Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
நான் கண்ட இலக்கிய சரித்திர காதலர்கள்.
3 posters
Page 1 of 1
நான் கண்ட இலக்கிய சரித்திர காதலர்கள்.
நான் கண்ட இலக்கிய சரித்திர காதலர்கள்.
உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.
நீண்டு பரந்த உயர்ந்த கட்டிடம்,ஒரு பக்கம் பல்கலைக்கழகம்,இன்னொரு புறம் மருத்துவமனை,மறுபக்கம் மருத்துவ ஆராச்சி நிலையம்,நடுவில் மூன்றையும் கட்டுப்படுத்தும் நிர்வாகம்.நீண்ட ஒரு மாத விடுமுறை,இலவச ஊர் சுற்றும் பயணம் முடிந்து சென்ற என்னை அன்புடனும் நட்புடனும் வரவேற்றது நிர்வாகம்.வேலைக்கான உடன்படிக்கை ஒருமாத முன்னரே திகதியிடப்பட்டு கையெழுத்தாக,அதற்கான சம்பளப் பணத்தை காசோலையாக வைத்து வாழ்த்துகிறார் நிர்வாக இயக்குனர்.இப்படியும் நடக்குமா?பெரிய மீனைப் போட்டு சின்ன மீனா,இல்லை சிறிய மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கப் போகிறார்களா,என்ற கேள்வியுடன்,எனக்காக காட்டப்பட்ட அறைக்குள் நுழைந்து அமர்ந்து சிறிது நேரம் கண்களை மூடிக் கொள்கிறேன்.இன்று மட்டும் தான் இந்த சுதந்திரம்.முதல் நாள் பள்ளி,முதல் நாள் கல்லூரி,முதல் நாள் வேலை,முதல் நாள் முதல்இரவு, நடுக்கம்,மயக்கம்,உற்சாகம்,ஈழத் தமிழர் நிலை கண்டு கவலை,வேதனை,வந்து போகிறது.என்ன உலகம்?
காதலின் வெற்றிக்கும்,தோல்விக்கும் பெற்றோரும்,உறவினர்களும்,நண்பர்களுமே பல இடங்களில் காரணமாக இருப்பது போல்,பாலியல் வன்புணர்வு சிறுவர் பாலியல் துன்புறுத்தலுக்கும் பல இடங்களில் பெற்றோர்,உறவினர்,நண்பர்கள் காரணமாக இருப்பது காணப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டில் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டு,காடையர்கள் துணையுடன், 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து,பலருக்கு இரையாக்கி பல இலட்சம் டாலர்களை ஒருவன் சம்பாதித்த செய்தி வருகிறது.விளம்பரம் மூலமுமா இந்தக் கொடுமை,உலகம் எங்கே போகிறது?
காதல் ஒரு உன்னதமான உணர்வு என்கிறார்கள். எனக்கு தெரியாது. என்னை வளர்த்து இன்றைய நிலைக்கு, வாழ்க்கைப் படகில் ஏற்றி வைத்த என் பெற்றோரின் விருப்புக் கேற்ப நடந்து கொள்ள வேண்டும் என்பது என் கருத்தென்பதால்,அவர்களின் விருப்பத்திற்காக காத்திருக்கிறேன். நீங்கள் முணு முணுப்பது புரிகிறது. இன்றைய இருப்பத்தொராம் நூற்றாண்டில் இப்படியா என்கிறீர்கள்.நான் பட்டிக்காடாகவே இருந்து விட்டுப் போகிறேன்.திருமணத்தின் பின் காதலித்தால் போகிறது.
நான் படித்த சில காதல் இலக்கியங்கள் இவை. படித்து முடிக்கும் வரை, சுவையையும்,ஏக்கத்தையும்,கண்ணீரையும் தந்த இந்த சரித்திர இலக்கியங்களை படிக்காதவர்கள் ஒரு முறையாவது படிக்கலாம்.
சரித்திரத்திலும்,இலக்கியத்திலும் காதலித்த பிரபலமான காதலர்கள் இவர்கள். அப்பப்பா எத்தனை போராட்டங்கள்,எத்தனை பிரிவுகள்,கவலை,கண்ணீர்,சோகம்,மரணம்,மகிழ்ச்சி.
பதவியை துறந்தவர்கள், அரச பதவியை துறந்தவர்கள், கொலை செய்தவர்கள், கொண்டவனை துறந்தவர்கள்,தூக்கி எறிந்தவர்கள்,மாற்றான் மனைவியை தங்கள் சொத்தாக்கிக் கொண்டவர்கள்,மாற்றாள் கணவனை தனதாக்கிக் கொண்டவர்கள், மனைவியை,கணவனை கொன்றவர்கள்.. இப்படி பல .... காதலுக்கு இவ்வளவு சக்தியா? காதல் ஒரு உணர்வா? கண்டதும் காதல் ஏற்படுவது ஏன்? கண்டதும் காதல் என்றால்,அது எப்படி உணர்வாகிறது,உடலைப் பார்த்து காதல் வருகிறதா?உள்ளத்தைப் பார்த்து காதல் வருகிறதா?கண்ணால் பார்த்த பின் தான், காதல்,ஊடல்,கூடல்,காமம் வருகிறது என்று அனுபவித்து எழுதுகிறான் வள்ளுவன்.
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
என் முதல் காதல் ஜோடிகள் இவர்கள்.
வில்லியம் ஷேக்ஸ்பியரினால் தரப்பட்ட, ரோமியோ- ஜூலியத்(Romeo and Juliet)
மார்க் குவீன் அந்தோணி- கிளியோபாத்ரா(Anthony and Cleopadra).
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்பது போல், ஜூலியட்டைக் கண்ட ரோமியோ, மாடியில் காத்திருந்து முதல் காதலை கண்ணால் சொன்னான். காதல் மலர்ந்தது,வளர்ந்தது. நன்றாக மலர்ந்த காதல் அவ்ர்களின் அவசர புத்தியால் தற்கொலைக்கு போயிற்று.
கறுப்புத் தான் எனக்குப் பிடித்த கலரு என்று கிளியோபாத்ராவை அந்தோணி காதலித்து பின் அந்தக் காதல் பரிதாபமாக தற்கொலையில் முடிந்தது.கிளியோபாத்ராவை அரசிக்கு அரசியாக அந்தோணி அறிவித்து இராணி ஆக்கினாலும்,அந்தோணிக்கு எதிராக சீசரின் உறவினன் போர் தொடுக்கவே,காதல் கயிற்றுடன் காலன் வந்து விட்டான்.கிளியாபத்ரா இறந்து விட்டதாக பொய்யான செய்தி,போர்,வஞ்சகம் தன்னைத் தானே வாளால் குத்தி தற்கொலை செய்து கொண்டான்.அதை தொடர்ந்து கிளியோபாத்ராவும் விசத்தினால் தன்னை மாய்த்துக் கொண்டாள். ரோமியோ-ஜூலியத் காதலினால்,அவர்கள் இறப்பின் பின் இரண்டு பெரும் குடும்பங்கள் ஒன்றிணைய,கிளியோபாத்ரா-அந்தோணி காதலோ இரண்டு அரசுகளின் பகையில் சோகமாக முடிந்தது.
நெப்போலியன் - ஜோசபின்(Napolion Bonaparte and Josephine) காதலும் கண்டவுடன் தான் ஒரு விருந்தில் ஏற்பட்டது. திருமணமான ஜோசபின் அவளின் திருமண முறிவின் பின்னரே காதல் கை கூடியது. ஆனாலும் இந்தக் காதல் சிறப்பாக இருக்கவில்லை.காதல் தடுமாறுமா?நெப்போலியன் போனபாட்டின் வாழ்வில் பல காதலிகள் குறுக்கே வந்தனர். இன்றும் நெப்போலியன், ஜோசப்பினுக்கும் மற்ற காதலிகளுக்கும் எழுதிய காதல் கடிதங்கள் பிரபலமானவையாக இருக்கின்றன.
லைலா - மஜ்னு (Laila and Majnu) அராபிய காதலர்கள்.இவர்கள் காதல் நிறைவேறாமலேயே முடிந்தது.இப்படியான திருமணமாகாது முடியும் காதலை Virgin love என்கிறார்கள்.பணக்கார பெண் லைலா ஒரு ஏழைக் கவிஞனை காதலிக்கிறாள். காதலுக்கு கண் இல்லை என்பதை காட்டியது மட்டுமல்ல, பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப மஜ்னு ஒரு பணக்காரனை மணந்தது அறிந்த இந்தக் காதலின் நாயகன்,லைலா நோய்வாய்ப்பட்டு இறந்ததால், லைலாவின் கல்லறையிலேயே காதல் பைத்தியமாக பரிதாபமாக இறந்தான்.
சலிம் - அனார்கலி(Salim and Anarkali), அனைவரும் தெரிந்த காதலர்கள். அக்பரின் மகனான சலிம் அரசகுமாரனும் நாட்டிய ராணி அனார்கலியும் காதலித்து பின் அவர்களின் காதல் கண்ணீர் கதையாக மாறியது.அக்பரால் அனார்கலி என்று அழைக்கப்பட்ட, நதீரா என்ற இந்த அழகியை ஒரு நடன நிகழ்ச்சியில் கண்ட சலீம் காதல் வசப்பட்டான். சலீமை காப்பாற்ற அக்பரின் தண்டனையை ஏற்று,ஒரு நாள் இரவு சலீமுடன் தங்க அனுமதி தர வேண்டும் என்ற நிபந்தனையுடன், உயிருடன் கல்லறையில் சாவை தழுவிக் கொள்ள சம்மதித்தாள் அனார்கலி.சலீமுடனான காதலுக்காக தனது உயிரையே கொடுக்க முன் வந்தாள் அனார்கலி. ஆனாலும் பின்னர் வந்த செய்திகளில்,சுரங்க வழியாக நாட்டை விட்டு வெளியேற அக்பர் சம்மதித்து வெளியேற்றியதாகவும்,இல்லை அது தவறு, கல்லறையிலேயே உயிரை துறந்தாள் என்றும் வேறுபட்ட கருத்துக்கள் உண்டு.
ஷாஜகான் - அர்ஜுமண்ட் பானு, (Shah Jahan and Mumtaz Mahal) காதலுக்காக உருவானது தாஜ்மகால்.தனது மூன்றாவது மனைவிக்காக ஆக்ரா நகரில் யமுனா நதிக் கரை ஓரம் உருவான இந்த தாஜ்மகால், காதலின் சின்னம்,உலகின் அதிசயம் என்கிறார்கள்.மனைவி மேலே காதல் கொள்ளடா என்பதற்கேற்ப,மனைவி மேல் கொண்ட காதலுக்காக மாளிகையை கட்டிய ஷாஜகான் இறுதியில் தன் மகனால் சிறை வைக்கப்பட்டு பரிதாபமாக இறந்தான். ஆனாலும் தாஜ்மஹால், ஷாஜகான் மனைவி மேல் கொண்ட காதலுக்காக கட்டியதா இல்லை மனைவியின் வேண்டுகோளுக்காக கட்டப்பட்டதா?மும்தாஸ் தனது பதின்நான்காவது குழந்தையை பெற்ற போது, இறக்கும் தருணத்தில் இருந்த அவள் கேட்ட நான்கு கோரிக்கைகளில் ஒன்றான நினைவு சின்னமே இந்த மாளிகை என்பதை விட வேறொரு செய்தியும் இருக்கவே செய்கிறது. பலம் வாய்ந்த ஷாஜகானின் முகலாய அரசு, ஜெய்சிங் என்ற இந்து மன்னனிடமிருந்து கைப்பற்றிய மாளிகையை, பேர்சிய கட்டிட கலைஞர்களை வைத்து மறுசீரமைக்கப்பட்டதே இந்த தாஜ்மஹால் என்ற மாளிகை என்ற வாதம் சரித்திர ஆய்வாளர்களிடமும் இன்றும் உள்ளது என்பதையும் நாம் மறக்க முடியாது.இது பற்றி பி.என்.ஒக் தனது ஆராய்ச்சி நூலில் தாஜ்மகால் கி.பி.1155 ளில் கட்டப்பட்ட இந்துக் கோயிலின் மறு வடிவமே என்கிறார்.இதை ஏற்றுக் கொண்ட Dr.V.S.கொட்போல், ராஜா மான்ஸிங்கிற்கு சொந்தமாக இருந்த மாளிகையை அவரின் பேரனான ராஜ்சிங்க் கிடமிருந்து கைப்பற்றியே தாஜ்மகால் மாற்றி வடிவமைக்கப்பட்டது என்கிறார்.
மாடம் மேரியும் - பியரே குயுரியும்(Marie Curi and Pierre Curie) காதலித்து மணம் செய்து திருமண வாழ்க்கை நடத்தி சாதனை செய்த காதல் ஜோடியாவர்கள்.இவர்களின் கண்டுபிடிப்புக்கள் ஏராளம்.போலந்து நாட்டில் பிறந்த மரியா குளோடோவ்ஸ்கா
என்ற மேரி, பியரே குயுரியை திருமணம் செய்து பௌதீக துறையில் இருவரும் இணைந்து செயலாற்றிய ஜோடிகளாவர்.இவர்களின் காதல் வெற்றி.
பாரிஸ் - ஹெலேனா(Paris and Helene) ஜோடி(iliyad by Homer), இன்று வரும் தமிழ் படங்களைப் பார்த்தாரோ என்னவோ பாரிஸ், கிரேக்க அழகி இராணி ஹெலேனாவை கடத்தி சென்று விட்டார். ஹெலேனாவை மீட்டெடுக்க போர் தொடுத்தான் அரசன். டொர்ஜான்(Trojan war) போர் எனப்படும் போரில் பாரிஸ் கொலை செய்யப்படவே இராணி ஹெலேனா கட்டாயத்தின் பேரில் அரசனுடன் நாடு திரும்பினாள். பாரிஸ் கொல்லப்பட்டது தெரிந்தும் ஒரு நாள் வருவான் என காத்திருந்தாள்,காத்திருந்தாள்,காத்திருந்தாள்.......................
ஓடிசாஸ் - பெனிலோப்(Odysseus and Penelope), மேலே சொன்ன ரோஜான் யுத்தத்தில் பெரும் பங்காற்றிய வீரன் ஓடிசஸ்(ஹோமரின் ஓடிசி காவியம்) மனைவி பெனிலோப், திருமணத்தின் பின் கணவனுக்கு துரோகம் இழைக்காது பத்தினியாக வாழ வேண்டும் என்பதற்கு சான்றாக வாழ்ந்தவள்,இருபது வருடங்களாக பல கஷ்டங்களுக்கு மத்தியில் தன் கணவனின் வருகைக்காக காத்திருந்தவள்.இந்த திரோஜன் யுத்தத்தில் தான்,மிகப் பெரிய போர் தந்திரமாக திரோஜன் குதிரையை களம் இறக்கி வெற்றி கொண்டார்கள்.
ஒர்பியுஸ் - யுரிடிஸ்(Orpheus and Eurydice) கிரேக்க பாடகனும் அவன் மனைவியும் வாழ்ந்த வாழ்க்கை, சாவித்திரி சத்தியவான் கதையை நினைவூட்டுகிறது. சத்தியவான் உயிருக்காக, சாவித்திரி இயமனுடன் போராடியதாக சொல்வது போல், ஒபியூஸ் தன் மனைவி யுரிடிஸ் உயிரை திரும்பிப் பெற கீழுலகம் வரை சென்று, தன் பாட்டால் அங்குள்ளவர்களைக் கனிய வைத்தான்.அந்த பாட்டால் கவரப்பட்டு, மீண்டும் உலகுக்கு செல்லும் வரை பின்னால் வரும் மனைவியை திரும்பிப் பார்க்கக் கூடாது என்ற நிபந்தனையுடன், உயிர் கொடுக்கப்பட்ட போது,மேல் உலகை வந்தடையும் போது சந்தேகம் கொண்டு பார்த்ததனால், அவளை மீண்டும் அடைய முடியாமல் போய் விட்டது.
அபர்லாத் - ஹேலோய்ஸ் (Aberlard and Heloise) பிரான்ஸ் நாட்டில் மத போதகரான அபர்லார்ட் மதக்கல்வி சொல்லி கொடுக்க சென்று, மாணவியான ஹேலோய்ஸ் ஐ காதலித்து,வளர்த்த மாமனுக்கு தெரிய வரவே, நம் சினிமாப் போல் காடையர்களால் அடித்து நொறுக்கப்பட்டு துரத்தப்பட்டார்.காதலி ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டாலும் கூட கட்டாயமாக பெண் துறவியாக்கப்பட்டார்(nun)காதலர்கள் பிரிக்கப்பட்டாலும் உணர்வு மறையவில்லை.அவர்கள் பரிமாறிக் கொண்ட காதல் கடிதங்கள் இன்றும் உன்னதமாக பேசப்படுகிறது.இருவரும் கடைசி வரை துறவியாகவும்,பெண் துறவியாகவும்(Monk and Nun) வாழ்ந்தார்கள்.அவர்களின் காதல் உணர்வு மறைந்ததா?
காதரின் -கிரிகோரி (Catherine the great and Grigory Potemkin) ரஸ்சிய சார் மன்னனின் மனைவியான காதரின், தனக்கு காவலாக இருந்த போர் வீரன் மேல் காதல் கொண்டு,அவன் துணையுடன் புரட்சி நடத்தி ஆட்சிக்கு வந்ததும்,தன் கணவனான சார் மன்னனை விஷம் வைத்து கொலை செய்ய வைத்தது காதலுக்காகவா இல்லை ஆட்சி அதிகாரத்திற்காகவா என்ற கேள்வி இருந்தாலும்,கிறிகோரிக்கு பெரிய பதவி கொடுத்து தன்னுடன் வைத்துக் கொண்டாள். அவன் இறந்த போது அவன் பிரிவால் ஏற்பட்ட மன உளைச்சலிருந்து அவள் கடைசி வரை மீள முடியவில்லை.காதல் படுத்தும் பாடு?
கேட்ரூட் - அலிஸ் (Getrude Stein and Alice Babette Toklas ) இரண்டு பெண்களின் காதல் கதை இது.அமெரிக்காவில் பிறந்து தன் கல்வியை தொடர முடியாமல் போகவே, சகோதரனுடன் பிரான்ஸ் ற்கு வந்த பிரபலமான எழுத்தாளரும், பிக்காசோவின் நண்பருமான ஜேர்மன்-யூத இன பெண்ணான கேட்ரூட்,தனது உதவியாளராக, டைபிஸ்ட்டாக,சமையல்காரியாக இருந்த அமெரிக்க யூத இன அலிஸ்சை வாழ்க்கை துணையாக்கிய இவர்கள் காதல், பாரிஸ்ஸில் மலர்ந்து அமெரிக்காவில் வளர்ந்து மீண்டும் பாரிஸ்ஸில் விருட்சமாகியது. கேற்றூட்டின் நிழலாக வாழ்ந்த அலிஸ் கடைசி வரை ஜோடியாகவே வாழ்ந்தார். ஓரின சேர்க்கையின் (Lesbian)ஜோடியாக உலகை வலம் வந்த இவர்கள் இறுதி வரை பிரியாமல் வாழ்ந்தது அதிசயம் தான்.
பிரின்ஸ் எட்வர்ட் - வல்லிஸ் சிம்ஸ்சன்(Prince Edward and Wallis Simpson). பெரிய பிரித்தானியா,வட ஐயர்லாந்தின் அரசராக பத்து மாதங்களே ஆட்சி புரிந்த எட்வாட், இரண்டு முறை திருமணம் புரிந்து விவாகரத்து செய்த அமெரிக்க பெண்ணான வல்லிஸ் சிம்ஸனை காதலித்து மணம் செய்து, முடி துறந்தார். தன் காதலுக்காக முடி துறந்த இவரின் மனைவி வல்லிஸ், வேறு சிலருடன் தொடர்பு வைத்திருந்ததாக பல சர்ச்சைகள் இன்றும் உள்ளன.
போகொகோண்டாஸ்- சிமித்(Pocahontas and Smith), அமெரிக்க இந்திய பெண்ணான போகொகோண்டாசும் அங்கு குடியேற வந்த சிமித் என்ற ஆங்கிலேயனுக்கும் இடையில் மலர்ந்த நட்பு அதிக பலனைத் தரவில்லை. போகொகோண்டாஸ் இரண்டு முறை சிமித்தின் உயிரைக் காப்பாற்றினாள்.தொடர்ந்து வந்த ஆங்க்கிலேயரால் வஞ்சிக்கப்பட்டதும்,சிமித் இறந்து விட்டான் என்று பொய் உரைக்கப்பட்டதும் அதனால் அவர்கள் நட்பு காணாமல் போக, பின்னர் அவ்ள் ரெபேக்க என்ற பெயருடன் மதம் மாறி ஜோன் ரோல்ப் என்பவனை மணந்து கொண்டாள். பின்னர் அவள் பிரிட்டனுக்கு சென்ற போது இறந்ததாக கூறப்பட்ட சிமித்தை கண்டு அதிர்ச்சியுற்று கல்ங்கினாள்.அதன் முடிவு ஆறாத் துயருடன் வாழ்வை முடிக்க நேர்ந்தது.
Dr,சிவாஸ்கோ-லாரா (Dr.Zhivago and Lara), நோபல் பரிசு பெற்ற இந்த நாவலில் வரும் சிவாஸ்கோ வளர்ப்பு சகோதரியை மணம் முடிக்கிறார். லாரா தன் தாயின் காதலனுடனும் தொடர்பு கொள்கிறாள்..இதை அறிந்த தாய் அமெலியா தற்கொலை முயற்சிக்கு சென்று காப்பாற்றப்படுகிறாள்.இந்த காதல் தொடர்பை முடிவுக்கு கொண்டு வர,லாரா தன் பள்ளித் தோழன் அண்டிபோவை மணம் முடிக்கிறாள்.பின் சிவாஸ்கோவும் லாராவும் மருத்துவமனையில் ஒன்றாக பணி புரிய வரும் போது காதல் வசப்படுகிறார்கள்.அப்போது லாராவின் கணவன் அண்டிபோவ் திரும்புகிறான். சிவாஸ்கோவுடன் பேசியும்,பிரச்சனை முடிவுக்கு வராதென்ற நிலையில் அன்று இரவே லாராவின் கணவன் அண்டிபோவ் தற்கொலை செய்கிறான். இப்போ யார் வருகிறான்?லாராவின் தாயின் காதலன் மீண்டும் குறுக்கிடுகிறான்.ஐயையோ தலையை சுற்றுகிறது. வேண்டுமானால் நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதை விட துஷ்யந்தான் சகுந்தலையும்,நளன் தமயந்தியும்,கோவலன் மாதவியும், மணிமேகலை மீது ஒருதலைக் காதல் கொண்ட உதயகுமாரனையும் நாம் அறிவோம்.
இராமன் - சீதை, மகாத்மா காந்தியே இராமனை ஒரு சாதாரண மனிதனாகவே மதிக்க மாட்டேன் என்று சொல்லி விட்ட பின்,நான் எப்படி இந்த ஜோடியை காதல் ஜோடி என்று சொல்ல முடியும்.காதலில் சந்தேகம் வந்தால் அது உண்மைக் காதல் அல்ல. இராமன் சந்தேகப்பட்டான்,தீ மூட்டி தீக்குழிக்க வைத்தான்.கர்ப்பிணி சீதையை இரக்கமின்றி தனியாக காட்டிற்கு அனுப்பினான்,சித்திரவதைக்கு உள்ளாக்கினான். நாட்டவரின் கேலிக்கு உள்ளாகி,சந்தேகத்தின் உச்சிக்கே சென்று பைத்தியம் பிடித்து தற்கொலை செய்த ஒருவனை காதலன் என்று சொல்ல முடியாது.(வால்மீகி+இந்தி இராமாயணம்)
காதல் உண்மையானது என்றால் போராடி ஜெயிக்க வேண்டும்.காதலன் காதலியை,காதலி காதலனை ஏதோ காரணங்களை காட்டி ஏமாற்றி பிரிவது காதலா?
உண்டார்க ணள்ளது அடுநறாக் காமம் போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
நல்ல விறுவிறுப்பூட்டும் காதல் கதைகள்.படியுங்கள்.
மீண்டும் அடுத்த வாரம் வருகிறேன்................................சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: நான் கண்ட இலக்கிய சரித்திர காதலர்கள்.
சக்தி அவர்கள் ஊருக்கு கிளம்பியாச்சா ?
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்
» நான் கண்ட தமிழகம் அன்றும் இன்றும்.
» கவிதையாய்க் காதலர்கள்...!
» நான் தலைமறைவாகவில்லை: போலீஸ் தேடி அலையுறதுக்கு நான் என்கவுண்டர் குற்றவாளி அல்ல : நடிகர் வடிவேலு
» நவீன புன்னகைமன்னன் …..காதலர்கள் தற்கொலை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum