TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நான் கண்ட தமிழகம் அன்றும் இன்றும்.

3 posters

Go down

நான் கண்ட தமிழகம் அன்றும் இன்றும். Empty நான் கண்ட தமிழகம் அன்றும் இன்றும்.

Post by sakthy Thu Jan 19, 2012 11:37 pm

உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

நான் கண்ட தமிழகம் அன்றும் இன்றும்.

சில காலம் நம்மை யாராவது பார்க்காது இருந்து பின்னர் பார்க்கும் போது, என்ன மெலிந்து போய் விட்டாய் என்றோ, ஒரு சுற்று பெருத்து விட்டாய் என்றோ, அன்று பார்த்த போலவே மாறவில்லை என்றோ சொல்வதை கேட்போம். அடிக்கடி பார்க்கும் போது நமக்கு வித்தியாசங்கள் தெரிவதில்லை.சில கால இடைவெளிக்குப் பின்னர் பார்க்கும் போது மாற்றங்கள் நன்றாக கவனிக்கக் கூடியதாக இருக்கும்.அது போல் ஐந்துக்கு மேற்பட்ட வருடங்களுக்கு பின்னர் நீண்ட விடுமுறையில் சென்ற நான், தமிழ்நாட்டைப் பார்த்த போது பல மாறுதல்களைக் காண முடிந்தது. ஆனால் எதிர்பார்த்த மாற்றங்களை விட விரும்பத்தகாத மாற்றங்களே அதிகமாக இருந்தது.

நாகரீகம் வளரும் இன்றைய நாளில் சர்வமயக் கொள்கையில் பல நல்ல மாற்றங்களை எதிர்பார்த்தும் கூட அவை எதுவும் இல்லாமல்,அவற்றுக்கு பதிலாக நாகரீக உடை,ஆங்கில மோகம்,தயாரிக்கப்பட்ட திடீர் உணவுகள்,கண்ணை மூடிக் கொண்டு அமெரிக்காவை பின்பற்றும் மனநோயாளிகள் இப்படியான வளைர்ச்சியையே காண முடிந்தது.

அதே மூட நம்பிக்கைகள்,அதே மத நம்பிக்கைகள்,அதே சாதி பிரிவினைகள், அதே ஏழைகள்,பிச்சைக்காரர்கள்,அதே குப்பைகள்,மழை நீர் தேங்கிய சாலைகள்,மழை நேரம் தண்ணீரை நம் உடைகளில் அடித்து செல்லும் வாகனங்கள் மாறவே இல்லை.
அலுவலங்களில் அதே லஞ்சம், கைகளில் பணத்தை வைக்க சொல்லும் சில காவல்துறை நண்பர்கள்,காவல்துறை உங்கள் நண்பன் என்று விளம்பரப் படுத்தினாலும் கூட அதே மரியாதையற்ற வார்த்தைப் பிரயோகம்,பஸ் வண்டிகளில் அதே கெடுபிடியும் சில்லறை கொடுக்காத நடத்துனர்களும்,ஓடி சென்று ஏறிக் கொள்ளும் பயணிகள், பெண்களையும், குழந்தைகளையும்,முதியோரையும் ஒதுக்கித் தள்ளி விட்டு ஏறி இடம் பிடிக்கும் சில மனிதர்கள் எல்லாமே தொடருகின்றன.

மருத்துவ நிலையங்களில் அதே கெடுபிடி,ஏழைகள் பாமரர்கள் அன்று போல் இன்றும் அதே ஒடுக்கப்படும் நிலை,பணத்திற்காக அவசர நோயாளிகள் கூட கவனிப்பாரற்ற நிலை தொடரத்தான் செய்கின்றன. ஒரு வேளை வல்லரசாவதற்கான முன்னோடி இது தானோ?
பதுக்கல், தங்களுக்கு விரும்பிய விலைகளில் விற்பனை,நியாய விலைக் கடைகளில் அதே வரிசை,பழுதடைந்த நாட்பட்ட உணவுப் பொருட்கள்,வேண்டியவர்களுக்கு சலுகை,பின் வழியே செல்லும் உணவுப் பொருட்கள் எதுவும் மாறவில்லை.
கோயில்களுக்கு நான் போவதில்லை என்றாலும் அம்மாவின் கட்டாயத்தின் பேரில் சென்ற போது கடவுளுக்கு லஞ்சம்,வேண்டியவர்களுக்கு முன்னுரிமை ஆனாலும் பூசகர்கள் மட்டும் விலை உயர்ந்த ஆடை அணிகலங்களுடன் ராஜாக்கள் போல் பல கோயில்களில் காணப்பட்டனர். பிச்சைக்காரர்களுக்கு காசை விட்டெறியும் அதே பக்தர் கூட்டம்,அவர்களை மதிக்காத அதே மக்கள் கூட்டம்.புரியாத மொழியில் பூசைகள். சமஸ்கிருத மொழி புரியாமல் கடவுளும் திணறுவதைக் காண முடிந்தது.

ஆப்கானின் ஆரிய இராணி குஷ்பு தமிழர்களுக்கு உபதேசம் செய்யும் அளவிற்கு தமிழனின் நிலை உயர்ந்து இருப்பதை உணர முடிந்தது. விவேக் ஒரு படத்தில் சொல்வது போல்,அடி வாங்கி அடி வாங்கி மறத் தமிழனுக்கு மரத்து போச்சுது. இல்லையேல் ஈழத் தமிழன் இனப் படுகொலைக்கு ஆளான போதும்,தமிழக மீனவன் கொல்லப்படும் போதும்,கேரளா அடாவடித்தனம் பண்ணும் போதும், புஸ் வானம் போல் ஓங்கி குரல் கொடுத்து விட்டு அதே வேகத்தில் வீழ்ந்து படுத்து விடுகிறதே தமிழினம்.தமிழன் தங்கக் கூட்டில் வாழும் கூண்டுக் கிளி போல் பணமும் பதவியும் போதும் என்று அடிமை வாழ்வு வாழ்கிறான்,வாழ விரும்புகிறான் என்றே சொல்ல முடிகிறது.எங்கும் தமிழன் சலுகைகளுக்காக பிரிந்து வாழ ஆசைப்படுகிறான்.கேரளத்தின் ஒற்றுமையை தமிழ்நாட்டில் காண முடியவில்லை.

முன்பு அநேகமான சாலைகளில் சாலை விதிகளை கடைப் பிடிக்கும் வகையில், கோடுகள்(Road markings) அடித்து பிரிக்கப்பட்டு இருக்கும் சாலைகள் மிகக் குறைவாகவே இருந்தது. இப்போது அதிக சாலைகளில் போவதற்கும் வருவதற்குமாக சாலைகள் அழகாக பிரிக்கப்பட்டு கோடுகள் அடிக்கப்பட்டு இருந்தது.ஆனால் அதை கடைப் பிடித்து வாகனங்களை ஓட்டும் ஓட்டுனர்கள் இல்லாமலேயே இருந்தனர். அநேகமான ஓட்டுனர்கள் நடுவே உள்ள கோட்டின் நடுவே தங்கள் வாகனத்தை செலுத்தி செல்வதையும்,ஒரு வாகனத்தை முந்தி செல்லும் போது மற்ற வாகனங்களை கவனியாது தங்கள் இஸ்டப்படி செல்வதையும்,கோடுகளின் நிறங்களை கவனிக்காது செல்வதையும்,தாராளமாகவே ஹாரனை அடித்து செல்வதையும் காணக் கூடியதாக இருந்தது. அமெரிக்காவில் நாம் வாகனம் ஓட்டும் போது சிறிய தவறு செய்தாலும் விசில் அடித்துக் கொண்டு வெள்ளைக்கார வடிவேலன் வந்து குசலம் விசாரிக்க ஆரம்பித்து விடுவான்.இங்கே? வீதி விதிகளை அலட்சியம் செய்வதால் தானோ அதிக சாலை விபத்துக்கள் நடக்கின்றன என்ற கேள்வி எழவே செய்கிறது.எது எதற்கோ அமெரிக்காவை பின் பற்றும் நாம்,தேவையானவற்றை நல்லவற்றை பின்பற்ற மறுக்கிறோம்,மறந்தும் விடுகிறோம்.

வெளிநாடுகள் பலவற்றில் நடைப் பயணிகள் சாலையை கடக்க முயற்சித்தால்,அந்த இடத்தில் கடப்பதற்கு(Pedestrian crossings இல்லாத) முடியாத நிலை இருந்தாலும் கூட, வாகன ஓட்டுனர்கள் வாகனத்தை நிறுத்தி நடைப் பயணிகளை கடந்து செல்ல அனுமதிப்பார்கள்.யாரும் சாலையை கடக்க முடியாதபடி தடை செய்யப்பட இடமானாலும் நின்று நிறுத்தி செல்வார்கள். ஆனால் இன்று ஒரு சிறுமி அரை மணி நேரமாக காத்திருந்தும் கூட எவரும் கவனிக்கவில்லை, நிறுத்தவுமில்லை.அந்த சிறுமியை நினைத்த போது,நம் கண்ணில் வந்தது முதியோர்கள்,கண் தெரியாதவர்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் நிலை என்ன என்ற கேள்வி தான். சாலை விதிகளை மீறுவோர் தொகை முன்பை விட அதிகமாகவே இருந்தது. சட்டம் கண்ணை மூடி இருப்பது காரணமா?தேவையற்ற பலவற்றுக்கு மூக்கை நுழைக்கும் சட்டம்,தேவையான பல வற்றுக்கு கண்களை மூடிக் கொள்கிறது.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர் ஆகி வருவதையும்,ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறி வருவதையும் நன்கு காண முடிந்தது. உணவுக்கு தட்டுப்பாடு வரும் என்று எச்சரிக்கை வந்தும் கூட விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வருவதும்,காடுகள்,மரங்கள் அழிந்ததையும் காண முடிந்தது. உயர்ந்த கட்டிடங்கள் வளர்ந்தன,விவசாய நிலங்கள் அதே வேகத்தில் அழிந்து வருவதை காண முடிந்தது. வேறு பல நாடுகளில் விவசாய நிலங்கள் சுவீகரிக்கப்படும் நிலை வருமாயின் அதற்கு ஈடாக அதே அளவில் விவசாய நிலங்களை உருவாக்கிய பின்னரே அனுமதிக்கிறார்கள். ஆனால் இங்கோ நிலை மாறி இருப்பதை காண முடிந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஏரிகள் வாய்க்கால்கள் கூட காணாமல் போய் விட்டன. எங்கே அவை? அழிந்து விட்டனவா இல்லை நில சுவீகரிப்பில் காணாமல் போய் விட்டனவா?

ஆற்றங்கரையின் மரமும் அரசு அறிய; வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றோ;ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்; பழுதுண்டு வேறோர் பணிக்கு.
அன்று நானிலமாக பிரித்து அவற்றை பேணிக் காத்து வந்தனர் தமிழர்கள்.கிராமத் தலைமையின் கீழ், சம்வத்சரவாரியம்(பொது), தோட்டவாரியம், ஏரிவாரியம், கழனிவாரியம்(மருதநில வயல்),பஞ்ச வாரியம்(வரி), கணக்குவாரியம், தடிவழி வாரியம்(வயல் பாதை) எனப் பிரித்து செயல்படுத்தி வந்தனர்.ஆனால் அறிவியல் வளர்ந்ததாக கூறி பெருமைப்பட்டுக் கொள்ளும் இன்றைய கணினி உலகில், மொஹென்சதாரோ ஹரப்பா போன்ற நகர அபிவிருத்தியைக் கூட, முறையாக செய்ய முடியாது தவிக்கிறது மனித இனம். எங்கோ போட வேண்டிய கழிவு குப்பைகள் கூட நகர எல்லையில் கொட்டப்பட்டு அதற்குள் மக்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள்.ஆனாலும் அழகிய மெரினா கண்ணைக் கவர்ந்தது.

தமிழர்கள் பலர் தமிழை பேச வெட்கப்படும் நிலை குறையவில்லை. வெளிநாட்டு வேலைகள் குறைந்தும் கூட ஆங்கில மோகம் குறையவில்லை, ஆங்கிலத்தை சரியாக பேசவும் முடியவில்லை.தமிழை பேச வெட்கப்படும் தமிழர்கள் அதிகரித்துள்ளதை நன்கு காண முடிந்தது..ஒரு சமயம் இது என் அம்மா இல்லை என்று கூறக் கூடிய நிலை கூட வந்து விடுமா?.

ஆபாச விடுதிகள்,ஆபாச நடனங்கள்,தமிழ் பெண்களின் கற்பை விலை கூவி விற்கும் மாமாக்களின் தர்பார் அளவுக்கு அதிகமாகவே வளர்ந்துள்ளது.சென்னை மெரினா, கோவை,தஞ்சை,மகாபலிபுரம் என்று நாம் சென்ற இடமெங்கும் காதலர் தொல்லை அத்துமீறல் அதிகரித்திருந்தது.அது மட்டுமல்ல பல ஆபாச விடுதிகள்,நடன விடுதிகள் சென்னையிலும் சுற்றுப் புறங்களிலும் காவல் துறையின் பாதுகாப்புடன் தாராளமாகவே நடைபெற்று வருகின்றன.அங்கு ஆபாச நடனமும்,மதுவும்,பாலியல் தொழிலும் கொடி கட்டி பறக்கிறது. டீனேச் மாணவிகள் தாராளமாகவே பங்காற்றுவது மட்டுமல்ல, மதுவுடன் நன்றாக புகையையும் ஊதித் தள்ளுகிறார்கள். பார்த்துக் கொண்டு சென்ற எனக்கு, enjoy தம்பி, என்று ஒரு அக்கா சொன்னது அருவருப்பாக இருந்தது.இவை எல்லாம் எங்கிருந்து வந்தன,எப்படி வந்தன?

அத்துடன் கைத்தொலைபேசி இணையத்தளை குற்றங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவு வளர்ச்சி அடைந்துள்ளது.இதில் கைத்தொலைபேசி மூலம் தனிப்பட்ட, பொது இடங்களில் படம் பிடிக்கப்படுவதும் பெண்களை பயமுறுத்தி அராஜகம் பண்ணும் செயலும் அதிக இடத்தை பிடித்துள்ளது. இளைஞர்கள் கூட வெட்கப்படும் அளவுக்கு,ஏன் அமெரிக்கர்கள் கூட திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நிலைமை மோசமாக இருந்தது.கற்பளிப்பு,rape, நிலை குறைந்து, date rape and prostitution அதிகரித்து முதல் இடத்தை பிடித்து விட்டதை அறிய முடிந்தது.

தமிழ்நாட்டில் வாழும் உங்களில் பலருக்கு நான் சொல்வது மிகைப் படுத்தி கூறுவதாக தெரியும்.ஆனால் உண்மை அதுதான்.பல வருடங்களுக்குப் பின்னர் பார்க்கும் போது வித்தியாசங்கள் நன்றாகவே தெரிந்தன. தான் கண்டவற்றை,கேட்டவற்றை தன் பெண் பார்த்து விடக் கூடாது என்ற ஆதங்கத்தில் மறைக்க நினைக்கும் தாய், தங்கையின் கண்களையும் காதுகளையும் மூட முயற்சிக்கும் அம்மாவின் செயல்,எத்தனை நாள் தான் மறைக்கப் போகிறார்கள் என்ற கேள்வியைத்தான் எழுப்பியது. இவை எல்லாம் கலாச்சாரம், பண்பாடுகள் என்று சொல்லி சொல்லியே வளர்ந்த,வளர்க்கப்பட்ட, வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாட்டில் தான்.

இதே சமயம் என் அம்மாவிற்கு தெரிந்த,அறிமுகமான சில கவிஞர்களை சந்தித்தோம். அனைவருமே அதிக காட்டமாக பதில் தந்தனர். என்ன நடந்தது? தனுஷின்
கொலைவெறி பாடல் தான் என்று தெரிய வந்தது. பெண்மை என்பதன் பொருள் மென்மை.அது போல் காதல் என்பதும் ஒரு மென்மையான உணர்வு தான். அதைக் கொச்சைப் படுத்துவது போல்,பெண்களை மறைமுகமாக போதைப் பொருளாக எண்ணுவது மட்டுமல்ல, சினிமாவை வழிகாட்டியாக கொண்டு ஈவ்டீசிங்க்,பஸ்களில் ரகளை, பள்ளிகள் கல்லூரிகளில் மாணவிகளுக்கு முன் அந்தப் பாடலை பாடியே தொல்லை தரும் கூட்டம், போன்ற முறையற்ற கீழ்த்தரமான செயல்களுக்கு துணை போகும் பாடலாக பலரும் பார்த்தனர்.அப்படி நடக்கவும் செய்ததை காவல்துறை செய்திகள் தெரிவித்தன. இதற்கு பாராட்டுக்கள்,பரிசுகள்,வாழ்த்துக்கள்,தங்க மெடலுகள் என்று கூறி, அவள் விகடன் இதழில் வந்த சில கவிஞர்களின் கருத்துக்களை காண்பித்தனர்.
எங்கே போகிறது தமிழகம்? பாராட்டுக்களையும்,பரிசுகளையும் பெறுவதற்கு நம் தமிழ் தானா கிடைத்தது? தமிழனின் பலவீனம் கேரளக்காரர்களுக்கும் தெரிந்து விட்டதா?மக்களை வழி நடத்தி செல்லும் என்றெண்ணிய சினிமா என்ற மிகப் பெரிய ஊடகம்,அன்று முதல் இன்று வரை அரசியலையும், கலாச்சாரத்தையும்,அன்னை மொழியாம் தமிழையும் எங்கே கொண்டு சென்று விட்டது என்ற கேள்வியுடன் அவர்களிடமிருந்து விடை பெற்றோம்.
ஆனாலும் கொலைவெறி பாடலுக்கு எதிராக உருவான,கொலைவெறி Jaffna edition,மற்றும் பெண்கள் தயாரித்த கொலைவெறிப்பாடல் பலரைக் கவர்ந்ததை காண முடிந்தது.ஈழத்தமிழர்கள் பாடலும்,பெண்களின் பாடலும் தனுசின் கொலைவெறிக்கு கொடுத்த சாட்டை அடையாக காண முடிந்தது.

அம்மாவால் சேகரிக்கப்பட்ட சில பழைய குமுதம்,கல்கண்டு,கல்கி,ஆனந்தவிகடன் போன்ற தமிழ் சிற்றிதழ்களை புரட்டினேன். சினிமாவிற்கு இரண்டு பக்கங்களாக இருந்தது. கதை கட்டுரை, மு.வ,அகிலன்,கல்கி,ந.பா.,ஜெயகாந்தன் போன்றவர்களின் தொடர்கதைகள்,சரித்திர கதைகள், இப்படி பல அவற்றில் இருந்தன. ஆனால் இன்று அவற்றின் இடத்தை சினிமா ஆக்கிரமித்துக் கொண்டது.சிறந்த அட்டைப்பட ஓவியங்களை, சினிமா நடிகைகளின் ஆபாசப் படங்கள் ஆக்கிரமித்து விட்டன.
ஆனாலும் ஜே யின் கைக்குள் அகப்பட்டுக் கொண்ட அண்ணா நூல் நிலையம் போன்ற சில நூலகங்கள் என்னைப் போன்ற படிக்கும் தாகம் கொண்டவர்களுக்கு இன்றும் இருக்கத் தான் செய்கின்றன.

மார்கழி உற்சவங்கள்,கர்நாடக கச்கேரிகள் இசைத் தாகத்தை தீர்க்க செய்தாலும், அங்கும் சினிமா ஆக்கிரமிக்கவே செய்துள்ளது. சிறு வயதில் பெற்ற கர்நாடக அறிவை வைத்து கச்சேரி கேட்க சென்ற எங்களுக்கு சினிமா பாடல்களை பாடும்படி வற்புறுத்திய சிலரின் செயல்களும், பாடியவர்கள் பலரும் சமஸ்கிருத சுலோகங்களையும் தெலுங்கு கீர்த்தனைகளையும் பாடி தமிழை தமிழ்நாட்டில் பின்னுக்கு தள்ளியது வேதனையை தரவே செய்தது.ஆனாலும் ஒரு புதுமையை காண முடிந்தது.முன்னர் நாதஸ்வர கச்சேரிகளில் நாதஸ்வரத்துடன் தவிலும் சேர்ந்து இசைக்கப்படும். தற்போது பல கச்சேரிகளில் தவிலுக்குப் பதில் மிருதங்கமும் வயலினும் சேர்க்கப்பட்டு விட்டதைக் காண முடிந்தது.கூடவே தவிலையும் சேர்த்திருக்கலாமே!

சினிமா போல்,தொலைக்காட்சியும் தமிழரல்லாதோராலும்,தமிழ் தெரியாதோராலும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. வானொலியிலோ தமிழையே காண முடியவில்லை. பேசப்பட்ட ஒரு சில தமிழ் சொற்களும் இது தமிழா என்று கேட்க வைத்தது. அந்த சமயம் பாரதிதாசன்,ஈழத்து கவி காசி ஆனந்தனின் கவிதை சொற்கள் வந்து இதயத்தை குத்தியது.தமிழக விமான நிலையங்களில் கூட தமிழுக்கு பஞ்சம்.ஆனாலும் தமிழனின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

என்ன விந்தை? நாட்டுக்கும் மனித இனத்திற்கும் பெரும் சாதனை புரிந்தவர்களை குப்பையில் போட்டு விட்டு,ரஜனி போன்றவர்களுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுகிறது தமிழகம். ரஜனி தமிழகத்திற்கு,தமிழனுக்கு என்ன செய்தார்? ரஜனி ரசிகர்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.மக்களின் பணத்தில் சொகுசான வாழ்வு நடத்தும் நடிகர் நடிகைகள் சுயநலவாதிகளாகவே இருந்து வருகின்றனர்.கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும்,முல்லைப் பெரியாறு விசயத்திலும் தாங்கள் ஏதாவது பேசினால், தங்கள் படங்கள் ஓடாது போய் விடுமே என்ற சுயநலத்தால், கண்ணை மூடிக் கொண்டார்கள்.அன்றொரு நாள் கர்நாடக தண்ணீருக்காக தமிழகம் போராட்டம் நடத்திய போது ஆதரவு தெரிவித்த கமலும் ரஜனியும்,அவர்கள் படங்களை கர்நாடகாவில் ஓட விட மாட்டோம் என்று கர்நாடக திரை உலகம் அறிவித்த்வுடன் போராட்டத்திற்கான ஆதரவை வாபஸ் பெற்றதுடன், கர்நாடக நடிகர் சங்கத்திடம் மன்னிப்புக் கேட்டதை எந்தத் தமிழனும் மறக்க முடியாது.
ஆனாலும் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள முடியவில்லை.முல்லை பெரியாறு விடயத்தில் எதிரிகளான காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் கேரளாவில் ஒன்றாகியது மட்டுமல்ல, அக்கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து தமிழகத்திற்கு எதிராக ஆலோசனை நடத்தினர். ஆனால் நம்ம நடிகர்களோ கொலை வெறி பாடலை பாடி கூத்தடிக்கிறார்கள்.தமிழகத்தில் சட்டசபை தீர்மானம் உட்பட எல்லா போராட்டங்களிலும் கட்சிகள் ஒன்றாகாது தனித் தனியே போராட்டங்களை நடத்தினார்கள்.கனிமொழிக்காக விமான நிலையம் சென்ற கருனாநிதி, தமிழனின் அடிப்படை உரிமைக்காக கொண்டு வரப்பட்ட தீர்மான நாளுக்கு கூட சட்டசபைக்கு செல்லவில்லை. ஈழப் போரின் போதும் தமிழர்கள் கட்சிகள் ஒன்றாகவில்லை.தமிழர்கள் பொதுப் பிரச்சனை என்று வரும் போதும்ஒன்றுபடவில்லை.

எவ்வளவு விஞ்ஞான அறிவு வளர்ந்தும் கூட பெண்களுக்கு இன்னமும் கோயில்களில் சில நாட்களில்,சில இடங்களில் அனுமதி மறுக்கப்படுவது கூட, மறையாது இருக்கவே செய்கிறது.ஆனாலும் தமனா போன்ற சினிமா நடிகைகளுக்கு எந்த வேறுபாடுமின்றி வி ஐ பி தரத்தில் வைத்து சாமரை வீசுகிறது கோவில் நிர்வாகம். சபரிமலையில் இன்னமும் 10 முதல் 50 வயதுப் பெண்களுக்கு அனுமதி மறுப்பது, ஆரியத்தின் பெண் அடிமைத்தனம் எவ்வளவு வேரூன்றி இருக்கிறது என்பதைக் காட்டியது. இது தமிழ் நாகரீகத்தில் மட்டுமல்ல தென் இந்திய நாகரீகத்திலும் இல்லாத கலாச்சார பண்பாடாகும்.
பல கிராமங்களில் இன்னமும் பொது இடங்களில் தனிப்பட்ட குடிப்பதற்கு பாவிக்கும் பாத்திரப் பொருட்கள் இருக்கவே செய்கிறது. தண்ணீர் குடிப்பதற்கும்,தேநீர் அருந்துவதற்கும் இன்னமும் சாதி தடையாக இருப்பதை காண முடிந்தது. நாம் மாறவில்லை, கண்ணதாசனின் பாடல் வரிகள் வந்து கண்களை நீரால் மறைக்கிறது.

உல்லாச வாழ்வு வாழும் சாமியார்களும்,அரசியல்வாதிகளும்,போதனையாளர்களும் தங்கள் போதனையை குறைக்கவில்லை,மாறாக அதிகரித்து இருக்கிறார்கள்,நன்கு ஏமாற்ற கற்றுக் கொண்டு,கணினி ஊடாகவும் இவர்கள் வைரஸ்சாக ஊடுருவி சமூகத்தை அழித்து வருவது காணக் கூடியதாக இருந்தது. அதைக் கேட்டு ஏமாறும் மக்களும் பாமரர்களும் குறையவே இல்லை.

தமிழர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களால் ஆழப்படும் தமிழகத்தில் கோயில்களில், அலுவலகங்களில்,நீதிமன்றங்களில்,பொருட்களில்,விளம்பரப் பலகைகளில், சினிமாவில், தொலைக்காட்சியில் எங்கும் தமிழ் இல்லை. கல்வியும், மருத்துவமும் இலவசமாக கிடைக்காத வரை,அவை தாய் மொழியில் கற்பிக்கப்படாத வரை, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைவருக்கும் அவர்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய விலையில் கிடைக்காத வரை எதுவும் சாத்தியமில்லை. வல்லரசாவதை விட நல்லரசாக வேண்டும். இல்லையேல் சரிந்து ஒருநாள் விழுந்து விடும். வைகோ சொல்வதைப் போல், ஒரு நாள் சோவியத் யூனியனைப் போல் சுக்கு நூறாகி விடும் என்பதில் ஐயமில்லை. அதற்கான அடித்தளம் உள் நாட்டில் மட்டுமல்ல, தீபெத்தாக மாறி வரும் சிறீலங்காவிலும், இந்து சமுத்திர பகுதிகளில் சீனாவாலும் ஏற்கனவே இடப்பட்டு விட்டது.

புகழை வாங்க தமிழை விற்கிறான், பூந்தமிழை எங்கே கற்கிறான்
விற்றவன் படைக்கிறான் சரித்திரம்,தமிழை கற்றவன் பார்க்கிறான் தரித்திரம். ...வாலி.

மீண்டும் சந்திக்கும் வரை...............................சக்தி.


avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

நான் கண்ட தமிழகம் அன்றும் இன்றும். Empty Re: நான் கண்ட தமிழகம் அன்றும் இன்றும்.

Post by மாலதி Fri Jan 20, 2012 7:31 am

உண்மை நீங்கள் சொல்வது அறிவிப்பு


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

நான் கண்ட தமிழகம் அன்றும் இன்றும். Empty Re: நான் கண்ட தமிழகம் அன்றும் இன்றும்.

Post by ஜனனி Wed Jan 25, 2012 6:42 am

நான் கண்ட தமிழகம் அன்றும் இன்றும். 471843 நான் கண்ட தமிழகம் அன்றும் இன்றும். 471843 நான் கண்ட தமிழகம் அன்றும் இன்றும். 471843 நான் கண்ட தமிழகம் அன்றும் இன்றும். 471843
malathi wrote:உண்மை நீங்கள் சொல்வது நான் கண்ட தமிழகம் அன்றும் இன்றும். 917304
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

நான் கண்ட தமிழகம் அன்றும் இன்றும். Empty Re: நான் கண்ட தமிழகம் அன்றும் இன்றும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum