Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருவதை ஜீரணிக்க முடியாத "இந்தியா" இந்திய பாதுகாப்புத் தரப்பு கடும் அதிர்ச்சி.....?
Page 1 of 1
சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருவதை ஜீரணிக்க முடியாத "இந்தியா" இந்திய பாதுகாப்புத் தரப்பு கடும் அதிர்ச்சி.....?
இலங்கையை அடுத்து மாலைதீவுஇந்தியாவை வளைக்கிறது சீனா
- சீனாவின் ஆதிக்கம் தெற்காசியாவில் வலுப் பெறுவதற்கு இந்தியாவின்
இராஜதந்திரத் தவறுகளும் ஒரு காரணம். ஏனென்றால் இப்போது சீனாவின்
செல்வாக்குக்கு உட்பட்டுள்ள நாடுகள் அனைத்துமே, முன்னர் இந்தியாவுடன்
நெருக்கமான வரலாற்றுக் காலத் தொடர்புகளைக் கொண்டவை. இத்தகைய பெரும்பாலான
நாடுகளில் இந்திய வம்சாவளியினரே வாழ்கின்றனர். ஆனால் இந்த நாடுகளை
இந்தியாவினால் தனது கைக்குகள் வைத்திருக்க முடியவில்லை. போரின் போது
தமிழருக்கு விரோதமான நிலைப்பாட்டை இந்தியா எப்படி எடுத்ததோ, அப்படித் தான்
தனது நண்பர்களை தக்க வைத்துக் கொள்ளும் இராஜதந்திரத்தை இந்தியா சரிவரக்
கையாளவில்லை. இனிமேலும் இந்தத் தவறை இந்தியா களையாது போனால்,
தெற்காசியாவில் சீனாவின் பிடி மேலும் இறுகி விடும்.
கட்டுரையாளர் இன்போ தமிழின் இராணுவ ஆய்வாளர் சுபத்ரா
info@infotamil.ch
-இன்போ தமிழ் குழுமம் -
இனி,
தெற்காசியாவில் தன்னைச் சுற்றி சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருவதை ஜீரணிக்க முடியாத இந்தியா
- இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாயின் இலங்கைப் பயணத்தை
அடுத்து, சீனப் பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டக் குழுவொன்று கடந்தவாரம்
கொழும்பு வந்திருந்தது. மேஜர் ஜெனரல் குவான் லிஹுவா தலைமையிலான சீன இராணுவ
உயர்மட்டக் குழுவினர் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஸவையும், இராணுவத்
தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவையும் சந்தித்துப் பேச்சு
நடத்தியிருந்தனர். இதன்போது, 10 மில்லியன் யுவான் பெறுமதியான கருவிகளை
கொழும்பு பாதுகாப்புச் சேவைகள் கல்லூரிக்கு வழங்குவதற்கான உடன்பாடு ஒன்றும்
கையெழுத்திடப்பட்டுள்ளது. அதைவிட சீன இராணுவப் பயிற்சிக் கல்லூரிகளில்
இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அதிகளவில் இடம் ஒதுக்கவும், இலங்கையில்
மேற்கொள்ளப்படும் போர்ப் பயிற்சிகளில் சீனப் படை அதிகாரிகளுக்கு அதிக
இடங்களை வழங்கவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இந்த இணக்கப்பாடுகள்
இந்தியாவுக்கு இன்னும் வெறுப்பெற்றும் ஒன்றாகவே இருக்கும் என்பதில்
சந்தேகம் இல்லை.
சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் குறைப்பதற்காகவே
இந்தியா பெருமளவு முதலீடுகளை இங்கு மேற்கொண்டு வருகிறது. அதுபற்றி நேரில்
ஆராய இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் வந்து சென்ற கையோடு சீன
இராணுவ அதிகாரிகள் குழு கொழும்பு வந்தது.
இப்போது தெற்காசியாவில்
இந்தியாவின் கட்டுப்பாடுகளை மீறி, அதன் செல்வாக்கை உடைத்துக் கொண்டு சீனா
தனது பிடியை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது.
முன்னர்
இந்தியாவின் இசைவின்றி எந்த நாடும் எதுவும் செய்யாத நிலையொன்று இருந்தது.
ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. இலங்கையை அடுத்து மாலைதீவும் இப்போது
சீனாவின் பிடிக்குள் மெல்ல மெல்ல வந்து கொண்டிருப்பதான செய்தி இந்தியாவின்
பாதுகாப்புத் தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அடுத்தமாதம்
மாலைதீவில் சார்க் தலைவர்களின் உச்சி மாநாடு நடக்கவுள்ளது. அங்கு வலுவான
படைகள் இல்லாததால், சார்க் தலைவர்களின் பாதுகாப்புக்காக இலங்கையில் இருந்து
விசேட அதிரடிப்படையினர் மாலைதீவு செல்லவுள்ளனர். இந்தியா, பங்களாத்தேஸ்,
பாகிஸ்தான் போன்ற நாடுகளும் சார்க் மாநாட்டுப் பாதுகாப்புக்காக
மாலைதீவுக்கு உதவிகளை வழங்கியுள்ளன. இந்த மாநாட்டின் பாதுகாப்புக்காக சீனா
சிசிரிவி எனப்படும் வீடியோ கண்காணிப்புக் கருவிகளை மாலைதீவுக்கு
வழங்கியுள்ளது. பாகிஸ்தான், சீனா, இலங்கை, பங்களாதேஸ் இவையனைத்துமே சார்க்
நாடுகள். சார்க் தலைவர்களின் பாதுகாப்புக்கு இந்த நாடுகள் பாதுகாப்பு
உதவிகளை வழங்குவதில் சந்தேகம் இல்லை. ஆனால் சார்க் அமைப்பில் அங்கம்
வகிக்காத சீனா எதற்காக மாலைதீவுக்கு சிசிரிவி வீடியோ கண்காணிப்புக்
கருவிகளை வழங்க வேண்டும் என்ற கேள்வி முன்னரே எழுந்தது.
இந்தநிலையில்
மாலைதீவில் நீர்மூழ்கிக் கப்பல் துறைமுகம் ஒன்றை நிறுவும் இரகசிய
முயற்சியில் இறங்கியுள்ளதான தகவல் ஒன்றும் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.
இலங்கையின் பாணியில் மாலைதீவின் மீதும் சீனாவின் கண் விழுந்துள்ளது.
இலங்கையில்,
அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்றை நிறுவியது சீனா. அங்கு விமான நிலையம்
ஒன்றையும் அமைக்கிறது. அதுபோலவே மாலைதீவிலும் விளையாடத் தொடங்கியுள்ளது.
மாலைதீவின் இஹவன்டு மற்றும் அதற்கு 10 கி.மீ தொலைவில் உள்ள மாறன்டு ஆகிய
தீவுகளில் துறைமுகங்களை அமைக்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.
1192
தீவுகளைக் கொண்ட மாலைதீவு நாட்டை தனது கைக்குள் போட்டுக் கொள்வதற்கு சீனா
எடுத்துள்ள முதல் நடவடிக்கை இதுவாகும். அடுத்து மாலைதீவின் தலைநகர்
மாலியில் உள்ள சர்வதேச விமானநிலையத்துக்கு அடுத்ததாக, இரண்டாவது விமான
நிலையம் ஒன்றை ஹனிமன்டு தீவில் அமைப்பதற்கும் சீனா திட்மிட்டுள்ளது.
மாலைதீவின்
வடக்கு மாகாணத்தில் உள்ள 42 தீவுகளில் ஒன்றான இது இந்தியா மற்றுத்
இலங்கைக்கு மிகவும் நெருக்கமானது. இந்தியாவுக்குத் தென்மேற்கே 250 மைல்
தொலைவில் தான் இது இருக்கிறது. இதைவிட மறாவோ தீவில் நீர்மூழ்கித் துறைமுகம்
ஒன்றையும் சீனா அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவுக்குத் தகவல்
கிடைத்துள்ளது. எனினும் இதுபற்றிய தகவல்கள் இரகசியமாகவே பேணப்பட்டு
வருகின்றன.
கடந்த மே மாதம் சீன மக்கள் தேசிய காங்கிரசின் நிலையியல்
குழுத் தலைவர் மாலைதீவுக்குப் பயணம் மேற்கொண்ட பின்னரே இந்த அதிரடியான
மாற்றங்கள் அங்கு நிகழத் தொடங்கியுள்ளன. கிழக்கு ஆபிரிக்கா, சிசெல்ஸ்,
மொறிசியஸ், மாலைதீவு, இலங்கை, பங்களாதேஸ், மியான்மர், கம்போடியா என்று
இந்தியாவைச் சுற்றியுள்ள பல நாடுகளிலும் சீனா கடல்சார் மற்றும் பாதுகாப்பு
கட்டமைப்புகளை உருவாக்கி, உறவுகளை வலுப்படுத்தி வருகிறது.
பாகிஸ்தானில்
இன்னும் வலுவாக- பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவதார் என்ற இடத்தில்
ஆழ்கடல் துறைமுகம் ஒன்றையும் சீனா அமைத்து வருகிறது. இவையெல்லாம்
இந்தியாவைக் கலக்கம் கொள்ள வைக்கின்ற விடயங்களாகவே இருக்கின்றன.
மாலைதீவு
முன்னர் இந்தியாவின் கைக்குள் இருந்த நாடு தான். 1989ம் ஆண்டில் புளொட்
அமைப்பின் ஒரு குழுவினர் மாலைதீவுக்குக் கப்பலில் சென்று அதனைக் கைப்பற்ற
முயன்றனர். அப்போது இந்தியாவே தனது படைகளை அனுப்பி பாதுகாத்தது.அதன்
பின்னர் கடற்கண்காணிப்பு சாதனங்கள், டோனியர் கண்காணிப்பு விமானம், ரேடர்கள்
என்று இந்தியாவே மாலைதீவுக்கு வழங்கியது. ஆனால் இவற்றுக்கு அப்பால் சீனா
தனது அதிகாரத்தை மாலைதீவின் மீது செலுத்த ஆரம்பித்துள்ள ஆச்சரியம் தான்.
மாலைதீவுக்கும்
இலங்கை அரசுக்கும் இடையில் நெருக்கம் அதிகம். அண்மையில் கூட ஜெனிவாவில்
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்காக பிரசாரம் செய்வதற்கு
மாலைதீவு அதிபர் சென்றிருந்தார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கையை
காப்பாற்றும் நகர்வுகளை மாலைதீவு அதிபர் இரகசியமாக மேற்கொண்டதும்
குறிப்பிடத்தக்கது. சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழு கடந்தவாரம்
கொழும்பில் தங்கியிருந்த போது, மாலைதீவின் பாதுகாப்பு அமைச்சரும் இங்கு
தங்கியிருந்தார் என்பதும் இன்னொரு கதை. மாலைதீவுக்கும் சீனாவுக்கும்
இடையில் பாதுகாப்பு உறவுகள் பலப்படுவதற்கு இலங்கை துணை நின்றதா என்ற
சந்தேகங்களும் உள்ளன. அப்படியானதொரு நிலை இருந்தால், இந்தியா இந்த
விவகாரத்தை கடும் சினத்துடன் பார்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தன்னைச்
சுற்றி சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருவதை இந்தியாவினால் எந்த வகையிலும்
ஜீரணிக்க முடியாது. ஏனென்றால் சீனாவின் இந்த வியூகம் இந்தியாவின் கடல்சார்
திறன்களை ஒட்டுமொத்தமாக முடக்கிப் போட்டு விடும். இதனால் தான் இது
இந்தியாவை கடுமையாக கவலை கொள்ளச் செய்துள்ளது.
சீனாவின் ஆதிக்கம்
தெற்காசியாவில் வலுப் பெறுவதற்கு இந்தியாவின் இராஜதந்திரத் தவறுகளும் ஒரு
காரணம். ஏனென்றால் இப்போது சீனாவின் செல்வாக்குக்கு உட்பட்டுள்ள நாடுகள்
அனைத்துமே, முன்னர் இந்தியாவுடன் நெருக்கமான வரலாற்றுக் காலத் தொடர்புகளைக்
கொண்டவை. இத்தகைய பெரும்பாலான நாடுகளில் இந்திய வம்சாவளியினரே
வாழ்கின்றனர். ஆனால் இந்த நாடுகளை இந்தியாவினால் தனது கைக்குகள்
வைத்திருக்க முடியவில்லை.
போரின் போது தமிழருக்கு விரோதமான நிலைப்பாட்டை இந்தியா எப்படி
எடுத்ததோ, அப்படித் தான் தனது நண்பர்களை தக்க வைத்துக் கொள்ளும்
இராஜதந்திரத்தை இந்தியா சரிவரக் கையாளவில்லை. இனிமேலும் இந்தத் தவறை
இந்தியா களையாது போனால், தெற்காசியாவில் சீனாவின் பிடி மேலும் இறுகி
விடும்.
- இந்திய - சீன முரண்: மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமா?
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» இந்திய தளபதிக்கு விசா மறுப்பு : சீனாவின் நடவடிக்கைக்கு இந்தியா பதிலடி
» ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் இந்திய தேசியத்தை எதிர்த்து உறுதியாக துளிர்விடும் தமிழ்த் தேசியம்!
» சீனாவின் கடும் எதிர்ப்பை தாண்டி தலாய் லாமாவுடன் ஒபாமா சந்திப்பு
» லட்சுமண், தோனி சதம்: இந்தியா ஆதிக்கம்
» இந்தியப் பெருங்கடலில் சீன ஆதிக்கம்: முறியடிக்க இந்தியா, அமெ., திட்டம்
» ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் இந்திய தேசியத்தை எதிர்த்து உறுதியாக துளிர்விடும் தமிழ்த் தேசியம்!
» சீனாவின் கடும் எதிர்ப்பை தாண்டி தலாய் லாமாவுடன் ஒபாமா சந்திப்பு
» லட்சுமண், தோனி சதம்: இந்தியா ஆதிக்கம்
» இந்தியப் பெருங்கடலில் சீன ஆதிக்கம்: முறியடிக்க இந்தியா, அமெ., திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum