Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:16 am
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:53 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 25, 2024 10:18 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பிணமாக வழங்கப்பட்டவர் பிழைத்தெழுந்தார்: மறுக்கும் தனியார் மருத்துவமனை நிர்வாகம்
Page 1 of 1
பிணமாக வழங்கப்பட்டவர் பிழைத்தெழுந்தார்: மறுக்கும் தனியார் மருத்துவமனை நிர்வாகம்
திருச்சி : திருச்சி, தனியார் மருத்துவமனையில் இறந்து விட்டதாக கூறி,
பிணமாக மூடை கட்டி கொடுக்கப்பட்டவர், உயிர் பிழைத்த சம்பவம், பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் தன்னேரி, 64. இவரது மனைவி கோமதி, 56.
இலங்கையில் நடந்த கலவரத்தை தொடர்ந்து, 1985ம் ஆண்டு, மண்டபம் முகாமுக்கு
வந்த இவர்கள், 1996ல் இருந்து திருச்சி கொட்டப்பட்டு, இலங்கை தமிழர்
முகாமில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு ஜெயராணி என்ற மகளும், செவ்வந்தி
செல்வன், சந்திரன், மோகன்தாஸ், 30, ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர்.
பெயின்டராக பணிபுரியும், இவர்களது மகன் மோகன்தாஸ், 15ம் தேதி இரவு நடந்த
சாலை விபத்தில் படுகாயமடைந்தார். திருச்சி கே.எம்.சி., தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, மூன்று நாட்கள் ஐ.சி.யூ.,வில்
வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு, 7 மணிக்கு, அவர் இறந்து விட்டதாக
கூறி, உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மோகன்தாஸ் இறந்ததை அறிந்து, வீட்டின்
முன் பந்தல் போடப்பட்டு, ஐஸ் பெட்டியும் வரவழைத்தனர். ஊரெல்லாம் கண்ணீர்
அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டது.
இதற்கிடையே, மருத்துவமனையில் இருந்து மோகன்தாஸ், ஆம்புலன்சில்
ஏற்றப்பட்டார். திடீரென அவரது கை, கால்கள் அசையவே, அதிர்ச்சியடைந்த
உறவினர்கள், மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், நேரடியாக
திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான
நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மோகன்தாசின் அண்ணி சாந்தி கூறியதாவது:திருச்சி அரசு
மருத்துவமனைக்குதான், மோகன்தாசை முதலில் கொண்டு சென்றோம். அதற்குள் இரண்டு
முறை, மோகன்தாசுக்கு வலிப்பு வந்து, காதில் ரத்தமும் வந்தது.டாக்டர்கள்
எங்களுக்கு சரியாக பதில் அளிக்காததால், பயந்துபோன நாங்கள், உடனடியாக
திருச்சி கே.எம்.சி., மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவரை
ஐ.சி.யூ., வார்டுக்கு கொண்டு சென்றனர். நேற்று முன்தினம் வரை தொடர்ந்து
சிகிச்சை அளிப்பதாக கூறி, மருந்து, மாத்திரைகளை வாங்கி வர கூறினர்.ஒரு லட்ச
ரூபாய் செலவழித்த பின்னும், அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதை
தெரிவிக்கவில்லை. நாங்கள் வற்புறுத்தவே, நேற்று முன்தினம் இரவு, பிணமாக
எங்களிடம் வழங்கினர். அவர் இறந்து விட்டதாக சான்றிதழும் கொடுத்தனர்.
ஆம்புலன்சில் ஏற்றியபோது தான், மோகன்தாசுக்கு உயிர் இருப்பது தெரிந்தது.
இதற்குபிறகும் அந்த மருத்துவமனையில் இருக்கக்கூடாது என்று திருச்சி அரசு
மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டோம்.இங்கு வந்தவுடன் தனியார்
மருத்துவமனையை சேர்ந்த சிலர், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தாளில் கையெழுத்து
கேட்டு, எங்களை மிரட்டுகின்றனர். நாங்கள் போட மறுத்துவிட்டோம். இதுபோன்று
பணம் பறிக்கும் மருத்துவமனைகள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.இவ்வாறு சாந்தி கூறினார்.
இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் கூறியதாவது:
உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மோகன்தாஸ், ஐ.சி.யூ.,வில்
வெண்டிலேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டிருந்தார். மூன்று நாட்கள் அப்படியே
சிகிச்சை பெற்றதால், "இறந்த பிணத்தை வைத்து சிகிச்சை கொடுக்கிறீர்கள்.
நாங்கள் வெளியிடத்தில் சிசிச்சை செய்கிறோம்' என, அவரது உறவினர்கள் தகராறு
செய்தனர். அதனால், மருத்துவ ஆலோசனைக்கு எதிராக, "அகைன்ஸ்ட் மெடிக்கல்
அட்வைஸ்' என, மோகன்தாஸ் தந்தை தன்னேரி, அண்ணன் செவ்வந்தி செல்வனிடம்
கையெழுத்து வாங்கி, உயிருடன் தான் கொடுத்தோம்.தற்போது, திருச்சி அரசு
மருத்துவமனையில், அதே வெண்டிலேட்டர் உதவியுடன் தான் மோகன்தாஸ், உயிரோடு
இருக்கிறார். எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அவதூறு
பரப்புகின்றனர்.இவ்வாறு நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டது.
piraba- பண்பாளர்
- Posts : 1302
Join date : 12/02/2010
Similar topics
» தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளி வாகனங்கள் இன்று ஓடாது தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முடிவு
» பெற்ற பிள்ளையிருந்தும் நடுத்தெருவில் அனாதை பிணமாக கிடந்த தொழிலதிபர்
» கனவை சுமந்து சென்ற 72 பேர் பிணமாக திரும்பிய பரிதாபம்
» ஆறுகள் இணைப்புக்கு நிதி தர மறுக்கும் மத்திய அரசு
» அமெரிக்காவில் காணாமல் போன 10 மாத இந்திய குழந்தை பிணமாக மீட்பு!: குடும்ப நண்பரே கொலையாளி!
» பெற்ற பிள்ளையிருந்தும் நடுத்தெருவில் அனாதை பிணமாக கிடந்த தொழிலதிபர்
» கனவை சுமந்து சென்ற 72 பேர் பிணமாக திரும்பிய பரிதாபம்
» ஆறுகள் இணைப்புக்கு நிதி தர மறுக்கும் மத்திய அரசு
» அமெரிக்காவில் காணாமல் போன 10 மாத இந்திய குழந்தை பிணமாக மீட்பு!: குடும்ப நண்பரே கொலையாளி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum