Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மதுரையில் 10 தொகுதிகளையும் திமுக இழந்தது ஏன்?
Page 1 of 1

மதுரை, மே 15:
அ.தி.மு.க.வின் கூட்டணி பலம்; தி.மு.க. கட்சி நிர்வாகிகளின் "உள்ளடி
வேலைகள்' மற்றும் அமைச்சர் மு.க.அழகிரிக்கு நெருக்கமாக இருந்த சிலர்
அதிகார வட்டாரங்களாகச் செயல்பட்டு, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட
அத்துமீறல்களில் ஈடுபட்டது போன்ற பிரதான காரணங்களாலேயே மதுரை மாவட்டத்தில்
10 தொகுதிகளையும் தி.மு.க. பறிகொடுத்துள்ளது என்று மதுரை அரசியல்
வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில்
40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுக்காட்டுவதாக கட்சித்
தலைமைக்கு உறுதியளித்த மு.க.அழகிரி பல்வேறு பார்முலாக்களைப் பயன்படுத்தி
வெற்றியும் பெற்றுக் காட்டினார்.
இதேபோல் மதுரையில் மேலும் 2 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில்
கட்சி வெற்றி பெற அவர் வியூகம் வகுத்தார். இதன் காரணமாக மு.க.அழகிரிக்கு
திமுக
சார்பில் தென் மண்டல அமைப்புச் செயலர் பதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து,
மக்களவைத் தேர்தலில் மு.க.அழகிரிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு, மதுரை
மக்களவை உறுப்பினராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.
அழகிரியின்
அதிகார மையங்கள்: இதையடுத்துதான் அமைச்சர் மு.க.அழகிரிக்குத் தெரியாமலேயே
அவரது நெருக்கமானவர்கள் பலரும் "அதிகார மையங்களாக' உருவானார்கள்.
இடைத்தேர்தல்கள் வெற்றி காரணமாக அமைச்சர் மு.க.அழகிரி எந்தக் கோரிக்கை
வைத்தாலும் அதை கட்சி மேலிடம் நிறைவேற்றி வந்தது.
ஆனால்,
மாவட்டத்தின் மக்கள் பிரச்னைகளை அதிகாரிகள் அவரிடம் நேரடியாக எடுத்துச்
சொல்ல முடியாமல் அமைச்சரின் "அதிகார மையங்கள்' தடுத்தன. இதனால்
மக்களிடமிருந்து அவர் விலகிச் செல்ல நேர்ந்தது.
மு.க.அழகிரியிடம்
பெயர் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொரு பிறந்த
நாளுக்கும் மதுரையையே குலுங்கச் செய்து விடுவர். சாலையோரங்களில்
ஆயிரக்கணக்கான பேனர்கள், கட்-அவுட்டுகள், சாலையை மறித்து ஆர்ச்சுகள் என்று
பிறந்தநாள் ஒரு வாரம் இருக்கும்போதே மதுரையே அலங்கோலமாகி விடும்.
இதுகுறித்து
பத்திரிகையாளர்கள் ஒருமுறை அவரிடம் குறிப்பாக உணர்த்தவும் செய்தனர்.
அதற்கு "தொண்டர்கள் உற்சாக மிகுதியால்தான் கட்அவுட், பேனர் வைக்கின்றனர்'
என்று அவர் அளித்த பதிலால் அடுத்தடுத்த பிறந்த நாள் விழாக்களை கூடுதல்
உற்சாகத்துடன் தொண்டர்கள் கொண்டாடத் தொடங்கினர். இதில் உணர்வுப்பூர்வமாக
மிகவும் பாதித்தவர்கள் பொதுமக்களே. தி.மு.க.வினரின் அந்த "பகட்டான'
கொண்டாட்டத்தை மக்கள் ரசிக்கவில்லை. மாறாக அதிருப்தியடைந்தனர். அழகிரியின்
அதிகார மையங்கள் மாவட்டத்தில் காவல் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட
அனைத்துத் துறைகளிலும் தலையிடத் தொடங்கின. காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகள்
பணியிட மாற்றம் வேண்டுமென்றால்கூட "அதிகார மைய அலுவலகங்களில்' பல நாள்கள்
காத்துக் கிடக்க வேண்டியிருந்தது.
அதிமுக கூட்டணி பலம்:
இவற்றையெல்லாம்விட இந்தத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி பலம். மதுரையில்
தே.மு.தி.க. கட்சிக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. குறிப்பாக உசிலம்பட்டி
தொகுதி பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளர் பி.வி.கதிரவனின் வெற்றிக்கு
சேடப்பட்டி தொகுதியில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் வாக்குகள்தான்
வெற்றியை நிர்ணயித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் திமுகவில் கூட்டணி
அமைத்திருந்த காங்கிரஸ் கட்சி தேர்தல் நேரத்தில் எந்த வேலையும்
செய்யவில்லை. இதுதவிர திருப்பரங்குன்றம், மதுரை தெற்குத் தொகுதி, வடக்குத்
தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் மக்களிடம்
செல்வாக்கில்லாமல் இருந்தனர். இதனால், திமுகவுக்கு முழு அளவில்
காங்கிரஸின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.
கட்சி நிர்வாகிகளுக்கு
ஏற்பட்ட திடீர் வசதியை கட்சிக்குள் உள்ள தொண்டர்களும், மற்ற நிர்வாகிகளும்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் திமுகவினரே அதிருப்தியில் இருந்ததாகக்
கூறப்படுகிறது. இதனால் மதுரை மேற்கு, கிழக்கு, திருமங்கலம், உசிலம்பட்டி
உள்ளிட்ட தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவ நேர்ந்தது.
அழகிரி குடியிருக்கும் மேற்குத் தொகுதியையே திமுக கைப்பற்ற முடியாத
நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதுதவிர மாநில அளவில் இருந்த மின்வெட்டு,
விலைவாசி உயர்வு போன்ற காரணங்களாலும் மதுரை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத்
தொகுதிகளையும் திமுக இழக்க நேரிட்டதாக அரசியல் நோக்கர்கள்
தெரிவிக்கின்றனர்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» மக்களவைத் தேர்தல்: 40 தொகுதிகளையும் வெல்வோம்
» யாழ். மாவட்டத்தின் 11 தொகுதிகளையும் கைப்பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி!
» 2001-ல் பென்னாகரம் தேர்தலில் தி.மு.க.வும் டெபாசிட் இழந்தது: ஜெயலலிதா
» நீர் மட்டம் குறைக்கப்பட்டதால் தமிழகம் இழந்தது எவ்வளவு?
» சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum