TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


மத்திய அமைச்சரவையில் திமுக தொடருமா?இன்று முடிவு

Go down

மத்திய அமைச்சரவையில் திமுக தொடருமா?இன்று முடிவு Empty மத்திய அமைச்சரவையில் திமுக தொடருமா?இன்று முடிவு

Post by அருள் Fri Jun 10, 2011 9:18 am


மத்திய அமைச்சரவையில் திமுக தொடருமா?இன்று முடிவு Mk1





சென்னை ஜூன் 9: திமுக - காங்கிரஸ் உறவு தொடர்பாக, வெள்ளிக்கிழமை நடக்கும்
திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவின் அவசரக் கூட்டத்தில் முக்கிய முடிவு
எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக் கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் மாலை 4.30 மணியளவில் அண்ணா
அறிவாலயத்தில் உள்ள முரசொலிமாறன் வளாகத்தில் இக் கூட்டம் நடக்கிறது.
பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின். முதன்மைச் செயலாளர்
ஆர்க்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி,
சற்குணபாண்டியன், தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகள்
கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளியானதற்குப் பிறகு கட்சியின் தலைவர்கள்
பங்கேற்கும் முறைப்படியான முதலாவது கூட்டம் இதுவாகும்.
தேர்தல் தோல்விக்குக் காரணம், "கூட்டணிக் கட்சிகள் கேட்டுப் பெற்ற இடங்களா,
அவர்களுக்கு விட்டுக் கொடுத்த இடங்களா' என்று கருணாநிதி கூறியுள்ளார். கூட்டணி
ஆட்சிதான் வரும் என்றால் அதை தமிழக மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்ற கருத்தை
காங்கிரஸ் தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் கருணாநிதி.
இருந்தாலும் காங்கிரஸ் தலைமை பிடிவாதமாக இருந்து 63 தொகுதிகளைப் பெற்றதால்,
திமுக 118 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலை ஏற்பட்டது. எனவே கூட்டணி ஆட்சி
என்ற சூழ்நிலையை தவிர்க்கவே மக்கள் விரும்புவர் என்ற கருணாநிதியின் கருத்தை உறுதி
செய்வதைப் போலவே தேர்தல் முடிவு அமைந்துவிட்டது.
அதைத் தொடர்ந்து தனது பிறந்த நாளன்று அண்ணா நினைவிடத்தில் செய்தியாளர்களிடம்
பேசிய கருணாநிதி, கூடாநட்பு கேடாய் முடியும் என்பதை தொண்டர்கள் நினைவில் கொள்ள
வேண்டும் என்று கூறினார். இதற்கு பல அர்த்தங்கள் கூறப்பட்டாலும், அதில் ஒன்று
காங்கிரஸ் உறவைக் குறிப்பது என்று காங்கிரஸ் தரப்பினரே கருதுகின்றனர்.
இதுதவிர, கருணாநிதியின் மகள் கனிமொழி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு 18
நாள்களாகிவிட்டன.
திருவாரூரில் கடந்த 5-ம் தேதி நடந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பேசிய
கருணாநிதி, மத்திய அரசு உத்தரவாலோ அல்லது அலட்சியத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ
கனிமொழி சிறை செல்ல நேரிட்டது என குறிப்பிட்டார். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில்
சி.பி.ஐ. நடத்தும் விசாரணையில் கனிமொழி கைதாகி இருப்பதால் இதில் மத்திய அரசுக்கு
எந்தப் பங்கும் இல்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.
சி.பி.ஐ. நீதிமன்றத்திலும், தில்லி உயர் நீதிமன்றத்திலும் கனிமொழியின் ஜாமீன்
மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. கருணாநிதிக்கு இது மிகுந்த மன உளைச்சலை
ஏற்படுத்தி இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
மாநிலத்தில் ஆட்சி இல்லாத சூழ்நிலையில், மத்திய ஆட்சியில் நீடிப்பதே
பாதுகாப்பானதாக இருக்கும் என திமுக தலைவர்கள் கருதி வந்தனர்.
ஆனால் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காததும், மாநிலத்தில் ஆட்சியை இழக்க காரணமாக
இருந்தது என்ற கருத்தும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகவே இருக்கிறது.
2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த
ஆ. ராசா சிறை சென்று சுமார் 4 மாதங்கள் ஆகிவிட்டன. கனிமொழியும் சிறையில் உள்ளார்.
மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்,
வலுப்பெற்று வருவதால் அவரும் மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் என்ற
சூழ்நிலை உருவாகியுள்ளது. அடுத்தடுத்து திமுக அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கைகள்
வருவது குறித்து கட்சித் தலைமை அதிருப்தி அடைந்திருப்பதாகத் தெரிகிறது.
இவ்வளவு நடந்த பிறகும் காங்கிரஸ் கட்சியுடன் உறவு இருந்து எதைக் காப்பாற்றப்
போகிறோம் என்ற கருத்து கட்சித் தலைவர்களிடம் காணப்படுகிறது.
இதற்கிடையில், வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ள திராவிடர் கழக தலைவர் கி.
வீரமணி, ""தேர்தலில் திமுக இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்ததற்கான காரணங்களில் ஒன்று
மத்திய ஆளும் காங்கிரசுடன் இருந்து அதன் பல்வேறு செயல்களுக்கும் பழி ஏற்க வேண்டிய
நிலைக்கு தள்ளப்பட்டதுதான்'' என கூறியுள்ளார்.
திமுக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் இப்படி ஒரு கருத்தை வீரமணி
தெரிவித்திருக்க மாட்டார் என்றே அரசியல் வட்டாரத்தில் கருத்தாக உள்ளது.
இவைதவிர, இக் கூட்டத்தில் தலைவர்கள் பேசும்போது தேர்தல் தோல்விக்கான
காரணங்களைப் பட்டியலிடுவார்கள். அதிலும் காங்கிரஸ் மீது குறைகள் தெரிவிக்கப்படலாம்.
எனவே காங்கிரஸ் கட்சியுடன் உறவைத் தொடருவதா, மத்திய அமைச்சரவையில் பங்கேற்பைத்
தொடருவதா அல்லது வெளியில் இருந்து ஆதரவா என்று முக்கிய முடிவு ஏதாவது இந்தக்
கூட்டத்தில் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்திவைப்பு, புதிய
தலைமைச் செயலக பணிகள் நிறுத்தம் போன்றவற்றைக் கண்டித்து ஏற்கெனவே மு.க. ஸ்டாலின்
பேட்டி அளித்துள்ளார். இதுதொடர்பாக கட்சித் தலைவரிடம் கலந்து பேசி போராட்டம்
நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதுபோன்ற போராட்ட முடிவுகளும் எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அமைச்சரவையில் இன்று முடிவு: ரேஷன் கோதுமை, அரிசி விலை உயரும்?
» அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவு ஏன்? திமுக விளக்கம்
» மத்திய அமைச்சரவையில் 15 புது ஹீரோக்களை அறிமுகப்படுத்த பிரதமர் முடிவு
» மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., விலகாது : உயர்மட்ட குழுவின் முடிவு இது தான்!
» மத்திய அமைச்சரவையில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் விலகல்: மம்தா அதிரடி முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum