Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:13 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
ஸ்டார் (ஒயர்)கூடை பின்னுவது எப்படி?
2 posters
Page 1 of 1
ஸ்டார் (ஒயர்)கூடை பின்னுவது எப்படி?
க்ராஃப்ட் வேலைகள் செய்வதற்கு எப்போதுமே கொஞ்சம் பொறுமை வேண்டும். அதிலும்
ஒயர்களில் பின்னி ஒரு பொருளை செய்து முடிப்பதற்கு பொறுமை இன்னும் அதிகமாகவே
தேவைப்படும் அதனால் இந்த ஒயர் கூடையைக் கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் பொறுமையோடு பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். பெண்களுக்கு இது ஒரு நல்ல கைத்தொழிலாகக் கூட உதவும்.
ஒயரில் பின்னும் கூடைகளில் வகை வகையான மாடல்கள் உண்டு. இப்போது நாம் பார்க்கப் போவது ஸ்டார் மாடல் கூடை. பொதுவாகவே இந்த ஒயர் பின்னல்களின் அடிப்படையான செய்முறைகள் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும், அறவே பின்னத் தெரியாதவர்களும் அடிப்படையிலிருந்து தெரிந்துக் கொள்ளும் ஒரு அரிச்சுவடியாக இந்த முதல் பாகத்தை கொடுத்துள்ளேன். சந்தேகம் இருந்தால் கண்டிப்பாக கேளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ப்ளாஸ்டிக் ஒயர் - 2 கட்டு
மெட்டல் ஃபூட்ஸ்(Foots)
கத்தரிக்கோல்
செய்முறை:
முதலில் ஒயர் கட்டைப் பிரித்து ஒரு பேப்பர் அல்லது கட்டையில் இவ்வாறு நூல்
கண்டு போல் சுற்றி, கயிற்றால் இறுக கட்டிக் கொள்ளவும். சுற்றும்போது
இடையில் முடிச்சு விழாமல் கவனமாகச் சுற்றவும்.
ப்ளூ ஒயரில் 2½ மீட்டர் நீளமுள்ள 20 துண்டுகள் வெட்டவும். மஞ்சள் ஒயரில் 2¾ மீட்டர் நீளமுள்ள 20 துண்டுகள் வெட்டவும். (கவனம்:
ப்ளூ ஒயரைவிட மஞ்சள் ஒயர் சற்று நீளம் அதிகம்
இருக்கவேண்டும்). வெட்டியவற்றை சிக்கு விழாமல் முனையில் ரப்பர் பேண்ட்
போட்டு வைக்கவும். மீதியுள்ள ஒயர் 'சுற்று ஒயர்' எனப்படும்.
ப்ளூ ஒயரில் ஒன்றை சரி பாதியாக மடக்கிக் கொண்டு, சுற்று ஒயரின்
முனையிலிருந்து 35 செ.மீ. அளவுக்கு விட்டுவிட்டு மடக்கி, இரண்டு
ஒயர்களையும் இதுபோல் இணைக்கவும். (இதிலுள்ள சுற்று ஒயர்தான் 'நடு ஒயர்' ஆகும்)
இப்போது படத்தில் காட்டியுள்ளபடி மடக்கி சொருகவும்.
சதுர வடிவில் வரும் இதுபோன்று உருவாகும் முடிச்சுக்கு 'சோவி' என்பார்கள்.
இப்போது அதே சுற்று ஒயரில் 2 வது ஒயரை இணைத்து முன்போல் மடக்கி பின்னவும்.
இதேபோல் 10 ப்ளூ ஒயர்களையும் சம அளவில் மடக்கி சுற்று ஒயருடன் இணைத்து பின்னி முடிக்கவும்.
அதைத் தொடர்ந்து 20 மஞ்சள் ஒயர்களையும், அடுத்து மீதியுள்ள 10 ப்ளூ ஒயர்களையும் பின்னவும்.
40 ஒயர்களையும் பின்னி முடித்த பிறகு சுற்று ஒயரின் முடிவில் 35
செ.மீ. அளவு விட்டு வெட்டி, இரண்டாவது லைன் ஆரம்பிக்கவும். அப்படி
ஆரம்பிக்கும்போது இரண்டாவது லைனின் சுற்று ஒயரில் 10 செ.மீ. அளவு மட்டும்
விட்டுவிட்டு மடக்கிக் கொண்டு முதல் சோவி பின்னவும்.
குறிப்பு:-
- முடிச்சுகளை சற்று இறுக்கமாகப் போடவேண்டும். அப்போதுதான் கூடை நன்கு ஸ்ட்ராங்காகவும் அழகாகவும் இருக்கும்.
- அப்படி இறுக்கும்போது ரொம்பவும் இழுக்கவேண்டாம். சில இடங்களில் ஒயர்
மெலிந்திருந்தால் பிய்ந்துவிடும். (ஒட்டுக் கொடுத்து பின்னும்படி
சிரமமாகிவிடும்). அதனால் மெதுவாக இழுத்து டைட் பண்ணவும்.
- ஒயர் வாங்கும்போது நல்ல தரமானதாக வாங்கவும்.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Re: ஸ்டார் (ஒயர்)கூடை பின்னுவது எப்படி?
சென்ற பாகத்தில் ஸ்டார் (ஒயர்)கூடை
பின்னலின் இரண்டாவது லைன் ஆரம்பிப்பது வரை பார்த்தோம். தொடர்ந்து அந்த
வரியைப் பின்னி முடித்த பிறகு எவ்வாறு மூன்றாவது லைனுக்கு செல்வது
என்பதிலிருந்து, அடுத்தடுத்து வரக்கூடிய வரிகளை எப்படி பின்னவேண்டும்
என்பதை சற்று நிதானமாக பார்ப்போம். ஏனெனில் இந்த ஸ்டார் கூடை பின்னலில்
முதல் 3 வரிகள் முடியும்வரை ஒவ்வொரு முனை திருப்பும்போதும் வித்தியாசமான
இணைப்புகள் வரும். (இந்த பாகத்தில் கூடைக்கு 'அடி போடுவது' நிறைவடையும்.)
இரண்டாவது லைனைப் பின்னி முடித்த பிறகு அதே சுற்று ஒயரைக் கொண்டு , (வளைத்து) முதல் லைனின் ஒயரோடு இணைத்து சோவி போடவும்.
இப்போது இரண்டு லைன்களும் சேர்ந்து ஒரு சோவி உருவான இடத்தில் மூன்று
சோவிகள் முக்கோண வடிவில் இணைந்திருக்கும். அடுத்து அந்த சுற்று ஒயரின்
மீது முதல் லைனின் முதல் சோவி ஒயரை இணைத்து இன்னொரு சோவி பின்னவும்.
இந்த சோவிதான் 3 வது லைனின் முதல் சோவியாகும். அப்படியே 3 வது லைன் முழுவதும் பின்னி முடிக்கவும்.
3 லைன்களும் முடிந்த பிறகு அந்த சுற்று ஒயர் மீது நடு லைனின் ஒயரை இணைத்து ஒரு சோவி பின்னவும்.
இப்போது வலது பக்க லைனின் அடுத்ததாக உள்ள (முதல்) சோவியின் முடிச்சைத்
தளர்த்திக் கொண்டு, சுற்று ஒயரை அதனுள் வரும்படி இணைத்துப் பின்னவும்.
அதாவது 3 வது லைன் வளைந்து வந்து முதல் லைனின் முதல் சோவியுடன்
இணையவேண்டும். (விளக்கத்திற்கு படத்தைப் பெரிதாக்கி பார்க்கவும்)
அதற்கு பிறகு அப்படியே 4 வது லைனையும் தொடரவும்.
இப்போது பின்பக்கம் திருப்பிப் பார்த்தால் சுற்று ஒயரை முதல் லைனுடன் இணைத்த இடம் இவ்வாறு இருக்கும்.
இனி 10 லைன்கள் வரை எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து பின்னலாம். அதாவது
முதலில் ஆரம்பித்த லைனை நடு லைனாக கணக்கு வைத்துக் கொண்டு, அதன் இரு
பக்கமும் 10 வரிகள் என மொத்தம் 20 வரிகள் பின்னி முடிக்கவும். இத்துடன்
'அடி போடுவது' முடிந்தது. இப்போது சுற்று ஒயரை 4 இன்ச் விட்டு
வெட்டிவிடவும். இனி சுற்று ஒயரும் தேவைப்படாது.
இப்போது அடிப்பாகத்தின் 2 முனைகளும் கூம்பு வடிவில் வந்து இருக்கும்.
அடுத்து, வெட்டிய சுற்று ஒயரையும் இதன் 2 பக்கங்களிலும் இருக்கக்கூடிய நடு
லைனின் ஒயரையும் பின்னலுக்குள் உள்பக்கமாக சொருகவும்.
குறிப்பு: அடி போடுவதுதான் கூடைக்கு அஸ்திவாரம் என்பதால் மிக கவனமாக பின்னவேண்டும். ஒரு சோவி மாறினாலும் கூடை சரியான வடிவில் வராது.

Similar topics
» Rummy - Koodamela Koodavechi Lyric Video ரம்மி படத்தின் கூடை மேல கூடை வெச்சி பாடல் ஆடியோ!
» ரம்மி படத்தின் கூடைமேல கூடை வெச்சி பாடல் டீஸர் Rummy - Koodamela Koodavechi Teaser
» சொத்தை பற்களால் ஏற்ப்படும் வலியை குறைப்பது எப்படி? பல்லில் கரைகளைப் போக்குவது எப்படி? பல்லின் ஈறுகளை வலுப்படுத்துவது எப்படி ?
» காதலில் நீங்கள் எப்படி, உங்கள் லவ்வர் எப்படி, உங்கள் காதல் எப்படி என்பதை தெரிந்துகொள்ள 6 கேள்விக்கு பதில் அளியுங்கள்.
» சூப்பர் ஸ்டார் ரஜினியை ஆச்சர்யப்படுத்திய டி.வி.டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|