TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ரயில் விபத்துகள் - கசப்பான உண்மை.

Go down

ரயில் விபத்துகள் - கசப்பான உண்மை. Empty ரயில் விபத்துகள் - கசப்பான உண்மை.

Post by mmani Thu Jul 14, 2011 9:36 pm

ரயில் விபத்துகள் - கசப்பான உண்மை. 7-12-2011-13-kalka-mail-toll-at-68-and-risiஅதிகாரிகளின்
அறிவுரையைக் கேட்காமல் ஓர் அமைச்சர் தன்விருப்பப்படி நடந்துகொண்டால் என்ன
நடக்கும் என்பதற்கு தொலைத்தொடர்புத் துறையில் 2ஜி அலைக்கற்றை
ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் ஓர் எடுத்துக்காட்டு. அதுபோல, அதிகாரிகளின்
கையில் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, ஓர் அமைச்சர் தனது மாநில அரசியலைக்
கவனிக்கச் சென்றுவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு, ரயில்வேயின் சீரற்ற
நிர்வாகமும் விபத்துகளும் எடுத்துக்காட்டு.

உத்தரப் பிரதேச மாநிலத்தில், கல்கா ரயில் விபத்தில் 35 பேர் பலியான
சம்பவம் குறித்து செய்தி வெளியான அடுத்த கணமே விமர்சனக் கணைகள் மேற்கு
வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மீது பாய்ந்ததில் தவறு காண முடியாது.
மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தல் தொடங்கிய நாள் முதலாகவே மம்தா
பானர்ஜி ரயில்வே துறையில் கவனம் செலுத்தவே இல்லை என்பது வெளிப்படையான
உண்மை. அதன் பின்னர், உள்ளாட்சித் தேர்தலில்

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த வெற்றி, அவரைச் சட்டப்பேரவைத்
தேர்தல் பற்றிய சிந்தனையில் ஆழ்த்தி தனது ரயில்வே அமைச்சர் பதவிக்கான
கடமைகளைச் செய்யாத நிலைமையை ஏற்படுத்தியது. மார்ச் மாதம் மேற்கு வங்க
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் முழுநேரமும்
தனது மாநிலத்தில் செலவிட்டாரே தவிர, ரயில்வே அமைச்சகத்துக்கு வந்தாரா
என்பதேகூட சந்தேகம்தான்.

வெற்றி பெற்று முதல்வரானதும், அவர் இனி இந்த அமைச்சர் பதவியைத் தொடரப்
போவதில்லை என்று வெளிப்படையாக, சட்டப்பூர்வமாக உறுதியான பிறகும், மே 13-ம்
தேதி முதல் சுமார் இரண்டு மாத காலம் எந்த மாற்றமும் செய்யாமல், ரயில்வே
அமைச்சரை மாற்றாமல் வெறுமனே வேடிக்கை பார்த்த பெருமை நமது பிரதமர்
மன்மோகன் சிங்கைச் சாரும்.

மம்தா பானர்ஜி தன் பொறுப்பை உணர்ந்து, இந்த அமைச்சர் பதவியை தன் கட்சியைச்
சேர்ந்த மற்றொருவரிடம் ஒப்படைத்துவிட்டு விலகியிருந்தாலும்கூட
நிர்வாகத்தில் ஏற்பட்ட மெத்தனப் போக்கு ஓரளவு குறைந்திருக்கும். ஆனால்,
அதையும் அவர் செய்யவில்லை. ரயில்வே துறை முற்றிலுமாகச் சீர்கெட்ட பிறகு
இப்போதுதான் ரயில்வே அமைச்சர் பதவியைத் துறக்கும் எண்ணம் அவருக்கு
ஏற்பட்டிருக்கிறது.

ரயில்வே துறையில் மிக முக்கிய பொறுப்புகளுக்கான பதவிகளில் சுமார் 2 லட்சம்
பதவிகள் காலியாக, நிரப்பப்படாமல் இருக்கின்றன. இந்தப் பணி நியமனங்களுக்கான
உத்தரவுகளைப் போடாமல், கோப்புகள் கிடப்பில் உள்ளதற்குக் காரணம் அமைச்சர்
இதில் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான். இப்பணிகளில் மிகவும் அதிகமாக
காலியாக உள்ள பணிகள் எதுவென்றால், பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும்
தொழில்பிரிவுகளில்தான்.
அதிகாரிகளை அந்தந்தப் பதவிகளில் நிரப்பிவிட்டால் போதுமா, விபத்து
குறைந்துவிடுமா என்று கேட்கலாம். அதிகாரிகளை நியமித்து, சரியாகப்
பணியாற்றும் வாய்ப்பை உருவாக்கினால் நிச்சயமாக விபத்துகள் குறையும்
என்பதில் சந்தேகமே இல்லை.

ரயில் விபத்துகள் - கசப்பான உண்மை. 52653-5_29_529201040656123_11கல்கா
பயணிகள் ரயில் விபத்து நடந்தது குறித்து இன்னும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி
வருகிறார்கள் என்ற நிலையிலும், அந்த வழித்தடத்தில் அடிக்கடி பயணிக்கும்
"தினமணி'யின் தில்லி வாசகர் ஒருவர் தெரிவிக்கும் கருத்தையும் சிந்திக்க
வேண்டியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் அடிக்கடி ரயில் விபத்து
அல்லது ரயில் தடம்புரளுதல் ஏற்படக் காரணம், கட்டுப்பாடே இல்லாமல் அபாயச்
சங்கிலியை இழுத்தல் (செயின் புல்லிங்) நடைபெறுவதுதான் என்கிறார் அவர். பல
வடமாநிலங்களில் ரயிலில் அபாயச்சங்கிலியை இழுத்த நிகழ்வுகளுக்கான
பதிவேட்டில் இவை பதிவு செய்யப்படுவதும் இல்லை என்கிறார். இதை முறையாகப்
பதிவுசெய்து அந்தத் தடத்தில் கூடுதல் போலீûஸ அனுப்பி, தவறு செய்தவர்களைத்
தண்டிக்கும் வழக்கம் நடைமுறைக்கு வராதவரையிலும் இந்த விபத்துகள் தொடரும்
என்கிறார் அவர்.

தமிழ்நாட்டில், அபாயச் சங்கிலியை இழுத்து ரயில் நிறுத்தப்படுமேயானால்
அந்தப் பெட்டிக்கு ரயில்வே ஊழியர் வந்து யார் இழுத்தது என்று
விசாரிப்பார். காரணம் பதிவு செய்யப்படும். காரணம் சரியில்லை என்றால்
அபராதம் விதிக்கப்படும். ஆனால், உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில்
ரயில்களை அவரவர் வேண்டிய இடத்தில் நிறுத்துவதற்காக அபாயச் சங்கிலியை
இழுப்பது என்பது மிகமிக சகஜம். ஒரு ரயில் வேகமாகச் செல்லும்போது இவ்வாறு
சங்கிலியை இழுக்கும்போது, தண்டவாளம் சரியாகப் பொருத்தப்படாமல் பலவீனமாக
உள்ள இடமாக இருந்தால், தண்டவாளம் விலகி ரயில் விபத்துக்குள்ளாகும்
வாய்ப்பு அதிகரிக்கும்.

இந்த வேளையில் தில்லி வாழ், ரயில்வே உயர் அதிகாரி ஒருவர், ஒரு
பத்திரிகைக்குப் பேட்டி அளிக்கும்போது, ""சரக்கு ரயில்களில் எவ்வளவு டன்
எடை சரக்கு ஏற்றப்பட வேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லாமல், அதைக் கவனிக்க
ஆளில்லாமல், நிறைய எடையுள்ள பொருள்கள் ஏற்றப்படுவதால், தண்டவாளங்கள்
விரைவில் வலுவிழந்து போகின்றன. அதனால்தான் ""இதுபோன்ற ரயில் தடம்புரளுதல்
நிகழ்கின்றன'' என்று கூறியுள்ள கருத்தையும் ரயில்வே நிர்வாகம் கவனிக்க
வேண்டும்.

மேலும், ரயில்வே துறையில் தண்டவாளங்களை இணைக்கும் ஸ்லீப்பர் எனப்படும்
குறுக்குக்கட்டைகள் முன்பு மரத்தால் ஆனவை. இப்போது கான்கிரீட் பலகைகளால்
நிறுவப்படுகின்றன. இதைச் செய்து தருவது தனியார் நிறுவனங்கள். இதில்
மிகப்பெரும் ஊழல் நடப்பதாகவும், இதனால் தரமற்ற ஸ்லீப்பர்கள் விநியோகம்
செய்யப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இரு தண்டவாளங்களைத் தாங்கிப்
பிடிக்கும் இவை வலுவற்றுப்போனால் விபத்து நேரிடுவது தவிர்க்க முடியாதது.



ரயில் விபத்துகள் - கசப்பான உண்மை. Railபுதிதாகப்
பொறுப்பேற்றுள்ள ரயில்வே அமைச்சர், இத்தகைய அடிப்படையான விவகாரங்களைக்
கவனத்தில்கொண்டு செயல்பட்டால் ரயில் விபத்துகளைத் தவிர்க்கலாம்.
2009-10-ம் ஆண்டில் ரயில் விபத்துகளில் பலியானோர் 225 பேர். இந்த
நிதியாண்டில் ஜனவரி வரை ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 336-ஆக
உயர்ந்துவிட்டது. இந்த வேதனையை சாதனையாகக் கொள்ள முடியாது என்பதை ரயில்வே
அதிகாரிகளும் அமைச்சகமும் உணர்ந்தால்தான் விபத்துகள் குறையும்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» குண்டு வைத்து ரயில் பாதை தகர்ப்பு : பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பாய்ந்தது : 76 பேர் பலி!
» அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து : 15 பேர் பலி?
» ஆண்களுக்கு நிகராக ரயில் ஓட்டுவதில் மகிழ்ச்சி: திருச்சி முதல் பெண் ரயில் டிரைவர் பெருமிதம்
» ரயில் - பஸ் மோதல் தவிர்ப்பு: வாகனங்களுக்கு வழிவிட்டு காத்திருந்த ரயில்
» 10 ஆண்டுகளில் உலகளவில் நடந்த 22 நீர்மூழ்கிக் கப்பல் விபத்துகள்...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum