Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விலைவாசி உயர்வு, ஊழல் பெருக காங்கிரஸ் அரசே காரணம்
Page 1 of 1
விலைவாசி உயர்வு, ஊழல் பெருக காங்கிரஸ் அரசே காரணம்
ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டை
முன்னிட்டு ரங்கா ரெட்டி பகுதியில் உள்ள என்டிஆர் நினைவு பள்ளியில் உள்ள
கட்சியின் நிறுவ
ஹைதராபாத்,
மே 27: இந்தியாவில் ஊழலுக்கும், அத்தியாவசிய பொருள்கள் விலை உயரவும்
காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்று தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர்
என். சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இவை இரண்டையும்
நாட்டிலிருந்து வெளியேற்ற ஒருங்கிணைந்த போராட்டம் அவசியம் என்று அவர்
கூறினார். ஒவ்வொரு மாநிலத்திலிருந்து படிப்படியாக காங்கிரஸ் கட்சியை
வெளியேற்றுவதன் மூலம்தான் நாட்டில் ஊழலற்ற ஆட்சியை உருவாக்க முடியும்
என்று அவர் குறிப்பிட்டார்.தெலுங்கு தேசம் கட்சியின் ஆண்டு கூட்டம் ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேசியது:அனைத்து
பொருள்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை தொடர்ந்து
உயர்த்தப்படுகிறது. இதனால் பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு
அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு
விலையை உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது. ரூ. 12 லட்சம் கோடி அளவுக்கு
பட்ஜெட் போடும் அரசால், விவசாய பொருள்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க
முடியாதது மிகவும் வெட்கக்கேடான விஷயம். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த
முடியாவிட்டால் அரசு பதவி விலகிவிடலாம். மக்களே விலையை நிர்ணயித்துக்
கொள்வார்கள் என்று அவர் கூறினார்.விவசாயிகள் சொல்ல மாட்டாத
அளவுக்கு துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் பிரச்னைகளுக்கு
அரசு தீர்வு காணாத பட்சத்தில் அவர்கள் விரக்தியின் உச்சத்துக்கு
செல்கின்றனர். விவசாயிகளின் பிரச்னை மிகவும் சோகமானது. அவர்கள்
பிறந்ததிலிருந்து இறக்கும்வரை கடனாளியாகவே இருக்கும் சூழல்
உருவாக்கப்பட்டுள்ளது. தாங்கள் விளைவித்த பொருள்களை ஏற்றுமதி செய்யக்கூட
முடியாத நிலைக்கு அரசின் கட்டுப்பாடுகளே காரணமாகும்.வேளாண்
விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரையை அரசு
செயல்படுத்தாதது ஏன்?, அதை செயல்படுத்தினால் விவசாயம் லாபகரமான தொழிலாக
இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.ஆந்திர மாநில முதல்வர்
கிரண்குமார் ரெட்டி அரசியல் அனுபவம் இல்லாதவர். இதனால் சிக்கலான
பிரச்னைகளுக்கு அவரால் தீர்வு காணமுடியவில்லை. மாநிலத்தில் அரசு நிர்வாகம்
செயலிழந்துவிட்டது. தங்கள் விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்காமல்
விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை ஆற்றில் கொட்டுகின்றனர், அல்லது
எரித்துவிடுகின்றனர். மாநிலத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து 75 லட்சம் டன்
நெல்லை கொள்முதல் செய்ய இந்திய உணவுக் கார்ப்பரேஷன் (எப்சிஐ) தயாராக
இருந்தபோதிலும், அதற்கு உரிய ஒருங்கிணைப்பை மாநில அரசு செய்யத்
தவறிவிட்டது என்று அவர் குற்றம் சாட்டினார்.தெலங்கானா விவகாரம்:
ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்குவது
தொடர்பாக மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை வெளியிடவேண்டும். அனைத்து
அரசியல் கட்சிகளும் தங்களது கருத்துகளை தெரிவித்துவிட்டன. இதற்குப்
பிறகும் மத்திய அரசு தனது கருத்தை வெளியிடாமல் இருப்பது பிரச்னையை மேலும்
சிக்கலாக்கும். இந்த விஷயத்தில் மத்திய அரசால் உறுதியான முடிவை எடுக்க
முடியவில்லை என்பது தெரிகிறது. இதனால் மாநில அரசு எந்தவித உறுதியான
முடிவையும் எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. தெலுங்கு மொழி பேசும்
மக்கள் விஷயத்தில் மத்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது என்று அவர்
கூறினார்.தெலங்கானா விவகாரத்தை ஆந்திர அரசு அரசியலாக்குகிறது.
தனித் தெலங்கானா உருவாக்குவது தொடர்பாக டிசம்பர் 9, 2009-ல் மத்திய அரசு
அறிவிக்கை வெளியிட்டு பின்னர் அரசியல் கட்சிகள் இரண்டு பிரிவாக
பிளவுபட்டதையடுத்து அதை திரும்பப் பெற்றது ஆகிய நடவடிக்கைகள் மத்திய
அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது.அரசு அமைத்த நீதிபதி
ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் முன்பு அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்துகளைத்
தெரிவித்துள்ளன. ஆனால் இதுவரை அறிக்கை குறித்து மத்திய அரசு எவ்வித
முடிவும் எடுக்கவில்லை. ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டாலும்,
இருபகுதிகளிலும் உள்ள தெலுங்கு பேசும் மக்களின நலனை காக்க வேண்டிய
பொறுப்பு தமக்கு இருப்பதாக சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.தனித்
தெலங்கானா கோரி போராடும் தெலங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சி, காங்கிரஸ்
கட்சியுடன் இணைவது நடந்தே தீரும். அதனால்தான் தெலங்கானா விவகாரம் குறித்து
சோனியா காந்தியை எவ்வித கேள்வியும் கேட்காமல் டிஆர்எஸ் கட்சி உள்ளது.அக்கட்சியின்
முக்கிய நோக்கமே தெலுங்கு தேசம் கட்சியை முடக்குவதுதான். ஆனால் என்.டி.
ராமாராவால் உருவாக்கப்பட்ட இக்கட்சியை எந்த ஒரு சக்தியாலும் முடக்க
முடியாது. மக்கள் ஆதரவு எப்போதும் கட்சிக்கு உள்ளது என்று சந்திரபாபு
நாயுடு குறிப்பிட்டார்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» விலைவாசி உயர்வு மிகப்பெரிய சவால்: காங்கிரஸ் கட்சி ஒப்புதல்
» பார்லிமென்டில் மோதல் நிச்சயம் வெடிக்கும் : விலைவாசி பிரச்னை காரணம்
» விலைவாசி உயர்வு: சட்டசபை கேன்டீனில் தக்காளி சட்னி "கட்'
» கர்நாடகாவில் எம்.எல்.ஏ., விலை ரூ.25 கோடி: விலைவாசி போல 26 ஆண்டுகளில் உயர்வு
» 'விலைவாசி உயர்வு' விவாதம்: மக்களவையில் தூங்கினாரா ராகுல் காந்தி?
» பார்லிமென்டில் மோதல் நிச்சயம் வெடிக்கும் : விலைவாசி பிரச்னை காரணம்
» விலைவாசி உயர்வு: சட்டசபை கேன்டீனில் தக்காளி சட்னி "கட்'
» கர்நாடகாவில் எம்.எல்.ஏ., விலை ரூ.25 கோடி: விலைவாசி போல 26 ஆண்டுகளில் உயர்வு
» 'விலைவாசி உயர்வு' விவாதம்: மக்களவையில் தூங்கினாரா ராகுல் காந்தி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum