Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அனாதைகள் போல கைவிட்டார் தங்கபாலு : இளங்கோவன்
Page 1 of 1

""எங்கள் வேட்பாளர்கள், தேர்தல் களத்தில் அனாதைகள் போல் விடப்பட்டனர்.
அவர்களுக்காக கட்சி, ஒரு போஸ்டரோ, கொடி யோ கூட கொடுக்கவில்லை. இதுபோன்ற
காரணங்களால் தான், நாங்கள் எதிர்பார்த்ததை விட, பெரிய தோல்வியை சந்திக்க
நேர்ந்தது,'' என, தமிழக காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய
அமைச்சருமான இளங்கோவன் கூறினார்.
"தினமலர்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் ஏன் இவ்வளவு பெரிய தோல்வியடைந்தது?
தனித்துப்
போட்டி என்ற முடிவை, மேலிடம், மிகவும் காலம் தாழ்த்தி அறிவித்தது.
வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் சில குளறுபடிகள் நடந்தன. எங்கள்
வேட்பாளர்கள், தேர்தல் களத்தில், கிட்டத்தட்ட அனாதைகள் போல்
விடப்பட்டனர்.அவர்களுக்காக கட்சி, ஒரு போஸ்டரோ, கொடியோ கூட கொடுக்கவில்லை.
நானும், வாசனும் மட்டும் தான் ஓரளவு பிரசாரம் செய்தோம். மற்றவர்கள்,
எட்டிப் பார்க்கவே இல்லை. இதுபோன்ற காரணங்களால் தான், நாங்கள்
எதிர்பார்த்ததை விட, பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.
மாநிலத் தலைமை ஒத்துழைத்திருந்தால், இந்தத் தோல்வி தவிர்க்கப்பட்டிருக்குமா?
நிச்சயமாக இவ்வளவு பெரிய தோல்வி கிடைத்திருக்காது; தி.மு.க.,வுக்கு சமமாகவாவது வெற்றி பெற்றிருப்போம்.
தனித்துப் போட்டியிட வலியுறுத்திய நீங்கள், காலம் கடந்து கொண்டிருப்பதை, அகில இந்தியத் தலைமைக்கு உணர்த்தவில்லையா?
தாமதமான
முடிவாக இருந்தாலும், அது எங்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட
நிலைப்பாடாக இருந்ததால், அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம்.
வேட்புமனு தாக்கல் துவங்கிய பிறகு தான் நாங்கள் வேட்பாளர் தேர்வுக்கே
உட்கார்ந்தோம். இருக்கிற அவகாசத்தில் என்ன செய்திருக்கலாமோ, அதை, கட்சியின்
மாநிலத் தலைமை, சரியாகச் செய்யவில்லை.
எப்படியும் உள்ளாட்சித் தேர்தல் வரப்போவது தெரியும் இல்லையா? சில முன்னேற்பாடுகளை செய்திருக்கலாமே!
செய்திருக்கலாம் தான்; ஆனால், அவர்கள் செய்யவில்லையே!
இதே
போன்ற குளறுபடி தான் சட்டசபைத் தேர்தலிலும் நடந்தது. அப்படியென்றால்,
மாநிலத் தலைமையின் செயல்பாடு பற்றி அகில இந்தியத் தலைமைக்குத் தெரியாதா?
கேரளா
காங்கிரசைப் போல் தமிழக காங்கிரஸ் இல்லை. அவர்கள் தேர்ந்தெடுக்கும்
வேட்பாளர் பட்டியலை, அகில இந்தியத் தலைமை, அப்படியே அங்கீகரித்துவிடும்.
ஒன்றிரண்டு மாறுதல்கள் வேண்டுமானால் இருக்கலாம். காமராஜர் காலம் வரை,
இங்கும் அப்படித்தான் இருந்தது. இப்போது, வேட்பாளர் தேர்வே டில்லியில்
நடைபெறும் விஷயமாகிவிட்டது.
ஒரு வலுவான மாநிலத் தலைவர் இருந்திருந்தால், இந்த நிலைமையை மாற்றியிருக்க முடியுமா?
நிச்சயமாக. வலுவான தலைமை இருந்து, கட்சி ஒரு புதிய உயிரோட்டத்தோடு செயல்பட்டால், கேரளாவைப் போல், தமிழக காங்கிரசும் மாற முடியும்.
சட்டசபைத்
தேர்தலில், தி.மு.க.,வை குற்றம்சாட்டினீர்கள். இந்த முறை குற்றம்சாட்ட
எந்தக் காரணமும் இல்லை எனும்போது, கட்சியை எப்படி முன்னெடுத்துச்
செல்லப்போகிறீர்கள்?
காங்கிரஸ் இனி தனித்து தான் இயங்க வேண்டும்
என முடிவு எடுத்திருக்கிறோம். லோக்சபா தேர்தலுக்கு, இரண்டரை ஆண்டுகள்
இருக்கின்றன. அதற்குள் கட்சியை வலுப்படுத்த வேண்டும்; காங்கிரசை, ஒரு
மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு
அர்ப்பணித்துக் கொண்டால் தான், மக்களின் மனதில் இடம் பிடிக்க முடியும்
என்பதை முழுமையாக உணர்ந்திருக்கிறோம். வரும் காலங்களில், மக்களுக்காக
கடுமையாக உழைப்போம். தவறுகளை யார் செய்தாலும், தட்டிக் கேட்போம்.
இந்தத் தலைமையை வைத்துக்கொண்டே, நீங்கள் லோக்சபா தேர்தலையும் சந்தித்துவிட முடியும் என நினைக்கிறீர்களா?
ஏற்கனவே
ராஜினாமா செய்துவிட்ட தலைமை தான் இப்போது, தற்காலிக ஏற்பாடாக இருக்கிறது.
10, 15 நாட்களுக்குள் புதிய தலைமை நியமிக்கப்பட்டுவிடும் என
எதிர்பார்க்கிறோம்.
சட்டசபைத் தேர்தலின்போதே தங்கபாலு ராஜினாமா செய்தும், ஏன் மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை?
அதற்கு
காரணம், தமிழக காங்கிரசின் பொறுப்பாளராக டில்லியில் இருக்கக் கூடிய குலாம்
நபி ஆசாத் தான். அவர், தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை, அகில இந்தியத்
தலைமைக்கு சரியாக எடுத்துச் சொல்வதில்லை. மேலும், அகில இந்தியத் தலைவர்
சோனியா, இரண்டு மாதமாக உடல்நலம் குன்றியிருந்ததால், எந்த நடவடிக்கையும்
எடுக்க முடியாமல் போயிற்று. இனிமேல், அவர் விரைந்து நடவடிக்கை எடுப்பார் என
எதிர்பார்க்கிறோம்.
தமிழக காங்கிரசைப் பொறுத்தவரை, யாரைத் தலைவராக நியமித்தாலும், மற்ற அனைவரும், அவருக்கு எதிர்கோஷ்டியாக மாறிவிடும் நிலை இருக்கிறது...
அப்படி
சொல்லிவிட முடியாது. இந்தத் தேர்தலில் கூட, பல இடங்களில் தொண்டர்கள்,
தத்தம் கோஷ்டிகளுக்கு அப்பாற்பட்டு, ஒன்றாக இணைந்து செயல்பட்டதை என்னால்
பார்க்க முடிந்தது. புதிய தலைவராக வரவிருப்பவர், தொண்டர்களை அரவணைத்து,
பொதுப் பிரச்னைகளை அணுகுவதன் மூலம், கட்சியை ஒரு சுறுசுறுப்பான மக்கள்
இயக்கமாக மாற்றி, கோஷ்டிகளுக்கு அப்பாற்பட்ட தலைவராக இருப்பார் என
எதிர்பார்க்கிறோம்.
நீங்கள் மீண்டும் தலைவராகும் வாய்ப்பு இருக்கிறதா?
என்னைப்
பற்றி, கட்சி மேலிடத்துக்கு நன்கு தெரியும். யாரை நியமிப்பது என்பதை,
மேலிடம் முடிவு செய்யும். என்னை நியமித்தாலும், வேறு யாரை நியமித்தாலும்
நிச்சயமாக ஏற்றுக்கொள்வேன்.
தங்கபாலுவுக்கு ஆதரவாக பேச, டில்லியில் ஆசாத் இருக்கிறார். கட்சியின் உண்மையான நிலையைப் பற்றி சொல்வதற்கு யாருமே இல்லையா?
இல்லை
என்று தான் நினைக்கிறேன். மத்தியில் அதிக செல்வாக்கோடு இருக்கும் ஓர்
அமைச்சருக்கு, சோனியாவை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
ஆனால், அவருக்கு கட்சியைப் பற்றிய கவலை இருப்பதாகவே தெரியவில்லை.
பிரசாரத்துக்கும் வரவில்லை; வேட்பாளர் தேர்வுக்கும் வரவில்லை. கட்சியின்
முடிவுக்கு மாறாக, அவரது சொந்த மாவட்டத்தில், தி.மு.க.,வோடு மறைமுக கூட்டு
வைத்து செயல்பட்டார். தேர்தல் நேரத்தில், நான்கு நாட்கள் ஓய்வெடுத்தாரே
தவிர, தேர்தலைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
இந்தத் தேர்தலில் வாங்கியிருப்பது தானே உங்கள் கட்சியின் உண்மையான பலம்?
இவ்வளவு
தான் காங்கிரசின் பலம் என்று சொல்லிவிட முடியாது. உள்ளாட்சித்
தேர்தல்களில், உள்ளூர் வேட்பாளர்களைப் பொறுத்து தான் மக்கள்
ஓட்டளிக்கின்றனர்.
அந்த மக்கள் மத்தியில், காங்கிரஸ் ஏன் ஒரு மாற்று சக்தியாகத் தோன்றவில்லை?
மக்களுடைய
அன்றாடப் பிரச்னைகளில் நாங்கள் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. சமச்சீர் கல்வி
பிரச்னையில் எங்கள் நிலைப்பாடு என்ன என்றே சொல்லவில்லை. தீவிரவாதிகளை
விடுதலை செய்ய வேண்டும் என காங்., - பா.ஜ., தவிர அத்தனை கட்சிகளும் குரல்
கொடுத்தன. அதை எதிர்க்க வேண்டிய காங்கிரஸ், எதிர்க்க வேண்டிய அளவுக்கு
எதிர்க்கவில்லை. அதேபோல, கூடங்குளம் பிரச்னையிலும் மக்களின் அச்சத்தைப்
போக்கியிருக்க வேண்டும். இப்படிச் செய்யாமல், தங்கள் பிரச்னை பக்கமே அண்டாத
ஒரு கட்சியை எப்படி மக்கள் ஏற்றுக்கொள்வர்? அது தான் தமிழக காங்கிரஸ்
செய்த மிகப் பெரிய தவறு.கடந்த ஐந்து ஆண்டுகளில், மாவட்டத் தலைவர்கள்
கூட்டமே நடந்ததில்லை. மாவட்ட அளவில், ஊழியர் கூட்டங்களும் நடந்ததில்லை.
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் கூட, தமிழக காங்கிரசில்
இல்லை. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.
எதிர்காலத்தில்,
தனித்து தான் போட்டி என்றீர்கள். இப்போது வாங்கியிருக்கும் ஓட்டுகளில்
இரண்டு, மூன்று மடங்கு அதிகம் கிடைத்தால் கூட, லோக்சபா தேர்தலில் எத்தனை
சீட் ஜெயித்துவிட முடியும்?
உள்ளாட்சித் தேர்தல், முழுக்க
முழுக்க வித்தியாசமானது. சட்டசபை, லோக்சபா தேர்தல் போன்றது அல்லது
அவற்றில், யார் ஆளுவது, யார் ஆளக்கூடாது என்ற கேள்வி தான் முதன்மையாக
இருக்கும். இந்தத் தேர்தல் முடிவுகள், மத்தியிலோ, மாநிலத்திலோ எந்த
மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பது மக்களுக்குத் தெரியும். இதுவே,
லோக்சபா தேர்தல் என்றால், மக்களின் முடிவுகள் வேறு மாதிரி
இருந்திருக்கும்.மற்ற கட்சிகளுக்கு இல்லாத பலமாக, தமிழகத்தில்
காங்கிரசுக்குத் தான் இரண்டு, "சேனல்'கள் இருக்கின்றன..."டிவி' சேனல்களைப்
பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அவற்றை எத்தனை பேர்
பார்க்கின்றனர் என்றே தெரியவில்லை. வசந்த் "டிவி'யிலாவது ஒன்றிரண்டு
காங்கிரஸ் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். இன்னொரு, "டிவி'யில், அதன்
உரிமையாளர் முகத்தைத் தான் காட்டிக்கொண்டே இருக்கின்றனர்.
தலைவர்கள் இருக்குமளவு கூட காங்கிரசில் தொண்டர்கள் பலமில்லை என்பது, நீண்ட நாளைய குற்றச்சாட்டு!
தமிழகத்தைப்
பொறுத்தவரை, காமராஜர், மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்திக்குப் பிறகு,
தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற பெரிய தலைவர் யாரையும் என்னால் சொல்ல
முடியவில்லை. காங்கிரசுக்கு வலு என்பது, அகில இந்தியத் தலைமை தான்.
பலவீனமான மாநிலத் தலைமை தான், அகில இந்தியத் தலைமைக்கு நல்லது என்ற எண்ணம், டில்லிக்கு இருக்கிறதா?
அப்படி
ஒரு எண்ணம் இருப்பதாக நினைக்கவில்லை. மத்தியில் பல பிரச்னைகள்
வந்துகொண்டிருப்பதால், மாநிலத்தின் மீது முழு கவனம் செலுத்த முடியாமல்
போயிருக்கலாம். இனிமேல் செலுத்துவர் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தங்கபாலு தலைமையால் தோல்வி வரும்: சோனியாவிடம் இளங்கோவன் புகார்
» சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு-இளங்கோவன் ஆதரவாளர்கள் பயங்கர அடிதடி
» காங்கிரசார் தங்கபாலு மீது நில அபகரிப்பு புகார் செய்வார்கள்; இளங்கோவன் திடீர் எச்சரிக்கை
» உண்ணாவிரதத்தை கைவிட்டார் சந்திரபாபு: தலைவர்களின் வேண்டுகோளை ஏற்றார்
» தங்கபாலு கூட்டத்தில் சிதம்பரம் ஆதரவாளருக்கு தர்ம அடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum