Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஸ்பெக்ட்ரம் ஊழல் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியதா?
Page 1 of 1

சட்டசபை தேர்தலில், ஸ்பெக்ட்ரம் ஊழல் எந்தளவுக்கு தாக்கத்தை
ஏற்படுத்தியிருக்கும் என்பதை, தேர்தல் முடிவுகளில் இருந்து அறியலாம்.
ஆனாலும், எதிர்பார்த்த அளவுக்கு இந்த ஊழல் விவகாரம், பெரியளவில்
எதிர்க்கட்சியினரின் பிரசாரத்தில் பேசப்படாதது பெரிய குறையாக விளங்குகிறது.
நாடு சுதந்திரமடைந்ததற்கு பின், நடந்த ஊழல்களில் மிகப்பெரிய இழப்பு
ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது ஸ்பெக்ட்ரம் ஊழல். இந்த ஊழல் மூலம்
நாட்டிற்கு, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக
மத்திய தணிக்கை துறை, பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில்
குறிப்பிட்டது.மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க.,வுக்கு, இந்த
ஊழல் மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்தது. மத்திய அரசுக்கு ஆதரவு என்ற
அஸ்திரத்தை கையில் எடுத்து, இப்பிரச்னையை தி.மு.க., அரசியல் ரீதியாக
சமாளித்தது.
தமிழக சட்டசபை தேர்தலில் இந்த ஊழல் விவகாரம், எதிர்க்கட்சியினரின்
பிரசாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனாலும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,- தே.மு.தி.க., - கம்யூ.,
கட்சிகள் பிரசாரத்தில் இந்த ஊழலை குறிப்பிட்டாலும், மக்களிடம் தாக்கத்தை
ஏற்படுத்துமளவுக்கு எடுத்துச் சொல்லவில்லை என்ற குறையுண்டு.
தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா பேசிய போது, "ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம்
ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய கருணாநிதிக்கு,
மக்கள் என்ன தண்டனை தரப்போகின்றனர் என்பதை நாடு எதிர்பார்க்கிறது' என
குறிப்பிட்டார்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தின் போது, "தி.மு.க.,வின்
கொள்கையே டில்லி சிறையில் உள்ளது. அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலரான
முன்னாள் மத்தியமைச்சர் ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி, சிறையில்
உள்ளார்' என்றார்.
பா.ஜ., தலைவர் அத்வானி, திண்டுக்கலில் நடந்த பிரசார
கூட்டத்தில் பேசியபோது, "ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் ஒரு லட்சத்து 76 ஆயிரம்
கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். என் அரசியல் வரலாற்றில், நேரு
முதல் மன்மோகன் சிங் வரையிலான பிரதமர்களை பார்த்து விட்டேன். இந்த ஊழல்
போல எந்த ஊழலையும் கண்டதில்லை' என்றார்.
பா.ஜ., முன்னாள் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் தனது தமிழக பிரசாரத்தின்
போது, "ஸ்பெக்ட்ரம் ஊழல் சட்டசபை தேர்தலில் எந்தளவுக்கு தாக்கத்தை
ஏற்படுத்தும் என்பதை, தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்'
என்றார்.
மார்க்சிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூ., மாநில செயலர்
தா.பாண்டியன் போன்றோர் இந்த ஊழல் குறித்து பிரசாரம் செய்தது, மக்களிடம்
எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.
தேர்தல் பிரசாரத்தில் பெரியளவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட
ஸ்பெக்ட்ரம் இழப்பு குறித்து, "அக்கு வேறு ஆணி வேறாக' அலசி யாரும்
பேசவில்லை. தேர்தலுக்கு முன்பு இது குறித்து பேசிய வைகோ களத்தில் இல்லை.
ஆளுங்கட்சி தரப்பில், இப்படியொரு ஊழல் பிரச்னை இல்லை என்பது போல்,
தி.மு.க., தலைவர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட யாரும்,
தங்களது பிரசாரத்தில் எந்த பதிலும் அளிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால்,
ஸ்பெக்ட்ரம் என்ற வார்த்தையை தி.மு.க., தலைவர் தனது தேர்தல் பிரசாரத்தில்
உச்சரிக்கவே இல்லை.
இப்பிரச்னை தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்விகளுக்கு பதிலளித்து,
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பேசியபோது, "ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து எந்த
கட்சியுமே தேர்தலில் பேசவில்லை. நாங்கள் தி.மு.க., அரசு சாதனைகளை சொல்லி
ஓட்டு கேட்கிறோம். எதிர் அணியினர் கருணாநிதியையும், குடும்பத்தினரையும்
திட்டி ஓட்டு கேட்கின்றனர்' என்றார்.
அதே நேரத்தில், இந்த தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.
புதிதாக ஓட்டுப் போட்ட, இளம் வாக்காளர்கள் மத்தியில் ஸ்பெக்ட்ரம் விவகாரம்
தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. அதோடு, "ராமன் ஆண்டாலும்,
ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை' என்று நினைக்கும் மேல்தட்டு
வர்க்கத்தினரும், இந்த தேர்தலில் வரிசையில் நின்று
ஓட்டளித்துள்ளனர்.ஓட்டுப்பதிவுக்கு முன்பாக, டில்லியில் ஊழலுக்கு எதிராக
அன்னா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரதமும், தமிழகத்தில் தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டம், ஊழலுக்கு எதிராக போராட
வேண்டும் என்ற எண்ணத்தை பரவலாக ஏற்படுத்தியதும், தமிழகத்தில் ஓட்டுப்பதிவு
சதவீதம் அதிகரிக்கக் காரணம் என்ற கருத்தும் உள்ளது.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» ஸ்பெக்ட்ரம் ஊழல் - குற்றப்பத்திரிகையில் ராசா மீது குற்றச்சாட்டுகள்!
» ஸ்பெக்ட்ரம் ஊழல்: அ.தி.மு.க.வினர் நூதன பிரசாரம்
» ஸ்பெக்ட்ரம் ஊழல்: திருச்சியில் ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
» அனில் அம்பானிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சம்மன்
» ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அம்பானியின் அதிரவைக்கும் பதில்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum