TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அடுத்த "மூவ்' என்ன? ஆளுங்கட்சியிலோ மனக்கணக்கு: மக்கள் மத்தியிலோ புதுக்கணக்கு

Go down

அடுத்த "மூவ்' என்ன? ஆளுங்கட்சியிலோ மனக்கணக்கு: மக்கள் மத்தியிலோ புதுக்கணக்கு Empty அடுத்த "மூவ்' என்ன? ஆளுங்கட்சியிலோ மனக்கணக்கு: மக்கள் மத்தியிலோ புதுக்கணக்கு

Post by ஜனனி Fri Oct 28, 2011 7:48 am

உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, அ.தி.மு.க.,வில்
நிர்வாகிகள் மட்டத்திலும், தொண்டர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகமாக
உள்ளது. கட்சி பொறுப்புகளில் மாற்றம் வரும் போது, தங்களுக்கு இடம்
கிடைக்காதா என, பலரும் காத்துக் கிடக்கின்றனர்.

கட்சிப் பதவியை விரும்பாத சிலர், வாரியம் மற்றும் கோவில்களில்
அறங்காவலர் பதவி கிடைக்காதா என ஆளாளுக்கு மனக்கணக்கு போட்டபடி நல்ல செய்தி
வராத என தவம் கிடக்கின்றனர். ஆனால், சத்தமில்லாமல் தமிழகத்தில் ஆட்சி
மாற்றத்தை ஏற்படுத்திய வாக்காளர்களின் கணக்கோ புது மாதிரியாக உள்ளது.
தேர்தலின் முடிவின் மூலம், மக்கள் தங்கள் எதிர்பார்ப்பை கோடிட்டு
காட்டியுள்ளனர். தமிழக வாக்காளர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள் என்பதை
ஒவ்வொரு தேர்தலின் போதும் நிரூபித்து வருகின்றனர் என்பதற்கு சட்டசபை
தேர்தலை தொடர்ந்து வந்த உள்ளாட்சித் தேர்தலும் ஒரு சான்று.

வெடித்தது குமுறல்: இதற்கு முன், உள்ளாட்சி பொறுப்புகளில் இருந்த
தி.மு.க.,வினர் , விளம்பரம் தேடுவது, உள்ளாட்சிகளில் நடக்கும் பணிகளுக்கு
தங்கள் கட்சிக்காரர்களுக்கு மட்டுமே கான்ட்ராக்ட் கொடுத்தனர். பல இடங்களில்
மக்களின் அன்றாடதேவைகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக, சாலை வசதிகள்
மேம்படுத்துவதில், அதீத அக்கறை காட்டப்படவில்லை. அதே போல், அரசு அறிவித்த
இலவச பொருட்கள், கட்சிக்காரர்கள் மூலம் வழங்கியதால், பொதுமக்களுக்கு சரியாக
சென்று சேரவில்லை. இதுவும், மக்கள் மத்தியில் குமுறலாக இருந்தது.
தி.மு.க.,வில் வார்டு தலைவர் முதல், "பசை'யுள்ள தொண்டர்கள் வரை பலரும்,
கஞ்சி போட்ட கரை வேட்டி கட்டிக்கொண்டு கார்களில் தெருவுக்குள் வலம்
வந்தனர். அதிலும் சிலர், நகைக்கடை போல நடமாடினர். இதுவும் மக்கள் மத்தியில்
பெரும் வயிற்றெரிச்சலை சம்பாதித்துக் கொடுத்தது. இவை எல்லாம் சேர்ந்து
தான், தேர்தல் முடிவாக வெளிப்பட்டது.

மக்களின் எதிர்பார்ப்பு: இந்த தேர்தல் முடிவிலிருந்தாவது
ஆளுங்கட்சியினர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தங்களுக்கு பதவியிருக்கிறது,
அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, இன்னோவா, டாபா சபாரி என பலவகை கார்களில்
தங்கள் பட்டாளங்களுடன் கார்களில் வலம் வருவதை விட்டுவிட்டு, அதற்கு பதில்,
தாங்கள் பயணிக்கும் சாலைகளின் அவலத்தை போக்குவதற்கு நடவடிக்கை எடுத்து,
அதன் மூலம் அந்தந்த பகுதி மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். அது
மட்டுமல்லாது, குப்பைகளை அகற்றுவது, கொசு மருந்து அடிப்பது, தண்ணீர்
பிரச்னையை சமாளிப்பது போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
கடந்த ஆட்சியாளர்கள், ரேஷன் கடைகளில் அடிக்கடி, "கப்பம்' வசூலித்து,
அங்குவேலை பார்க்கும் ஊழியர்கள் தவறு செய்வதற்கு வழி ஏற்படுத்திக்
கொடுத்தனர். சர்க்கரை , அரிசி மூட்டைகளை அந்தந்த வார்டுகளில் உள்ள கட்சி
பொறுப்பாளர்களுக்கு அடாவடியாக கேட்டு பெறும் நடவடிக்கைகள் அராஜகமாக
நிறைவேறியது. இவ்வாறு மூட்டைகளை வாரிக்கொடுத்துவிட்டு, ஊழியர்கள் அதை
சமாளிக்க பல்வேறு சரிக்கட்டு நடவடிக்கைகளை செய்தனர். இதனால்,
பெரும்பாலானவர்களுக்கு பொருட்கள் கிடைக்காமல் போனது. இந்த நடைமுறைக்கு,
உடனடியாக முடிவு கட்டவில்லை என்றால், அதே நிலைதான் தற்போதும்
ஆளுங்கட்சிக்கு ஏற்படும்.

கொள்ளையர்கள் கூடாரமா கோவில்கள்? நாங்கள் திராவிட
பாரம்பரியத்தில் வந்தவர்கள், சாமி கும்பிடாத நாத்திகர்கள் என
கூறிவந்தவர்கள் எல்லாம், கடந்த ஆட்சியில் அறங்காவலர் பதவியை கேட்டுப்
பெற்று , கோவிலில் வந்த வருமானத்தில் தங்களுக்கும் பங்கு ஒதுக்க வேண்டும்
என கேட்டு பெற்றனர். இதனால், பல கோவில்களில் தில்லுமுல்லு நடப்பதற்கும்,
ஆகமவிதிகளை மீறுவதற்கும் முக்கிய காரணக்கர்த்தாவாக விளங்கினர். இதனால்,
உண்மையான பக்தர்கள், விரக்தியடைந்தனர். கோவில் அறங்காவலர் பொறுப்புக்கு
அரசியல்வாதிகளை உள்ளே விட்டால் இப்படித்தான் என, பலரும் நொந்து கொண்டனர்.
இதை உணர்ந்து, முதல்வர் ஜெயலலிதா, கோவில்களில் அறங்காவலர்களை
நியமிக்கும்போது, கட்சியினருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஆன்மிகம்
மற்றும் அந்தந்த பகுதியில் பொது சேவையில் ஆர்வமாக பணியாற்றக்கூடியவர்களை
கண்டுபிடித்து அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும். அப்போதுதான் பல்வேறு
கோவில்களில், முதல்வர் செயல்படுத்தியுள்ள அன்னதான திட்டம் மற்றும் பல்வேறு
திட்டங்கள் பக்தர்களுக்கு சென்று சேரும். கோவில்களில் நடக்கும் குத்தகைகள்,
பொது ஏலம் போன்றவற்றில் அரசியல் தலையீடு இன்றி நடைபெறுவதற்கு வழி காண
வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் மக்களின் எதிர்பார்ப்பை
நிறைவேற்ற முடிவதோடு, வரவிருக்கும் லோக்சபா தேர்தலிலும், "தனிக்காட்டு
ராஜா'வாக வெற்றி பெறுவதற்கு வழி ஏற்படுத்தியதுபோல் ஆகிவிடும்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» திமுக அரசினால் நியமிக்கப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் 13500 பேர் பணி நீக்கம்! அம்மாவின் அடுத்த அதிரடி!!
» ஃபேஸ்புக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?
» ஜெ,. அதிரடி மூவ் பின்னணி -வாசன், வேல்முருகனுக்கு கல்தா ஏன்?:
» போபால் பாதிப்பு: அமைச்சரவை குழு 18ல் ஆலோசனை:அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
» இனி என்ன நடக்குமோ? மாஜி "வீரபாண்டி' நடவடிக்கையால் மக்கள் அச்சம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum