TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


விற்றமின் E மாத்திரைகள் பாதுகாப்பானவையா?

Go down

விற்றமின் E மாத்திரைகள் பாதுகாப்பானவையா? Empty விற்றமின் E மாத்திரைகள் பாதுகாப்பானவையா?

Post by அருள் Sun Jun 12, 2011 9:41 am

விற்றமின்
E மாத்திரைகள் உட்கொள்வது பலருக்கு தினசரி காலைத் தேநீர் அருந்துவது போல
நித்திய கடமையாகிவிட்டது. விற்றமின் E மாத்திரைகள் மிகவும் பிரபல்யமாக
வந்ததற்குக் காரணம், ஒட்சிசன் எதிரியான (Antioxidant) இது
மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றைத் தடுக்கக் கூடும் என சில ஆரம்பநிலை
ஆய்வுகள் தெரிவித்தமையே ஆகும். எனவே மருத்துவர்களும் ஒரு காலத்தில்
அமோகமாக சிபார்சு செய்தார்கள்.

[You must be registered and logged in to see this image.]

ஆயினும் இப்பொழுது அதன் பயன் பற்றிய புதிய எண்ணக் கருக்கள் காரணமாக சிபார்சு செய்வது குறைந்துவிட்டது.

இருந்த போதும், பல நோயாளர்கள் தொடர்ந்து உபயோகித்துக் கொண்டே
இருக்கிறார்கள். ஒரு முறை டொக்டர் மருந்துச் சிட்டையை எழுதினால் எக்
காலத்திற்கும் பொருந்தும் உறுதி போன்றதாக பலர் கருதுவதே இதற்குக் காரணம்.
அமெரிக்காவில் கூட 13 சதவிகிதமானவர்கள் விற்றமின் E மாத்திரைகளைத்
தொடர்ந்து உபயோகிப்பதாகத் தெரிகிறது.

முடி வளரும், தோல் மிருதுவாகும், முகப் பரு நீங்கும், நகம் அழகாகும்
என்பது போன்ற விளம்பரங்களை அச்சு மற்றும் இலக்ரோனிக் மீடியாக்களில்
பார்த்து விற்றமின் E மாத்திரைகளை கண்டபடி உபயோகிக்கும் அப்பாவிக்
கூட்டங்களுக்கு குறைவில்லை. விளம்பரங்களுக்கு செலவழிக்கும் பணம் இலகுவாக
மீளக் கிடைத்துவிடுகிறது.

ஏற்கனவே சொல்லப்பட்டது போல இது ஒரு ஒட்சிசன் எதிரி (Antioxidant)
ஆகும். பிறீ றடிக்கலஸ் என்று சொல்லப்படும் நச்சுப் பொருள்களால் உடல்
கலங்கள், இழையங்கள், உறுப்புகளுக்கு ஏற்படக் கூடிய தாக்கங்களை இது
தடுக்கிறது. இதனால் வயதாவதால் ஏற்படக் கூடிய சில மாற்றங்களை இது
தடுக்கலாம் என நம்பப்பட்டது. செங்குருதி உற்பத்திக்கும் இது அவசியமானது.
இருதய நலத்திற்கு உதவக் கூடும்.

இருதயநோய்கள், புற்றுநோய்கள், ஈரல்நோய்கள், மூளை மங்குதல், பக்கவாதம்
ஆகியவற்றைத் தடுக்கக் கூடிய ஆற்றல் இருக்கிறது எனச் சிலர் சொன்னபோதும்
அதற்கான திடமான மருத்துவ ஆதாரங்கள் இல்லை.

எதிர்மாறாக அதிகளவில் விற்றமின் E உட்கொள்வது ஆபத்தாக முடியக் கூடும்.
உதாரணமாக பக்கவாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் இரண்டு வகைகள் உண்டு
மூளையினுள் குருதி பெருகுவதால் (Haemorrhagic strokes) ஏற்படுவது ஒரு வகை.
[You must be registered and logged in to see this image.]

மற்றது இரத்தக் குழாய் அடைபட்டு மூளையின் சில பகுதிகளுக்கு இரத்தம் தடைப்படுவதால் (Ischaemic strokes) ஏற்படுவதாகும்.

[You must be registered and logged in to see this image.]

அதில் முதலாவதான குருதிப் பெருக்கு பக்கவாதமானது ஏனையவர்களை விட விற்றமின்
E மாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கு சற்று அதிகமாகும் என ஒரு ஆய்வு அறிக்கை
கூறுகிறது. அதே நேரம் இம் மாத்திரைகள் இரத்தக் குழாய் அடைபடுவதால்
ஏற்படும் பக்கவாதத்தை மிகக் குறைந்தளவில் தடுக்கும் என்றும் கூறுகிறது.

பக்கவாதத்தைத் தடுப்பதை
விட அது வருவதற்குக் காரணமாக இருப்பது அதிகம் என்பதால் தான்தோன்றித்தனமாக
விற்றமின் E மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது என ஆய்வாளர்கள் சுட்டிக்
காட்டியுள்ளார்கள்.

அத்துடன் கொலஸ்டரோலைக் கட்டுப்படுத்தும் சிம்வஸ்ரரின், நியாசின், குருதி
உறைதலைத் தடுக்கும் வோரபரின் போன்றவற்றை உபயோகிப்பவர்கள் விற்றமின் E
மாத்திரைகளை உட்கொண்டால் மருந்துகளிடையே தாக்கம் ஏற்பட்டு பாதகவிளைவுகள்
ஏற்படுத்தலாம்.

புற்றுநோய்க்கு கதிர்ச்சிகிச்சை, மருந்துச் சிகிச்சை அளிக்கும்போதும்
விற்றமின் E மாத்திரைகளை உட்கொண்டால் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்படும் எனத்
தெரிகிறது. எனவே விற்றமின் E மாத்திரை பாவனையில் அவதானம் தேவைப்படுகிறது.

கர்ப்பணிகள் அதிக விற்றமின் E யை உட்கொண்டால் கருவில் உள்ள குழந்தைக்கு
இருதயததில் குறைபாடுகள் ஏற்படலாம் என மற்றொரு ஆய்வு கூறுகிறது.

மேலும் அறிய கீழே கிளிக் பண்ணுங்கள்

Babies at risk from vitamin E?

எமது உடலின் இயக்கத்திற்கு தினசரி மிகக் குறைந்தளவு விற்றமின் E மட்டுமே
தேவை. வளர்ந்தவர்களுக்கு 15 மிகி, பாலகர்களுக்கு சுமார் 5மிகி என்ற அளவில்
மட்டுமே. ஆயினும் பிரித்தானிய தேசிய சுகாதார சேவை 4மிகி மட்டுமெ போதுமென
இப்பொழு அறிவித்துள்ளது.

[You must be registered and logged in to see this image.]

இதனை எமது நாளாந்த உணவிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும். வழமையான சமபல வலுவுள்ள உணவுகள் போதுமானதாகும்.

விற்றமின் E பற்றி பிரித்தானிய தேசிய சேவையின் கருத்து

விற்றமின் E அதிகமுள்ள உணவுகள் என எவற்றைச் சொல்லலாம்?

சோளம், விதைகள், கீரை வகைகள், மற்றும் சோளம், சோயா, சூரியகாந்தி, பருத்தி
ஆகிய எண்ணெய் வகைகள், மாம்பழம், தக்காளி, ஸ்பினச் போன்ற பல பழவகைகளிலும்
இருக்கிறது.

பொதுவாக ஆசியநாட்டவர்களாகிய நாம் தினசரி காய்கறிகள், பழவகைகள் ஆகியவற்றை
உட்கொள்வது வழக்கம். இதனால் விற்றமின் E குறைபாடு ஏற்படுவதற்கான
சாத்தியங்கள் குறைவு. எனவே மேலதிக விற்றமின் E மாத்திரைகள் எடுக்க வேண்டிய
அவசியமில்லை.

ஆயினும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பலருக்கு விற்றமின் E குறைபாடு
இருப்பதாகத் தெரிகிறது. இதனால் அவர்கள் உட்கொள்ளும் மல்ரிவிற்றமின்
மாத்திரைகளில் சுமார் 30மிகி விற்றமின் E சேர்க்கிறார்கள். அது தாராளமாகப்
போதும்.

இங்கு கிடைக்கும் பல மல்ரிவிற்றமின் மாத்திரைகளிலும் கிட்டத்தட்ட அதேபோல குறைந்தளவு விற்றமின் E இருக்கிறது. இது ஆபத்தானது அல்ல.

ஆனால் விற்றமின் E மாத்திரைகளை உட்கொள்ளும் பலர் 400 -600 மிகி அல்லது
அதற்கு அதிகமான வலுவிலும் எடுக்கிறார்கள். இது நல்லதல்ல. இது
பக்கவிளைவுகளைக் கொண்டு வரலாம்.

எனவே விற்றமின் E மாத்திரைகளை

  • மருத்துவரின் சிபார்சு இன்றி எடுக்க வேண்டாம்.
  • மருத்துவர் ஏதாவது காரணத்திற்காகச் சிபார்சு செய்திருந்தால் அந்த அளவை மட்டுமே உட்கொள்ளுங்கள்.
  • உங்கள் விருப்பத்தின்படி தேவையற்று உட்கொள்ளாதீர்கள்.
  • விளம்பரங்களைக் கண்டு ஏமாறவும் வேண்டாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum