TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இலவச காப்பீட்டு திட்டம் ஜூலை 5ல் ரத்து: திட்ட வெப்சைட், சாப்ட்வேர் ஒப்படைக்க உத்தரவு

Go down

இலவச காப்பீட்டு திட்டம் ஜூலை 5ல் ரத்து: திட்ட வெப்சைட், சாப்ட்வேர் ஒப்படைக்க உத்தரவு Empty இலவச காப்பீட்டு திட்டம் ஜூலை 5ல் ரத்து: திட்ட வெப்சைட், சாப்ட்வேர் ஒப்படைக்க உத்தரவு

Post by அருள் Fri Jun 10, 2011 9:12 am

பொள்ளாச்சி: "இலவச காப்பீட்டு திட்டம், வரும் ஜூலை 5ம் தேதியோடு ரத்து
செய்யப்படுகிறது' என, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம்,
மருத்துவமனைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. திட்டத்திற்கு
பயன்படுத்தப்பட்ட வெப்சைட், சாப்ட்வேர் மற்றும் பயனாளிகள் பட்டியல்
உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்கும்படி, ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு, அரசு
உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்காலத்தில், "கலைஞர் காப்பீட்டு திட்டம்'
என்ற பெயரில், உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டம் துவங்கப்பட்டது.
2009ம் ஆண்டு ஜூலை முதல், திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. ஆண்டுக்கு 72
ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருவாய் கொண்ட அனைவரும் பயனாளிகளாக தேர்வு
செய்யப்பட்டனர். அவர்களுக்கு போட்டோ எடுத்து அடையாள அட்டையும்
வழங்கப்பட்டது. பயனாளிகள், ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற
மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கென, மொத்தம் 650 மருத்துவமனைகளை ஸ்டார் ஹெல்த் நிறுவனம்
அங்கீகரித்திருந்தது. திட்டத்திற்காக ஆண்டுக்கு 720 கோடி ரூபாய், அரசு
வழங்கியுள்ளது. இதுவரை, அறுவை சிகிச்சை செய்து கொண்ட 3.5 லட்சம் பேர்,
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். எனினும், இத்திட்டத்தில்
குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன.
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற மாநில அரசு, கலைஞர்
காப்பீட்டு திட்டம் முழுமையான காப்பீடு திட்டமாக இல்லாததை
சுட்டிக்காட்டியும், பயனாளிகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக கூறியும்,
திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது; மக்கள் பயன்பெரும் வகையில்
மேம்படுத்தப்பட்ட புதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்யவும் முடிவு
செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, சட்டசபையில் தமிழக கவர்னர் உரையில்
வெளியிடப்பட்டது. அதையடுத்து, கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில்,
காப்பீட்டு திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அரசாணையின்
தொடர்ச்சியாக, அரசு சிறப்பு செயலர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
திட்ட இயக்குனர் விஜயகுமார், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன சேர்மன்
மற்றும் நிர்வாக இயக்குனர் ஜெகநாதனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,
"தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, காப்பீட்டு திட்டம் ரத்து
செய்யப்படுகிறது. எனவே, திட்டத்திற்காக ஒப்படைக்கப்பட்ட நிதியில் மீதமுள்ள
தொகையை திரும்ப ஒப்படைக்க வேண்டும். மேலும், திட்டத்திற்காக
வடிவமைக்கப்பட்ட வெப்சைட், பயனாளிகள் பட்டியல், சாப்ட்வேர்
உள்ளிட்டவற்றையும் ஒப்படைக்க வேண்டும்' என,தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு சிறப்பு செயலர் நோட்டீஸ் அறிவிப்பை தொடர்ந்து, ஸ்டார் ஹெல்த்
இன்சூரன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சுந்தரேசன், காப்பீட்டு திட்ட
அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில்,
"அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு
சிறப்பு செயலர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை திட்ட இயக்குனர்
அறிவித்துள்ளார். அதனால், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன்
மருத்துவமனை செய்திருந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் ரத்து
செய்யப்படுகிறது. வரும் ஜூலை 5ம் தேதி நள்ளிரவுக்கு பிறகு இந்த திட்டம்
ரத்தாகிறது. மருத்துவமனைகளில், வரும் ஜூலை 5ம் தேதிக்கு பிறகு இந்த
திட்டம் செயல்பாட்டில் இருக்காது. அதுவரை மேற்கொள்ளப்படும் அறுவை
சிகிச்சைகளுக்கான ஆவணங்களை சமர்ப்பித்து அதற்கான தொகையை
பெற்றுக்கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., அரசு,
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் என்னென்ன மேம்பாடுகள் செய்யும், எப்போது
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிவிக்கும், எந்த காப்பீட்டு
நிறுவனத்திடம் இந்த திட்டத்தை ஒப்படைக்கும் என்ற எதிர்பார்ப்பு
எல்லாரிடமும் ஏற்பட்டுள்ளது.
செயல்பாடு எளிமையாகும்: அ.தி.மு.க., அரசு, புதிய
காப்பீட்டு திட்டத்தை விரைவில் துவங்கவும் முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள
காப்பீட்டு திட்டத்திற்கான வெப்சைட், சாப்ட்வேர் போன்றவற்றை அரசிடம்
ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. புதிதாக எந்த காப்பீட்டு
நிறுவனத்திடமும் இந்த திட்டத்தை ஒப்படைத்தால், புதிதாக சாப்ட்வேர்,
வெப்சைட் அமைக்க காலதாமதம் ஏற்படும். பயனாளிகள் பட்டியல் தயாரிக்கவும் கால
விரயம் ஏற்படும். தற்போதுள்ள திட்ட செயல்பாடு பற்றிய விவரம், பயனாளிகள்
பட்டியலை பெற்று, புதிதாக ஒப்பந்தம் செய்யப்படும் காப்பீட்டு
நிறுவனத்திடம் ஒப்படைத்தால் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முடியும்.
அதற்கு வசதியாகவே, பட்டியல், சாப்ட்வேர் ஆகியவற்றை ஒப்படைக்கும்படியும்
அரசு உத்தரவிட்டுள்ளது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து- கேபிள் அரசுடைமை-சூரியஒளிமின்சாரத்தில் கவனம்;கவர்னர் உரை
» எம்.ஜி.ஆர்., மருத்துவ காப்பீட்டு திட்டமாக பெயர் மாறுது கலைஞர் காப்பீட்டு திட்டம்
» அரசு கேபிள் டி.வி., இலவச லேப்-டாப், மிக்ஸி-கிரைண்டர் திட்ட அமல்
» தி.மு.க.,வின் காப்பீட்டு திட்டம் கவலைக்கிடம்
» இளவரசனின் உடலை பதப்படுத்தி தந்தையிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum