Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு: பார்வையற்ற இளைஞரின் கருணை பார்வை
Page 1 of 1
பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு: பார்வையற்ற இளைஞரின் கருணை பார்வை
நமக்கு முன்னே இருப்பவர்களில் இரண்டு வகையினர் இருப்பார்கள். "நாம்
இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைந்திருக்கிறோம். அதனால் நமக்குப் பின்
வருபவர்களும் அதே கஷ்டப் பட்டுதான் முன்னேற வேண்டும்' என்று நினைப்பவர்கள்
ஒரு வகை.
"நாம்தான் இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம், நமக்குப் பின் வருபவர்களாவது
கஷ்டப்படாமல் இருக்க நாம் வழிகாட்டுவோமே' என்று நினைப்பவர்கள் இரண்டாம்
வகை. இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்தான் கோவிந்த கிருஷ்ணன் (எ) கோபி.
சென்னை முகப்பேரைச் சேர்ந்த கோபி பிறவியிலேயே பார்வை இழந்த மாற்றுத்
திறனாளி. கோபிக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடக்கூடாது என்பதற்காக, சாதாரண
மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே கோபியைப் படிக்க வைத்துள்ளனர் அவரது
பெற்றோர்.பத்தாம் வகுப்பு முடிப்பதற்குள் நான்குமுறை பள்ளி மாறிவிட்ட கோபி,
பார்வை இல்லாதவர் என்று அரசிடம் சொல்லி, சான்றிதழ் வாங்க அவரது பெற்றோர்
சங்கடப்பட்டதால், இரண்டு முறை பொதுத்தேர்வில் தோல்வியைத்
தழுவியிருக்கிறார். அதன்பின், சான்றிதழ் வாங்கி உதவியாளர் உதவியுடன்
பத்தாம் வகுப்பில் வெற்றியடைந்திருக்கிறார்.
""பள்ளிப்படிப்பை முடிச்சவுடன் அடுத்து என்ன செய்யப் போறோம்னு பெரிய
கேள்விக்குறி வந்தது; யோசிக்காமல் கல்லூரியில சேர்ந்தேன். பாடங்களை
மற்றவர்களின் உதவியோடு படித்து முடிப்பதற்குள், பல பிரச்னைகள் வந்தது.
படித்து சொல்ல மற்றவர்களுக்கு நேரம் இருக்கணும். சந்தேகங்களை கேட்டால் அதை
விளக்குவதற்கு பொறுமை வேணும்.எங்களுக்குனு தனி கல்லூரிகள் கிடையாது.
பொதுவானவர்கள் புரிந்து கொள்ளும் வேகத்திலேயே ஆசிரியர்கள் பாடம்
நடத்துவதால் புரிந்து கொள்வது, கொஞ்சம் சிரமமா இருந்தது. விடுதியில
பாத்ரூம் போறதுகூட கஷ்டம். உதவிக்காக நான் காத்திருந்த சோக அனுபவங்கள்தான்,
என்னை "நேத்ரோதயா'வை தொடங்க வைத்தது'' என்று நினைவுகளை அசைபோட்டவாறே
பேசினார் கோபி.
எம்.ஏ.,முடித்தவுடன் சமூக சேவைக்கான படிப்பில் சேர்ந்து, அதில்,
"ப்ராஜெக்ட்' ஒன்றிற்காக ரயிலில் பிச்சையெடுக்கும் பார்வையற்றவர்கள் பற்றிய
ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார். பூங்கா ரயில் நிலையம் முதல் தாம்பரம் ரயில்
நிலையம் வரை ரயிலில் பிச்சையெடுக்கும் 119 நபர்களிடம் பேசியதில், 82
நபர்கள் படித்தவர்களாய் இருந்திருக்கிறார்கள்.சரியான வழிகாட்டுதல்
இருந்தால் இப்படி திசை மாறியிருக்கமாட்டார்களே என்ற எண்ணத்தில்,
மேற்படிப்பை தொடர முடியாத பார்வையற்ற மற்றும் மாற்றுத் திறனுடைய மாணவர்கள்
தங்கி படிக்கும் வகையில், "நேத்ரோதயா' என்ற அமைப்பை உருவாக்கினார் கோபி.
அரசின் உதவியால் ஏழு கிரவுண்ட் நிலம் கிடைக்க, "நேத்ரோதயா'விற்கு என
சொந்த கட்டடமும் உருவானது. இங்கு தங்கிப் படித்த பலர் ஆசிரியர்களாகவும்,
அரசு ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். தற்போது விடுதியில் 50
மாணவர்கள் தங்கிப் படித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான
உணவு, தங்குமிடம், படிப்பு உதவி என அனைத்தும் இலவசமாகவே வழங்குகிற கோபிக்கு
சில ஆதங்கங்கள் உண்டு.
""சுயதொழில் செய்ய வேண்டும் என எண்ணி, ரயில்களில் வியாபாரம் செய்யும்
பார்வையற்ற நண்பர்களை போலீசார் அதிகம் தொந்தரவு செய்கின்றனர். இதனால்,
மனமுடைந்து போகும் அவர்கள் பிச்சையெடுக்கும் நிலைக்கு
தள்ளப்படுகின்றனர்.அரசு ஊழியர்கள் அல்லாத "போர்ட்டர்களுக்கு' ரயில்வேயில்
சம்பாதிக்க கிடைக்கும் சுதந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைப்பதில்லை.
அதுபோல மாற்றுத் திறனாளிகளுக்கு இ-டிக்கெட் வசதியும் கிடைப்பதில்லை''
என்கிறார்."அரசு பிரெய்லி வகை நூல்களை வழங்கினால் நலமாயிருக்கும்' என்று
ஆசைப்படும் கோபி, 10,12 வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்களை இலவச ஒலி
புத்தகங்களாக வழங்கி வருகிறார்.
அது மட்டுமன்றி, பார்வையற்றோருக்கான இலவச சட்ட ஆலோசனை மையம், 24 மணிநேர
மருத்துவ உதவி, ஸ்போக்கன் இங்கிலிஷ், யோகா, சிறப்பு தமிழ், இசை என் பல
வசதிகளை செய்து தருகிறார். பார்வையற்றவர்களுக்கான நூலகமும், பிரவுசிங்
சென்டரும் இங்குள்ளது.ஒரு அரசு செய்ய வேண்டிய பணிகளை, தனி ஒருவனாக செய்து
சாதனை படைத்துள்ள கோபி, அரசின் சிறந்த சமூக சேவகருக்கான விருதையும்
பெற்றுள்ளார். "நேத்ரோதயா'விற்கு உதவுவதற்கும், உதவி பெறுவதற்கும்
044-42655741 என்ற எண்ணினை தொடர்பு கொள்ளலாம்.
உதவி செய்யலாமே:சமீபகாலமாக கண்தானம் குறித்த விழிப்புணர்வு
அதிகரித்து வருகிறது. ஆனால், தானமாக வழங்கப்படும் கண்களை, பார்வையற்ற
எல்லோருக்கும் பொருத்தி விட முடியாது. கருவிழி பாதிப்புக்கு
உள்ளானவர்களுக்கு மட்டும் தான் மீண்டும் பார்வை கிடைக்கச் செய்ய
முடியும்.குளுக்கோ, மயோப்பியா, பி.ஹெச் டிஸ்சார்டர் போன்ற கண் குறைபாடுகளை
குணப்படுத்த முடியாது. இது போன்ற குறைபாடு உடையவர்களுக்கு, புத்தகங்கள்
படித்துக் காட்டுதல், சாலையைக் கடக்க வைத்தல் போன்ற உதவிகளைச் செய்தால்,
அவர்களின் வாழ்த்து உங்களை வாழவைக்கும்.
mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» பார்வையற்ற மாணவர்களை ஈவிரக்கம் இல்லாமல் அடித்து துவைக்கும் கொடூர ஆசிரியர்: பதற வைக்கும் வீடியோ!
» தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்பு அல்ல- நெதர்லாந்து நீதிமன்றம்
» மூளைச்சாவு: இளைஞரின் 7 உடலுறுப்புகள் தானம்
» பார்வையற்ற மாற்றுத் திறனாளி.படுபிஸியான டூ வீலர் மெக்கானிக்
» காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு
» தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்பு அல்ல- நெதர்லாந்து நீதிமன்றம்
» மூளைச்சாவு: இளைஞரின் 7 உடலுறுப்புகள் தானம்
» பார்வையற்ற மாற்றுத் திறனாளி.படுபிஸியான டூ வீலர் மெக்கானிக்
» காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum