Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., விலகாது : உயர்மட்ட குழுவின் முடிவு இது தான்!
Page 1 of 1

ஸ்பெக்ட்ரம் வழக்கில், கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக,
தி.மு.க., உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம், சென்னையிலுள்ள அண்ணா
அறிவாலயத்தில் இன்று அவசரமாக கூடுகிறது. இக்கூட்டத்தில், காங்கிரஸ்
கூட்டணி குறித்து, முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு,
அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கிய குற்றவாளிகளிடம் இருந்து, கலைஞர்,
"டிவி'க்கு, 210 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதால், அந்த,
"டிவி' நிறுவனத்தின், 60 சதவீத பங்குகளை வைத்துள்ள கருணாநிதியின் மனைவி
தயாளு, மகள் கனிமொழி, நிர்வாக இயக்குனர் சரத்குமாரிடம், சி.பி.ஐ.,
விசாரித்தது.அதன்படி, கனிமொழியை, 2வது குற்றப்பத்திரிகையில் சேர்த்து,
தி.மு.க., வட்டாரத்துக்கு, சி.பி.ஐ., நேற்று முன்தினம் அதிர்ச்சி
வைத்தியம் அளித்தது. மே 6ம் தேதி, கோர்ட்டில் ஆஜராகும்படி கனிமொழிக்கு
சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.அங்கு தொட்டு, இங்கு தொட்டு கடைசியில்
முதல்வரின் குடும்பத்திலேயே, சி.பி.ஐ., கை வைத்துள்ளதால், இப்பிரச்னையை
பெரும் நெருக்கடியாக, தி.மு.க., கருதுகிறது. இந்த நெருக்கடியை சமாளிக்க
என்ன செய்யலாம் என்ற கட்டாயத்தில், கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்
குழு, இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்படுகிறது.மத்திய அரசு மீதான
கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், காங்கிரசுடன் கூட்டணியை முறித்துக்
கொள்வது குறித்து, தி.மு.க., பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால்,
இந்த முடிவு எந்த விதத்திலும் கட்சிக்கும், வழக்கில் சிக்கியுள்ள
கனிமொழிக்கும் பலன் தராது என்பதே கட்சித் தலைமையின் கணிப்பாக உள்ளது.
"கூட்டணி கட்சியினர் ஊழலில் ஈடுபடும்போது அவர்களை காப்பாற்றுவது தான்
கூட்டணி தர்மம்' என்ற அடிப்படையில் தான், இதற்கு முந்தைய அரசுகள்
முன்னுதாரணங்களை ஏற்படுத்திச் சென்றுள்ளன. மத்திய அரசு என்ன நினைக்கிறதோ,
அதை செயல்படுத்தும் அமைப்பாகவே, சி.பி.ஐ., போன்ற விசாரணை அமைப்புகளும்
செயல்பட்டு வந்துள்ளன. ஆனால், தி.மு.க., - காங்கிரஸ் விஷயத்தில், இதற்கு
நேர்மாறான அணுகுமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்றும், மறுபுறம்,
ரெய்டு, குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பு என்றும் எதிரெதிர்
நடவடிக்கைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதன் மர்மம் என்ன என்பதை அனைவரும்
விவாதிக்கத் துவங்கியுள்ளனர்."ஊழலுக்கு நாங்கள் எதிரானவர்கள், ஊழல்
செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம் என்ற தோற்றத்தை
உருவாக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. அதற்கு, தி.மு.க.,வை பலிகொடுக்க
தயாராகி விட்டது' என, தி.மு.க.,வினர் கருதுகின்றனர்.
சூழ்நிலைகள் இப்படி இருந்தாலும், காங்கிரசை பகைத்துக் கொள்ளும் எந்த
முடிவை எடுத்தாலும், அது ஜெயலலிதாவுக்கு சாதகமாகி விடும் என்ற நிலையையும்,
தி.மு.க., ஆலோசித்து வருகிறது."தமிழக சட்டசபை தேர்தல் முடிவு எப்படி
இருக்கும் எனத் தெரியாத நிலையில், காங்கிரஸ் எதிர்ப்பு நிலையை, உயர் நிலை
செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் எடுத்தால், அது, நிலைமையை இன்னும்
மோசமாக்கி விடும்' என, தி.மு.க.,வின் தலைமை கருதுகிறது.
"காங்கிரஸ் எதிர்ப்பு நிலையை எடுத்து, காங்கிரஸ் தங்களை பழிவாங்கி
விட்டது; துரோகம் இழைத்து விட்டது என்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும்,
அது, அரசியல் ரீதியாக பயன்படுமே தவிர, ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து
தப்பிக்க எந்த வகையிலும் உதவாது. காங்கிரஸ் உதவி இல்லாமல் இந்த வழக்கை
சந்திப்பது சிரமம்' என்றும் கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள்
கூறுகின்றனர்.சட்டசபை தேர்தல் முடிவுகள், தி.மு.க.,வுக்கு பாதகமாக
அமைந்து, மத்திய அரசிலிருந்தும் வெளியேறி, மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே
நேரத்தில், அதிகாரத்தில் இல்லாமல் இருப்பது எந்த விதத்திலும் கட்சிக்கு
உகந்தது அல்ல என்ற கருத்தும், தி.மு.க., மேலிடத்திற்கு நன்கு
தெரிந்துள்ளது.எனவே, "வழக்கை சட்டப்படி சந்திப்போம். குற்றச்சாட்டுகளை
பொய்யாக்கி, உண்மைகளை வெளியில் கொண்டு வருவோம். நீதி வெல்லும், தர்மம்
வெல்லும்' என்பது போன்ற தீர்மானங்களுடன் உயர்நிலை செயல் திட்டக் குழு
முடிவுகளை எடுக்கும் என, தி.மு.க., மேல்மட்ட தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
குமுறல்...!முதல்வரின் மனைவி, மகளுக்கு நெருக்கடி வந்ததால்
மட்டும் கட்சியின் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் உடனே
கூட்டப்படுகிறது. இதே வழக்கில், மத்திய அமைச்சராக இருந்த ஒருவர் கைது
செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட போது, கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட
இந்த அமைப்பை கூட்டவில்லை. இதுவரை, ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை
என, தி.மு.க.,வின் ஒரு சாரார் பயங்கர குமுறலில் உள்ளனர்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மத்திய அமைச்சரவையில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் விலகல்: மம்தா அதிரடி முடிவு
» மத்திய அமைச்சரவையில் திமுக தொடருமா?இன்று முடிவு
» அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவு ஏன்? திமுக விளக்கம்
» மத்திய அமைச்சரவையில் 15 புது ஹீரோக்களை அறிமுகப்படுத்த பிரதமர் முடிவு
» மத்திய அமைச்சரவையில் இன்று முடிவு: ரேஷன் கோதுமை, அரிசி விலை உயரும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum