Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ரேஷன் கடைகளில் இலவச அரிசி : உணவு மானியம் கோடி அதிகரிக்கும்
Page 1 of 1

சென்னை: வரும் ஜூன் 1ம் தேதி முதல், ரேஷன் கடைகளில் இலவச அரிசி
வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை, சென்னை டி.டி.கே., சாலையில் உள்ள கடையில்,
இலவச அரிசி வழங்கி, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார்.
இத்திட்டத்தால், அரசுக்கு உணவு மானியத் தொகை மேலும் அதிகரிக்கும்.
தற்போது தமிழகத்தில் ஒரு கோடியே 96 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன.
இதில், ஒரு கோடியே 80 லட்சம் குடும்ப அட்டைகள் அரிசி வாங்க தகுதியுடையவை.
பச்சை நிறத்திலான இந்த அட்டை வைத்துள்ளவர்களுக்கு தான், இலவச அரிசி
வழங்கப்பட உள்ளது.இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான், வறுமை
கோட்டுக்கு மேலே உள்ளவர்கள், கீழே உள்ளவர்கள் என்ற வித்தியாசம் இன்றி, ஒரு
ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது. பொது வினியோகத்
திட்டத்தில் அரிசி வழங்குவதற்காக, குறைந்த விலையில், இந்திய உணவுக் கழகம்
அனைத்து மாநிலங்களுக்கும் அரிசியை வழங்குகிறது.மத்திய அரசின் விலைப்படி,
வறுமை கோட்டுக்கு மேலே உள்ள குடும்பங்களுக்கு ஒரு கிலோ ரூ.8.30க்கும்,
வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரூ.5.65க்கும், அந்தியோதயா அன்னா
யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி கிலோ 3 ரூபாய்க்கும்
தரப்படுகிறது. இதன்படி, மத்திய அரசு மாதந்தோறும் 4 லட்சத்து 75 ஆயிரம் டன்
அரிசியை, தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மீதம் தேவைப்படும்
அரிசியை, வெளிச்சந்தையில் தமிழக அரசு வாங்குகிறது.
இந்த விலைகளில் பெறும் அரிசியைத் தான், வறுமை கோடு வித்தியாசமின்றி
அனைவருக்கும் ஒரே விலையில் தமிழக அரசு வழங்கி வருகிறது. இதற்காக உணவு
மானியத்தை தமிழக அரசு வழங்குகிறது. ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினர்கள்
எண்ணிக்கைக்கு ஏற்ப, எவ்வளவு கிலோ அரிசி என
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குடும்பத்தில் ஒரு பெரியவருக்கு மாதம் 4 கிலோவும்,
ஒரு குழந்தைக்கு மாதம் 2 கிலோ என்ற வீதத்தில், ஒரு குடும்பத்துக்கு
குறைந்தபட்சம் 12 கிலோவும், அதிகபட்சமாக 20 கிலோவும் வழங்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் மட்டும், ஒரு குடும்பத்துக்கு குறைந்தபட்சம் 16
கிலோவும், அதிகபட்சம் 24 கிலோவும் அரிசி வழங்கப்படுகிறது.இந்த விகிதப்படி
தான், வரும் ஜூன் 1ம் தேதி முதல் இலவச அரிசி, ரேஷன் கடைகள் மூலம்
வழங்கப்பட உள்ளது. இதுதவிர, அந்தியோதயா அன்னா யோஜனா திட்டத்தின் கீழ்
வரும் பயனாளிகளுக்கு, மாதம் 35 கிலோ இலவச அரிசி வழங்கப்படுமென முதல்வர்
அறிவித்துள்ளார். தமிழகத்தில் 18.65 லட்சம் குடும்பங்கள் இந்த திட்டத்தின்
கீழ் பயன் பெறுகின்றன.
ஏற்கனவே, அரிசிக்கு மானியம், இலவச பொங்கல் பை, உளுந்தம் பருப்பு,
துவரம் பருப்பு, பாமாயில், மளிகை பொருட்கள் போன்றவற்றை சலுகை விலையில்
விற்கும் சிறப்பு பொது வினியோகத் திட்டம் போன்றவற்றுக்காக தமிழக அரசு
ஆண்டுதோறும் 4,000 கோடி ரூபாயை மானியமாக, உணவுத் துறைக்கு வழங்கி
வருகிறது. தற்போது, ஒரு ரூபாய் அரிசியையும் இலவசமாக வழங்குவதால், இந்த
மானியம் மேலும் 500 கோடி ரூபாயாக உயரும்.வரும் ஜூன் 1ம் தேதி முதல்,
தமிழகம் முழுவதும் இலவச அரிசி வழங்கப்பட உள்ளதால், அத்திட்டத்தை 1ம்
தேதியன்று, சென்னை டி.டி.கே., சாலையில் உள்ள ரேஷன் கடையில், முதல்வர்
ஜெயலலிதா துவக்கி வைக்கிறார்.குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச
அரிசி வழங்குவது தொடர்பாக, உணவுத் துறை அதிகாரிகளுடன், அத்துறையின்
அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆலோசனை நடத்தினார். துறையின் உயரதிகாரிகள்
கலந்து கொண்டனர்.
இதில், "இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து அரிசி மற்றும் கோதுமை பெறும்
போது, அதன் தரத்தை உறுதி செய்த பின்னரே பெற வேண்டும். உணவுக் கழகத்திடம்
இருந்து நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அவை முழுமையாக வந்து
சேருவதை கண்காணிக்க வேண்டும். ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்குவதை
கருத்தில் கொண்டு, போதுமான அளவு அரிசியை முன்பாகவே பெற்று வைத்திருக்க
வேண்டும்."காலாவதியான பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கக்
கூடாது. இலவச அரிசி வழங்குவதை முறையாக விளம்பரம் செய்து, இத்திட்டத்தை
ஜூன் 1ம் தேதி முதல் செயல்படுத்த வேண்டும்' என்று அமைச்சர்
அறிவுறுத்தினார்.

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» இலவச அரிசி வினியோகத்தில் முறைகேடு நடந்தால் ரேஷன் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை; அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை
» அரிசி உணவு ஆபத்து இல்லை!என்று சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனமும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழமும் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்து இருக்கிறது.
» மத்திய அமைச்சரவையில் இன்று முடிவு: ரேஷன் கோதுமை, அரிசி விலை உயரும்?
» ரேஷன் அரிசி கடத்தினால் சொத்து பறிமுதல் !
» 145 டன் ரேஷன் அரிசி சிக்கியது: ஒருவர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum