் இல்லை என்பதை, நம் மதிப்பெண் கல்வியும் வியாபாரக் கல்வியும் காட்டுகின்றனவே.
சில வாரங்களுக்கு முன் ஒரு கட்டுரையில்,அமெரிக்க மக்கள் கம்மியூனிசத்தை நோக்கி போகிறார்களா என்று கேள்வி எழுப்பி இருந்தேன். சில தினங்களாக வால் ஸ்ட்ரீட் ல் கம்மியூனிச,மார்க்ஸ் கருத்துக்கள் ஒலித்ததை கண்டேன். அது போல் உண்மையை யார் சொன்னாலும் சிந்தித்து ஏற்றுக் கொள்ளலாம்.ஆனால் கல்லை மட்டும் எறியக் கூடாது.
நாயன்மாரில் ஒருவர் தினமும் கோவிலுக்கு போகும் வழியில், ஒரு கல்லை இறைவன் முன் எறிந்து விட்டு,கடவுளே இதை பூவாக ஏற்றுக் கொள் என்று சொல்லி செல்வாராம். அது இறைவன் முன் பூவாக விழுந்ததாம். என் நண்பன் எறிந்த கல் என் முன் பூவாக விழுந்தது. நீங்கள் நல்லவர்கள் நிச்சயம் என்னை கல்லால் அடிக்க மாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்ற நம்பிக்கையுடன்..............

நான் படித்த சில வழக்கு விசாரணைகளை மிக சுருக்கமாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன்.படிக்க,சாப்பிட என்று எதற்கும் நேரமில்லாமல் தவிக்கும் உங்களிடம் வாரம் தோறும் இரண்டு வழக்குகளை மட்டுமே தருகிறேன்.பிடித்தால் சொல்லுங்கள்.இல்லையேல்................................?வழக்கு விசாரணையை நிறுத்தி,வழக்கு தள்ளுபடி செய்ய அல்லது வாய்தா வாங்கிக் கொண்டு சென்று விடுவேன்..

எனக்கு தெரிந்த வரை மிகப் பழமையான வழக்கு கி.மு. 399 அளவில் நடந்த சாக்கிரட்டீசின் வழக்கு விசாரணையாகும்.எதென்ஸ் நகரின் அன்றைய வழக்கப்படி எவரும் ஒருவர் மீது குற்றம் சுமத்தலாம். இதன்படி மெலிட்டஸ், சாக்கிரடிஸ் மீது சுமத்திய குற்றத்தின் முதற்கட்ட விசாரணை, மாஜிஸ்ட்ரேட் முன்நிலையில் ராயல் ஸ்டோ(Royal Stoa)என்ற இடத்தில்,(Priliminary hearing)விசாரிக்கபட்டது.மாஜிஸ்ட்ரேட் விசாரணை செய்த பின் இரு பகுதியினரும் குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டனர்.இந்த விசாரணை முடிந்ததும் குற்றப் பத்திரிகை எழுதப்பட்டு மக்கள் நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
ஏதென்ஸ்,அகோராவில்(agora,Athens) அமைக்கப்பட்டிருந்த மக்கள் நீதிமன்றில்(people court) சாக்கிரட்டிஸ் மீது மெலிட்டஸ்,அனிட்டஸ்,லிகொண்(Melietus, Anytus,Lycon) என்ற மூவரால் ஜனநாயக விரோதி என்றும்,கடவுள் நம்பிக்கை அற்றவர் என்றும்,சந்திரன் சூரியன் கடவுள்கள் இல்லை என்றும்,இளைஞர்களை தவறான வழியில் கொண்டு செல்கிறார் என்றும் பல குற்றங்கள் சாட்டப்பட்டு, இறுதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.ஒரு நாள் நடந்த இந்த விசாரணையில் 500 தீர்ப்பு உதவியாளர்கள்(Jurors) நியமிக்கப்பட்டு இருந்தார்கள். இந்த ஜூரிகள் இன்றைய நிலை போல் தனியாக சென்று கலந்து ஆலோசிக்காது தங்கள் முடிவை வாக்கெடுப்பு மூலம் உடனேயே தெரிவிப்பார்கள்.குற்றம் சாட்டியவர்களுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் தலா மூன்று மணி நேரம் தரப்படும்.இதில் ஒரு விசேஷம் என்னவென்றால்,குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றவாளி அல்ல என்று 100 தீர்ப்பு உதவியாளர்கள் சொல்லி விட்டால் குற்றம் சுமத்தியவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், செலவு தொகையும் கட்டும்படி தீர்ப்பு தரப்படும்.

குற்றம் சுமத்தியவர்களான மெலிட்டஸ்,அனிட்டஸ்,லிகொன் குற்றம் பற்றி மூன்று மணி நேரம், தண்ணீர்க்கடிகாரம் மூலம் நேரம் கணக்கிடப்பட்டு, தங்கள் பக்க வாதத்தை எடுத்துரைத்தார்கள்.அதை தொடர்ந்து சாக்கிரடிசும், அவரின் மாணாக்கர்களான பிளாட்டோ,செநோபோன்(Plato,Xenophon) வாத சாட்சியங்களை வைத்தார்கள்.பிலாட்டோ,சாக்கிரடிஸ் குடும்ப நிலை பற்றி கூறி ஜூரிகளின் அனுதாபத்தை பெற முயன்றாலும் கூட,சாக்கிரட்டிஸ் அமைதியாக தன் குடும்ப நிலை பற்றி எதுவும் பேசாதிருந்தார். முடிவில் நீதிபதி ஜூரிகளின் முடிவை வாக்கு மூலம் கேட்டார்.. முதல் வாக்கெடுப்பு குற்றவாளியா இல்லையா என்பதும்,இரண்டாவது வாக்கெடுப்பு தண்டனை பற்றியதாகவும் இருந்தது.
முதல் வாக்கெடுப்பில் 280 ஜூரிகள் குற்றவாளி எனவும் 220 பேர் எதிராகவும் வாக்களிக்கவே குற்றம் உறுதியாகி, தண்டனை பற்றிய முடிவுக்கு வரும்படி ஜூரிகளிடம் கேட்கப்பட்டது. குற்றம் சுமத்தியவர்கள் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்றும்,சாக்கிரட்டிஸ் தரப்பில் அபராதம் கட்டுவதாகவும் கேட்டிருந்ததால், தண்டனை பற்றி முடிவெடுக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.மரண தண்டனைக்கு 360 ஜூரிகளும்,அபராதத்திற்கு 140 ஜூரிகளும் வாக்களித்தார்கள். மரண தண்டனை உறுதியாயிற்று. சாக்கிரட்டிஸ் சிறைக்கு அனுப்பபட்டு மிகக் கொடிய தாவர விஷம்(hemlock) கொடுக்கப்பட்டு, மெதுவாக,கடுமையான வலியை அனுபவித்து இறந்தார்.

"The hour of departure has arrived, and we go our ways--I to die, and you to live. Which to the better fate is known only to God."

இது சாக்கிரடிஸின் கடைசி வார்த்தைகள் அல்ல,பிலாட்டோவால் சொல்லப்பட்ட வசனம் ஆகும்.அன்றைய சட்டத்தின்படி தண்டனை கொடுக்கப்பட்ட ஒருவர் எதுவும் பேச அனுமதி கிடையாது என்பதால் சாக்கிரடிஸ் எதுவும் பேசவில்லை.

அடுத்த வழக்கு நீங்கள் அனைவரும் தெரிந்த இயேசுவின் வழக்காகும்.இருப்பினும் சில ஆய்வாளர்களின் செய்தியுடன் தருகிறேன்.

கி.மு.63 ளில் ஜெருசலேம், ரோம் ஆட்சிக்குள் வந்த பின், ஜெருசலேம்,அங்கு யூத இனத்தவரும் இருந்ததால், தலைமை மதகுருவினதும்,ரோம் ஆட்சி பிரதிநிதியாலும் ஆளப்பட்டு வந்ததும்,கோயில்களில் சமய வழிபாடு மட்டுமல்லாது ரோமின் ஆட்சியகமாகவும் வரி சேகரிக்கும் இடமாகவும் மாறியது தெரிந்ததே.அப்போது ஜூதர்களின் சட்டமும்,ரோமானியர்களின் சட்டமும் அமுலில் இருந்து வந்தது.

My house shall be called a house of prayer,but you have made it a den of robbers. (Matthew 21:13)
இயேசு ஜூதாஸ் மூலம் காட்டிக் கொடுக்கப்பட்டு,கேத்ஸெமானே ஒலிவமலை மேற்கு ஜெருசலேமில்(Gethsemane ,Mount of olives,west Jerusalem)கைதாகி, பிரதம மதகுரு கயாபா(Caiapha) முன் விசாரணை சபைக்கு(sanhedrin) கொண்டு வரப்படுகிறார்.அங்கே குற்றவாளியாக காணப்பட்டு,பின்னர் தண்டனைக்காக பொண்டியுஸ் பிளாதே(Pontius Pilate) யிடம் அனுப்புகின்றனர்.பிலாதே இயேசுவை குற்றவாளி அல்ல என்று கண்டதுடன்,இயேசு ஒரு கலெலியன்(Galelian)என்பதை அறிந்து, அதற்கு பொறுப்பான ஏரோட்டிடம்(Herod Antipas) விசாரணைக்காக அனுப்புகிறான்.அங்கு யேசு ஏரோடினாலும் போர்வீரர்களாலும் பரிகசிக்கப்பட்டு ,மீண்டும் பிளாதேயிடம் திருப்பி அனுப்புகின்றனர்.பிளாதே யேசு மேல் குற்றம் காண முடியாதவிடத்தும்,மதகுருக்களினதும்,அங்கிருந்த கூட்டத்தினரின் கூச்சலை அடுத்தும் சிலுவையில் அறைந்து(crucifixion)கொல்லும் தண்டனையை கொடுக்கிறான். பின்னர் தான் இதற்கு பொறுப்பல்ல என்று கூறி தன் கைகளைக் கழுவி கொள்கிறான்..அங்கிருந்தவர்கள் இயேசுவுக்கு முள் கிரீடம் அணிவித்து கல்வாரிக்கு அழைத்து சென்று அங்கு சிலுவையில் இயேசு அறையப்படுகிறார்.அவர் சொன்னதாக கூறப்பட்ட கடைசி வசனம் ஒன்று,Father forgive them,for they know not what they do.
ஆனாலும்.............................
பல ஆய்வாளர்களும் சரித்திர ஆராய்ச்சியாளர்களும் பல சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் வெளியிட்டுள்ளனர். இயேசு ஒரு தச்சு தொழிலாளியின் மகன் அல்ல,தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்றும்...
இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் மூன்று மணி நேரம் இருள் சூழ்ந்தது என்று சொல்லப்படுவது (மார்க்,மத்தியு,லூக்,பீட்டர்) லூக்கின் படி சூரிய கிரகணம் என்றானால்,பின் நோக்கி கணக்கிடும் போது அப்படி ஒரு கிரகணம் நடந்ததற்கு சாட்சியங்கள் இல்லை என்றும்...
இப்படியான ஒரு சம்பவம் ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட கி.மு.44 மார்ச் 15லும் மதியம் இருளானது என்று கூறப்பட்டது போல் தவறானது என்றும்...
அன்றைய நாட்களில் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்ட பல ஆயிரம் பேர்களின் உடல்களுக்கு என்ன ஆனது?இது வரை ஒரே ஒரு உடல் மட்டும் கை நகம் குத்தப்பட்டு கண்டெடுக்கப்பட்டது. இதற்கு காரணம் சொல்லும் போது,சிலுவையில் அறையப்பட்டவர்கள் அப்படியே விடப்படுவார்கள் என்றும்,அதை பறவைகள் மிருகங்கள் உணவாக்கும் என்றும்..
மூன்று நாட்களுக்கு பின் உயிர்பெற்றெழுந்தார் என்பது மிகைப்படுத்தப்பட்டது.சிலுவையில் அறையப்படுபவர்கள் குருதி இழப்பினால் குற்றுயிராக இருப்பர் என்றும்,பின் சுயநினைவு பெற்று எழுந்திருக்கக் கூடுமே தவிர, மீண்டும் உயிர்பெற்றது,நம்பிக்கையினால் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்றும்...
யேசு கைது செய்யப்பட போது சீடர்கள் அனைவரும் ஓடி விட்டனர் என்றும்,பல வருட்ங்களுக்கு பின் எழுதப்பட்ட மார்க்கின் புத்தகத்தை தவிர மற்ற எவரும் சிலுவையில் எழுதப்பட்ட காலத்தில் நேரடியாக கண்டு எழுதவில்லை என்றும்,தொடக்கத்தில் எழுதிய எதுவும் இன்றுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்றும்,இயேசுவுக்கு எதிரானவர்களும், போர்வீரர்களும் மட்டுமே இருந்த நிலையில்,உண்மையில் என்ன நடந்தது என்பதை சரியாக எவரும் சொல்லி இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார்கள்.
பல இடங்களில் இந்த விசாரணையும் தண்டனை பற்றியும் நம்பிக்கை காரணமாக மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது என்றும்...
பல இடங்களில் வசனங்கள் நீக்கப்படும்,பின்னர் சேர்க்கப்பட்டும் இருக்கின்றன என்றும்.....
இதைப் போன்ற சந்தேகங்களும்,சர்ச்சைகளும் தொடர்ந்து கிறிஸ்தவ ஆராய்ச்சியாளர்களாலேயே சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நம்பிக்கைகள் எல்லாம் சரித்திரமாக முடியாதென்பதையும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

மீண்டும், வாய்தா இல்லையென்றால் வேறு இரு வழக்குகளுடன், .....................சக்தி
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

உலகை உலுக்கிய பிரபல வழக்குகள். தொடர் - 1 Empty Re: உலகை உலுக்கிய பிரபல வழக்குகள். தொடர் - 1

Post by ஜனனி Sun Oct 30, 2011 5:01 pm

clap clap clap visil
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum